Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


ரொப் ஃபோர்ட்டின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

Posted: 22 Mar 2017 08:10 AM PDT

ரொரன்ரோவின் முன்னாள் நகரபிதா ரொப் ஃபோர்ட்டின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று இரவு ஈட்டோபிக்கோவில் இடம்பெறவுள்ளன. இந்த ஓராண்டு நினைவுநாள் நிகழ்வில் ரொப் ஃபோர்ட்டின் நண்பர்கள், அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரொரன்ரோவின் நகரபிதாவாக பதவி வகித்துவந்த காலப்பகுதியில், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகளைப் பெற்றுவந்த அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி, மவுண்ட் சினாய் மருத்துவமனையில் தனது […]

The post ரொப் ஃபோர்ட்டின் முதலாம் ஆண்டு நினைவு நாள் appeared first on TamilStar.com.

கனடாவின் பங்களிப்புடன் விண்ணில் செலுத்தப்பட்ட இராணுவ செய்மதி

Posted: 22 Mar 2017 08:08 AM PDT

கனடாவின் பங்களிப்புடன் அமெரிக்க இராணுவச் செய்மதி ஒன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செய்மதியைத் தாங்கிய உந்துகணை கடந்த சனிக்கிழமை இரவு 8.18 மணிக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனாவேரல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இந்த செய்மதி விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வில் கனேடிய இராணுவ அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு திணைக்கள உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த செய்மதியை அனுப்புவதில் அமெரிக்கா மற்றும் கனடாவுடன், டென்மார்க், லெக்ஸிம்பெர்க், நியூசிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் […]

The post கனடாவின் பங்களிப்புடன் விண்ணில் செலுத்தப்பட்ட இராணுவ செய்மதி appeared first on TamilStar.com.

சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது: பிரதமர் வி.உருத்திரகுமாரன் சென்னையில் வேண்டுகோள்!!

Posted: 22 Mar 2017 08:03 AM PDT

ஐ.நா மனித உரிமைச்பையில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க கூடாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சென்னையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரம், மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்கானதும் நீதிக்குமான போராட்டம் குறித்த சமகால நிலைவரம் குறித்த செய்தியாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெற்றிருந்தது. இணையவழி காணொளிப் பரிவர்த்னைவழியே நியு யோர்க்கில் இருந்து பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கருத்துரைத்திருந்தார். ஐ.நா தீர்மானம் முன்மொழிந்த காரியங்களை கடந்த 18 […]

The post சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது: பிரதமர் வி.உருத்திரகுமாரன் சென்னையில் வேண்டுகோள்!! appeared first on TamilStar.com.

ட்ரம்ப் விரும்பினால் மாத்திரமே தீர்மானத்தில் மாற்றம் செய்ய முடியும்! – கிருபாகரன்

Posted: 22 Mar 2017 08:00 AM PDT

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்பினால் மாத்திரமே ஜெனிவா தீர்மானத்தில் பாரிய மாற்றத்தை செய்யலாம் என்று பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் இயக்குனர் ச.வி கிருபாகரன் தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள கிருபாகரன் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,  இலங்கை தொடர்பான பிரேரணை வியாழக்கிழமை ஜெனிவாவில் நிறைவேறி விடும். அந்த பிரேரணையில் தற்போது பாரிய மாற்றங்களை செய்யமுடியாது. சில வேளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரும்பினால் பாரிய மாற்றத்தை […]

The post ட்ரம்ப் விரும்பினால் மாத்திரமே தீர்மானத்தில் மாற்றம் செய்ய முடியும்! – கிருபாகரன் appeared first on TamilStar.com.

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் உடன்படிக்கை கைச்சாத்து

Posted: 22 Mar 2017 07:55 AM PDT

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

The post இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் உடன்படிக்கை கைச்சாத்து appeared first on TamilStar.com.

உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை

Posted: 22 Mar 2017 07:53 AM PDT

சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு, உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் தினம் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மியன்மார், லாஓஸ், திபெத், பூட்டான், மொங்கோலியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர் என […]

The post உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை appeared first on TamilStar.com.

கலப்பு நீதிமன்றத்தை வலியுறுத்துவார் ஹுசைன்!

Posted: 22 Mar 2017 07:50 AM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பான விவாதம் இன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது. இதன்போது மீண்டும் இலங்கை விவகாரத்தில் சர்வதேச நீதிபதிகளுடன் கூடிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை முன்னெடுக்கப்படவேண்டும் என செய்ட் அல் ஹுசைன் வலியுறுத்துவார் என்று தெரியவருகின்றது. ஜெனிவா நேரப்படி 12 மணிமுதல் பகல் 3 மணிவரை இந்த விவாதம் நடைபெறவுள்ளது. ஆரம்பத்தில் இலங்கை தொடர்பான உரையை மனித உரிமை […]

The post கலப்பு நீதிமன்றத்தை வலியுறுத்துவார் ஹுசைன்! appeared first on TamilStar.com.

கோத்தா, ஹெந்தவிதாரண, அமல் கருணாசேகரவிடம் விரைவில் விசாரணை!

Posted: 22 Mar 2017 07:45 AM PDT

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரன மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஆகியோரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர். முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அண்மையில் புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கிய […]

The post கோத்தா, ஹெந்தவிதாரண, அமல் கருணாசேகரவிடம் விரைவில் விசாரணை! appeared first on TamilStar.com.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா உதவி

Posted: 22 Mar 2017 07:42 AM PDT

வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு,குடிநீர் விநியோகத்துக்காக 8 தண்ணீர் பௌசர்கள் இந்திய அரசாங்கம் அன்பளிப்பு செய்துள்ளது. குறித்த தண்ணீர் பௌசர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்றையை தினம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, தண்ணீர் பௌசர்களுக்கான ஆவணங்கள் மற்றும் சாவிகளை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார். 16 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். குறித்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் […]

The post வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா உதவி appeared first on TamilStar.com.

கேப்பாப்பிலவு காணிப் பிரச்சினைக்கு இரண்டு நாட்களில் தீர்வு! – சுவாமிநாதன் வாக்குறுதி

Posted: 22 Mar 2017 07:34 AM PDT

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கேப்பாபிலவு மக்களின் காணிகள் விடுவிப்புத் தொடர்பில் இரண்டு தினங்களில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், கேப்பாபிலவு காணிகள் இன்னும் விடுவிக்கப்படாதது குறித்து கேள்வியெழுப்பினார். இதன்போது குறுக்கீடு செய்த அமைச்சர் சுவாமிநாதன் மேற்கண்ட பதிலை வழங்கினார். தானும், சிவமோகன் எம்பியும் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்து கேப்பாபிலவு காணி விவகாரம் தொடர்பாக […]

The post கேப்பாப்பிலவு காணிப் பிரச்சினைக்கு இரண்டு நாட்களில் தீர்வு! – சுவாமிநாதன் வாக்குறுதி appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™