Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


அஜித் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது - சதா

Posted:

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சதா. தொடர்ந்து அந்நியன், திருப்பதி, எதிரி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது பிறமொழிகளிலும் நடித்துள்ளார். சினிமாவில் பட வாய்ப்பு குறைந்து போனதால் தற்போது சின்னத்திரைக்கு வந்துவிட்டார். விஜய் டிவி.,யில் ஒளிப்பரப்பாகி ...

சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையில் 2.0 சாதனை - 110 கோடிக்கு ஜீ டிவி வாங்கியது

Posted:

லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. கடந்த 2 வருடங்களாக பரபரப்பாக நடந்து வந்த 2.0 படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில், இன்னும் ஒரு பாடல் காட்சியும் மற்றும் சில பேட்ச் ஒர்க் வேலைகள் மட்டுமே பாக்கி உள்ளன.

சில மாதங்களுக்கு முன் 2.0 படத்தின் பர்ஸ்ட்லுக்கை ...

ஹிந்திக்குப் போகும் 'துருவங்கள் 16' ?

Posted:

2016ம் ஆண்டின் கடைசியில் வெளிவந்த 'துருவங்கள் 16' படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமான படமாக அமைந்தது. 21 வயதே ஆன கார்த்திக் நரேன் இயக்கிய இந்தப் படம் கடந்த வாரம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அங்கு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இப்படத்தின் வசூல் அதிகரித்து வெற்றியை நோக்கிப் பயணிப்பதாகச் ...

'துருவ நட்சத்திரம்' ஒளிப்பதிவாளர் வெளியேறியதன் பின்னணி இதுதான்..!

Posted:

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் மலையாள ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான். அவரது ஒர்க்கிங் ஸ்டைல் பிடித்துப்போகவே விக்ரமை வைத்து தான் இயக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்திற்கும் அவரையே ஒளிப்பதிவாளராக பணியாற்ற வைத்தார் கௌதம் மேனன். சும்மா சொல்லக்கூடாது ...

படம் ரிலீஸுக்கு முன்பே மண்ணை விட்டு மறைந்து போன இயக்குநர்

Posted:

மலையாள சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவரான தீபன் இன்று காலமானார். கிட்னி சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதி சடங்குகள் நாளை அவரது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கின்றது. 47 வயதிலேயே ...

தமிழ் புத்தாண்டில் கடம்பன் ரிலீஸ்

Posted:

தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து வரும் ஆர்யா, தற்போது நடித்துள்ள படம் ‛கடம்பன்'. மஞ்சப்பை இயக்குநர் ராகவன் இயக்கியுள்ள இப்படம், மலைவாழ் மக்களை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இதில் மலைவாழ் மைந்தனாக ஆர்யா நடித்துள்ளார். ஆர்யா ஜோடியாக கத்ரீனா தெரஸா நடித்திருக்கிறார். கட்டுமஸ்தான உடலுடன் யானைகளுக்கு மத்தியில் மிகவும் ...

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன்

Posted:

தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது கைசவம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். இந்நிலையில், இதற்கு தானே ஆசைப்பட்டாய், ரெளத்திரம், காஷ்மோரா'' படங்களை இயக்கிய கோகுல், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் நடிகை எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் ...

வில்லன் நடிகரை மீண்டும் டைரக்சனுக்கு திருப்பும் பிருத்விராஜ்..!

Posted:

துல்கர் சல்மானுக்கு தமிழில் இருக்கும் மார்க்கெட்டை பயன்படுத்தி மலையாளப்படம் ஒன்று 'ஆத்திரம்' என்கிற பெயரில் தமிழில் டப்பிங் ஆகி விரைவில் வெளியாக இருக்கிறது. துல்கர் சல்மான் நடித்த அவரது மூன்றாவது படமான 'தீவ்ரம்' படம் தான் தமிழுக்கு வர இருக்கிறது. இந்தப்படத்தை இயக்கியவரான ரூபேஷ் பீதாம்பரனுக்கு இதுதான் முதல்படம். இன்னொரு ...

மேஜர் ரவி டைரக்சனில் நடிக்கும் நிவின்பாலி..!

Posted:

ஒரு சிறிய பிரேக் விடுகிறார் மலையாள இயக்குனர் மேஜர் ரவி.. டைரக்சன் நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்ககிறது.. அப்புறம் எதற்கு பிரேக் என கேட்கிறீர்களா..? விஷயம் இருக்கிறது.. மேஜர் ரவியை பொறுத்தவரை அவர் ராணுவ படங்களை எடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட்.. ஆனால் அவரது படங்களில் காதலுக்கென பத்து சதவீதம் முக்கியத்துவம் ஒதுக்கினாலே ஆச்சர்யம் தான்.. ...

'ஜெயிக்கிற குதிர', ஒரே மேடையில் பல போட்டியாளர்கள்

Posted:

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இயக்குனர், தயாரிப்பாளர் கேயார் தலைமையில் ஒரு அணியும், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மற்றொரு அணியும், விஷால் தலைமையில் வேறொரு அணியும், தயாரிப்பாளர் டி. சிவா தனியாகத் தலைவர் பதவிக்கும் ...

டிரைலருக்கு டீசர் வெளியிட்ட பாகுபலி-2

Posted:

இந்தியத் திரையுலகில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று 'பாகுபலி 2', மற்றொன்று '2.0'. அதிலும் பாகுபலி-2 அடுத்தமாதம் வெளியாக இருப்பதால் இப்போதிருந்தே அப்படம் பற்றிய செய்திகள் வரத் தொடங்கிவிட்டன. 'பாகுபலி 2' படத்தின் இசை வெளியீடு வரும் 26ம் தேதி ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ...

மும்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்த மோகன்லால்..!

Posted:

இதுநாள் வரை மும்பை ஏரியாவை விட்டு வைத்திருந்த அல்லது கண்டுகொள்ளாமல் விட்டிருந்த மோகன்லால் கடந்த ஆறு மாத அளவில் மும்பை தியேட்டர்களையும் மும்பை விநியோகஸ்தர்களையும் அவ்வளவு ஏன் பாலிவுட் சூப்பர் நடிகர்களையுமே அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் நிலைகுலைய வைத்திருக்கிறார்... ஆம். கடந்த செப்டம்பர் முதல் மோகன்லால் நடிப்பில் ...

‛புதிய முகம் இயக்குநர் மரணம் : ரேவதியின் கணவர் இறந்ததாக தவறான செய்தி

Posted:

மலையாளத்தில் பிருத்விராஜை வைத்து ‛புதிய முகம் என்ற படத்தை இயக்கிய, இயக்குநர் தீபன் காலமானார், ஆனால் இறந்தது நடிகை ரேவதியின் கணவர் சுரேஷ் மேனன் என தவறாக செய்தி பரவிவிட்டது. அது ஏன்.? என்று இனி பார்ப்போம்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரேவதி. இவரது கணவர் சுரேஷ் மேனன். ஏராளமான குறும்படங்களை இயக்கியவர், ...

கோடிகளில் புரளும் 'பாகுபலி 2'

Posted:

இந்தியத் திரையுலகில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று 'பாகுபலி 2', மற்றொன்று '2.0'. இந்த இரண்டு படங்களும் பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வந்தாலும் அதைவிட பல மடங்கு ரூபாயை லாபமாகப் பெற்றுவிடும் என்று திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். '2.0' படத்தின் வியாபாரப் பேச்சு ...

சிவாஜி ராவ், ரஜினிகாந்த் ஆக மாறிய நாள்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகத்திலும் முக்கியமான நடிகர்களில் மிக முக்கியமான நடிகராக 40 வருடங்களுக்கும் மேலாக விளங்கிக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். 1975ம் ஆண்டு வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சிவாஜிராவ் கெய்க்வாட் என்று பெற்றோர் வைத்த பெயரை சினிமாவுக்காக 1975ம் ஆண்டு ...

நடிகை ரம்யா மருத்துவமனையில் அனுமதி

Posted:

நடிகையும், அரசியவாதியுமான ரம்யா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா அலைஸ் திவ்யா ஸ்பந்தனா. கன்னடத்திலும் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர், அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்பி.யாகவும் ...

ரஜினி நடித்த கேரக்டரில் சிவகார்த்திகேயன்!

Posted:

ஜெயம்ரவி-நயன்தாரா நடித்த தனிஒருவன் படத்தை போலீஸ் கதையில் இயக்கிய மோகன்ராஜா, அதையடுத்து சிவகார்த்திகேயன்-நயன்தாராவை இணைத்து இயக்கி வரும் வேலைக்காரன் படத்தையும் போலீஸ் கதையில் இயக்கி வருவதாகவும், காக்கி சட்டை படத்தை விட அதிரடியான போலீசாக சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால், வேலைக் ...

கெட்டப்பை மாற்றிய பாபி சிம்ஹா!

Posted:

நேரம், ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக நடித்து பேசப்பட்ட பாபி சிம்ஹா, ஹீரோவாக நடித்த பிறகு எந்த படத்திலும் அவரது நடிப்பு பேசப்படவில்லை. அதனால் திருட்டுப்பயலே-2, கருப்பன் ஆகிய படங்களில் நெகடீவ் ரோல்களில் நடித்து வருகிறார். அதேசமயம், வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தை தயாரித்து நாயகனாக நடித்து வருகிறார் பாபி சிம்ஹா. இந்த படத்தில் ...

எமிஜாக்சன் அதற்கு செட்டாக மாட்டார்!

Posted:

மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமான இங்கிலாந்து நடிகை எமிஜாக்சன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த பிறகு முன்னணி நடிகையாகி விட்டார். அதோடு அந்த படத்தில் டூ-பீஸ் உடை யணிந்து நடித்து இளவட்ட ரசிகர்களை கவர்ந்திழுத்தார் எமி. அதையடுத்து, தங்கமகன், கெத்து, தெறி படங்களில் நடித்தவர் மீண்டும் ஷங்கரின் 2.ஓ ...

நிக்கி கல்ராணியை சீண்டிய ரசிகர்கள்!

Posted:

தற்போது தமிழில் ஒரே நேரத்தில் அரை டஜன் படங்களில் நடித்து வருபவர் நிக்கி கல்ராணி. டார்லிங் படத்திற்கு பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் கொடுத்த ஹிட் காரணமாக இத்தனை படங்களில் ஒரேநேரத்தில கமிட்டான நிக்கி கல்ராணி, மற்ற மொழிப்படங்களை ஏறக்கட்டிவிட்டு முழுநேர தமிழ்நடிகையாக கோடம்பாக்கத்தில் டேரா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™