Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நெ20 மெட்ராஸ் மெயில் சாயலில் 'வைகை எக்ஸ்பிரஸ்'

Posted:

தான் நடித்த படம் ஓடாவிட்டாலும் தொடர்ந்து படம் தயாரித்து நடித்து வருகிறார் ஆர்கே. 'என் வழி தனி வழி' படத்தை தொடர்ந்து தற்போது ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் 'வைகை எக்ஸ்பிரஸ்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஆர்.கே. எதிர்காலத்தில் கட்சி ஆரம்பிக்க தேர்வு செய்து வைத்திருக்கும் பெயரான 'மக்கள் பாசறை' என்ற நிறுவனம் சார்பில் ...

கேரளாவில் 100 தியேட்டர்களில் வெளியாகும் 'காற்று வெளியிடை'

Posted:

தன்னிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த கார்த்தியை ஹீரோவாக வைத்து மணிரத்னம் இயக்கி வரும் படம் - 'காற்று வெளியிடை'. 'ஓகே கண்மணி' வெற்றிப் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது. மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கும் இப்படத்தில் கார்த்தியுடன் ...

சிவகுமார் குடும்பத்தினருக்கு ஜோக்கர் கொடுத்த ஆறுதல்

Posted:

யார் கண் பட்டதோ தெரியவில்லை.... சிவகுமார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எடுத்த படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக தோல்வியடைந்து வருகின்றன. ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் என்ற பேனரில் எடுக்கப்பட்ட ஜோக்கர், காஷ்மோரா இரண்டு படங்களும் நஷ்டத்தை ஏற்படுத்தின. ஸ்டுடியோ க்ரீன் பேனரில் தயாரிக்கப்பட்டு கடைசியாக வெளியான சி-3 படமும் தமிழக அரசியல் ...

'ஜெயம்' ரவி, ஆர்யா கொடுத்த ஒன்றரை ஆண்டு கால்ஷீட்

Posted:

சுந்தர்.சி. இயக்கத்தில், 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ள 'சங்கமித்ரா' படத்தில் ஹீரோவாக நடிக்க சூர்யா, விஜய், மகேஷ்பாபு என நம்பர் ஒன் நடிகர்களை அணுகினார்கள். சூர்யா, விஜய், இருவருமே கழன்று கொண்டுவிட்டனரர். இதை அறிந்த மகேஷ்பாபுவும் ஒரு கட்டத்தில் சங்கமித்ரா தெலுங்கு ...

'2.0' குட்பை சொன்ன எமி ஜாக்சன்

Posted:

தீபாவளி வெளியீட்டை நோக்கி பரபரப்பாக இயங்கி வருகிறது '2.0' படக்குழு. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் எமி ஜாக்சன் கிட்டத்தட்ட பல மாதங்களாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்தார். எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிந்துவிட்டதாம். எனவே 2.0 படக்குழுவுக்கு 'குட்பை' சொல்லிவிட்டு லண்டனுக்கு பறந்துவிட்டார் ...

சின்மயிக்கு பலாத்காரம், ஆசிட் வீச்சு மிரட்டல்

Posted:

தன்னை பலாத்காரம் செய்துவிடுவதாகவும், ஆசிட் வீசி விடுவதாகவும் டுவிட்டரில் சிலர் மிரட்டுகின்றனர் என்று பாடகி சின்மயி கூறியுள்ளார். பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான திரைப்பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் திரையுலகினர் இடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுபோன்று பல பிரபலங்களின் லீலைகளும் வெளியாகும் என ...

சிவா - விஷ்ணு போட்டியில் அஜித்

Posted:

அஜித்தின் 57வது படமான 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பு இன்னும் பாக்கி உள்ளதால் படத்தை ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளி வைத்துவிட்டார்கள் என்று செய்திகள் வெளியாகின. இதுவரை எவ்வளவு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன என்பது ...

செல்போன் ஆபாச வீடியோக்களே பாலியல் கொடுமைக்கு காரணம்: ஊர்வசி

Posted:

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பெருகி வரும் இந்த நேரத்தில் அதற்கு எதிரான கருத்துருவாக்கமும் நடந்து வருகிறது. சமூகத்தின் பல்வேறு மட்டத்திலிருந்தும் பாலியல் கொடுமைகளுக்கு எதிரான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
ஜோதிகா நடிப்பில் குற்றம் கடிதல் இயக்குனர் பிரம்மா இயக்கும் மகளிர் மட்டும் படத்தில் முக்கியமான ...

நடிகைகள் தற்காப்பு கலை பயில வேண்டும்: தன்ஷிகா

Posted:

நடிகை தன்ஷிகா பிரபல சண்டை இயக்குனர் பாண்டியன் மாஸ்டரிடம் தற்காப்பு கலை பயின்றவர். சிலம்பமும் கற்றுக் கொண்டவர். தற்போது அவர் நடித்துள்ள விழித்திரு படம் வருகிற 10ந் தேதி வெளிவருகிறது. இதையட்டி அவர் அளித்த பேட்டி வருமாறு:
விழித்திரு படம் ஒரு இரவில் நடக்கும் கதை. இதில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் இல்லை. எல்லோருமே கதை ...

ஏ.ஆர்.முருகதாஸ் படப்பிடிப்பிற்கு வந்த சிரஞ்சீவி

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத்சிங் மற்றும் பலர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிரஞ்சீவி வந்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் ...

டோலிவுட் மார்க்கெட்டை விரிவு படுத்தும் கீர்த்தி சுரேஷ்

Posted:

நானிக்கு ஜோடியாக நேனு லோக்கல் எனும் தெலுங்கு படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக தமிழில் பைரவா படத்தில் நடித்தார். இருபடங்களும் அடுத்தடுத்து வெளிவந்தன. மகேஷ் பாபு மற்றும் பவன் கல்யாண் இணைந்து நடிப்பதாகக் கூறப்படும், மெகா பட்ஜெட் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. டோலிவுட்டில் ...

டோலிவுட் அழைப்பை ஏற்பாரா கியரா அத்வானி?

Posted:

பக்ளி, எம்.எஸ்.தோனி போன்ற ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை கியரா அத்வானியை தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தெலுங்கு படங்களில் நடிக்க மறுத்த கியரா அத்வானி அல்லு அர்ஜூன் திரைப்படம் என்றதும் கதையை கேட்க்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் டீஜே ...

'மொட்ட சிவா கெட்ட சிவா' 9ம் தேதியே ரிலீஸ்.?

Posted:

சாய் ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ரானி, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' பட வெளியீடு பற்றி கடந்த ஒரு மாத காலமாகவே குழப்ப நிலை நீடித்து வந்தது. பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸ், பிப்ரவரி 24ம் தேதி ரிலீஸ் என்று இதற்கு முன் அறிவித்த தேதியில் படம் வெளிவராமல் போனது. படம் வெளிவருமா, வராதா என்ற நிலையே சில ...

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தரும் முருகதாஸ்

Posted:

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சண்டைக்காட்சிகளுக்கு பிரத்யேக கவனம் செலுத்துபவர். அவரது கஜினி, துப்பாக்கி, கத்தி போன்ற படங்களின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடம் தனி கவன ஈர்ப்பை பெற்றவை. அந்த வகையில் தனது அடுத்த படத்திலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்.

டோலிவுட்டின் யங் சூப்பர் ...

நாகார்ஜூனாவிற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை

Posted:

தெலுங்கு திரை உலகில் கிங் எனும் அடைமொழியுடன் வலம் வரும் நடிகர் நாகார்ஜூனா அடைமொழிக்கேற்ப இன்னும் இளமையாக இருக்கின்றார் அதே போல் அவரது படங்களும் தொடர் வெற்றியை பதிவு செய்து வருகின்றன. அண்மையில் நாகார்ஜூனாவின் பக்திபடமான ஓம் நமோ வெங்கடேஷாய திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்கு பின்னர் நாகார்ஜூனா நடிக்கவிருக்கும் திரைப்படம் ...

கையில் ‛ஹூக்கா'- வித்யாபாலனின் ‛பேகம் ஜான் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். இவர், தற்போது ‛பேகம் ஜான் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் ரோலிலேயே அவர் நடிக்கிறார். பாலியல் தொழில் செய்யும் 11 பெண்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், வித்யாபாலன் உடன் நஸ்ருதீன் ஷா, இலா அருண், பல்லவி சாரதா, ரஜித் கபூர், ஆஷிஸ் வித்யார்த்தி, ...

வெங்கடேஷ் பாடிய பாடல் வெளியீடு

Posted:

30 ஆண்டுகளாக நாயகனாக நடித்து வரும் வெங்கடேஷ் தற்போது பாடகராகவும் மாறிவிட்டார். இளம் ஹீரோக்கள் பலரும் தங்கள் படங்களில் பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ள சூழலில் வெங்கடேஷும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். தமிழ் மற்றும் ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கான குரு படத்தில் வெங்கடேஷ் நடித்து ...

மோசடி வழக்கு : நடிகர் டாக்டர்.சீனிவாசன் கைது

Posted:

பவர்ஸ்டார் என்று தனக்குதானே பட்டம் சூட்டிக்கொண்ட நடிகர், டாக்டர்.சீனிவாசன், டில்லி போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

டாக்டரான சீனிவாசன், ‛லத்திகா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப்படம் வெளியானதே தெரியவில்லை, ஆனால் படம் 100 நாட்கள் ஓடியதாக அவரே விளம்பரப்படுத்தி, தனக்கு தானே ...

அக்ஷ்ய் மனைவியாக சோனம் கபூர்

Posted:

பாலிவுட்டில் பிஸி நடிகராக வலம் வரும் அக்ஷ்ய் குமார், சமீபகாலமாக கதையின் நாயகனாக தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஒருவரின் வாழ்க்கை வரலாற்று படங்களில் அதிகளவில் நடித்து வருகிறார். அதில் கோல்டு, பேட்மேன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் ‛பேட்மேன்' படம் தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் ...

‛இந்து சர்கார்' பர்ஸ்ட் லுக் வெளியானது

Posted:

பிரபல இயக்குநர் மதுர் பண்டர்கர், ‛இந்து சர்கார்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சுப்ரியா வினோத், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். இந்தியாவில் எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இந்து சர்கார் படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™