Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வருமான வரியில் மாற்றம்: 10 அம்சங்கள்

Posted: 31 Mar 2017 11:44 PM PDT

புதுடில்லி: அரசு துறைகளில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு, இன்று( ஏப்ரல்1 ) புது நிதியாண்டு பிறந்துள்ளது.

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது வருமான வரி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதேபோல், பல மாற்றங்களுடன் நிதி மசோதாவும் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த மாற்றங்கள் குறித்த, 10 அம்சங்கள்:
1.ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்களுக்கான வருமான ...

இரட்டை இலை சின்னம் யாருக்கு?கையெழுத்து வேட்டை மீண்டும் துவக்கம்

Posted: 01 Apr 2017 06:11 AM PDT

இரட்டை இலை சின்னத்தை மீட்க, சசிகலா, பன்னீர்செல்வம் அணிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் மீண்டும் கையெழுத்து வேட்டை நடத்தி, தேர்தல் கமிஷனிடம், பிரமாண பத்திரங்களை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளன.

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணிகளாக, அ.தி.மு.க., பிரிந்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பெயரை பயன்படுத்த, இரு அணி களுக்கும் தடை விதித்த தேர்தல் கமிஷன், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையை யும் முடக்கியது. தற்போது, தேர்தல் கமிஷன், பன்னீர்செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் அனுமதித்துள்ள கட்சியின் பெயர்களும், ...

தேர்தல் பொறுப்பாளர்கள் திடீர் 'எஸ்கேப்': தினகரன் பிரசாரத்தில் பின்னடைவு

Posted: 01 Apr 2017 06:23 AM PDT

ஆர்.கே.நகர் தொகுதி யில், தேர்தல் பொறுப் பாளர்களாக, 200க்கும் மேற்பட்டவர்களை நியமித்தும், பெரும்பாலானோர் தொகுதியில் இருந்து, 'எஸ்கேப்' ஆகிவிடுவது, தினகரன் ஆதரவாளர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., முதல்வராக இருந்த போது, இடைத் தேர்தல் பணிகளை கவனிக்க, அனைத்து அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், தலைமை நிர்வாகிகள் என, 50 பேர் குழுவை நியமிப்பார். அவர்களுக்கு, பகுதிகள் ஒதுக்கப்படும்.அவர், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரோ, அந்த மாவட்ட நிர்வாகிகள், அவரின் கீழ் தேர்தல் பணியாற்றுவர். அனைத்து பணிகளையும், மூத்த அமைச்சர்கள் இடம் பெற்ற குழு கண்காணிக்கும். ...

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்படுமா? பண மழை பெய்வதால் வாக்காளர்கள் சந்தேகம்

Posted: 01 Apr 2017 06:25 AM PDT

தஞ்சாவூர் மற்றும் அரவக் குறிச்சி தொகுதிகளில், வாக்காளர்களுக்கு, அதிகளவில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தற்போது, ஆர்.கே.நகரிலும் பண மழை கொட்டு வதால், தேர்தல் ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம், வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
செல்வாக்கு
ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது. இரு அணியினரும், தங்களுடைய செல் வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தனித்தனியே களமிறங்கி உள்ளனர்.ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., ...

ஊழியர்களுக்கு புதிய 'அலவன்ஸ்' கிடைப்பதில்... தாமதம்? இன்னும் தீரவில்லை 7வது சம்பள கமிஷன் குளறுபடி

Posted: 01 Apr 2017 06:45 AM PDT

புதுடில்லி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஏற்ப, 'அலவன்ஸ்' எனப்படும், 'படி'களை மாற்றி அமைப்பதில், இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. இதனால், ஏப்., 1 முதல், புதிய விகித அடிப்படையில், 'படி' வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப் படுகின்றன; ஊதியக் குழு பரிந்துரையின் அடிப் படையில், சம்பள விகிதம் மாற்றி அமைக்கப் படுகிறது.அதன்படி, ஏழாவது ஊதியக் குழு அளித்த பரிந் துரைகளை, மத்திய அரசு, 2016ல் அமல்படுத்தி யது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 23.5 சதவீதமும், ...

எல்லா பரிவர்த்தனையும் இனி டிஜிட்டல் மயம் கண்டுபிடிப்பு...கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்., வழக்கொழிகிறது?

Posted: 01 Apr 2017 10:06 AM PDT

புதுடில்லி,: ''இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும்; அடுத்த நான்கு ஆண்டுகளில், மொபைல் வாலட், பயோ மெட்ரிக் போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளால், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஏ.டி.எம்.,களின் பயன்பாடு மறையத் துவங்கும்,'' என, நிடி ஆயோக் தலைவர், அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

டில்லியில், நேற்று நடந்த வர்த்தக சபை கூட்டத்தில், 'நிடி ஆயோக்' தலைவர் அமிதாப் காந்த் பங்கேற்றார்; அப்போது, அவர் பேசியதாவது:நம் நாட்டின் வளர்ச்சியில், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்பங்கள் அதிவேகத்தில் பயன்பாட்டுக்கு வந்த ...

விசாரணை கமிஷன் அமைத்தால் சந்திக்க தயார் சொல்கிறார் விஜயபாஸ்கர்

Posted: 01 Apr 2017 10:28 AM PDT

சென்னை, :''ஜெ., மரணம் குறித்து, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால், அதை சந்திக்க தயாராக உள்ளோம்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி:
ஜெ., மரணத்தை மட்டுமே, அரசியல் முதலீடாக வைத்து, பல்வேறு அவதுாறுகளை, பன்னீர்செல்வம் அள்ளித் தெளிப்பது, மிகவும் வேதனையாக உள்ளது. அவர் என்னிடம், ஜெ.,வை சிகிச்சைக்காக, வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என கூறியதாகவும், நான் மறுத்ததாகவும், அபாண்டமான பழியை சுமத்தி உள்ளார்.ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உலகத் தரமான சிகிச்சை அவருக்கு ...

நாடு முழுவதும் 300 போலி நிறுவனங்களில் அமலாக்கத்துறை... சோதனை! :ரூ.3,900 கோடி முறைகேடாக பரிவர்த்தனை செய்ததால் அதிரடி

Posted: 01 Apr 2017 10:58 AM PDT

புதுடில்லி:போலியான பெயர்களில் துவங்கப் பட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக, நாடு முழுவதும், சென்னை உட்பட, 100க்கும் மேற் பட்ட இடங்களில், நேற்று, அமலாக்கத் துறை அதிகாரிகள்அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதால்,முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

போலி பெயர்களில் துவங்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக, அமலாக்கத்துறைநடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவ தும், 16 மாநிலங்களில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், 300க்கும் மேற்பட்ட போலிநிறு வனங்களில், அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, டில்லி, ...

கள்ள ஓட்டு திட்டம்: தேர்தல் கமிஷன் தடுக்குமா?

Posted: 01 Apr 2017 12:01 PM PDT

'சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், கள்ள ஓட்டு போடுவதை தடுக்க, தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், 2015 ஜூனில் நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், ஜெயலலிதா போட்டியிட்டார். தி.மு.க., தேர்தலை புறக்கணித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் போட்டியிட்டது.
அதிர்ச்சி
அந்த தேர்தலில், மதியம் வரை, ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக இருந்தது. அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.,வினர், அருகில் இருந்த தொகுதிகளில் இருந்து, ஆட்களை வரவழைத்து, தலா, 200 ரூபாய் கொடுத்து, ...

ஜெயிலில் பெண்ணுடன் நடனம்:வார்டன் சஸ்பெண்ட்

Posted: 01 Apr 2017 01:09 PM PDT

சண்டிகர்:அரியானா மாநிலத்தில் ஜெயிலில் உள்ளே நடைபெற்ற விழாவில் பெண்ணுடன் நடனமாடிய வார்டன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அந்த ஜெயிலின் தலைமை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஜிந்த் சிறையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது வெளியிலிருந்து நடன பெண்களை அழைத்து வந்து போலீசாரும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடியது வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐ.ஜி. நடவடிக்கை
போலீஸ் சீருடையில் நடனமாடும் தலைமை வார்டன், நடன ...

ஆர்.கே.நகரில் வருமானவரித்துறை சோதனை

Posted: 01 Apr 2017 01:18 PM PDT

சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியி்ல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தொகுதிக்குள் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மாஜி எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ , தங்கியிருக்கும் வீடு, அதிமுக அம்மா அணி நிர்வாகி ராமச்சந்திரன் வீடு, தண்டையார் பேட்டை கம்மாளம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ...

கேரளா: 400 சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு வாந்தி, மயக்கம்

Posted: 01 Apr 2017 03:01 PM PDT

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் 400 சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் பள்ளிபுரம் என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்களின் முகாம் உள்ளது. இங்கு சுமார் 400 வீரர்கள் தங்கியுள்ளனர். வீரர்கள் நேற்று இரவு(ஏப்-1) உணவை உட்கொண்டதும் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வீரர்களை அம்மாநில சுகாதார ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™