Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பிரம்டனில் கோரவிபத்து: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Posted: 13 Mar 2017 08:46 AM PDT

பிரம்டன் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை 7.45 அளவில் Countryside Driveற்கும் Mayfield வீதிக்கும் இடையேயான Goreway Drive பகுதியில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து சம்பவித்தது. இந்த விபத்துத் தொடர்பில் பீல் பிராந்திய காவல்த்துறையினர் தகவல் வெளியிடுகையில், Goreway Driveவில் வடக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹொண்டா […]

The post பிரம்டனில் கோரவிபத்து: ஒருவர் பலி, இருவர் படுகாயம் appeared first on TamilStar.com.

கடும் அச்ச நிலையில் மஹிந்த! காரணம் என்ன?

Posted: 13 Mar 2017 08:42 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது அச்சம் நிறைந்த சூழ்நிலையில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் மஹிந்தவின் பெயர் இடம்பெற்றமை தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளாமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி தகவல் வெளியாகி இன்றுடன் 16 நாட்கள் கடந்துள்ளது. இது வெளியாகியவுடன் […]

The post கடும் அச்ச நிலையில் மஹிந்த! காரணம் என்ன? appeared first on TamilStar.com.

படையினர் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்கிறது! – யஸ்மின் சூகா

Posted: 13 Mar 2017 08:40 AM PDT

இலங்கையில் படையினர் தண்டனையிலிருந்து விடுபடும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் இந்த தொடர்ந்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கடத்தல், சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் இலங்கையில் தொடர்கின்றன. எவ்வாறாயினும், யுத்த பிரதேசங்களில் தமிழ் மக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை […]

The post படையினர் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்கிறது! – யஸ்மின் சூகா appeared first on TamilStar.com.

இலங்கை படையினர் முற்றிலும் நிரபராதிகள் : கோத்தபாயவிடம் அறிக்கை கையளிப்பு

Posted: 13 Mar 2017 08:36 AM PDT

போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை படையினர் முற்றிலும் நிரபராதிகள் என கூறும் விடயங்கள் அடங்கிய "விருவங்கே வித்தி வாசக்கய" என்ற பெயரிலான அறிக்கை ஒன்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தும்முல்லை உள்ள சம்புத்த மாளிகையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த அறிக்கை கையளிக்கப்படும் நிகழ்வு நடந்தது. லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க, ரியர் அட்மிரல் எச்.ஆர். அமரவீர, ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, மேஜர் ஜெனரல் சீவலி வணிகசேகர, மேஜர் […]

The post இலங்கை படையினர் முற்றிலும் நிரபராதிகள் : கோத்தபாயவிடம் அறிக்கை கையளிப்பு appeared first on TamilStar.com.

ஊடகங்களின் அரசியல் அபத்தங்களால் அரசை கவிழ்க்க முடியாது! ஜனாதிபதி

Posted: 13 Mar 2017 08:33 AM PDT

ஊடகங்களில் காட்டப்படும் அரசியல் அபத்தங்கள் மூலம் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொனராகலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கம் தொடர்பில் பல விமர்சனங்கள் உள்ளன. தற்போது நாட்டில் ஊடக சுதந்திரம் காணப்படுகிறது. ஊடகங்களில் இரவு செய்திகளை பார்க்கும் எமக்கு நெருக்கமானவர்களே அரசாங்கம் நாளை கவிழ்ந்து விடும் என்று எண்ணுவதாக என்னிடம் கூறுகின்றனர். இவ்வாறு பலர் அரசாங்கம் குறித்து பலவிதமாக கருத்துக்களை […]

The post ஊடகங்களின் அரசியல் அபத்தங்களால் அரசை கவிழ்க்க முடியாது! ஜனாதிபதி appeared first on TamilStar.com.

புதுடெல்லி பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் ரணில், சம்பந்தன் உரை!

Posted: 13 Mar 2017 08:31 AM PDT

இந்திய மன்றம், இந்திய அரசின் தேசிய புலனாய்வு முகவர் நிலையம் மற்றும் ஹரியானாவின் சுவர்ண உற்சவ குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் நடைபெறவுள்ளது. ‘இந்திய கடற்பிராந்தியத்தில் தீவிரவாதம்’ எனும் தொனிப்பொருளில் நாளை ஆரம்பமாகும் இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், சட்டம் ஒழுங்கு மற்றம் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க ஆகியோர் உரையாற்றவுள்ளனர். 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு […]

The post புதுடெல்லி பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் ரணில், சம்பந்தன் உரை! appeared first on TamilStar.com.

இம்மாத இறுதியில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted: 13 Mar 2017 08:27 AM PDT

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை இம்மாத இறுதியில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் முன்னெடுத்துள்ளார். இதற்கமைவாக இந்த ஆண்டில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களின் விபரங்களை இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்துத் திணைக்களத் தலைவர்களுக்கும் யாழ். மாவட்டச் செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

The post இம்மாத இறுதியில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் appeared first on TamilStar.com.

அன்று பள்ளிக்கான கண்ணீர் வடித்தவர்கள் இன்று பதவி மோகத்தில் வாய் திறக்காமல் உள்ளனர்

Posted: 13 Mar 2017 08:22 AM PDT

கடந்த ஆட்சிக்காலத்தில் தம்புள்ளை பள்ளிக்காக கண்ணீர் வடித்தவர்கள் இன்று பதவி மோகத்தில் ஒன்றுமே நடக்காதது போல இருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம்சாட்டியுள்ளார். தமது ஆட்சிக்காலத்தில் கல்லெறியப்பட்ட ஒரு சில பள்ளி வாசல்கள் பற்றி பேசுபவர்கள், நாம் வடக்கு, கிழக்கில் புனரமைப்பு செய்த 48 பள்ளிவாசல்கள் பற்றி வாய் திறப்பதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கூட்டு எதிரணி காரியாலயத்தில் இடம்பெற்ற முஸ்லிம் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு […]

The post அன்று பள்ளிக்கான கண்ணீர் வடித்தவர்கள் இன்று பதவி மோகத்தில் வாய் திறக்காமல் உள்ளனர் appeared first on TamilStar.com.

கூட்டமைப்பில் இருந்து வெளியேறுமா ஈபிஆர்எல்எவ்?

Posted: 13 Mar 2017 08:18 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய காலஅவகாசம் வழங்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியில் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கருத்துத் தெரிவிக்கையில், "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை 2 வருட கால அவகாசம் கோரியுள்ளது. எனவே இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய கால அவகாசம் வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது. […]

The post கூட்டமைப்பில் இருந்து வெளியேறுமா ஈபிஆர்எல்எவ்? appeared first on TamilStar.com.

மீண்டும் பராக்கிரமபாகு யுகம் ஆரம்பமாகும் : பிரதமர் ரணில்

Posted: 13 Mar 2017 08:12 AM PDT

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது நாட்டின் பொருளாதாரம் அழிந்து வெறும் எச்சங்கள் மாத்திரமே இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த அரசாங்கம் வகை தொகையின்றி கடன் பெற்றிருந்ததால், நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றிருந்தது. பொருளாதாரத்தின் எச்சங்கள் மாத்திரமே எஞ்சியிருந்தன. நிதியமைச்சர் கடன் உதவியை பெற்றுக்கொள்ள நடத்திய பல பேச்சுவார்த்தைகளின் போது வெட்கத்திற்கு உள்ளானார். கடனை திருப்பி செலுத்துவதே 2026ஆம் ஆண்டு வரை […]

The post மீண்டும் பராக்கிரமபாகு யுகம் ஆரம்பமாகும் : பிரதமர் ரணில் appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™