Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 18 Apr 2017 07:42 AM PDT

என் முகவரி

muthusimpu@gmail.com

தமிழ்நாட்டில் தாவரங்கள் (191)

Posted: 18 Apr 2017 06:06 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Posted: 18 Apr 2017 05:52 AM PDT

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்? அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! ...

கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் Read more at: http://tamil.oneindia.com/news/international/vijay-mallya-gets-conditional-bail-westminster-280156.html

Posted: 18 Apr 2017 05:31 AM PDT

வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய விஜய மல்லையா இங்கிலாந்தில் தங்கி இந்தியாவை ஏமாற்றி வந்தார். இதனால் வங்கிகள் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனையடுத்து, விஜயமல்லையாவை கைது செய்யும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன. இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஸ்காட்லாந்து போலீசார் விஜயமல்லையாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயமல்லையா. லண்டன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று ...

அழகிய தவறு - இயக்குனர் மகேந்திரன் நூலினை டவுன்லோட் செய்ய .

Posted: 18 Apr 2017 05:07 AM PDT

மகேந்திரன் புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ.அலெக்ஸாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை. மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு ...

பித்தப் பூக்கள்...!!

Posted: 18 Apr 2017 04:12 AM PDT

அச்சமே ஆபத்து….!! * அன்றைய காதலர்களின் காதல் கடிதங்கள் பாதுகாக்கப்பட்டன. வரலாற்றில் பதியப்பட்டன. இன்றைய காதலர்கள் கடிதம் எழுதுவதை மறந்து எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளில் பரிமாறிக் கொண்டு அடுத்த நொடியே அழகியல் கற்பனை வரிகளை அழித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள். சமுகச் சங்கிலியில் சிக்குண்டு அச்சத்தில் வாழ்வது சாதல் அச்சமின்றி வாழ்வது காதல். *

கும்பகோணம் டிகிரி காபி!

Posted: 18 Apr 2017 03:47 AM PDT

கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்! சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம். நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, ...

வித்யா பாலன், திரிஷா, அதிதி ராவ்.. இவங்களுக்கு டப்பிங் பேசிய கிருத்திகா யார் தெரியுமா?

Posted: 18 Apr 2017 02:41 AM PDT

- கிருத்திகா நெல்சன். தமிழ் சினிமாவின் புதிய வாரிசு. இன்னார் மகள், இன்னார் மனைவி என்ற அடையாளங்கள் தாண்டி.. தனக்கென ஓர் அடையாளம் பெற்றிருக்கிறார் இப்போது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அவர் யார் என்பதைப் பின்னால் பார்ப்போம். டப்பிங் ஆர்ட்டிஸ்டாக அவர் மாறியது எப்படி மற்றும் அவரது டப்பிங் அனுபவங்களை அவர் சொல்லக் கேட்போம்; ''எலெக்ட்ரானிக் மீடியா படிச்சேன். அப்புறம் ரேடியோ, டி.வி.னு சில வருடங்கள் வேலை. இப்போ பெங்களூர்ல முன்னணி மீடியா ஏஜென்சியில கன்டென்ட் ஹெட்டா இருக்கேன். ...

தோழியைத் தூக்கிக்கொண்டு மாரத்தானில் ஓடிய காலிழந்த ராணுவ வீரர் .. நெகிழ்ச்சி வீடியோ!

Posted: 18 Apr 2017 02:28 AM PDT

ஒரு கால் இழந்த ராணுவ வீரர், போஸ்டன் மாரத்தானில் ஒரு பெண்ணைத் தூக்கிகொண்டு இலக்கைக் கடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. - அமெரிக்காவின் போஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தானில் பென்சில்வேனியாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்  கிரான்வி கலந்து கொண்டார். கிரான்வி 2008-ம் ஆண்டு நடந்த ஆஃப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் ஒரு காலை இழந்தவர். போஸ்டன் மாரத்தானில் பங்குபெற்ற மாற்றுத் திறனாளிகள் அனைவரும் ஹேண்ட் பைக்கில் (Hand Bike) தூரத்தைக் கடந்தனர். ஆனால் ...

பிங்க் நிலா !

Posted: 18 Apr 2017 02:27 AM PDT



பிங்க் நிலா ! பெங்களூரில் இன்று கிருஷ்ணா எடுத்தது புன்னகை

நெருக்கடியில் சிக்கியுள்ள 4 லட்சம் நிறுவனங்கள்... அதிரடி காட்டும் மத்திய அரசு!

Posted: 18 Apr 2017 02:09 AM PDT

ஷெல் கம்பெனிகள் என்னும் போலி நிறுவனங்களின் மீது நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைக்குப் பின்னர் பல நிறுவனங்கள் வரி கட்டத்தவறியதும், வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாட்டில் உள்ள நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கடந்த ஒரு மாத காலமாகவே வரி செலுத்துவது தொடர்பான அறிவிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது வரி செலுத்தாதவர்களுக்கு வருமானவரித் துறை 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. தவறும் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

வரலாற்றுத் துணுக்குகள்

Posted: 18 Apr 2017 02:08 AM PDT

வரலாற்றுத் துணுக்குகள் -1 சீர்காழியில் கிடைத்த கல்வெட்டு ஒன்று "ஆளுடைய பிள்ளையார் கோயிலில் ஆளுடைய பிள்ளையார் வடிவத்தை எழுப்பியவர் மூன்றாம் குலோத்துங்கனுடைய அடுக்களைப பெண்டுகளில் மூத்தவளான இராஜவிச்சாதிரி என்பவளாவாள் " என்று குறிப்பிடுகிறது , இதில் இருந்து அறியப்படும் செய்திகள் 1) மன்னரின் சமையலறைப் பெண்களுக்கு கூட பட்டப்பெயர் இராஜவிச்சாதிரி என்று இருந்திருக்கிறது . 2) அவர்கள் ஆளுடைய பிள்ளையார் வடிவத்தை அமைக்கும் அளவிற்கு வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள் . 3) ...

ஆரத்தழுவ வாராயோ!

Posted: 18 Apr 2017 02:01 AM PDT

பனை  மரமே பனை மரமே! பாளையத்து பனைமரமே! உனை நினைத்து பாடுகிறேன்! உயிர் வெதும்பி தேடுகிறேன்! வெயிலெடுத்து நீ உடுத்தி -எம் விரலில்  வைப்பாய் குளிர் நுங்கை உதடுகளில் நாம் சுவைக்க உதிரத்தையே கொடுத்தவளே! பதநீரை நீயெடுத்து, பால் பனியால் நீ குழைத்து, தாயைப் போல தந்தவனே, தமிழ் குலத்தின் நாயகனே! நகரத்திலே நானிருந்து, நரசிங்கத்தின் உனை  பிரிந்து, வெயில் மடியில் வீழுகிறேன், விரல் பிடிக்க வாராயோ!

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

Posted: 18 Apr 2017 02:00 AM PDT

மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! 1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது… 2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்… 3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் ...

ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்!

Posted: 18 Apr 2017 01:11 AM PDT

- காரைக்குடியில், ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். ஒரு நிகழ்ச்சிக்காக, மக்கள் திலகம், எம்.ஜி.ஆர்., வந்திருந்தார். எனக்கு பள்ளி விடுமுறை என்பதால், அம்மாவுடன் தலைவரைப் பார்ப்பதற்கு சென்றேன். கூட்டமென்றால், அப்படியொரு கூட்டம். ஆண்களும், பெண்களும் முண்டியடித்து, பரபரப்புடன் காத்திருந்தனர். மக்கள் திலகமும் வந்துவிட்டார். பேச ஆரம்பித்து, முடிக்கும் வரை, ஒரே கை தட்டலும், விசிலும் விண்ணைப் பிளந்தன. அவர் பேச்சை முடித்து புறப்பட தயாரானார். கூட்டத்தினரின் இடிபாடுகள் அதிகமானது. இதை ...

கோடிட்ட இடத்தை நிரப்புறதுல, அவர் கில்லாடியாச்சே!

Posted: 18 Apr 2017 01:09 AM PDT


-
புறம்போக்கு இடத்தைக் கோடு போட்டுக்
காமிச்சா
தலைவர் வளைச்சுப் போட்டுருவார்!
-
கோடிட்ட இடத்தை நிரப்புறதுல, அவர்
கில்லாடியாச்சே!
-
அம்பை தேவா
-
------------------------------------
-தொடரும்...

பல் துலக்காதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்!

Posted: 18 Apr 2017 01:08 AM PDT


-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன? சத்குரு:

Posted: 18 Apr 2017 12:59 AM PDT

சத்குரு: - காரண அறிவு மந்திரங்கள் என்றாலே சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. 'வெறும் ஒரு சத்தம் என்னை எந்தவிதத்தில் மாற்றிவிடும்?' என்று அது கேட்கிறது. அனைத்து மந்திரங்களுமே உச்சகட்ட விடுதலையை அடைவதற்காக உச்சரிக்கப்படுவதில்லை. வேண்டிய செல்வங்களை அடைவதற்காகவும், எதிர்மறைத் தன்மையைப் போக்குவதற்கும் கூட பல மந்திரங்கள் இருக்கின்றன. ஞானயோகி சிவ ஷம்போ என்று சொன்னவுடன், மான் இறந்து விழுந்தது. வாயடைத்துப் போன ஞானயோகி, "இந்த மந்திரத்தின் பயன்தான் என்ன?" என்றார். தினசரி விஷயங்களை ...

கவிழ்ந்து பூப்பூத்து நிமிர்ந்து காய் காய்க்கும் - விடுகதைகள்

Posted: 18 Apr 2017 12:45 AM PDT

1) கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளத்து நீரைக்கண்டு பதைக்கிறான் - அது என்ன? - 2) கல்லுறங்கும் புல்லுறங்கும் காண மயிலுறங்கும் கண்கள் இரண்டும் உறங்கவில்லை - அது என்ன? - 3) கல்லிலே மேய்ந்து, கயத்திலே நீராடி, புல்லிலே படுத்தான் புவனுத்து ராசா- அவன் யார்? - 4) கவிழ்ந்து பூப்பூத்து நிமிர்ந்து காய் காய்க்கும் - அது என்ன? - 5) கழுத்தை அறுத்தால் கண் தெரியும் அது என்ன? - 6) கறுப்புச் சட்டைக்காரன், காவலுக்கு கெட்டிக்காரன் அவன் யார்? - 7) கழற்றிய சட்டையை திரும்ப போட மாட்டான் -அவன் ...

காட்டில் அம்மாயி குடை பிடிக்கிறாள் - விடுகதைகள்

Posted: 18 Apr 2017 12:44 AM PDT

1. இரண்டு குழந்தைகள், மூன்று ஆசிரியர்கள். அது என்ன? 2. சீப்பு உண்டு; தலை வார முடியாது. பூ உண்டு; மாலை கட்ட உதவாது. அது என்ன? 3. சிவப்புப் பெட்டியில் மஞ்சள் முத்துக்கள். அது என்ன? 4. உமி போலப் பூப்பூக்கும். சிமிழ் போலக் காய் காய்க்கும். அது என்ன? 5. அம்மா சேலையை மடிக்க முடியாது. அப்பா சில்லறையை எண்ண முடியாது. அது என்ன? 6. பச்சை வீட்டில் சிவப்பு வாசல். அது என்ன? 7. சின்னஞ்சிறு கதவுகள், செய்யாத கதவுகள், திறந்தாலும் மூடினாலும் சத்தம் போடாத கதவுகள். அது என்ன? 8. யாருமில்லாத ...

"வெல்லவே முடியாதது..."

Posted: 17 Apr 2017 11:55 PM PDT

"வெல்லவே முடியாதது..." தர்மம்.. மஹாபாரதப்போர்... 18 நாள் யுத்தம்... வெற்றி பாண்டவர்களுக்கு... ஆனால், ஒரு விஷயம்... கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள் — துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்... இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்...? ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. 1) ஜயத்ரதன் 2) பீஷ்மர் 3) துரோணர் 4) கர்ணன் 5) துரியோதனன் 6) விதுரர் இவர்களின் வீழ்ச்சிக்காகக் ...

கோவில் வழிபாட்டு முறைகளும் பதினாறு செல்வங்களும் !

Posted: 17 Apr 2017 11:54 PM PDT

கோவில் வழிபாட்டு முறைகளும் பதினாறு செல்வங்களும் ! ஆன்மிகம். மிகவும் உயர்ந்த சொல் இது. ஆனால், இன்றைய நிலையில் ஆன்மிகம் என்பது... "இந்தக் கோவிலுக்குப் போனால் அது கிடைக்கும்; அந்தக் கோவிலுக்குப் போனால் இது கிடைக்கும்" என்று, மக்களைத் தூண்டுவதாக இருக்கிறது. * கோவில்களிலோ, கோஷ்ட தெய்வங்களின் திருவடிகளில், விரல்களின் நடுவில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்துவதும்; கோவிலின் உள்ளே சன்னிதிகளில் எல்லாம் விழுந்து வணங்குவதும்; சண்டிகேஸ்வரரின் சன்னிதியில், வேட்டி - புடவை ஆகியவற்றில் இருந்து நூல்களைப் பிய்த்துப் ...

முக நூலில் ரசித்தவை…

Posted: 17 Apr 2017 11:42 PM PDT


-

-

சிற்றின்பமும் - பேரின்பமும் !

Posted: 17 Apr 2017 11:32 PM PDT

சிற்றின்பமும் - பேரின்பமும் ! ~~~~~~ படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம். படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம். படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம். படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம். படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம். படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம். என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம். இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம். நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம். நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம். அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று ...

யார் இவர்? - ஸ்டாலின் !

Posted: 17 Apr 2017 11:04 PM PDT

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

தெரிஞ்சுக்கோங்க!.....ஜனாதிபதி மாளிகை !

Posted: 17 Apr 2017 10:24 PM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.

Posted: 17 Apr 2017 10:13 PM PDT

சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.

இரெண்டு ஆண்டுகள்
4000 அறிவை/ஆர்வம்  தூண்டும் பதிவுகள்



ரமணியன்

ஜெயலலிதாவின் வாரிசு யார்? ஆர்டிஐ அளித்த அதிரடி பதில்!

Posted: 17 Apr 2017 10:04 PM PDT

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு, சட்டப்படி வாரிசுதாரர் எவர் பெயரும் இதுவரை குறிப்பிடப்படவில்லை என்பதால், அவரது அத்தனை சொத்துக்களையும் மாநில அரசின் உடைமைகளாக்க வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார். - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் பல தகவல்களை வெளியிடுபவர், சமூக ஆர்வலர் பாஸ்கரன். இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசுதாரர் என எவரையும் குறிப்பிடவில்லை ...

நுங்கு பயன்கள்

Posted: 17 Apr 2017 10:03 PM PDT

- பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. - நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. - நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். -

“தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்!

Posted: 17 Apr 2017 10:03 PM PDT

"சித்தியிடம் கேட்டு முடிவு சொல்கிறேன்" என அமைச்சர்களிடம் தினகரன் தரப்பு சொன்ன கால அவகாசம் முடிந்தது தான் தங்கமணி வீட்டில் நடந்த அவசர கூட்டத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இருந்தே தினகரன் மீது அமைச்சர்கள் சிலர் வருத்ததில் இருந்துள்ளார்கள். மக்கள் செல்வாக்கும் இல்லை, கட்சியினர் செல்வாக்கும் இல்லை, எதற்காக இவர் கட்சியை கைபற்ற துடிக்கின்றார் என்று மூத்த அமைச்சர்கள் சிலரே முணுமுணுத்தனர். அடுத்து இரட்டை இலை சின்னம் முடக்கபட்டதும் அ.தி.மு.கவில் ...

திருமணவாசம்...

Posted: 17 Apr 2017 09:59 PM PDT


-
வறட்டி

-
மாட்டின் பாலைக் கறந்து
காபி தயாரித்தாள் அம்மா
அடுப்பில் எரிந்து கொண்டிருந்தது வறட்டி!
-
------------------------

பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு!

Posted: 17 Apr 2017 09:54 PM PDT

- இந்தியாவின் பாரம்பர்ய நடனங்களில் முக்கியமானது பரதநாட்டியம். புராண இதிகாச சம்பவங்களை மட்டுமல்லாமல், சரித்திரக் கதைகளையும் நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் நளினம் பரத நாட்டியத்துக்கு உண்டு. இம்மண்ணில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை, பரிணாமம் பெற்று வெளிநாடுகள் வரை அழகுற விரிந்தது. தற்போது இந்தக் கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில், இதற்கு முன் 2,100 பேர் நிகழ்த்திய பழைய சாதனையை, 4,535 பேர் சேர்ந்து முறியடித்து, புதிய 'கின்னஸ் உலக சாதனை' நிகழ்த்தி அசத்தினர். கின்னஸ் ...

படித்ததில் பிடித்தவை - பல்சுவை

Posted: 17 Apr 2017 09:49 PM PDT

எங்களூர் அம்மன் -

Posted: 17 Apr 2017 09:47 PM PDT

பட்டாடை வேண்டும்
பொன் நகைகள் வேண்டும்
மாட மாளிகைகள் வேண்டும்
இன்னும் எத்தனையோ
வேண்டும்கள்!
-
அத்தனையும் புன்சிரிப்புடன்
நடத்திக்கொடுக்கும்
எங்களூர் அம்மனுக்கு
மட்டும் எப்போதும்
கீத்துக் கொட்டாயும்
கவரிங் நகையும்
மஞ்சள் புடவையும்தான்!

-
---------------------விஜி முருநாதன்

இந்த தவறை செஞ்சுடாதீங்க!

Posted: 17 Apr 2017 09:41 PM PDT

நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி ஸ்வர்ணலதா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மாகடி சாலை (பெங்களூர்) கிளையில் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜராக பணிபுரிபவர். சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் வேலைக்கு செல்வதற்காக காலை 9 மணிக்கு பெங்களூர் பாஸ்யம் சர்க்கிள் பஸ் ஸ்டாப்பில், பி.எம்.டி.சி. டவுன் பஸ்ஸில் ஏறினார். ஓர் இருக்கையில் அமர்ந்தார். இவருக்கு அருகே ஒரு பெண் வந்து அமர்ந்தார். அவர் பெயர் அபி.சில நிமிடங்களுக்குப் பின் அபி ரகசியமாக ஸ்வர்ணலதாவின் ஹேண்ட் பேக்கில் கைவிட்டு அதில் இருந்த ...

வர்ணங்கள் அவளது தோழிகள்…

Posted: 17 Apr 2017 09:28 PM PDT

மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம்

Posted: 17 Apr 2017 09:28 PM PDT

திருவொற்றியூர்: மாதவரம் பால்பண்ணையில் உள்ள விவசாய கூட்டுறவு பணியாளர்கள் சங்க பயிற்சி நிலையத்தில் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை வகித்தார். பயிற்சி நிலைய முதல்வர் ெஜயஸ்ரீ வரவேற்றார். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழக கூட்டுறவுத்துறை ...

மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்!

Posted: 17 Apr 2017 09:03 PM PDT

''நீண்ட நேரம் கால்களை மடக்கியவாறு உட்காரும் போதும் கால்களை தொங்கவிட்ட நிலையில் அதிக நேரம் பயணம் மேற்கொள்ளும் போதும் கை, கால்கள் மரத்துப் போவதை உணர்வோம். தொடர்ந்து ஒரே நிலையில் கை, கால்களை வைத்திருந்தால் மட்டுமல்ல... வேறு பல காரணங்களாலும் மரத்துப்போதல் பிரச்னை வரலாம்'' என்கிறார் நரம்பியல் மருத்துவர் அருள் செல்வம். - - ''ரத்த ஓட்டம் தடைபடும் காரணத்தால் கை, கால்கள் மரத்துப் போகும். குறிப்பாக, ஆன்டிபயாடிக் மற்றும் கேன்சர் மாத்திரைகளாலும் கை, கால்கள் மரத்துப் போகும். உடலில் ...

மொழி – கவிதை

Posted: 17 Apr 2017 05:56 PM PDT


-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™