Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


பாரீஸ் ஒப்பந்தத்தை பாதுகாக்க கனடா உதவ வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

Posted: 06 Mar 2017 09:11 AM PST

சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான பாரீஸ் உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில், இதனைப் பாதுகாப்பதற்கு உதவ வேண்டும் என்று கனடாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா இருந்த போது இந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான உடன்பாடு பிரான்சின் தலைநகர் பாரீஸில் ஏற்படுத்தப்பட்டது. எனினும் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம் பதவிக்கு வந்த பின்னர், குறித்த இந்த […]

The post பாரீஸ் ஒப்பந்தத்தை பாதுகாக்க கனடா உதவ வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் appeared first on TamilStar.com.

ஸ்காபரோ பகுதியில் ஒரு வாரத்தினுள் 6 கொள்ளைச் சம்பவங்கள்

Posted: 06 Mar 2017 09:09 AM PST

ஸ்காபரோ பகுதியில் ஒரு வாரத்தினுள் இடம்பெற்றுள்ள சுமார் ஆறு வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பதின்ம வயதினர் மூவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மிட்லான்ட் அவனியூ மற்றும் லோறன்ஸ் அவனியூ பகுதியில் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதிக்கும் 28ஆம் திகதிக்கும் இடையில் ஆறு வழிப்பறிச் சம்பவங்கள் இடம்பெற்றதாக காவல்த்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து காவல்த்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து, அந்த 6 கொள்ளைச் சம்பவங்களிலும் பதின்ம வயதினர் மூவர் சம்பந்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரும் சேர்ந்து […]

The post ஸ்காபரோ பகுதியில் ஒரு வாரத்தினுள் 6 கொள்ளைச் சம்பவங்கள் appeared first on TamilStar.com.

மகேந்திரனின் உத்தரவு காரணமாக 10 பில்லியன் கேள்வி மனுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது

Posted: 06 Mar 2017 09:04 AM PST

திறைசேரி பிணை முறிப்பத்திர ஏல விற்பனையில் 10 பில்லியன் கேள்வி மனுவுக்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் வழங்கிய உத்தரவுக்கு அமைய அதற்கு அனுமதி வழங்க நேரிட்டதாக மத்திய வங்கியின் புள்ளிவிபர திணைக்களத்தின் முன்னாள் அத்தியட்சகர் தீபா காந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார். செய்வதற்கு எதுவும் இருக்கவில்லை என்பதால் அவ்வாறு செய்ய நேரிட்டதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கும் போது அவர் கூறியுள்ளார். இலங்கை மத்திய வங்கியில் வேறு ஒரு திணைக்களத்தில் […]

The post மகேந்திரனின் உத்தரவு காரணமாக 10 பில்லியன் கேள்வி மனுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது appeared first on TamilStar.com.

மனநல மருத்துவத்தை முன்னேற்றுவது தொடர்பான சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி

Posted: 06 Mar 2017 09:01 AM PST

மனநல மருத்துவ சேவையை முன்னேற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமைச்சில் நடைபெற்றது. மனநல மருத்துவர்களுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர். மனநல மருத்துவம் தொடர்பான விசேட மருத்துவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவது மற்றும் மனநல மருத்துவத்தை கிராம பிரதேசங்களுக்கு விரிவுப்படுத்துதல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மனநல மருத்துவம் தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கும் சிறப்பு பயிற்சிகளை […]

The post மனநல மருத்துவத்தை முன்னேற்றுவது தொடர்பான சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி appeared first on TamilStar.com.

இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு திறமைகள் உள்ளன: பிரதமர்

Posted: 06 Mar 2017 08:58 AM PST

இலங்கையில் இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு திறமைகளும், இயலுமைகளும் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெசாக் மற்றும் நத்தார் போன்ற பல்வேறு வைபவங்களில் தான் இதனை கண்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். இளையோர் நாடாளுமன்றத்தில் தேசிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கக் கூடிய திறமையான இளைஞர், யுவதிகள் இருக்கின்றனர். திறமையான இளையோருக்கு அரசியல் அழுத்தங்கள் இன்றி தமது திறமையாகளை முன்கொண்டு […]

The post இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு திறமைகள் உள்ளன: பிரதமர் appeared first on TamilStar.com.

‘கோபத்தால் எமது மூக்கை நாமே வெட்டிக்கொள்ளக் கூடாது’ மாணவர்களுக்கு சுமந்திரன் பதில்

Posted: 06 Mar 2017 08:55 AM PST

எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனுக்கு சொகுசு வாகனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சுமந்திரன் முன்வைத்திருந்ததாக மாணவன் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுக்கு பா.உ சுமந்திரன் பதிலளித்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் அமைந்துள்ள சுமந்திரனின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், அந்த மாணவன் என்மீது வைக்கும் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது, நான் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களை சம்பந்தன் ஐயாவுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று அவருடைய நிலையை […]

The post ‘கோபத்தால் எமது மூக்கை நாமே வெட்டிக்கொள்ளக் கூடாது’ மாணவர்களுக்கு சுமந்திரன் பதில் appeared first on TamilStar.com.

விக்கி- அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

Posted: 06 Mar 2017 08:50 AM PST

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும், அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பு குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள, அமெரிக்க தூதுவர் நல்லிணக்கம் குறித்து போசப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் அதிலிருந்து முழுமையாக மீண்டு வரவேண்டும் எனவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

The post விக்கி- அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு! appeared first on TamilStar.com.

ஜகர்த்தாவில் இலங்கையர்களை சந்திக்கும் ஜனாதிபதி

Posted: 06 Mar 2017 08:48 AM PST

இந்தோனேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு வாழும் இலங்கையர்களை இன்று மாலை சந்திக்க உள்ளார். இந்தோனேசியாவில் உள்ள இலங்கை தூதரகம் இந்த சந்திப்பை ஒழுங்கு செய்துள்ளது. ஜனாதிபதி உட்பட தூதுக்குழுவினர் இன்று காலை ஜகர்த்தா நகரை சென்று அடைந்துள்ளனர். ஜகர்த்தாவில் நாளை ஆரம்பமாகவுள்ள இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்ற உள்ளார்.

The post ஜகர்த்தாவில் இலங்கையர்களை சந்திக்கும் ஜனாதிபதி appeared first on TamilStar.com.

சிங்கள தேசத்தைப் பங்குபோட முயற்சி! – சீறுகிறார் மஹிந்த

Posted: 06 Mar 2017 08:44 AM PST

சிங்கள தேசத்தைப் பங்குபோட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டை நேசிக்கும் நாம் எவ்வாறு நாட்டை துண்டாடும் நகர்வுகளுக்கு ஆதரவாக கை தூக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அகலவத்தையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எப்.சி. ஐ.டி., நீதிமன்றம், சிறைச்சாலை ஆகியன இருந்தால் மாத்திரம் ஆட்சியை நடத்தலாம் என எண்ணுகின்றனர். உடல் முழுவதும் குரோதம் வைராக்கியத்தை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகின்றனர். […]

The post சிங்கள தேசத்தைப் பங்குபோட முயற்சி! – சீறுகிறார் மஹிந்த appeared first on TamilStar.com.

சந்தேகநபருக்கு இராஜதந்திர பதவியா..? சிக்கலில் கோத்தா

Posted: 06 Mar 2017 08:41 AM PST

இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் கடந்த அரசாங்கத்தில் இராஜதந்திர பதிவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, மேஜர் பிரபாத் புலத்வத்த இராஜதந்திர பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் கபில ஹெந்தவிதாரண ஆகியோரே குறித்த அதிகாரிக்கு பதவி வழங்க பரிந்துரைத்துள்ளனர். […]

The post சந்தேகநபருக்கு இராஜதந்திர பதவியா..? சிக்கலில் கோத்தா appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™