Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழ் பேச முடியாமல் தடுமாறிய விஜய் யேசுதாஸ்!

Posted:

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக நடித்த வர் பாடகர் விஜய் யேசுதாஸ். அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அவர் தற்போது தனா இயக்கியுள்ள படைவீரன் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். முதல் படத்தைப்போலவே இந்த படத்திலும் போலீசாகவே நடித்திருக்கும் விஜய் யேசுதாஸ், கதாபாத்திரத்திற்காக தனது ...

இன்னொரு சுனைனாவை சமுத்திரகனி வெளியே கொண்டு வந்துவிட்டார்!

Posted:

காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை போன்ற படங்கள் சுனைனாவுக்கு நல்ல பெயரையே வாங்கிக்கொடுத்தன. என்றாலும் அதன்பிறகு அவர் நடித்த வன்மம், நம்பியார், கவலை வேண்டாம் படங்களின் தோல்வி அவரால் மார்க்கெட்டில் தலைநிமிர முடியவில்லை. அதனால் தற்போது கதாநாயகி என்கிற வட்டத்தை விட்டு வெளியே வந்து விட்டார் சுனைனா. சமுத்திரகனி ...

ரம்யாகிருஷ்ணன் சாப்ட்டான கேரக்டர்! -அகிலா

Posted:

சின்னத்திரையில் பல தொடர்களில் லீடு ரோல்களில் நடித்தவர் அகிலா. குறிப்பாக, தாமரை சீரியலில் கணவரை டார்ச்சர் பண்ணும் வில்லி வேடத்தில் நடித்திருந்த அவர், வம்சம் தொடரில் ஒரு இன்னோசென்ட் வேடத்தில் என்ட்ரியாகி யிருக்கிறார். மேலும், கர்ஜனை படம் மூலம் சினிமாவிலும் வில்லியாகியிருக்கிறார்.

தினமலர் இணையதளத்திற்காக அகிலா அளித்த ...

படம் முழுக்க பேசாமல் நடித்த ரேடியோ ஜாக்கி ஆர்.ஜே.கமல்!

Posted:

ரேடியோ-வீடியோ ஜாக்கியாக பிரபலமானவர் கமல். பின்னர் புகழ், வல்லவனுக்கு வல்லவன் படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த அவர், நீ இன்னும் புரிஞ்சிக்கல -என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதுவும் ரேடியோ ஜாக்கியான அவர் இந்த படம் முழுக்க ஒரு டயலாக்கூட பேசாமல் நடித்திருக்கிறார். அந்த அனுபவம்குறித்து ஆர்.ஜே.கமல் கூறுகையில்,

நீ ...

உடல் எடை அதிகரித்தது ஏன்? அனுஷ்கா விளக்கம்

Posted:

பாகுபலி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அனுஷ்கா திடீர் என உடல் எடை கூடி காணப்படுகிறார். அவரது குண்டான தோற்றத்தை தெலுங்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தனது உடல் எடை அதிகரித்தது ஏன்? என்பது குறித்து அனுஷ்கா அளித்துள்ள விளக்கம் வருமாறு:
பாகுபலி முதல் பாகத்தின் தோற்றத்திலேயே இரண்டாம் பாகத்திலும் ...

தமிழக அரசியலால் காத்து வாங்கிய தியேட்டர்கள்...! - பிப்., மாத படங்கள்... ஓர் பார்வை

Posted:

2017ம் ஆண்டின் ஆரம்பம் தமிழ்த் திரையுலகத்திற்கு சரியான ஆரம்பமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஜனவரி மாதத்தில் வெறும் 9 நேரடித் தமிழ்ப் படங்களே வெளிவந்தன. பிப்ரவரி மாதத்தில் இரண்டு படங்கள் அதிகரித்து 11 நேரடித் தமிழ்ப் படங்கள் மட்டுமே வெளிவந்தன.
கடந்த சில வருடங்களாகவே ஒரு வாரத்திற்கு சராசரியாக குறைந்த பட்சம் 4 படங்களாவது ...

ஒரு குடும்பத்தின் கைக்கு ஆட்சி செல்ல கூடாது - ஆனந்த்ராஜ்

Posted:

முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அதிமுக., கட்சி இரண்டு, மூன்றாக பிளவுப்பட்டு கிடக்கிறது. அதிமுக.,வில் நட்சத்திர பேச்சாளராக இருந்த ஆனந்த்ராஜ், சசிகலாவை தலைவராக ஏற்கமாட்டேன் என்று கூறிவிட்டு வெளியேறி விட்டார். தொடர்ந்து சசிகலாவை எதிர்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களை ...

பாகுபலி-2 படத்திற்காக சிரஞ்சீவி குரல் கொடுக்கவில்லை - ராஜமௌலி

Posted:

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ராஜமௌலி இயக்கி வரும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பாகுபலி-2 படத்தின் VFX பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. இதற்கிடையில் டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாகுபலி-2 படத்திற்கு ...

பாலகிருஷ்ணாவிற்காக இத்தாலி சென்ற பூரி ஜெகன்நாத்

Posted:

இயக்குனர் பூரி ஜெகன்நாத் தனது புதிய திரைப்படமான ரோக் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கின்றார். ரோக் படத்தை விரைவில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ள பூரி ஜெகன்நாத், அடுத்ததாக நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் ப்ரீ ...

வில்லனாக மாற துடிக்கும் மாஸ் ஹீரோ ரவிதேஜா

Posted:

கிக், டான் சீனு போன்ற ஆக்ஷன் படங்களில் நடித்த டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவிதேஜா, ராஜா தி கிரேட் படத்தில் பார்வையற்றவராக நடிக்கவுள்ளார். ஏப்ரலில் துவங்கவுள்ள இப்படத்தை இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கவுள்ளார். தொடர் தோல்விப்படங்களுக்கு பின்னர் ரவிதேஜா கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார் அந்த வகையில் ...

கஷ்ணம் இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் ராணா

Posted:

தெலுங்கு திரையில் வெளிவரும் வழக்கமான மசாலா படங்களிலிருந்து வேறுபட்டு கிரைம் திரில்லர் பாணியில் வெளிவந்த கஷ்ணம் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வசூலை அள்ளியது. இப்படத்தின் இயக்குனர் ரவிகாந்த் உருவாகும் அடுத்த படத்தில் ராணா மற்றும் வெங்கடேஷ் நடிப்பதாகக் கூறப்பட்டது. இருவரும் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் ...

பாகுபலி நாயகன் பிரபாஸிடம் சண்டையிட்ட கங்கனா ரனாவத்

Posted:

பாலிவுடின் குயினாக கோலொச்சி வரும் நடிகை கங்கனா ரனாவத், பாகுபலி நாயகன் பிரபாஸுடன் ஜோடி சேர்ந்து தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கிய ஏகே நிரஞ்சன் எனும் படத்தில் கங்கனா பிரபாஸிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கனாவிடம் பிரபாஸ் குறித்து ...

வைக்கம் விஜயலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரீமா கல்லிங்கல்..!

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல மலையாள பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, இந்த மாத இறுதியில் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை முன்கூட்டியே அதிரடியாக நிறுத்தினார். காரணம் தனக்கு மணமகனாக வரப்போகும் நபர் அடுகடுகாய் அடுக்கிய நிபந்தனைகள் தனை மூச்சு முட்ட வைத்ததாக கூறினார். இதுபற்றி அவர் குரிபிடும்போது, "இந்த முடிவை நான் ...

குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கும் கலாபவன் மணியின் சகோதரர்..!

Posted:

மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட, அவர் மரணம் இயற்கையானது அல்ல என தெரியவந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் அதிகம். அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே சொல்லிவருகிறார் கலாபவன் மணியின் தம்பியான ராமகிருஷ்ணன். ...

புத்தன் பணம் பர்ஸ்ட்லுக்கும் மம்முட்டியின் புதிய லுக்கும்..!

Posted:

படத்துக்குப்படம் தனது கெட்டப்புகளில் ஏதாவது வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதை மம்முட்டி ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார். கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியான 'கசபா' படத்தில் அவரது முரட்டு போலீஸ் அதிகாரி தோற்றம் நல்ல வரவேற்பை பெற்றது.. அதன்பின் தற்போது ஒரே நேரத்தில் 'தி கிரேட் பாதர்' மற்றும் 'புத்தன் பணம்' என இரண்டு ...

வில்லனுக்கு இவ்வளவு பில்டப்பா; மல்லுவுட்டை மலைக்க வைத்த ஆர்யா..!

Posted:

மலையாளத்தில் மம்முட்டி, சினேகா இணைந்து நடிக்கும் 'தி கிரேட் பாதர்' என்கிற படத்தை நடிகர் பிருத்விராஜ் தயாரித்து வருகிறார். இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஆர்யாவுக்கு வாய்ப்பு வர, அதைவிட மனமில்லாத ஆர்யா அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப்படத்தை பிருத்விராஜ், ஆர்யா உள்ளிட்டோர் கூட்டாக ...

கலாபவன் மணிக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்திய கேரள முதல்வர்..!

Posted:

கடந்த வருடம் இதே தேதியில் தான் மலையாள நடிகர் கலாபவன் மணி காலமானார்.. மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலுமே அவருக்கு திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் மிகக்குறைந்த வயதிலேயே அவர் மரணத்தை தழுவியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.. அதுமட்டுமல்ல, அவரது மரணம் இயற்கையானது அல்ல என்றும் திட்டமிட்டு ...

பாத்சாகோ எனக்கு ஸ்பெஷல் - இலியானா

Posted:

தமிழ், தெலுங்கையும் தாண்டி பாலிவுட்டிலும் நடிகை இலியானா பிரபலம். ஒருகாலத்தில் தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 நடிகையாக இருந்த இலியானா, பாலிவுட் வாய்ப்பிற்கு பிறகு பாலிவுட்டே கதி என்று கிடக்கிறார். தற்போது அவர் அஜய் தேவ்கன் உடன் பாத்சாகோ படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தன் ...

ராப் பாடகியாக மாறிய ‛பிலாரி'

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா. நடிகையும் தாண்டி தயாரிப்பாளராகவும் வலம் வரும் அனுஷ்கா, பாடகியாகவும் மாறியிருக்கிறார். தற்போது அவர் ‛பிலாரி' என்ற படத்தில் தில்ஜித் தோஸ்னாவுடன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு ராப் பாடலை அனுஷ்கா பாடியிருக்கிறார்.
இதுப்பற்றி அனுஷ்கா கூறியிருப்பதாவது... ‛‛சஸ்வத் ரெக்கார்ட்டிங் ...

நெருக்கமான காட்சிகள் லீக் - ஸ்வரா பாஸ்கர் அப்செட்!

Posted:

பாலிவுட்டில் ‛அனார்கலி' என்ற படம் உருவாகி வருகிறது. இதில் ஸ்வரா பாஸ்கர் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இப்படம் இம்மாதம் ரிலீஸாக உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்னர், அனார்கலி படத்தில் ஸ்வரா, நடித்த சில நெருக்கமான காட்சிகள் இணையதளத்தில் வெளியாகின. இது படக்குழுவை மட்டுமல்ல, ஸ்வரா பாஸ்கரையும் மிகவும் அதிர்ச்சிக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™