Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


$4மில்லியன் பெறுமதியான கனடா நாணயம் திருட்டு

Posted: 28 Mar 2017 07:55 AM PDT

யேர்மனி நாட்டின் அருங்காட்சியகம் ஒன்றில் பேணப்பட்டுவந்த 4 மில்லியன் டொலர் பெறுமதியான கனடா நாட்டு தங்க நாணயம் ஒன்று திருடப்பட்டுள்ளது. "big maple leaf" என்று அழைக்கப்படும் அந்த கனடா நாட்டு நாணயத்தின் முகப் பெறுமதி ஒரு மில்லியன் என்ற போதிலும், 100கிலோகிராம் நிறை, 24கரட் என்ற தரத்திலான சுத்தமான தங்கத்தினால் ஆக்கப்பட்ட நிலையில் இன்றைய நாளில் அதன் பெறுமதி மிகவும் உயர்வானது என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த அந்த நாணயம் யேர்மனி நாட்டின் பேர்ளின் நகரில் உள்ள […]

The post $4மில்லியன் பெறுமதியான கனடா நாணயம் திருட்டு appeared first on TamilStar.com.

ஜனாதிபதிக்கு முதலமைச்சர் அவசர கடிதம்!

Posted: 28 Mar 2017 07:52 AM PDT

வடக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வடமாகாணத்தில் எதுவுமே நடக்காதது போன்று, எந்தவித கரிசனையும் இல்லாமல் அரசாங்கம் இருப்பதால், மக்களின் வேதனை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே, அது சம்மந்தமாக உறுதியான கருத்தை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும் என, கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இக்கடிதம் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், "வட மாகாணத்தின் பல இடங்களிலும் மக்கள் தொடர்ச்சியான […]

The post ஜனாதிபதிக்கு முதலமைச்சர் அவசர கடிதம்! appeared first on TamilStar.com.

விடுதலைப்புலிகளின் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள், சகல துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள்! – சிறீதரன்

Posted: 28 Mar 2017 07:50 AM PDT

விடுதலைப்புலிகளின் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள், சகல துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். விழுதுகள் அமைப்பினால் நேற்று நடத்தப்பட்ட ‘செங்கோலோச்ச விழையும் பெண்களுக்கோர் பாராட்டுவிழா’ நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "எமது தமிழினத்தின் அரசியல் வரலாற்றில் பெண்களுக்குத் தனியான ஓர் இடமிருக்கிறது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிலர், வெற்றி பெற்றிருக்கிறார்கள் பலர், தோல்வியுற்று இருக்கிறார்கள். ஆனால், விடுதலைப்போராட்டம் நடைபெற்ற காலத்தில் பெண்கள் […]

The post விடுதலைப்புலிகளின் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள், சகல துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள்! – சிறீதரன் appeared first on TamilStar.com.

புதிய அமைச்சரவையில் லக்ஷ்மன் நீதியமைச்சராகிறார்

Posted: 28 Mar 2017 07:48 AM PDT

உத்தேசிக்கப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்துக்கு அமைய முக்கிய அமைச்சர்களின் பொறுப்புக்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இதன்படி லக்ஷ்மன் கிரியெல்ல, நீதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். மேலும் விஜயதாஸ ராஜபக்ச, உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர்மட்ட தகவல்களின்படி அமைச்சரவை மாற்றம் இந்த சில வாரங்களில் நிகழவுள்ளது. இந்தநிலையில் புதிய அமைச்சரவை மாற்றத்தின்போதும் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் விகிதங்கள் பேணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சரவை மாற்றம் கிரியெல்லவுக்கு நீதியமைச்சு – விஜயதாசவுக்கு உயர்கல்வி அரசாங்கத்தின் […]

The post புதிய அமைச்சரவையில் லக்ஷ்மன் நீதியமைச்சராகிறார் appeared first on TamilStar.com.

குற்றமிழைத்த படையினரையே தண்டிக்கக் கோருகிறோம்! – விக்னேஸ்வரன்

Posted: 28 Mar 2017 07:45 AM PDT

போரின் போது குற்றம் இழைத்த படையினரை அடையாளம் கண்டு தண்டிக்க வலியுறுத்துகின்றோமே தவிர ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் தண்டிக்குமாறு வலியுறுத்தவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் பின்னர், முதலமைச்சர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது, போரினை வெற்றி கொண்ட இராணுவத்தினரை தண்டிக்க இடமளிக்க முடியாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் […]

The post குற்றமிழைத்த படையினரையே தண்டிக்கக் கோருகிறோம்! – விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக புதிய வழக்கு : 142 மில்லியன் ரூபாயை செலுத்த தவறிவிட்டார்?

Posted: 28 Mar 2017 07:43 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை போக்குவரத்து சபையிடம் இருந்து பெற்று கொள்ளப்பட்ட பேருந்துகளுக்கு செலுத்த வேண்டிய 142 மில்லியன் ரூபா பணத்தினை செலுத்தாத காரணத்தினாலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த வழக்கு மே […]

The post முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக புதிய வழக்கு : 142 மில்லியன் ரூபாயை செலுத்த தவறிவிட்டார்? appeared first on TamilStar.com.

போரில் குற்றங்கள் நிகழ்ந்ததை நிராகரிக்கவில்லை! – கோத்தா

Posted: 28 Mar 2017 07:40 AM PDT

போரின் போது சில குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை தான் நிராகரிக்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்று கோல்பேஸ் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும், நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன். நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால், […]

The post போரில் குற்றங்கள் நிகழ்ந்ததை நிராகரிக்கவில்லை! – கோத்தா appeared first on TamilStar.com.

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் இருக்குமிடம் தெரியவில்லை

Posted: 28 Mar 2017 07:26 AM PDT

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட நிலையில், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட மூன்று கடற்படையினர் இருக்கும் இடத்தை கண்டுப்பிடிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உதவுமாறு நீதிமன்றம் இன்று சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு கோரி சசிகலா நடராஜா தாக்கல் செய்த மீளாவு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மடவல மற்றும் தெஹிதெனிய ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். சசிகலா நடராஜா […]

The post நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் இருக்குமிடம் தெரியவில்லை appeared first on TamilStar.com.

விமல் வீரவன்சவின் சிறுநீரகங்கள் குணப்படுத்த முடியாதளவுக்கு பாதிக்கப்படும்! – மருத்துவர்கள் எச்சரிக்கை

Posted: 28 Mar 2017 07:15 AM PDT

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்ச, தண்ணீரை மட்டுமே பருகினால் அவருடைய சிறுநீரகங்கள் மற்றும் குடல் ஆகியவை குணப்படுத்த முடியாத அளவுக்குப் பாதிப்படைந்து விடும் என்று, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். தண்ணீரை மட்டும் பருகிக்கொண்டு, உடல் ஆரோக்கியத்தை நான்கு நாட்களுக்கு மட்டுமே பேணமுடியும். அதன் பின்னர், ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் விமல் வீரவன்ச, மெதுவாகப் பேசுகின்றார் என்றும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதேவேளை, வெலிக்கடை […]

The post விமல் வீரவன்சவின் சிறுநீரகங்கள் குணப்படுத்த முடியாதளவுக்கு பாதிக்கப்படும்! – மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on TamilStar.com.

செய்யக் கூடியவர்களிடம் கொடுத்துவிட்டு சம்பந்தன் விலக வேண்டும் : ஆனந்தசங்கரி

Posted: 28 Mar 2017 07:09 AM PDT

தமிழ் மக்களின் விடையங்களில் எதுவும் செய்ய முடியாது என்றால், செய்யக் கூடியவர்களிடம் பாரம்கொடுத்துவிட்டு சம்பந்தன் விலகிக் கொள்ள வேண்டும் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாட்டினை கைவிட வேண்டும். எதற்க்காக தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றுகின்றீர்கள் எனவும், அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பில் […]

The post செய்யக் கூடியவர்களிடம் கொடுத்துவிட்டு சம்பந்தன் விலக வேண்டும் : ஆனந்தசங்கரி appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™