Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


கின்னஸ் சாதனை முயற்சியில் ஒன்ராறியோவின் கேளிக்கை விடுதி

Posted: 30 Mar 2017 07:46 AM PDT

ஒன்றாரியோ மாநிலத்தில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்று சாதனை முயற்சியாக தொடர் நிகழ்ச்சிகளை கடந்த 13நாட்களாக நடாத்தி வருகின்றது. பல்வேறு கலைஞர்களைக் கொண்டு நீண்ட நேரம் மேற்கொள்ளப்பட்ட கலை நிகழ்ச்சி என்ற உலக சாதனையை படைத்து கின்னஸ் உலகசாதனைப் பதிவில் இடம்பிடிக்கும் நோக்குடன் அந்த கேளிக்கை மையம் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக 24 மணிநேரமும் தொடரும் களியாட்ட நிகழ்வாக அங்கு நேரடி பாடல் நிகழ்ச்சிகளும், விருந்துபசாரங்களும் இடம்பெற்று வருகின்றன. கடந்த 17ஆம் நாள் ஆரம்பமான […]

The post கின்னஸ் சாதனை முயற்சியில் ஒன்ராறியோவின் கேளிக்கை விடுதி appeared first on TamilStar.com.

ஒன்ராறியோ விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட மூவர் பலி

Posted: 30 Mar 2017 07:43 AM PDT

ஒன்ராறியோவின் கலிடோனியா கிராமப்பகுதி வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரண்டு சிறுமிகள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுப் புதன்கிழமை இரவு 9 மணியளவில் அங்குள்ள நெடுஞ்சாலை 9இல் இடம்பெற்ற இந்த மோசமான விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். பயணிகள் சிற்றூர்தி ஒன்றும், கார் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாகவும், சிற்றூர்தியில் பயணித்த 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளும், காரின் சாரதியான 21வயது நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை […]

The post ஒன்ராறியோ விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட மூவர் பலி appeared first on TamilStar.com.

நாமல் ராஜபக்சவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை! நாளை விசாரணை

Posted: 30 Mar 2017 07:38 AM PDT

முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு நாளை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நாமல் ராஜபக்சவின் தலைமையில் நீலப் படையணி என்றொரு இளைஞர் அமைப்பு இயங்கி வந்தது. இதன் அங்கத்தவர்களுக்கு 2014ம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. இதற்கான கொடுப்பனவாக பல மில்லியன் ரூபா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு நீலப்படையினரால் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது […]

The post நாமல் ராஜபக்சவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை! நாளை விசாரணை appeared first on TamilStar.com.

அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு மற்றுமொரு பதவி

Posted: 30 Mar 2017 07:32 AM PDT

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உதவி தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 5 ஆம் திகதி கூடவுள்ள கட்சியின் மறுசீரமைப்பு குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புரட்சிகரமான மாற்றங்களில் இந்த பதவியும் ஒன்றென கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியில் மூன்று பிரதித் தலைவர் பதவிகள் இருக்க வேண்டும் எனவும் அதில் ஒரு பிரதித் தலைவராக சிறுபான்மை இனத்தவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கட்சியின் மறுசீரமைப்புகுழு தீர்மானித்துள்ளது. […]

The post அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு மற்றுமொரு பதவி appeared first on TamilStar.com.

வடகடலில் தென்னிலங்கை மீனவர்களின் வருகை அதிகம்: முதலமைச்சர் விக்னேஸ்வரன் முறைப்பாடு

Posted: 30 Mar 2017 07:28 AM PDT

இலங்கையின் வடகடல் பிராந்தியத்தில் தென்னிலங்கை மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது குறித்து வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முறைப்பாடு செய்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் விக்கேனஸ்வரன் மற்றும் சுவிஸ் தூதுவருக்கு இடையிலான சந்திப்பின்போது இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், 250 பேருக்கும் மேற்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் நாயாறு, கொக்கிளாய், கொக்குத்துடுவாய், முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக தமிழ்மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த அரசாங்கம் […]

The post வடகடலில் தென்னிலங்கை மீனவர்களின் வருகை அதிகம்: முதலமைச்சர் விக்னேஸ்வரன் முறைப்பாடு appeared first on TamilStar.com.

விடுதலைப் புலிகளை வேவு பார்த்த இந்திய போர் விமானத்திற்கு பிரியா விடை

Posted: 30 Mar 2017 07:26 AM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது இலங்கைக்காக வேவு பார்த்த இந்திய கடற்படையின் போர் விமானம் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்குச் சொந்தமான "டி.யு.142 எம்" என்ற போர் விமானமே இவ்வாறு சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "டி.யு.142 எம்" என்ற போர் விமானம் இந்தியாவின் அரக்கோணம் கடற்படை விமான தளத்தில் இருந்து பணியாற்றி வந்துள்ளது. குறித்த போர் விமானம் கடந்த 30 ஆண்டு காலமாக சேவையில் ஈடுபட்டு வந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு […]

The post விடுதலைப் புலிகளை வேவு பார்த்த இந்திய போர் விமானத்திற்கு பிரியா விடை appeared first on TamilStar.com.

நல்லாட்சியாளர்கள் படையினரை காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகிகள் : முன்னாள் ஜனாதிபதி

Posted: 30 Mar 2017 07:22 AM PDT

ஜெனிவாவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட யோசனையை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமக்குள் இருக்கும் தேசத்துரோக எண்ணம் காரணமாகவே இந்த அறிக்கையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனை தவிர வேறு காரணங்கள் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். கடந்த வாரம் முடிவடைந்த ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் 2015 ஆம் ஆண்டு இலங்கையின் […]

The post நல்லாட்சியாளர்கள் படையினரை காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகிகள் : முன்னாள் ஜனாதிபதி appeared first on TamilStar.com.

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் விமல் வீரவன்ச!

Posted: 30 Mar 2017 07:18 AM PDT

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கடந்த 22ஆம் திகதி முதல் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு, மாகாநாயக்க தேரர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, மேலும் தெரிவித்துள்ளார்.

The post உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் விமல் வீரவன்ச! appeared first on TamilStar.com.

புலமைப்பரிசில் பெற்று சிங்கப்பூர் சென்ற கோத்தபாய

Posted: 30 Mar 2017 07:16 AM PDT

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிரேஷ்ட புலமைப்பரிசில் ஒன்றை பெற்று சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். சிங்கப்பூரில் உள்ள சர்வதேச கற்கைகளுக்கான எஸ். ராஜரட்ணம் கல்வி நிறுவனத்தில் ஒரு மாத காலம் கற்பதற்காக கோத்தபாயவுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனமானது அரச பாதுகாப்பு மற்றும் தந்திரோபாய வழி முறை தொடர்பான கற்கை நெறிகளை போதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புலமைப்பரிசில் பெற்று சிங்கப்பூர் சென்ற கோத்தபாய appeared first on TamilStar.com.

நாட்டைப் பிரிக்காமல் அதிகாரப் பகிர்வு! – ரணில்

Posted: 30 Mar 2017 07:08 AM PDT

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தைப் பகிர ​வேண்டும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மருதானையிலுள்ள விகாரையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்-இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் மதமாக பௌத்த மதம் காணப்படுகின்றது. அது தொடர்பில் யாரும் வாதம் புரிவது கிடையாது. அதனைப்போல, பௌத்த மதத்துக்குக் கொடுக்க ​வேண்டிய முன்னுரிமை தொடர்பில் யாரும் கேள்வி கேட்பதும் இல்லை. புத்த பகவானின் ​போதனையின்படி, ஏனைய […]

The post நாட்டைப் பிரிக்காமல் அதிகாரப் பகிர்வு! – ரணில் appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™