Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தினகரன் மீது எப்.ஐ.ஆர்., - 10 அம்சங்கள்

Posted: 18 Apr 2017 04:39 AM PDT

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்று தினகரன் சிக்கியது எப்படி என்பது குறித்து, டில்லி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்.ஐ.ஆரில் விரிவாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக டில்லி குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் சஞ்சய் ெஷகாவாத் பதிவு செய்துள்ள எப்.ஐஆர்., ரில் கூறப்பட்டுள்ள முக்கிய, 10 அம்சங்கள் வருமாறு:

1.புதுடில்லி, சாணக்கியாபுரியில் உள்ள என் அலுவலகத்தில் 15.4.17 அன்று இரவு, 11:30 மணிக்கு நான் இருந்த போது, ரகசிய தகவல் வந்தது. பெங்களுரை சேர்ந்த சுகேஷ் என்ற சுகேஷ் ...

லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா... சிக்கினான்! வங்கிகளுக்கு 'தண்ணி' காட்டிய வழக்கில் அதிரடி

Posted: 18 Apr 2017 10:43 AM PDT

லண்டன்: 'வங்கிக் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்குகள் தொடர்பாக, லண்டனில் உள்ள பிரபல தொழில திபர், விஜய் மல்லையாவை ஒப்படைக்க வேண்டும்' என்ற, மத்திய அரசின் கோரிக் கையை ஏற்று, ஸ்காட்லாந்து யார்டு போலீசார், அவனை கைது செய்தனர்; சில மணி நேரங் களில், அவனுக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 61. இவனது 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம், பல்வேறு வங்கிகளில் வாங்கிய, 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை.
இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட ...

ஊழல் அதிகாரி பதவி பறிப்பு; யோகியின் அடுத்த அதிரடி

Posted: 18 Apr 2017 10:46 AM PDT

லக்னோ: ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியின் பதவியை பறித்து, மற்ற அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்து, நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந் தது. ஒரு மாதமாக, பல்வேறு அதிரடி நடவடிக் கைகள் மூலம், பல்வேறு தரப்பினரின், குறிப்பாக உ.பி., மக்களின் ஆதரவை பெற்று வருகிறார் யோகி.இம்மாதம், 12ம் தேதி, 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டனர். முந்தைய சமாஜ்வாதி கட்சி ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக செயல் பட்டு வந்தோர் உள்ளிட்டோர் ...

அறை எண் 263ல் தினகரனின் லஞ்ச பணம்

Posted: 18 Apr 2017 10:49 AM PDT

இரட்டை இலைச் சின்னத்தை எப்படியாவது பெற்றுவிடும் நோக்கில், அ.தி.மு.க., அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் தினகரனுக்கு, தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்தர், கைது செய்யப்பட்டான்.

இந்த சம்பவம், தமிழக அரசியலில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், டில்லி கிரைம் பிராஞ்ச் போலீசாரின், எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இம்மாதம், 15ல், எங்களது அலுவலகத்துக்கு, நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து, சுகேஷ் சந்தர் என்பவன், டில்லி ஆர்.கே.புரம் பகுதியில் அமைந்துள்ள ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் தங்கியிருப்பது குறித்த ...

பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் 'மிஸ்சிங்' அரண்டு கிடக்கும் ஆளுங்கட்சியினர்

Posted: 18 Apr 2017 10:52 AM PDT

கோவை: அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளால், இந்தாண்டு தமிழக பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தை நடத்தவே ஆளும் கட்சியினர் தயாரில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், சட்டசபையில் பட்ஜெட் தாக்கலுக்கு பின், ஆளும் கட்சியினர் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்தப் படுவது வழக்கம். அதில், பட்ஜெட் விபரங்கள் குறித்து, கட்சித் தலைமையால் அறிவிக்கப் படும் பேச்சாளர்கள் பேசுவர். பெருமளவு அரசியல் பேசினாலும், பெயரளவுக்காவது பட்ஜெட் குறித்து இக்கூட்டத்தில் பேச்சு இருக்கும்.ஆனால், இந்தாண்டு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் ...

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே புகார்: மருந்து விலை ஆணைய குளறுபடி

Posted: 18 Apr 2017 10:58 AM PDT

மதுரை: இருதய, ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க பயன்படும் 'ஸ்டென்ட்' போன்ற வற்றின் விலையை நிர்ணயிக்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், 'தொலைபேசி புகார் எண்ணில் (1800 111 255) இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே புகார் செய்ய முடியும்' என கூறியுள்ளது. இது இந்தி பேசாத மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருந்துப் பொருட்களை அதிக விலைக்கு விற்றல், மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்னை களுக்கு தீர்வு காண 1995ல் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் கீழ் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.நாடு முழுவதும் விற்கப்படும் மருந்துகளுக்கான விலையை ஆணையமே ...

நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரம்: முதல்வர் பதில் மனு

Posted: 18 Apr 2017 11:01 AM PDT

சென்னை: 'எம்.எல்.ஏ.,க்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்ததாக கூறுவது தவறானது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், முதல்வர் பழனிசாமி பதிலளித்து உள்ளார்.

முதல்வராக பழனிசாமி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, சட்டசபையில், பிப்., 18ல் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரபட்டது. ரகசிய ஓட்டெடுப்பு நடத்தக் கோரி, சட்டசபையில், தி.மு.க., உறுப்பினர்கள் ரகளையில் ஈடு பட்டனர். அதை தொடர்ந்து, அவர்கள் வெளியேற்றபட்டனர். பின், நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. முதல்வர் பழனிசாமி அரசு, வெற்றி பெற்றது. 'நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது; ரகசிய ஓட்டெ டுப்பு ...

சசிகலா குடும்பத்திற்கு எதிரான தர்மயுத்தத்தில்... சாதித்தாா் பன்னீா்!அ.தி.மு.க.,விலிருந்து தினகரன் கும்பல் வெளியேற்றம்

Posted: 18 Apr 2017 11:08 AM PDT

சென்னை: சசிகலா குடும்பத்திற்கு எதிரான தர்மயுத்தத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் சாதித்து காட்டியுள்ளார். அ.தி.மு.க., வில் இருந்து, தினகரன் கும்பல் அடியோடு வெளியேற்றப்பட்டது. முதல்வர் வீட்டில், அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கு பின், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தொண்டர்களின் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைப்பது தொடர்பான பேச்சு, நேற்று முன் தினம் துவங்கியது. நேற்று காலையில், 'இரு அணிகளும் இணைய, சசிகலா குடும்பத்தை, கட்சி, ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் ...

அமைச்சர்கள் அதிரடிக்கு காரணம் என்ன?

Posted: 18 Apr 2017 11:11 AM PDT

சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில், அ.தி.மு.க., - சசி அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, தேர்தல் பணியாற்ற, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்றனர்.

அப்போது, சசிகலா குடும்பத்தினருக்கு, கட்சி தொண்டர்களிடமும், பொது மக்களிடமும், கடும் எதிர்ப்பு இருப்பதை கண்கூடாக பார்த்தனர். மேலும், தினகரன் வெற்றி கேள்விக் குறியானதை தொடர்ந்து, பணத்தை வாரி இறைத்ததால், தேர்தல் கமிஷன், தேர்தலை ரத்து செய்தது.
அதைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளரான, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரி சோதனையில் சிக்கினார். இதெல்லாமே, சக அமைச்சர்களை ...

இன்று மாலை 3 மணிக்கு அதிமுக எம்.எம்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Posted: 18 Apr 2017 12:35 PM PDT

சென்னை: இன்று(ஏப்.,19) மாலை அ.தி.மு.க., எம்.எம்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், இன்று மாலை 3 மணிக்கு அ.தி.மு.க., எம்.எம்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தினகரன் அறிவித்துள்ளார். ...

பன்னீரின் நிபந்தனையை ஏற்க முடியாது: நாஞ்சில் சம்பத்

Posted: 18 Apr 2017 12:54 PM PDT

சென்னை: பன்னீரின் நிபந்தனையை ஏற்க முடியாது என சசி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
விஸ்வரூபம்:
அமைச்சர்கள் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் தெரிவித்ததாவது: பன்னீர் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. டிடிவி தினகரன் தலைமையில் தான் அ.தி.மு.க., செயல்படும். கட்சியை தினகரன் வலிமையுடன் நடத்துவார். ஜெயக்குமாரை நிதியமைச்சர் ஆக்கி அழகு பார்த்தவர் தினகரன் தான். அமைச்சர்கள் கூறுவதை கேட்கும் மனநிலையில் தொண்டர்கள் இல்லை. இரண்டு ஆண்டுகளில் அ.தி.மு.க., ...

தினகரன் மீதான வழக்கு இன்று விசாரணை!

Posted: 18 Apr 2017 03:21 PM PDT

சென்னை : சசிகலா, தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகள், இன்று(ஏப்.,19) விசாரணைக்கு வருகின்றன.

இன்று விசாரணை:
இந்த வழக்குகள், சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் - 1 மற்றும், 2வது நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. நேற்று, சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு, பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் - 1ல், மாஜிஸ்திரேட், ஜாகிர் உசேன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலாவின் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அதனால், இந்த வழக்கு விசாரணை, இன்று நடக்கும் என, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
வீடியோ ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™