Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சரியான பாதையில் யோகி: மக்கள் அமோக ஆதரவு

Posted: 16 Apr 2017 09:28 AM PDT

புதுடில்லி: 'உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத், தான் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் மூலம், சரியான பாதையில் செல்கிறார்' என, அம் மாநில மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

உத்தர பிரதேசத்தில், சமீபத்தில் நடந்த சட்ட சபை தேர்தலில், மொத்தமுள்ள, 403 தொகுதி களில், 325 தொகுதிகளில் வென்று, பா.ஜ., ஆட்சி அமைத்தது. சர்ச்சை பேச்சுகளால் கடும் விமர்சனங்களை சந்தித்த, யோகி ஆதித்யநாத், முதல்வராக பதவியேற்றதை, எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. சட்டவிரோத இறைச்சி கடைகள் மூடல் உட்பட, பல்வேறு அதிரடி நடவடிக் கைகள் மூலம், ஒரு மாதமாக, பலரது பாராட்டு களை யோகி ...

ஆயுள் தாண்டி ஓடும் 13,612 பஸ்கள்: பலிகள் அதிகரிப்பு

Posted: 16 Apr 2017 10:03 AM PDT

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், ஆயுள் காலம் முடிந்து, 13 ஆயிரத்து, 612 பஸ்கள் இயக்கப்படும் நிலையில், விபத்துகளில் சிக்கி, உயிரிழப்போரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில், ஐந்து ஆண்டுகளில், 7,153 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டன. இருப்பினும், பல ஆண்டுகளாக, ஓட்டை, உடைசல் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மழை பெய்தால் ஒழுகும் மேற்கூரை, கழன்று ஓடும் டயர்கள், உடையும் இரும்பு ராடுகள், உடைந்த படிக்கட்டுகள், கிழிந்த, 'சீட்' என, கந்தல் கோலமாகவே, அரசு பஸ்கள் காட்சி அளிக்கின்றன. இதில், ஆயுள் காலம் ...

மும்முறை 'தலாக்' விவாகரத்து முறைக்கு பிரதமர்... எதிர்ப்பு!: முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க அழைப்பு

Posted: 16 Apr 2017 10:25 AM PDT

புவனேஸ்வர்: ''மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையில், முஸ்லிம் பெண்களின் உரிமைகள் சுரண்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம் சகோதரி களுக்கு நீதி கிடைக்க, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்,'' என, பிரதமர் மோடி உறுதியுடன் கூறினார்.

முஸ்லிம்களில், மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இதைத் தவிர, இந்த முறையில் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு முஸ்லிம் பெண்களும், பல்வேறு கோர்ட்டு களில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கின் ...

வாடகை தாய் மசோதா: வக்கீல், டாக்டர்கள் எதிர்ப்பு

Posted: 16 Apr 2017 10:39 AM PDT

புதுடில்லி:லோக்சபாவில் தாக்கல் செய்யப் பட்டுள்ள வாடகை தாய் மசோதாவுக்கு, வக்கீல் கள், டாக்டர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குழந்தை இல்லாத தம்பதிகள், வாடகை தாய் மூலம், குழந்தை பெற்றுக் கொள்வது, இந்தியா உட்பட பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. சமூக நோக்கத்துடன் துவங்கப்பட்ட இந்த திட்டம், தற்போது, வியாபாரமாக மாறி வருகிறது. இதனால், பல மோசடிகள் நடக்கின் றன; இதை தடுக்க, மத்திய அரசு, புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா, லோக்சபாவில், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவில், 'வெளிநாட்டு தம்பதியினர், இந்திய பெண்களை வாடகை தாயாக பயன் ...

வருமான வரி சோதனையில் சிக்கிய விஜயபாஸ்கரின் பதவி...பறிக்கப்படுமா?மூத்த அமைச்சர்கள் பிடிவாதத்தால் தினகரனுக்கு நெருக்கடி

Posted: 16 Apr 2017 10:49 AM PDT

வருமான வரி சோதனையில் சிக்கிய, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பதவியை பறிக்க வேண்டும் என்பதில், மூத்த அமைச்சர்கள் பிடிவாதமாக இருப்பதால், தினகரனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. முதல்வர் பழனிசாமியும் உறுதியாக உள்ள தால், கவர்னர் சென்னை வந்ததும், அமைச்சர வையில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள், உதவியாளர்கள் வீடு, அலுவலகம் மற்றும் தொழில் நிறுவனங்களில், ஏப்., 7ல், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், ஆர்.கே.நகர் தொகுதி இடை தேர்தலில், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் ...

அமைச்சர்கள் கைது எப்போது? போலீஸ் அதிகாரிகள் மும்முரம்

Posted: 16 Apr 2017 10:56 AM PDT

சென்னை:வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியது உள்ளிட்ட வழக்குகளில், அமைச்சர் களை கைது செய்ய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ஏப்., 7ல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, இடைத்தேர்தல் நடக்க இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு, 89 கோடி ரூபாய், பணம் பட்டுவாடா செய்வதற்கான ஆதாரங்கள் சிக்கின.அப்போது, அமைச்சர்கள்காமராஜ், ராதாகிருஷ்ணன், ராஜு மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், விஜயபாஸ்கர் வீட்டிற்குள் அத்து மீறி ...

ரேஷன் கொள்முதல்: பல கோடி மோசடி

Posted: 16 Apr 2017 11:01 AM PDT

கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கான மளிகை பொருட்கள் கொள்முதலில், சந்தை விலையை விட, அதிக விலை நிர்ணயித்து, பல கோடி ரூபாய் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனால், அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, இந்தப் பொருட் கள் கொள்முதலை, 'ஆன்லைன்' முறையில் மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவை சார்பில், 32 ஆயிரத்து, 500 ரேஷன் கடைகள் நடத்தப் படுகின்றன. இவற்றில், கட்டுப்பாட்டு பிரிவில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, ...

25ம் தேதி தமிழகத்தில் 'பந்த்'அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

Posted: 16 Apr 2017 11:07 AM PDT

சென்னை: விவசாயிகளின் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணக்கோரி, வரும், 25ல், மாநிலம் தழுவிய, பந்த் நடத்துவது என, தி.மு.க., கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில், முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக, தி.மு.க., கூட்டிய அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், நேற்று நடந்தது.
தீர்மானங்கள் என்ன?
இதில், விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசு சட்டசபையை கூட்ட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ...

தினகரன் பதவியை பறிக்க பன்னீர் அணி புது முயற்சி

Posted: 16 Apr 2017 11:11 AM PDT

'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், சின்னம் தொடர்பான விசாரணையை நிறுத்தி விட்டு, சசிகலா பொதுச் செயலரானது செல்லாது என, அறிவிக்க கோரி கொடுக்கப்பட்ட மனுவை விசாரிக்க வேண்டும்' என, பன்னீர்செல்வம் தரப்பினர், இன்று தேர்தல் கமிஷனில், புதிய மனு அளிக்க உள்ளனர். இது, தினகரனுக்கு மேலும், நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விசாரணை, தேர்தல் கமிஷனில், இன்று நடக்கிறது. பன்னீர் தரப்பில், ஏற்கனவே, 42 லட்சம் உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ...

ஆந்திர அரசுக்கு எதிராக கருத்து சொன்னால் சிறை?

Posted: 16 Apr 2017 12:13 PM PDT

அமராவதி : ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராகவோ, முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசுக்கு எதிராகவோ, சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தால், சிறையில் அடைக்கப்படலாம் என்ற அச்சம், 'நெட்டிசன்'கள் மத்தியில் உருவாகி உள்ளது.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலர் பதவியை வகித்து வரும், அவரது மகன், நரலோகேஷ், சமீபத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் மத்தியில், நரலோகேஷ் ...

பிரின்டிங் இல்லாமல் ரூ.10 நாணயம் வெளியீடு

Posted: 16 Apr 2017 01:30 PM PDT

சேலம் : ''பிரின்டிங் இல்லாமல், 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது,'' என, சேலம் பாராமஹால் நாணய சங்க இயக்குனர், சுல்தான் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு, நவ., 8ல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால், சில்லரை தட்டுப்பாட்டை போக்க, 10 ரூபாய் நாணயங்களை, அதிகமாக வெளியிட்டது.
அவற்றில், இந்திய ஸ்துாபி மட்டுமின்றி, அதன் மதிப்பு தொகை, அச்சிட்ட ஆண்டு ஆகிய குறிப்புகள் இல்லாமல் வெளியிடப்பட்டன. சிலவற்றில், எழுத்துகள் விரைவாக அழிந்துவிடும் வகையில் உள்ளன. ...

ஓ.பி.எஸ்., அணிக்கு தாவுகிறார் வளர்மதி

Posted: 16 Apr 2017 02:30 PM PDT

அ.தி.மு.க., வின் இரு அணிகளிடையே சமரச பேச்சு துவக்கியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சசிகலா அணியிலிருந்து விலகி, பன்னீர்செல்வம் அணிக்கு மாற உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் பாட நுால் வாரிய தலைவராக உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். அதற்கு பரிசாக, அவருக்கு தமிழக அரசின் பாடநுால் வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
சசிகலா சிறைக்கு சென்ற பின், தினகரன் ஆதரவாளராக வலம் வந்தார். ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு ஆதரவாக, தேர்தல் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™