Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


வழமைக்குத் திரும்பியது கனேடிய வருமான வரித்துறையின் இணையத்தளம்

Posted: 14 Mar 2017 11:06 AM PDT

கனேடிய வருமான வரித்துறையின் இணையத்தளச் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய ஊடுருவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இரண்டு நாட்களாக இந்த இணையச் சேவை தடைப்பட்டுப் போயிருந்தது. அத்துடன் வருமான வரித்துறை தனது இணைய முகப்பில், இணைய பாதுகாப்பு நடவடிக்கை கருதி தமது பல்வேறு சேவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதான அறிவித்தலையும் பிரசுரித்திருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தமது வருமான வரி விபரங்கள், மற்றும் ஏனைய நிதி அனுகூலங்கள் குறித்த விபரங்களை வருமான வரித்துறைக்கு […]

The post வழமைக்குத் திரும்பியது கனேடிய வருமான வரித்துறையின் இணையத்தளம் appeared first on TamilStar.com.

ஒன்ராறியோ ரொரன்ரோவுக்கு உதவவேண்டும் – ஜோன் ரொறி

Posted: 14 Mar 2017 10:53 AM PDT

ஒன்ராறியோவின் நிதி அமைச்சர் சார்லஸ் சோசாவை ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி ரொரன்ரோ நகர மண்டபத்தில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்த ரொரன்ரோ நகரபிதா, ஒன்ராறியோ மாநில அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டமானது ரொரன்ரோவுக்கு உதவக்கூடியதாக அமைய வேண்டும் என்பதை ஒன்ராறியோ நிதி அமைச்சரிடம் தாம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரொரன்ரோவில் வளர்ந்து வரும் போக்குவரத்து மற்றும் வீடமைப்புத் தேவைகளையும் ஈடுசெய்யும் வகையில், ரொரன்ரோவுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டதாக மாகாண […]

The post ஒன்ராறியோ ரொரன்ரோவுக்கு உதவவேண்டும் – ஜோன் ரொறி appeared first on TamilStar.com.

கடும் பனிப்பொழிவு – விமானச் சேவைகள் நிறுத்தம்

Posted: 14 Mar 2017 10:40 AM PDT

கடுமையான பனிப்பொழிவின் காரணமாக இன்று செவ்வாய்கிழமை ஹோல்ட்டன், ஹமில்ட்டன் மற்றும் நையாகரா பகுதியில் அமைந்துள்ள பல்கலைகழகங்கள், கல்லூரி வளாகங்கள் என்பன மூடப்பட்டுள்ளன. ஹமில்ட்டன், நையாகரா, பேர்லிங்டன் மற்றும் ஓக்கிவில் ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பனிப்புயல் எச்சரிக்கை இன்னமும் நடப்பில் உள்ள நிலையில், இந்த பகுதிகளில் இன்று செவ்வாய்கிழமை இரவு 20 தொடக்கம் 30 சென்றிமீற்றர் வரையான பனிப்பொழிவு ஏற்படும் என்றும் எதிர்பார்ப்பதாக கனடா சுற்றுச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை சிறப்பு வானிலை எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள ரொரன்ரோவில், […]

The post கடும் பனிப்பொழிவு – விமானச் சேவைகள் நிறுத்தம் appeared first on TamilStar.com.

ஜனாதிபதிக்கு முதுகெலும்பு இருக்கிறதா? – வடக்கு மாகாணசபையில் சூடான விவாதம்

Posted: 14 Mar 2017 10:16 AM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதுகை தடவி உங்களுக்கு முதுகெலும்பு இருக்கிறதா என்று தமிழ் அரசியல் தலைமைகள் கேட்கும் நிலை வரலாம் என வடமாகாண சபையில் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த சிங்கள உறுப்பினர்களை நோக்கி வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015ம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் ஒப்புதல் வழங்கி நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பாக ஆராய்வதற்காக மாகாணசபையின் விசேட அமர்வு இன்று நடைபெற்றது. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்தினர் […]

The post ஜனாதிபதிக்கு முதுகெலும்பு இருக்கிறதா? – வடக்கு மாகாணசபையில் சூடான விவாதம் appeared first on TamilStar.com.

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது!

Posted: 14 Mar 2017 10:04 AM PDT

இலங்கைக்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளருக்கு, வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 34வது அமர்வு தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மின்னஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் […]

The post இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது! appeared first on TamilStar.com.

வட மாகாணசபையில் கிழித்தெறியப்பட்ட சிவாஜிலிங்கத்தின் பிரேரணை – திருத்தங்களுடன் நிறைவேறியது!

Posted: 14 Mar 2017 10:00 AM PDT

2015 ஆம் ஆண்டு ஐ.நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும், மற்றும் குறித்த தீர்மானம் தொடர்பில் ஐ.நா மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என கோரும் பிரேரணை, வடமாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.வட மாகாண சபையில் இன்று இடம்பெற்ற விசேட அமர்விலேயே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்த அமர்வின்போது, குறித்த பிரேரணை கொண்டு வரப்பட்டது. இதன்போது, குறித்த பிரேரணை தொடர்பில் அடுத்த அமர்வில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, […]

The post வட மாகாணசபையில் கிழித்தெறியப்பட்ட சிவாஜிலிங்கத்தின் பிரேரணை – திருத்தங்களுடன் நிறைவேறியது! appeared first on TamilStar.com.

புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் கைது : விசாரணைகள் தீவிரம்

Posted: 14 Mar 2017 09:54 AM PDT

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் வெள்ளவாய கொடவெஹரகள பகுதியில் வைத்து குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்த நிலையில், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1998ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய பெண் உறுப்பினர் ஒருவரே நேற்றைய தினம் கைது […]

The post புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் கைது : விசாரணைகள் தீவிரம் appeared first on TamilStar.com.

பசில் ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை

Posted: 14 Mar 2017 09:47 AM PDT

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட மற்றுமொரு நபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கம்பஹா மேல் நீதிமன்ற நீதவான், இந்த அழைப்பாணை விடுத்து உத்தரவிட்டுள்ளார். அரச நிதிகளை பயன்படுத்தி மல்வானை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு தொடர்பிலான வழக்கு குறித்தே எதிர்வரும் மே மாதம் 3ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பசில் ராஜபக்ச உள்ளிட்ட மற்றைய நபருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பசில் ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை appeared first on TamilStar.com.

பிரபாகரன் கடவுளாக்கப்பட்டுள்ளார், நாங்கள் கள்வர்களாக்கப்பட்டுள்ளோம்! – கோத்தா புலம்பல்

Posted: 14 Mar 2017 09:42 AM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிரபாகரன் கடவுளாக்கப்பட்டுள்ளார், நாங்கள் கள்வர்களாக்கப்பட்டுள்ளோம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். சமூக ஊடக வலையமைப்புக்கள் ஊடாக பிரபாகரன் தெய்வமாக்கப்பட்டுள்ளார். பிரபாகரனுக்கு எதிராக குரல் கொடுக்கும் எவரும் சமூக ஊடக வலையமைப்புக்களில் கிடையாது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், படையினரையும் என்னையும் கள்வர்கள் கொலைகாரர்களாக சித்தரித்து சமூக ஊடகங்களில் […]

The post பிரபாகரன் கடவுளாக்கப்பட்டுள்ளார், நாங்கள் கள்வர்களாக்கப்பட்டுள்ளோம்! – கோத்தா புலம்பல் appeared first on TamilStar.com.

ஜனாதிபதிக்கு உடல் நலக்குறைவு : பேச்சுவார்த்தை காலவரையறையின்றி ஒத்திவைப்பு

Posted: 14 Mar 2017 09:38 AM PDT

உடல்நலக்குறைவு காரணமாக சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கலந்துகொள்ள முடியவில்லை என அரச வைத்தியர்கள் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பில் நேற்று இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவிருந்த நிலையில், குறித்த கலந்துரையாடல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் உடல்நலம் தேறியவுடன் சைட்டம் கல்லூரி தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் நவீன் டீ சொய்சா கூறியுள்ளார். இதேவேளை, அரச வைத்தியர்கள் […]

The post ஜனாதிபதிக்கு உடல் நலக்குறைவு : பேச்சுவார்த்தை காலவரையறையின்றி ஒத்திவைப்பு appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™