Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


காபன் ஓர் ஒட்சைட் வாயு வெளியேற்றம்: 18 பேர் மருத்துவமனையில்

Posted: 23 Mar 2017 07:19 AM PDT

காபன் ஓர் ஒட்சைட் வாயு வெளியேற்றம் காரணமாக உணவகம் ஒன்றில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று ஸ்காபரோவில் இடம்பெற்றுள்ளது. ஸ்காபரோ எக்ளிங்டன் அவனியூ மற்றும் பேர்ச்மவுண்ட் வீதிப் பகுதியில் அமைந்துள்ள மன்டரீன் உணவகத்தில் இருந்தோர் நேற்று மாலை உடலநலக் குறைவினை எதிர்நோக்கியதை அடுத்து, அங்கு அவசர மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அங்கு காபர் ஓர் ஒட்சைட் கசிவு ஏற்பட்டுள்ளமையும், அதன் அளவு அதிகமாகவும், பாதிப்புக்கள் கடுமையாகவும் காணப்பட்டதை அடுத்து, 18 பேர் […]

The post காபன் ஓர் ஒட்சைட் வாயு வெளியேற்றம்: 18 பேர் மருத்துவமனையில் appeared first on TamilStar.com.

நாமலுக்கு சொந்தமான கார் விவகாரம்: போக்கு வரத்து ஆணையாளர் நாயகத்திற்கு பிடியாணை!

Posted: 23 Mar 2017 07:15 AM PDT

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு பிடியாணைபிறப்பிக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஸவுக்கு சொந்தமான Fort Mustang என்ற கார் தொடர்பிலான ஆவணங்கள்காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றில்முன்னிலையாகுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளருக்குஅறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்,பல முறைகள் நீதிமன்றில் முன்னிலையாகாதமையால் அவருக்கு இன்றையதினம் பிடியாணை பிறப்பித்து கடுவல நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 05ம் திகதி குறித்த காரை நிதி மோசடி விசாரணைபிரிவினர் பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

The post நாமலுக்கு சொந்தமான கார் விவகாரம்: போக்கு வரத்து ஆணையாளர் நாயகத்திற்கு பிடியாணை! appeared first on TamilStar.com.

55 மில்லியன் அமெரிக்க டொலரில் யாழில் இரு வீதிகள் புனரமைப்பு

Posted: 23 Mar 2017 07:12 AM PDT

உலக வங்கி வழங்கிய 55 மில்லியன் அமெரிக்க டொலரின் மூலம் யாழில் 2 பாரிய வீதிகள் புனரமைக்கப்பட உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் அபிவிருத்தி திட்ட முகாமையாளர் ஜோனி தலைமையில் யாழ் நகரின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதி தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில், உலக வங்கியின் நிதி உதவியுடன் நகர அபிவிருத்தி அமைச்சினால் யாழ்.மாநகர தந்திரோபாய நகர அபிவிருத்தி […]

The post 55 மில்லியன் அமெரிக்க டொலரில் யாழில் இரு வீதிகள் புனரமைப்பு appeared first on TamilStar.com.

வீரவங்சவின் உண்ணாவிரதப் போராட்ட தந்திரம்!

Posted: 23 Mar 2017 07:10 AM PDT

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவங்ச பிணை கிடைக்காத நிலையில், வேறு ஒரு மறைமுகமான நடவடிக்கைக்கு வழியை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் நேற்று முதல் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐ.நாவுக்கு எதிராக வீரவங்ச உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னர் நடத்தினார். தும்முல்லை சந்தியில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது வீரவங்ச, லெமன் பஃப் பிஸ்கட் சாப்பிட்டு விட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியதாக அப்போது பேசப்பட்டது. இவ்வாறான முறையை அறிமுகப்படுத்திய வீரவங்ச […]

The post வீரவங்சவின் உண்ணாவிரதப் போராட்ட தந்திரம்! appeared first on TamilStar.com.

வடக்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் கிழக்கு முதலமைச்சர்

Posted: 23 Mar 2017 07:03 AM PDT

கிழக்கில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில் வடக்கிலிருந்து தேர்ச்சி பெற்ற இரண்டு புகைவிசுறும் குழுவினரை அனுப்பியமைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் பா,சத்தியலிங்கத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள இடங்களுக்கு இந்த குழுவினர் பயணிக்கவுள்ளதுடன் அங்கு இவர்கள் புகைவிசுறும் நடவடிக்கையினை முன்னெடுக்க உவுள்ளனர். அண்மையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்துக்கும் […]

The post வடக்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் கிழக்கு முதலமைச்சர் appeared first on TamilStar.com.

போர்க்குற்ற விசாரணை இன்னொரு போருக்கு வழிவிடுமாம்! – விஜயதாஸ ராஜபக்ஸ

Posted: 23 Mar 2017 06:58 AM PDT

இராணுவத்திற்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுத்தால் அது மீண்டும் ஒரு யுத்தத்திற்குக் கூட வழியமைத்து விடும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார். போர்க்குற்ற விசாரணைகள் குறித்து சர்வதேசத்திலிருந்து வரும் அழுத்தங்களுக்கு அரசு அடிபணியாது என்றும் போர்க்குற்ற விசாரணையையும், நல்லிணக்கப் பொறிமுறையையும் ஒரே தடவையில் முன்னெடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 2009ஆம் ஆண்டு போர்முடிவடைந்த போது ஐ.நாவுக்கும் அதன்கீழான சபைகளுக்கும் கடந்த […]

The post போர்க்குற்ற விசாரணை இன்னொரு போருக்கு வழிவிடுமாம்! – விஜயதாஸ ராஜபக்ஸ appeared first on TamilStar.com.

அடுத்த சில வாரங்களில் ஜனாதிபதி முக்கிய முடிவுகளை எடுப்பாராம்!

Posted: 23 Mar 2017 06:46 AM PDT

அடுத்த சில வாரங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். ஜனாதிபதி இரண்டு வருடங்கள் ஜனநாயகத்துடன் தனது ஆட்சியை கொண்டு சென்றதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்வரும் 4 வருடங்களில் முன்னோக்கி செல்ல இது போன்ற தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் , இதனால் சிலர் சந்தோஷப்படலாம் எனவும் சிலர் […]

The post அடுத்த சில வாரங்களில் ஜனாதிபதி முக்கிய முடிவுகளை எடுப்பாராம்! appeared first on TamilStar.com.

கலப்பு நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

Posted: 23 Mar 2017 06:42 AM PDT

சர்வதேச நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, போர்க்குற்ற விசாரணை தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்த கருத்துக்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீண்டும் வலியுறுத்தினார். இலங்கையில் போருக்குப் பிறகு நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, ஐநா. மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கை குறித்த விவாதம் நேற்று ஜெனிவாவில் மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் நடந்தது. அதில், இலங்கை அரசு தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது. […]

The post கலப்பு நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்! appeared first on TamilStar.com.

கட்டுப்படுத்த முடியாத மகிந்த மீது கொண்ட பீதியால் இழுத்தடிக்கப்படும் குற்றங்கள்

Posted: 23 Mar 2017 06:39 AM PDT

மகிந்த மீது கொண்ட பீதி காரணமாகவே போர்க்குற்றங்கள் இழுத்தடித்துக் கொண்டு வரப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கும் போது, பிரதமருக்கு ஜெர்மன் மொழி தெரியாது ஆனால் ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்பதை நாம் ஒப்புக் கொள்கின்றோம். ஆனால் அவருடைய உரை தற்போது பொய்களை மட்டுமே சொல்லி வருகின்றது. பொய்களைக் கூறிக் கூறி […]

The post கட்டுப்படுத்த முடியாத மகிந்த மீது கொண்ட பீதியால் இழுத்தடிக்கப்படும் குற்றங்கள் appeared first on TamilStar.com.

மேஜர் ஜெனரல் கல்லகே மீது போர்க்குற்றச்சாட்டு – வீசா மறுத்தது அவுஸ்ரேலியா!

Posted: 23 Mar 2017 06:35 AM PDT

போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு வீசா வழங்க அவுஸ்ரேலியா மறுத்துள்ளது. அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்றுள்ள தனது சகோதரரைப் பார்ப்பதற்காகவே, மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே ஒரு மாத கால அஸ்ரேலிய வீசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். எனினும், இறுதிப் போரின் போது, 2009 மே 7ம் நாள் தொடக்கம், 2009 ஜூலை 20ம் நாள் வரை 59 வது டிவிசனுக்குத் தலைமை தாங்கினார் என்பதாலேயே மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நுழைவிசைவு விண்ணப்பம் […]

The post மேஜர் ஜெனரல் கல்லகே மீது போர்க்குற்றச்சாட்டு – வீசா மறுத்தது அவுஸ்ரேலியா! appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™