Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: பேரவை உறுப்பினராகி இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு

Posted: 01 Apr 2017 10:59 AM PDT

திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும். தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக ...

சும்மா கோஷம் போடாமல், எங்கே அடித்தால் எப்படி விழும் என்று தெரிந்து அடித்திருக்கிறார்கள்..! பாமக தமிழக வரலாற்றில் மெச்சத்தக்க அத்தியாயம்..!

Posted: 01 Apr 2017 10:57 AM PDT

சட்டப்போராட்டத்தின் மூலம் ஒரே நாளில் உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் மூடவைத்துள்ளது பாமக. தமிழக வரலாற்றில் மெச்சத்தக்க அத்தியாயம் இது. கிட்டத்தட்ட ஒரு போருக்கு நிகராக, தொடர்ந்து வாளை சுழற்றி. நீதி பேரவை சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் பாலு இதனை சாதித்துள்ளார். இந்த விஷயத்தில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் அக்கறை வியக்கவைக்கிறது. தமிழகத்தில் மதுபான கடைகளை அரசு நிறுவனமான டாஸ்மாக் நிறுவனமே நடத்துகிறது. மொத்தம் 6323 டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் தினமும் ரூ.65 ...

என்னைப்பற்றி- இராமூர்த்தி

Posted: 01 Apr 2017 09:17 AM PDT

பெயர்:இரா.மூர்த்தி
சொந்த ஊர்:ஈரோடு
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:இணையம்
பொழுதுபோக்கு:பாடல் கேட்பது,இணையத்தில் முகநூல்,ட்டிவிட்டர்
தொழில்:சுய தொழில்
மேலும் என்னைப் பற்றி:தமிழ்,தமிழன்,தமிழ் தேசியம்,தமிழிழம் போன்றவற்றில் ஆர்வம் அதிகம் உள்ளூர் முதல் உலக தமிழர் நலன் பற்றி அக்கரை அதிகம் அவ்வளவுதான்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்

Posted: 01 Apr 2017 04:09 AM PDT

இந்த தளத்திற்கு  சென்று உங்களுக்கு தேவையானதை படிக்கவும்.


http://tamilpdfworld.blogspot.in

அன்புடன்


அருள்

“பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றிய 300 நிறுவனங்கள்”: அமலாக்கத் துறை அதிரடி சோதனை..!!

Posted: 01 Apr 2017 03:56 AM PDT

நாடு முழுவது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி இரவு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். அதனால், பதுக்கி வைக்கப்பட்டள்ள பணம் வெளியே வரும் என்றும், கள்ள நோட்டுகள் ஒழியும் என்று கூறப்பட்டது. மேலும் மின் பரிவர்த்தனை நடந்தால், வரி ஏய்ப்பு நடைபெறுவது தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் பல்வெறு இடங்களில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்றதாக, அமலாக்கத்துறைக்கு புகார்கள் குவிந்து வந்தது. அதன்படி, அமலாக்கத்துறை ...

மகள் பொறி

Posted: 01 Apr 2017 03:07 AM PDT

-தி.பரமேஸ்வரி - - வெற்றுத்தாளைத் தரையில் விரித்து ஒற்றைக்கால் மடக்கி நாக்குநுனி வெளித்தள்ளி காலம் கடந்தவள் வீடு வரைகிறாள் நான் அதற்குள் அமர்ந்தேன் கீற்றுச் சிரிப்புடன் குளமொன்று வரைந்து சுற்றிலும் சிறுசெடிகளை அமர்த்தினாள் நான் நீந்தத் தொடங்கினேன் சரசரவென்று மலையொன்றை எழுதிப் பாறைகளைச் செருகி வண்ணம் தீட்டினாள் ஈரம் காயாதபோதும் மேலேறினேன் அவளோரக் கண்களின் குறுகுறுப்பை குறுநகையின் மர்மத்தை அறியாது பாடலொன்றை முணுமுணுத்தபடி உச்சியை அடைந்தேன் தயங்கிக் கடக்கும் மேகத்தை ...

ஆண்களின் கவனத்துக்கு

Posted: 01 Apr 2017 03:06 AM PDT

- நெரிசலான பேருந்துப் பயணத்தில் இடித்துக்கொண்டே நின்ற சிறுமியை திட்டுவதற்காய்த் திரும்புகையில் பின்னால் நிற்பவனைப் பார்த்து அவள் மருண்டு நிற்பதைக் கண்டபோது நொறுங்கிப்போனது - உன் மீதான அத்தனை நம்பிக்கையும் முன்னால் நிற்கும் கணவனுக்கும் பின்னால் நிற்பவனின் கரங்களுக்குமிடையில் பயந்து தவித்த பெண்ணைப் பார்த்தபோது உடைந்துபோனது உன் மீதான அத்தனை எதிர்பார்ப்பும் உன் அம்மா வயசுப்பா எனக்கு என்று பின்னாலிருப்பவனைப் பார்த்து அந்த நடு இரவில் அழுத பெண்மணியைப் பார்த்தபோது மடிந்துபோனது - உன் ...

நினைவெனும் அரளிவிதை

Posted: 01 Apr 2017 03:05 AM PDT


நேசத்துடன் பரிசளிக்கப்பட்ட
நினைவெனும் அரளிவிதைகளை
என்னுள் விதைக்கிறேன் சிறுமுறுவலுடன்
உதிரம் உறிஞ்சி
வேர்கள் நரம்புகளுடன் பிணைந்து
வளரத்தொடங்கியதும்
முதல் பூ தலையில் மலர்கிறது

புத்தனாகி பின் அரளிச் செடியானேன்
இளஞ்சிவப்பு மஞ்சள் வெள்ளையென
பல வண்ணங்களில் பூக்கள்
பூத்துக்குலுங்குகின்றன உன் முற்றத்தில்.

——————–

– பழ.மணிவண்ணன்

நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..?

Posted: 01 Apr 2017 02:59 AM PDT

'அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா
இருக்காங்க..?''
''அவங்களோட சண்டை போடக் கூட
டூப்பைத்தான் அனுப்புறாராம்!''

– வி.சாரதிடேச்சு
————————————–


''என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…
ஆனா, பேஷன்ட் —-
-
''ஏப்ரல் ஃபூல்!''
-
– எஸ்.எலிசபெத் ராணி
-
-----------------------------------------

கூடா நட்பு - குறள் பாட்டு

Posted: 31 Mar 2017 11:36 PM PDT


முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
-

குறள் பாட்டு
-
முத்தில் இனிமை காட்டுவர்
நெஞ்சில் வஞ்சம் கொண்டிருப்பர்
அவரைப்போன்ற நபரை
கண்டு அஞ்ச வேண்டுமே
-
முத்தில் சிரிப்பு காட்டுவர்
நெஞ்சில் நெருப்பு கொண்டிருப்பர்
அவரை நம்பக்கூடாது
அஞ்சி நடக்க வேண்டும!
-
ஆசி.கண்ணம்பிரத்தினம்

பாரதியார் - சில புத்தகங்க்கள் தரவிறக்கு கொள்ளுங்கள் !

Posted: 31 Mar 2017 11:20 PM PDT

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் mediafire.com file/i70x1zr035t7vyx/Bharathiyarum_Panchalisapthamum.pdf பாரதியின் சக்திப் பாடல mediafire.com file/vpitzakz2rdh79w/Bharthiyin_sakthi_padalgal.pdf பாரதியின் பெண்விடுதல mediafire.com file/t5fcrnpao0d44t3/Bharathiyin_pen_viduthalai.pdf பாரதியின் சுதந்திர கவிதைகள mediafire.com file/t7bbgo24ovtgtwv/Bharthiyarin_sudhanthira_kavithaigal.pdf இதழின் முன்னொடி பாரதியார் mediafire.com file/fsj1k2ag1ot2n1j/Bharathiyar_idazhin_munnodi.pdf

வினாக்களின் புத்தகம் - ஈரோடு தமிழன்பன்

Posted: 31 Mar 2017 11:04 PM PDT


-
பாப்லோ நெருதா கவிதைகள் - ஈரோடு தமிழன்பன்

கிச்சன் டிப்ஸ் - ஆர்.வனஜா

Posted: 31 Mar 2017 10:18 PM PDT

முகநூல், ட்விட்டரில் ரசித்தைவை - தொடர் பதிவு

Posted: 31 Mar 2017 10:15 PM PDT

செய்திகள் சொல்கின்றன...!!

Posted: 31 Mar 2017 09:27 PM PDT

* 1. சமூகநல திட்டங்களைப் பெறும் பயனாளிகளிடம் ஆதார் எண் கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம். மத்திய அரசு ஆதார் வேணும்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்கக் கூடாது என்கிறது. இவர்களுக்குள் அதிகார விளையாட்டுப் போட்டி கம்பீரமா நடக்கிறது. 2. ஆர்.கே. நகர் தேர்தலுக்காக தள்ளிப் போட முடியாது. டிடிவி. தினகரன் மீதான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படும். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. தொகுதியிலும் இருப்பார். நீதிமன்றத்திலும் இருப்பார். குற்றவாளியை விசாரணை செய்துகிட்டே ...

[u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை

Posted: 31 Mar 2017 08:04 PM PDT

கடலோரக்கோயில்கள் -1 கடலில் கரைந்த கழிப்பாலை - அண்ணாமலை சுகுமாரன் இந்தக்கட்டுரையின் கரு எனக்குத்தோன்றி சற்றேறக்குறைய 47 வருடங்கள் ஆகிவிட்டது . நினைக்கும் போது எனக்கேவியப்பாக இருக்கிறது ..சமீபத்தில் நண்பர் திரு தேவராஜ் முகநூலில் எழுதிய வேளாங்கண்ணி பற்றியது தொடரையும் ,அதில் அவர் குறிப்பிட்டு இருந்த கடற்கரை ஆலயங்களைப்பற்றிய குறிப்பைப் பாத்ததும் எனக்கும் நினைவுகள் பின்னோக்கி சென்றது . எனக்கு இப்போது 67 வயது ஆகிறது . எனது 20 வயதில் நான் தமிழ் நாடு மின்வாரியத்தில் சிதபரத்தில் பணிபுரிந்து ...

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன

Posted: 31 Mar 2017 07:42 PM PDT

புதுடெல்லி, நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31–ந் தேதிக்குள் (நேற்று) மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழக அரசு மனு அத்துடன், நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்கு அப்பால் மதுக்கடைகள் உள்ளன என்ற விளம்பரம் எதையும் வைக்கக்கூடாது என்றும், இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா? என 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட கலெக்டர் மாநில அரசுக்கு அறிக்கை வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. சமூக ...

சேலம் வழியாக பெங்களூரு, சென்னைக்கு விமான சேவை

Posted: 31 Mar 2017 06:25 PM PDT

சென்னையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு செப்டம்பர் மாதத்தில் சிறிய ரக விமானத்தை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று சேலம் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு தலைவர் மாரியப்பன் தெரிவித்தார். நாடு முழுவதும் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் விமானப் போக்கு வரத்தை செயல்படுத்த மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்ச கம் திட்டமிட்டுள்ளது. இதில், சென்னை யில் இருந்து சேலம் வழியாக பெங்களூரு வுக்கு சிறியரக விமானத்தை இயக்க முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 28 ...

இன்றைய செய்தி - தொடர் பதிவு

Posted: 31 Mar 2017 06:22 PM PDT

திருச்சி:
--
கல்பட்டிசத்திரம் - மனப்பாறை இடையே புதிதாக அமைக்கப்பட்ட
இரட்டை ரயில் பாதையில் தெற்கு ரயில்வே மேலாளர் சுனில்கார்த்தி தலைமையில் மணிக்கு 121 கி.மீ. வேகத்தில் இயக்கி ரயில்
சோதனை ஓட்டம் நடைபெற்றது.
-
-------------------------
தினமலர்

அன்பின் சிறிய நிமிடங்கள்

Posted: 31 Mar 2017 06:20 PM PDT


-

சின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…!!

Posted: 31 Mar 2017 05:59 PM PDT

- அம்மா கேரக்டர்ல நடிக்கும் நடிகை என்ன சொல்றாங்க? - இனிமேல் சின்னம்மா கேரக்டர்லதான் நடிப்பாங்களாம்! - ----------------------------------- - உங்க தலைவர் சொன்னசொல் தவறாதவர்னு எப்படி சொல்றே? - மாற்றம் வேண்டும்னு தேர்தலுக்கு முன்னாடி பேசினார், இப்ப கூட்டணி மாறிட்டாரே...!! - --------------------------------------- - இவர்தான் ரொம்ப நேர்மையானவர்னு பேர் எடுத்தவராச்சே, இவர் வீட்டுல ஏன் ரெய்டு பண்றாங்க? - வருமான வரித்துறைக்கு இவரே போன் போட்டு தகவல் சொல்லிட்டாராம்..!! - --------------------------------- - தலைவர் ...

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா: ரஜினி, கமல் பங்கேற்பு

Posted: 31 Mar 2017 05:30 PM PDT

- நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் பங்கேற்று- செங்கல் எடுத்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக தியாகராயநகரில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் புதிதாக நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்படும் என்று புதிய நிர்வாகிகள் பதிவியேற்றவுடன் அறிவித்தார்கள். இக்கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. முதலில் பூமி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் மற்றும் துணைத் ...

முதல் பார்வை: கவண்- ஊடக விளையாட்டு

Posted: 31 Mar 2017 05:13 PM PDT

- உண்மையை உரக்கச் சொல்ல நினைக்கும் இளைஞனின் மீடியா சார்ந்த போராட்டமே 'கவண்'. ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் முதல் நாள் பணிக்குச் செல்லும்போதே பெரிய கலவரத்தைக் காட்சிப்படுத்தி, நல்ல பெயர் வாங்குகிறார் விஜய் சேதுபதி. ஆனால், அதைத் தொலைக்காட்சியில் வேறு விதமாக சித்தரிக்கின்றனர். மீடியாவில் தனி நபராக எதையும் மாற்ற முடியாது என உணரும் தருணத்திலும், நேரடி ஒளிபரப்பில் புகுந்து புறப்பட்டு ஓர் அரசியல்வாதியின் நிஜ முகத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். இதனால் அந்நிறுவனத்தில் இருந்து ...

சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா?

Posted: 31 Mar 2017 05:01 PM PDT

தமிழ் படித்தவர்கள் அறிவர்... இரந்து பெறுதல் என்றால், கெஞ்சிப் பெறுவது! தன்மானத்தை விட்டுக் கொடுக்காத தகைமை என்பது, பண்டைய காலங்களில் பெரிதாக பேசப்பட்டது. இப்போதோ, 'தனக்கு ஆக வேண்டியது ஆனால் சரி... எது எக்கேடு கெட்டால் என்ன...' என்று, பலரும் எண்ணத் துவங்கி விட்டனர். நல்ல வேலையாக வாங்கி தரக்கூடியவர் தான்; ஆனால், ஏனோ மனம் வைக்க மாட்டேன் என்கிறார். எப்போது கேட்டாலும், விதவிதமான பதில்கள் வருகின்றன. 'நான் பிசி; அடுத்த வாரம் வா...' என்கிறார். அடுத்த வாரம் போனாலோ, 'அவரு ஊர்ல இல்ல; ...

ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : சசியை விமர்சித்ததால் நடவடிக்கை

Posted: 31 Mar 2017 04:53 PM PDT

---- தேனி: 'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த ஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45, பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். வேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில் போலீஸ்காரராக இருந்தார். கடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். கின்னஸ் சாதனை : இவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இலங்கை ...

ஏ.டி.எமில் தவறுதலாக அச்சிட்ட நோட்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி

Posted: 31 Mar 2017 04:32 PM PDT

காசியாபாத்: உ.பி.யில் ஏ.டி.எமி்ல் பணம் எடுத்த போது தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டு இருந்தது கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். உ.பி. மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள முக்கிய வீதி ஒன்றில் பஞ்சாப் நேஷனல் வங்கி்க்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் பரத்வாஜ், 32 என்ற வாடிக்கையாளர் தனது சேமிப்பு கணக்கில்இருந்து ரூ. 20,000 ரொக்க பணத்தை எடுத்தார். அதிர்ச்சி அப்போது தவறுதலாக அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டு ஒன்று இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். ...

துவங்கியது புதிய நிதியாண்டு: சாமானியன் சந்திக்கும் பிரச்னைகள் என்ன

Posted: 31 Mar 2017 04:29 PM PDT

சென்னை: 1000 மற்றும் .500 ரூபாய் நோட்டு ஒழிப்பு காலக்கெடு நிறைவு , பட்ஜெட்டில் வருமான வரி விகிதம், வங்கி வைப்புத்தொகையில் மாற்றம் மற்றும் பல்வேறு கட்டணங்கள், வரி விகிதங்களில் மாற்றத்துடன் புதிய நிதியாண்டு துவங்கியது. அதன் விவரம் வருமாறு *கணக்கில் காட்டாத வருமானத்திற்கு இன்று முதல் வருமான வரி 77.2 சதவீதம் வரை வசூலிக்கப்படும். * ஆண்டு வருமானம் ரூ. 2..5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் இருந்தால் வருமான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை குறைக்கப் பட்டுள்ளது. *இன்று முதல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™