Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Posted: 16 Apr 2017 11:26 AM PDT

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !



மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு: வங்கியில் புழக்கம் துவக்கம்

Posted: 16 Apr 2017 10:45 AM PDT

பல்லடம் பல்லடத்தில் உள்ள வங்கி ஒன்று, பயன்பாட்டில் மிகவும் அரிதாகிவிட்ட, ஒரு ரூபாய் நோட்டு கட்டுகளை வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு, 'இன்ப அதிர்ச்சி' தந்துள்ளது. ஒரு ரூபாய் நோட்டுகள் பயன்பாடு பெருமளவு குறைந்து, அதற்கு பதிலாக நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டன. இதனால், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுகளை பார்ப்பதே மிகவும் அரிதாகிவிட்டது. ஆனால், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கிளை, தனது வாடிக்கையாளர்களுக்கு, ஒரு ரூபாய் நோட்டு கட்டுகளை ...

உணவு உண்ணும் முறை…

Posted: 16 Apr 2017 07:24 AM PDT

வாடும் பயிர் – ஒரு பக்க கதை

Posted: 16 Apr 2017 07:23 AM PDT

டூர் போறீங்களா? இதெல்லாம் மறக்காதீங்க...

Posted: 16 Apr 2017 07:22 AM PDT

டூர் போறீங்களா? இதெல்லாம் மறக்காதீங்க... பயணம் செய்யும்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு செக் லிஸ்ட் (அவரவர்கள் தங்களுக்கு ஏற்ப இந்தப் பட்டியல் மாறுதல் செய்து கொள்ளலாம்) – * பயணச் சீட்டு – செல்வதற்கானது * பயணச்சீட்டு – திரும்பி வருவதற்கானது * பயணத்தின்போது கேட்டால் காட்டுவதற்கான அடையாள சான்று (ஓட்டுனர் உரிமம், பான் கார்டு என்பது போல்) * கடன் அட்டை மற்றும் ஏ.டி.எம். அட்டை. * செயின் லாக் (ரயில் பயணத்தின்போது சூட்கேஸ்களுக்கான பாதுகாப்பு) * பேனா (எழுதுவதற்கும்,ரயில் மின் விசிறி ...

எக்ஸ்பிரஸ் கதைகள் -

Posted: 16 Apr 2017 07:21 AM PDT

பாதுகாப்பு - எதிர்வீட்டுல நாய்கள் ஜாக்கிரதைன்னு போர்டு போட்டிருக்கு சிசிடிவி கேமா பொருத்திய இருக்கு. எக்ஸ்சர்வீஸமேன் ஒருத்தர் வீட்டுக்குப் பாதுகாப்பாப் போட்டிருக்கு.. நமக்குத்தான் எந்த பாதுகாப்பும் இல்லை என்று பொருமினாள் மனைவி - "டோன்ட் ஒர்ரி கண்ணு! இப்ப திருட்டுப் பசங்க கண்ணெல்லாம் அந்த வீட்டு மேலதான் இருக்கும். நம்ம வீட்டை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டாங்க" என்றான் கணவன் - ----------------

பத்து நொடி கதைகள்

Posted: 16 Apr 2017 06:09 AM PDT

மாடு பிடி வீரன்…- பத்து செக்ண்ட் கதைகள்

Posted: 16 Apr 2017 05:44 AM PDT

- விளையாட்டு – பேயும் சாமியும் சண்டைபோடுற மாதிரி புதுசா ஏதாவது வீடியோ கேம் வந்திருக்காப்பா என்று கேட்டாள் அபர்ணா! – கோ.சென்னப்பன் – ———————————- அமைதி – பஸ்ஸில் ஜன்னல் ஓர சீட் பிடித்து அமைதியாக உட்கார்ந்தபடி ஆக்ரோஷமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தான் ரகுவரன் ட்விட்டரில் – கே.மணிகண்டன் – ——————————– – வீரன் – பொங்கல் கரும்பைச்சுவைத்தபடி டி.வியில் புதுப்படம் பார்த்துக் கொண்டிருந்தான் மாடு பிடி வீரன் – சி.எஸ்.நாதன் – ———————————

ஏங்க வாயை ஊதுங்க…!! -10 செகண்ட் கதைகள்

Posted: 16 Apr 2017 05:39 AM PDT

– நிம்மதி – எவ்வளவு நாள் ஆச்சு இப்படி ஏ.டி.எம்-ல பணத்தைப் பார்த்து எனப் பெருமூச்சு விட்டார் அப்பா! – கோ.பகவான் – ————————– நட்பு – உங்க ஏரியா ஏ.டி.எம்.ல பணம் போட்டா சொல்லுங்க, எங்க ஏரியாவுல பணம் போட்டா நான் சொல்றேன் என நம்பர் வாங்கிச் சென்றனர் ஏ.டி.எம்.நண்பர்கள் – கோ.பகவான் – ———————————— பராமரிப்பு - – கேட்கும்போது எல்லாம் பணம் அனுபினேனே.. .நீங்க ஒழுங்கா பார்த்திருந்தா, எங்க அம்மா செத்திருக்க மாட்டாங்க' என முதியோர் இல்ல உரிமையாளரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தான் ...

ரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு

Posted: 16 Apr 2017 05:36 AM PDT

கொல்கத்தா, கொல்கத்தாவின் தும்தும் பகுதியை சேர்ந்த இளைஞர் தாராகாந்த் மாகால் தன்னுடைய நண்பர்கள் சுமித்குமார், சஞ்ஜீவ், காஜல் ஷாகா மற்றும் சந்தானுடன் தாராகேஷ்வர் கோவிலுக்கு சென்றுவிட்டு ரெயிலில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். ரெயிலில் சென்றபோது ரெயிலுக்கு வெளியே தொங்கிய வண்ணம் செல்ஃபி எடுக்கும் விபரீத முயற்சியை அவர்கள் எடுத்து உள்ளனர். ரெயில் கவுரா அருகே பெலூர் ரெயில் நிலையம் பகுதியில் சென்றுக் கொண்டு இருந்தபோது பெட்டியில் மக்கள் கூட்டம் எதுவும் கிடையாது. தாராகாந்த் நண்பர்களுடன் ...

விமானத்தை கடத்தி தகர்ப்பதாக மிரட்டல்: சென்னை, மும்பை, ஐதராபாத் விமான நிலையங்களில் அதிஉயர் பாதுகாப்பு

Posted: 16 Apr 2017 05:36 AM PDT

மும்பை, கடத்தல் எச்சரிக்கையை அடுத்து விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது. சென்னை, மும்பை மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் விமானத்தை கடத்துவதற்காக சாத்தியாமான முயற்சிகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு முகமைகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது, இதனையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. விமான நிறுவனங்கள் பயணிகள் கடைசி நிமிடத்தில் வருவதை சற்று விடவேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளன. விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ...

ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா -

Posted: 16 Apr 2017 05:34 AM PDT

- " இது 'மிர்ஸா குடும்ப விழா'... " . அந்த நிகழ்வை சிரித்துக் கொண்டே அப்படித் தான் குறிப்பிடுகிறார் இந்தியாவின் ஆகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா.  சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில், சானியா மிர்ஸாவின் தங்கை அனம் மிர்ஸாவும், அவர் கணவர் அக்பர் ரஷீதும் இணைந்து " தி லேபிள் பஜார்" என்ற பெயரில் டிசைனர் ஆடைகளுக்கான கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதன் பிராண்ட் அம்பாசிடரான சானியா மிர்ஸா அந்த நிகழ்வுக்காக சென்னை வந்திருந்தார்... சென்னைப் பிடிக்குமா? உங்களோட ...

நள்ளிரவில் மாருதா புயல் கரையை கடக்கும்

Posted: 16 Apr 2017 05:31 AM PDT

புதுடில்லி: வங்க கடலில் மையம் கொண்டுள்ள மாருதா புயல் இன்று (16ம்தேதி ) நள்ளிரவில் கரையை கடக்கும் என தேசிய பேரிடர் மேலாண் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இது தொடர்பாக என்.டி.எம்.ஏ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மாருதா புயல் வட கிழக்காக நகர்ந்து மியான்மர் கடற்கரை அருகேயுள்ள சண்டோவே பகுதியில் கரையை கடக்கும். இன்னும் 24 மணி நேரத்திற்கு வங்க கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும். மீனவர்கள் ...

பல் துலக்காதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்!

Posted: 16 Apr 2017 04:56 AM PDT


-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

Posted: 16 Apr 2017 04:35 AM PDT

தமிழ் புத்தாண்டு பலன்: தலைவர்களுக்கு எப்படி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பு தமிழ் புத்தாண்டு, கிருஷ்ணபட்சம், திருதியை திதி, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளது. இந்த ஆண்டில், மழை குறைவாக பொழியும். எனினும் விவசாயிகளுக்கு, மத்திய அரசு மூலம் பெரும் உதவிகள் கிடைக்கும்; காப்பீட்டு திட்டங்களும் அறிவிக்கப்படும். மாற்று பயிர் திட்டம் மூலம், விவசாய பாதிப்பு சற்று குறையும். வாகனம், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், காகிதப் பொருட்கள் விலை கூடும்; பண மதிப்பு உயரும். அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு, மக்கள் ...

ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Posted: 16 Apr 2017 04:18 AM PDT

மேஷம் தழைத்துக் குலுங்கும் மரங்களுக்கு ஆதாரமாக விளங்கும் ஆணி வேரைப் போல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே! யார் மனதும் நோகாமல் பேசும் நீங்கள், சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு கோடை மழையாக கொட்டுவீர்கள். மந்திரி முதல் அடிமட்டத் தொண்டன் வரை அனைவரின் திரைமறைவு வேலைகளையும் சுட்டிக் காட்டிப் பேசுவதால் உங்களை சிலர் அரை கிறுக்கன் என்பார்கள்! உங்கள் ராசிக்கு தனாதிபதியாகிய சுக்கிரன் 12வது வீட்டிலே உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால் வீடு, மனை வாங்கக்கூடிய ...

தமிழ்மொழி விழாவில் முதல்முறையாக தொழில்நுட்பப் பயன்பாட்டுடன் அரங்கேற்றப்பட்டுள்ள நாடகம்

Posted: 16 Apr 2017 02:40 AM PDT

சிங்கப்பூர் ஏப்ரல் ௧௦ - - 'செங்குழல் சீவிய பத்தினித் தீ' என்ற தலைப்பில் பட்டிமன்றம், நாடகம், இசைக்காணொளிப் போட்டி என்று மூன்று விதமான அங்கங்களோடு அரங்கேறியது 'பார்வை 2017'. பார்வையாளர்கள் சுற்று ஒன்று தொழில்நுட்பத்தின் உதவியோடு விறுவிறுப்பாக நடைபெற்றது இவ்வாண்டின் சிறப்பு. சங்கத் தமிழ்ப் புழக்கத்தையும் தமிழ் இலக்கியங்களையும் பற்றி தொழில்நுட்பத்தின் துணையோடு இளையர்களுக்காக இளையர்களே படைத்து வரும் பார்வை நிகழ்ச் சியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் ...

அலைகள் – கவிதை

Posted: 16 Apr 2017 01:38 AM PDT

கனவுகள் விழிகளுக்குச் சொந்தம்

Posted: 16 Apr 2017 01:30 AM PDT


-

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சீமான்!!

Posted: 16 Apr 2017 12:57 AM PDT

டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 33 நாள்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் பிரச்னை குறித்து ஆலோசிக்க தி.மு.க இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்நிலையில் சீமான் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தி வருகிறார். போராட்டத்தின் போது பேசிய சீமான், "விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விவசாயிகளை ...

ஏப்.,25ல் பந்த்:அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Posted: 16 Apr 2017 12:46 AM PDT

சென்னை: விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஏப்ரல் 25ல் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என தி.மு.க., தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், காங்., தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ...

ஈச்சங்குலை...!!

Posted: 15 Apr 2017 11:52 PM PDT

புது வழி…!! 1. மார்கழியில் எல்லாம் கழி தையில் வரும் புதுவழி. 2. வாழ்க்கைக்கு பணப் பரிமாற்றம் காதலுக்கு மனப் பரிமாற்றம். 3. சாப்பிடும்போது பொறை ஏறியது நினைத்தவள் யாராகயிருக்கும்? 4. ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை கொழுக்கட்டையின் விரல்ரேகை 5. பணமற்ற இந்தியா அட்டைக்குள் முடங்கப் போகிறது 6. சில்லறை இல்லை என்றுதான் சொல்கிறார்கள் இருக்கிறதென்று யாரும் சொல்வதில்லை. * இருப்பவனுக்கு நெருக்கடி இல்லை இல்லாதவனுக்குத் தான் நெரு்க்கடி. ந.க.துறைவன்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™