Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


2017இன் வரவு செலவுத்திட்டம் விரைவில்

Posted: 08 Mar 2017 08:31 AM PST

கனேடிய மத்திய அரசாங்கம் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை நாடாளுமன்றில் கேள்வி நேரத்தின் போது நேற்று செவ்வாய்கிழமை( மார்ச் 07) உரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் பில் மோர்நியோ வெளியிட்டுள்ளார். எதிர்வரும் புதிய நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை தமது இந்த வரவு செலவுத் திட்டமானது புதிய […]

The post 2017இன் வரவு செலவுத்திட்டம் விரைவில் appeared first on TamilStar.com.

நெடுஞ்சாலை 401 இல் விபத்து: வாகனங்களின் சாரதிகள் காயம்

Posted: 08 Mar 2017 08:29 AM PST

நெடுஞ்சாலை 401இல் இன்று அதிகாலையில் இடம்பெற்ற இரண்டு வேறுபட்ட விபத்துக்களை அடுத்து, Port Union பகுதியில் நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய வழித்தடங்கள் போக்குவரத்திற்கு மூடப்பட்டு பின்னர் திறந்துவிடப்பட்டுள்ளன. காணாமல் போன நபர் ஒருவர் தொடர்பிலான விசாரணைகளை Port Union பகுதியில் தாங்கள் மேற்கொண்டிருந்த வேளையில், நெடுஞ்சாலை 401இல் கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளான தகவல் அறிந்து அங்கு விரைந்ததாக டூர்ஹாம் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த விபத்து இடம்பெற்ற பகுதியில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த வேளை அதிகாலை […]

The post நெடுஞ்சாலை 401 இல் விபத்து: வாகனங்களின் சாரதிகள் காயம் appeared first on TamilStar.com.

யாழில் A – 9 வீதியில் உள்ள பிரதான பாலங்களில் உடனடி மாற்றம்..!

Posted: 08 Mar 2017 08:25 AM PST

யாழ்ப்பணத்தில் உள்ள முக்கிய இரு பாலங்களில் அதிரடியாக மாற்றத்தினை கொண்டுவர தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் A-9 வீதியின் முக்கிய பாலங்களான கைதடி மற்றும் நாவற்குழி பாலங்களிலேயே இந்த மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. இவ்வாறு குறித்த பாலங்கள் கொங்கிறீட் பாலங்களாக மாற்றத்தினை கொண்டுவரவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த பாலங்களில் மழை மற்றும் பனிக்காலங்களில் அதிக வாகன விபத்துக்கள் ஏற்படுவதால் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது அதில் பயணம் செய்யும் மக்களின் நலன் கருதி […]

The post யாழில் A – 9 வீதியில் உள்ள பிரதான பாலங்களில் உடனடி மாற்றம்..! appeared first on TamilStar.com.

இலங்கை மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்: சீமான் பேட்டி

Posted: 08 Mar 2017 08:21 AM PST

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கோவையில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகையிலேயே சீமான் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து பேசியதாவது: கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இராமேஷ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி ஆதம்பலம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் […]

The post இலங்கை மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்: சீமான் பேட்டி appeared first on TamilStar.com.

அடுத்தது என்ன..? இலங்கை குறித்து நாளை விசேட கலந்துரையாடல்

Posted: 08 Mar 2017 08:12 AM PST

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கலப்பு நீதிமன்ற பொறிமுறையினை பரிந்துரை செய்து அறிக்கை சமர்பித்துள்ளார். எனினும், மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையினை முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை குறித்து அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் […]

The post அடுத்தது என்ன..? இலங்கை குறித்து நாளை விசேட கலந்துரையாடல் appeared first on TamilStar.com.

கலப்பு விசாரணைக்கு இடமில்லை! – ஜனாதிபதி

Posted: 08 Mar 2017 08:08 AM PST

கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைமை அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனிதஉ ரிமைப் பேரவையினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைமையை இலங்கையில் அமைக்க முடியாது. அது அரசியல் சாசனத்திற்கு முரணானது.அரசியல் சாசனத்தில் இடமில்லாத போது எவ்வாறு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளில் இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி […]

The post கலப்பு விசாரணைக்கு இடமில்லை! – ஜனாதிபதி appeared first on TamilStar.com.

ஜெனிவா காலஅவகாச விவகாரம் – சுமந்திரன் அறிக்கைக்கு எதிராக ரெலோ போர்க்கொடி!

Posted: 08 Mar 2017 07:52 AM PST

போர்க்குற்ற விசாரணை தொடர்பாக ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு காலஅவகாசம் வழங்கப்படுவதை நியாயப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒன்றான ரெலோ ( தமிழீழ விடுதலை இயக்கம்) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும், போர்க்குற்ற விசாரணைக்காக அரசாங்கத்தினால் கோரப்படும் இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில், அதன் தலைவர் சம்பந்தனும் பேச்சாளர் சுமந்திரனும் ஆதரித்து நிற்பது […]

The post ஜெனிவா காலஅவகாச விவகாரம் – சுமந்திரன் அறிக்கைக்கு எதிராக ரெலோ போர்க்கொடி! appeared first on TamilStar.com.

காணாமல் போனோர் அலுவலகம் விரைவில் : பிரதமர் உறுதி

Posted: 08 Mar 2017 07:45 AM PST

காணாமல் போனோரின் அலுவலகம் விரைவில் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். குறித்த அலுவலகத்தினை அமைப்பதற்காக சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என கூறியுள்ளார். அந்த வகையில் இந்த அலுவலகத்தினை எதிர்வரும் ஏப்ரல் மாததுக்குள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post காணாமல் போனோர் அலுவலகம் விரைவில் : பிரதமர் உறுதி appeared first on TamilStar.com.

தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது! – சிவசக்தி ஆனந்தன்

Posted: 08 Mar 2017 07:40 AM PST

தமது நலன்களுக்காக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சிதறடித்து தமிழ் மக்களுக்கு துரோகத்தை இழைக்கும் செயற்பாட்டில் மேற்குலக நாடுகள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற, ஏற்றுமதி இறக்குமதி கட்டளைகள் திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "நாடு பொருளாதார ரீதியில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலைமையில் தான் நாங்கள் இந்தச் […]

The post தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது! – சிவசக்தி ஆனந்தன் appeared first on TamilStar.com.

இரண்டாக பிளவடைந்தது மஹிந்த குழு.! தலைவர் தெரிவில் சர்ச்சை

Posted: 08 Mar 2017 07:34 AM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு அணியினர் இரண்டாக பிளவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தலைவர் தெரிவின் போது இவ்வாறு பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்ட கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக மஹிந்த அணியில் ஏழு பேர் தெரிவு செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்றைய தினம் கூட்டுறவு சங்க தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன் போது மஹிந்த அணியினர் இரண்டாக பிளவடைந்து வாக்களித்துள்ளதாக […]

The post இரண்டாக பிளவடைந்தது மஹிந்த குழு.! தலைவர் தெரிவில் சர்ச்சை appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™