Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


சென்.யேம்ஸ் ரவுணில் தீ – ஒருவர் மருத்துவமனையில்

Posted: 26 Mar 2017 08:36 AM PDT

சென்.யேம்ஸ் ரவுண் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீப்பரவலால் ஏற்பட்ட புகை காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையிலேயே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் Bloor Street மற்றும் Bleeker Street பகுதியில் அமைந்துள்ள கட்டடத்திற்கு தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். குறித்த அந்த தீப்பரவல் ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்புப் படையினர் சென்ற போது அந்த […]

The post சென்.யேம்ஸ் ரவுணில் தீ – ஒருவர் மருத்துவமனையில் appeared first on TamilStar.com.

வீடு ஒன்றில் நான்கு சடலங்கள் மீட்பு

Posted: 26 Mar 2017 08:33 AM PDT

பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியத்தின் மிகவும் ஒதுக்குப்புறமாக உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து நான்கு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த வெள்ளிகிழமை பிற்பகல் கிடைத்த முறைப்பாடு ஒன்றை அடுத்து Ashcroft இற்கு அருகில் Venables Valley பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டை சோதனை செய்த போது அந்த நான்கு சடலங்களும் கண்டுபிடிக்க்பபட்டதாக நேற்றுச் சனிக்கிழமை காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த இடத்தில் பூர்வாங்க சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் தகவல் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர், […]

The post வீடு ஒன்றில் நான்கு சடலங்கள் மீட்பு appeared first on TamilStar.com.

போர்க்குற்றங்கள் தொடர்பாக போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை! – விக்னேஸ்வரன்

Posted: 26 Mar 2017 08:25 AM PDT

இறுதிக்கட்டப் போரின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் குறித்து அதிகாரத்தில் உள்ளவர்களால் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார ஊக்குவிப்பு வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர், பொறுப்புகூறல் மற்றும் நியாயத்திற்காகவே தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தமானது வன்முறை நிறைந்தது கொடூரமானது என கூறுவது மாத்திரம்போதாது. யுத்தமானாலும் சர்வதேச விதிமுறைகள் பிற்பற்றப்பட வேண்டும். பொறுப்புகூறல் […]

The post போர்க்குற்றங்கள் தொடர்பாக போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை! – விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com.

முதலைக் கண்ணீர் வடிக்கிறார் மஹிந்த! – பொன்சேகா

Posted: 26 Mar 2017 08:20 AM PDT

போர் முடிந்து, இரு வாரங்களுக்குள் ஐ.நா.வின் அப்போதைய பொதுச் செயலாளர் பான் கீ மூனை, இலங்கைக்கு அழைத்து போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுமென உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டு, மஹிந்த ராஜபக்ஷ தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச அழுத்தங்கள் வலுப்பெற மஹிந்தவே காரணம். நாட்டையும் இராணுவத்தையும் அவரே காட்டிக் கொடுத்துள்ளார். தற்போது […]

The post முதலைக் கண்ணீர் வடிக்கிறார் மஹிந்த! – பொன்சேகா appeared first on TamilStar.com.

வெடி குண்டை எடுத்து வந்த புலிகள் வெளியே..! படையினர் உள்ளே: மகிந்த

Posted: 26 Mar 2017 08:16 AM PDT

தற்கொலை தாக்குதல் நடத்த வந்த புலி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தும் முன்னர், அவர்களை மடக்கி பிடித்து கைது செய்த வீரர்கள் தற்போது சிறையில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்கொலை தாக்குதல் நடத்த வெடிகுண்டை கொண்டு வந்த புலி உறுப்பினர் வெளியில் இருப்பதாகவும் அவரை பிடித்து கொடுத்த படையினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். வெலிவேரிய கிரிகிகந்தே பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற […]

The post வெடி குண்டை எடுத்து வந்த புலிகள் வெளியே..! படையினர் உள்ளே: மகிந்த appeared first on TamilStar.com.

உண்ணாவிரதம் இருந்த விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில்!

Posted: 26 Mar 2017 08:11 AM PDT

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்தே, ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள தரப்புகள் தெரிவிக்கின்றன. எந்தவொரு சிறைக்கைதியாவது உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்தால் அவரை பலவந்தமாக மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சட்டரீதியான அதிகாரம் உள்ளது.

The post உண்ணாவிரதம் இருந்த விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில்! appeared first on TamilStar.com.

கண்ணை இழந்த சந்திரிகா கோபம் கொள்ளவில்லை! பழி வாங்கவும் இல்லை!

Posted: 26 Mar 2017 08:07 AM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கண்ணை இழந்த போதிலும், அவருக்கு தமிழ் மக்கள் மீது கோபமோ, பழி தீர்க்கும் எண்ணமோ இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு இனவாதம் இல்லாத சேவையை செய்வதற்கு அனைத்து […]

The post கண்ணை இழந்த சந்திரிகா கோபம் கொள்ளவில்லை! பழி வாங்கவும் இல்லை! appeared first on TamilStar.com.

லசந்த கொலையை திசை திருப்பிய சட்ட மருத்துவ அதிகாரி விரைவில் கைது!

Posted: 26 Mar 2017 08:01 AM PDT

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை திசை திருப்பிய சட்ட வைத்திய அதிகாரி சுனில் குமார கைதுசெய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லசந்த விக்ரமதுங்க தலையில் கடுமையாகத் தாக்கப்பட்ட காயத்தினால் மரணமானார் என்று அண்மையில்குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்திருந்தனர். ஆனால், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாகவே லசந்த உயிரிழந்தார் என மரணம் இடம்பெற்ற போது பிரேத பரிசோதனை நடத்திய வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார். எனவே,லசந்த கொலையை திசை திருப்பிய சட்ட வைத்திய அதிகாரி சுனில் குமார […]

The post லசந்த கொலையை திசை திருப்பிய சட்ட மருத்துவ அதிகாரி விரைவில் கைது! appeared first on TamilStar.com.

கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேற வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted: 26 Mar 2017 07:59 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி கூட்டமைப்பில் இருந்து விலக வேண்டும் என அதில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஷ் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இலங்கை தமிழரசு கட்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழரசு கட்சியின் நிலைப்பாடானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானது. இதனால், கூட்டமைப்பில் இருந்து வெளியேற […]

The post கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேற வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன் appeared first on TamilStar.com.

பிரபாகரனைத் தோற்கடித்ததால் மஹிந்தவை தமிழ் மக்கள் பழிவாங்கினர்! – கோத்தாபய

Posted: 26 Mar 2017 07:54 AM PDT

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்தமைக்காக, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தமிழ் மக்கள் பழிவாங்கி விட்டனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். "போர் வெற்றியின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ளத் தவறியுள்ளனர். சில சில நபர்கள் கூறிய பொய்களை கேட்டு ஏமாந்த மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தனர். சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் மஹிந்த தோற்றதாக கூறப்படும் கருத்தை நான் ஏற்கவில்லை. தேர்தல் முடிவுகளை நன்றாக ஆய்வு செய்தால் […]

The post பிரபாகரனைத் தோற்கடித்ததால் மஹிந்தவை தமிழ் மக்கள் பழிவாங்கினர்! – கோத்தாபய appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™