Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கனேடியப் பிரதமர் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம்

Posted: 24 Mar 2017 08:41 AM PDT

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. "விம்மி றிட்ஜ்" போரின் நூற்றாண்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்கின்றார் என்றும், எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 8ஆம் திகதியில் இருந்து 10ஆம் திகதி வரையில் அவர் பிரான்ஸில் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. "விம்மி றிட்ஜ்" போரின் நூற்றாண்டு நிகழ்வுகள் எதிர்வரும் ஏபபரல் மாதம் 9ஆம் திகதி பிரான்சில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. "விம்மி றிட்ஜ்" என்படும் […]

The post கனேடியப் பிரதமர் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் appeared first on TamilStar.com.

ரொரன்ரோ சென். லோறன்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு

Posted: 24 Mar 2017 08:37 AM PDT

ரொரன்ரோ சென் லோறன்ஸ் பகுதியில் இன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Lower Jarvis Street மற்றும் கார்டினர் அதிவிரைவுச் சாலைப் பகுதியில், Henry Lane Terraceஇல் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக இன்று அதிகாலை 2.30 அளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் எவரும் காயமடைந்தமை குறித்த முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்றும், அருகே அமைந்துள்ள வீடுகளுக்கோ, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கோ சேதங்கள் ஏற்பட்டதாக […]

The post ரொரன்ரோ சென். லோறன்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு appeared first on TamilStar.com.

ஏப்ரல் 1இலிருந்து அதிகரிக்கிறது எரிவாயுவின் விலை

Posted: 24 Mar 2017 08:35 AM PDT

ஒன்ராறியோவில் இயற்கை எரிவாயுவின் விலை எதிர்வரும ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக "யூனியன் காஸ்" நிறுவனத்தின் விலை அதிகரிப்பினை ஒன்ராறியோ சக்திவள சபை அங்கீகரித்துள்ள நிலையில், "யூனியன் காஸ்" நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 50 டொலர்கள் வரையிலான எரிவாயு கட்டண அதிகரிப்பினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக "யூனியன் காஸ்" நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ஒன்ராறியோவின் வட மேற்கு பிராந்தியத்தினைச் சேர்ந்த சராசரி வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு $50.30 அதிகரிப்பினையும், ஒன்ராறியோவின் வட கிழக்கு பிராந்திய […]

The post ஏப்ரல் 1இலிருந்து அதிகரிக்கிறது எரிவாயுவின் விலை appeared first on TamilStar.com.

கூட்டமைப்பை உடைப்பதற்கான ரணிலின் கைப்பொம்மையே சுமந்திரன்! – சுரேஸ் குற்றச்சாட்டு

Posted: 24 Mar 2017 08:31 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினாலும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் பாவிக்கப்படுகின்ற கைப்பொம்மையாகவே சுமந்திரன் உள்ளார். அதற்கமையவே சுமந்திரனும் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு நிற்கின்றது. அது மாத்திரமல்லாமல் அந்தப் பிளவை கூர்மையாக்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க அல்லது ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுவதாக […]

The post கூட்டமைப்பை உடைப்பதற்கான ரணிலின் கைப்பொம்மையே சுமந்திரன்! – சுரேஸ் குற்றச்சாட்டு appeared first on TamilStar.com.

வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றக் கோருகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

Posted: 24 Mar 2017 08:25 AM PDT

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கோரியுள்ளார். சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் கடந்த எட்டு ஆண்டுகளில் எவ்வித அசெ்சுறுத்தலான விடயங்களும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருக்கும் நோக்கில் படையினர் சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி செயற்திறனான காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர் தமிழ் பேசும் காவல்துறையினர் கடமையில் […]

The post வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றக் கோருகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்! appeared first on TamilStar.com.

இனச்சுத்திகரிப்பு குற்றச்சாட்டு – நாடாளுமன்றில் காரசார விவாதம்!

Posted: 24 Mar 2017 08:21 AM PDT

இறுதிப் போரில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் இடையில் நேற்று வாக்குவாதம் இடம்பெற்றது. இனச்சுத்திகரிப்பு இடம்பெற்றதாக சிறிதரன் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, யார் ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் யுத்தத்தை முன்னெடுத்திருப்பார்கள் எனக் கூறினார். சிறிதரன் எம்.பி.உரையாற்றிய போது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமை தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்ததுடன், காணாமல் போனவர்கள் இறந்துவி ட்டனர் என்பதை ஏற்க உறவினர் விரும்பவில்லையென முன்னாள் பாதுகாப்பு […]

The post இனச்சுத்திகரிப்பு குற்றச்சாட்டு – நாடாளுமன்றில் காரசார விவாதம்! appeared first on TamilStar.com.

நண்பனையும் சாதூர்யமாக கைவிட்ட மகிந்த : தான் செய்ததும் குற்றமே இல்லை என்கின்றார்

Posted: 24 Mar 2017 08:14 AM PDT

இம்முறை விமல் வீரவன்சவை நான் காப்பாற்ற போகப்போவதில்லை, அதற்காக வேறு நபர்கள் இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான மகிந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார். மேலும், இதற்கு முன்னரும் விமல் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவரின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்த நீங்கள் இப்போது அவருக்கு உதவி செய்யப் போவதில்லையா? என மகிந்தவிடம் […]

The post நண்பனையும் சாதூர்யமாக கைவிட்ட மகிந்த : தான் செய்ததும் குற்றமே இல்லை என்கின்றார் appeared first on TamilStar.com.

புதல்வியின் சுகவீனத்தை காரணம் காட்டி விமலுக்கு பிணை கோரிய சட்டத்தரணிகள்

Posted: 24 Mar 2017 08:11 AM PDT

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு பிணை கோரி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் பிணை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. விமல் வீரவங்சவின் சட்டத்தரணிகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். விமல் வீரவங்சவின் புதல்வி மன உளைச்சலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புதல்வியின் சுகவீன நிலைமையை விசேட விடயமாக கருதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்குமாறும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர். இந்த பிணை கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் லங்கா ஜயரத்ன, கோரிக்கை […]

The post புதல்வியின் சுகவீனத்தை காரணம் காட்டி விமலுக்கு பிணை கோரிய சட்டத்தரணிகள் appeared first on TamilStar.com.

விசாரணைக்கு ஆஜரானார் மஹிந்த!

Posted: 24 Mar 2017 08:08 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ கடந்த 16 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு சமுகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டது. எனினும் அன்று அங்கு வருகைத்தரவில்லை. இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டத்தாபனத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பியதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆஜராகியுள்ளார்.

The post விசாரணைக்கு ஆஜரானார் மஹிந்த! appeared first on TamilStar.com.

10 ஆயிரம் டொலரோடு வந்து கோடீஸ்வரர் ஆன கோத்தபாயவின் மாதாந்த சம்பளம்?

Posted: 24 Mar 2017 08:06 AM PDT

10 ஆயிரம் டொலர்களோடு இலங்கைக்கு வந்து பின்னர் கோடீஸ்வராக வாழ்ந்தவரே கோத்தபாய ராஜபக்ச என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைக் கூறினார். மேலும், ஒரு நல்ல அரச ஊழியர் என்று கோத்தபாயவை கூறுகின்றார்கள் ஆனால் அவரின் உண்மை முகம் வெளிப்படுத்தப்பட வில்லை. உதாரணமாக கூறுகின்றேன் அவர் வீட்டில் ஒரு மீன் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அது 40 அடி நீளமும், 13 அடி அகலமும் 8 அடி […]

The post 10 ஆயிரம் டொலரோடு வந்து கோடீஸ்வரர் ஆன கோத்தபாயவின் மாதாந்த சம்பளம்? appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™