Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


அமெரிக்கா செல்ல முயன்ற கனடிய பிரஜைக்கு எல்லையில் அனுமதி மறுப்பு

Posted: 07 Mar 2017 11:16 AM PST

அமெரிக்காவுக்குச் செல்ல முயன்ற கனடிய பிரஜை ஒருவருக்கு அனுமதி மறுத்துள்ள அமெரிக்க எல்லைப் பகுதி அதிகாரிகள், எல்லையைக் கடந்து செல்ல வேண்டுமானால் குடிவரவு விசாவை அவர் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்கள். இதற்கு நிறவெறி காரணமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மன்பிறீற் கூனர் (Manpreet Kooner) என்ற 30 வயதான பெண்மணியே இவ்வாறு அமெரிக்க அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டவராவார். மொன்றியல் பகுதியில் பிறந்து வளர்ந்தவரான இவரது பெற்றோர் 1960 களில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து வந்தவர்கள். தன்னுடைய நண்பர்கள் […]

The post அமெரிக்கா செல்ல முயன்ற கனடிய பிரஜைக்கு எல்லையில் அனுமதி மறுப்பு appeared first on TamilStar.com.

தீப்பற்றிய வீடு: தீயணைப்புப் படையைச் சேர்ந்தவர் உட்பட மூவர் மருத்துவமனையில்

Posted: 07 Mar 2017 11:11 AM PST

Mississauga பகுதியிலுள்ள வீடொன்று தீப்பற்றி எரியத் தொடங்கியதையடுத்து மீட்பப் பணியாளர்களால் மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் மூவர் சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். டெறி வீதியில் வீடொன்று தீப்பற்றி எரிவதாக திங்கட்கிழமை மாலை 2.30 மணிக்கு தமக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததாக பீல் (Peel) பொலிஸார் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்கள். குறிப்பிட்ட வீடு முற்றாகவே தீப்பற்றியிருப்பதாக தமக்கு தகவல் கிடைத்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டார்கள். தீப்பற்றிய வீட்டிலிருந்து புகை வந்துகொண்டிருப்பதை பல மீட்டர் தொலைவிலிருந்தே அவதானிக்க முடிந்தது. உடனடியாகவே சம்பவ இடத்துக்கு […]

The post தீப்பற்றிய வீடு: தீயணைப்புப் படையைச் சேர்ந்தவர் உட்பட மூவர் மருத்துவமனையில் appeared first on TamilStar.com.

விசாரணை பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்! – ஐ.நா குழு

Posted: 07 Mar 2017 11:07 AM PST

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை ஒழிக்கும் குழு கோரியுள்ளது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறும் பொறிமுறைமையில் சர்வதேச பங்களிப்பு மிகவும் அவசியமானது எனவும் பக்கச்சார்பற்ற சுயாதீன நீதி விசாரணைப் பொறிமுறைமை அவசியமானது எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பது தொடர்பிலான ஒர் பொறிமுறைமை உருவாக்கப்பட […]

The post விசாரணை பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்! – ஐ.நா குழு appeared first on TamilStar.com.

ஐ.நா கண்ணில் மண்ணை தூவிய மைத்திரி..? யாழ். விஜயத்தின் பின்னணி இது தான்?

Posted: 07 Mar 2017 10:59 AM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டது, ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத்தின் கண்ணிலும் மண்ணைத் தூவுவதற்கே என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், ஜனாதிபதியின் யாழ். விஜயம் மற்றும் சமகால அரசியல் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து பகிர்ந்துள்ளார்.

The post ஐ.நா கண்ணில் மண்ணை தூவிய மைத்திரி..? யாழ். விஜயத்தின் பின்னணி இது தான்? appeared first on TamilStar.com.

விளக்கமறியலில் இருக்கும் விமலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Posted: 07 Mar 2017 07:19 AM PST

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நாடாளுமன்ற உணவகத்தில் இன்று தனது 47வது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார். இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச , வீரவங்சவின் மனைவி, பிள்ளைகள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விமல் வீரவங்ச கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடும் புகைப்படங்கள் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

The post விளக்கமறியலில் இருக்கும் விமலின் பிறந்தநாள் கொண்டாட்டம் appeared first on TamilStar.com.

அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் அயராது பங்காற்ற வேண்டும்! – பெண்கள் தின செய்தியில் சம்பந்தன் அழைப்பு

Posted: 07 Mar 2017 07:15 AM PST

பாலின சமத்துவத்தையும் சம நீதியையும் உறுதி செய்வதோடு, இலங்கை வாழ் அனைத்துப் பெண்களின் சுய கௌரவத்தையும் பாதுகாக்கும் வகையிலான அபிலாஷைகளை, புதிய அரசியலமைப்பு உள்ளடக்க வேண்டும் என்று, அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினத்துக்கான அவரது வாழ்த்துச் செய்தியில், சமுதாயத்தின் எல்லாக் கோணங்களிலும், பெண்களுக்கு அதிகளவு பாதுகாப்பையும் வலுவூட்டலையும் உறுதி செய்யவும் வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "எமது நாட்டுக்கு, […]

The post அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் அயராது பங்காற்ற வேண்டும்! – பெண்கள் தின செய்தியில் சம்பந்தன் அழைப்பு appeared first on TamilStar.com.

தமிழக இளைஞர் சுட்டுக்கொலை..! விசாரணைகளை ஆரம்பிக்கும் பிரதமர்

Posted: 07 Mar 2017 07:09 AM PST

தமிழக மீனவர் நேற்று இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் மீது தாங்கள் துப்பாக்கி சூட்டினை நடத்தவில்லை என இலங்கை கடற்படை பேச்சாளர் லுத்தினன் கொமான்டர் சமிந்த வலகுலுகே மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தமிழக 22 வயதுடைய மீனவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழக மீனவர் […]

The post தமிழக இளைஞர் சுட்டுக்கொலை..! விசாரணைகளை ஆரம்பிக்கும் பிரதமர் appeared first on TamilStar.com.

முதல்வரின் கோரிக்கையைப் புறக்கணித்து வடமாகாணசபையின் சிறப்பு அமர்வு!

Posted: 07 Mar 2017 07:05 AM PST

வடமாகாணத்தின் குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண சபையின் சிறப்பு அமர்வு, இன்று இடம்பெற்றது. வடமாகாணத்தின் குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண சபையின் சிறப்பு அமர்வை ஒத்திவைக்குமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த 2ஆவது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு, இந்த அமர்வு இடம்பெற்றது. வடமாகாண குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பாக ஆய்வுகளை நடத்துவதற்கு கடந்த மாதம் சிறப்பு அமர்வு ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த […]

The post முதல்வரின் கோரிக்கையைப் புறக்கணித்து வடமாகாணசபையின் சிறப்பு அமர்வு! appeared first on TamilStar.com.

வர்த்தமானி விவகாரம்!- முடிவை மாற்றிக்கொண்ட மகிந்த ராஜபக்ச

Posted: 07 Mar 2017 07:01 AM PST

பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தனது பெயரை களவாக பயன்படுத்தியமைக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக முன்னாள் ஜனாதிபதி கூறிய போதிலும் தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். 2003ம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த கே.என். சொக்சி கீழ் வெளியிடப்பட்ட பிணை முறிப்பத்திரத்திற்காக 2013ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் மகிந்த ராஜபக்சவே […]

The post வர்த்தமானி விவகாரம்!- முடிவை மாற்றிக்கொண்ட மகிந்த ராஜபக்ச appeared first on TamilStar.com.

வடமாகாண முதலமைச்சரின் இரண்டாவது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது

Posted: 07 Mar 2017 06:57 AM PST

வடமாகாண சபையின் சிறப்பு அமர்வை ஒத்தி வைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த முதலாவது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இரண்டாவது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. வடமாகாண குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பாக ஆய்வுகளை நடத்துவதற்கு கடந்த மாதம் சிறப்பு அமர்வொன்றினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்போது அந்த அமர்வை ஒத்திவைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் கேட்டிருந்தார். எனினும் அன்றைய தினம் முதலமைச்சருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அன்றைய அமர்விலேயே 7ம் திகதி (இன்றைய தினம்) நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. […]

The post வடமாகாண முதலமைச்சரின் இரண்டாவது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™