Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரொரன்ரோ பெரும்பாகத்திற்கு பனிப்புயல் எச்சரிக்கை

Posted: 12 Mar 2017 12:28 PM PDT

ரொரன்ரோ, ரொரன்ரோ பெரும்பாகம் மற்றும் ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களின் பெரும்பாலான இடங்களில் கடும் பனிப் புயலுக்கான வானிலை எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கனேடிய சுற்றுச் சுழல் திணைக்களம் பிறப்பித்துள்ள சிறப்பு வானிலை எச்சரிக்கையில், இந்த கடும் பனிப்புயலானது பெரும்பாலும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவின் வடமேற்கு பிராந்தியங்களில் மையம் கொண்டுள்ள தாளமுக்க நிலைமை, திங்கட்கிழமை அளவில் குறித்த இந்த பிராந்தியங்களை நோக்கி நகவர்வதாக வானியல் அவதானிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் […]

The post ரொரன்ரோ பெரும்பாகத்திற்கு பனிப்புயல் எச்சரிக்கை appeared first on TamilStar.com.

சிறுவர்களை நெருங்கும் மர்மநபர் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு எச்சரிக்கை

Posted: 12 Mar 2017 12:22 PM PDT

இனம் தெரியாத நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சிறுவர்களை நெருங்கிய சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்காபரோ பகுதியில் கடந்த ஒரு மாத காலப் பகுதியில் நபர் ஒருவர் இவ்வாறு சிறுவர்களை நெருங்கி அவர்களை தம்முடன் வருமாறு அழைத்த 3 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை அடுத்தே பொதுப் பாதுகாப்பு எச்சரிக்கையை காவல்த்துறை பிறப்பித்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், முதலாவது சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் […]

The post சிறுவர்களை நெருங்கும் மர்மநபர் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு எச்சரிக்கை appeared first on TamilStar.com.

தமிழக மீனவரை கடற்படை சுட்டதற்கான சாட்சியங்கள் இல்லை – கடற்படை தளபதி

Posted: 12 Mar 2017 12:16 PM PDT

இந்திய மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடற்படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான எவ்வித சாட்சியங்களும் இல்லை என இலங்கை கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். இந்தநிலையில், நடத்தப்படும் விசாரணைகளுக்காக இந்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளிடம் தகவல்களை கோரியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் சம்பவம் குறித்து கடற்படை விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கச்சதீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் தமிழக மக்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், […]

The post தமிழக மீனவரை கடற்படை சுட்டதற்கான சாட்சியங்கள் இல்லை – கடற்படை தளபதி appeared first on TamilStar.com.

முதுகெலும்பு உள்ளவர்கள் சர்வதேச விசாரணைக்கு பயந்து ஓடத்தேவையில்லை! – ஜனாதிபதிக்கு சுமந்திரன் பதில்

Posted: 12 Mar 2017 12:11 PM PDT

முதுகெலும்பு இருந்தால் எந்த விசாரணைக்கும் பயந்தோடத் தேவையில்லை என ஜனாதிபதிக்கு அறைகூவல் விடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- செங்கலடியில் இன்று இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கல்குடாத் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி. மாணிக்கவாசகத்தின் 41வது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், இலங்கை ஜனாதிபதிக்கு ஒரு செய்தியை அழுத்தம் திருத்தமாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். […]

The post முதுகெலும்பு உள்ளவர்கள் சர்வதேச விசாரணைக்கு பயந்து ஓடத்தேவையில்லை! – ஜனாதிபதிக்கு சுமந்திரன் பதில் appeared first on TamilStar.com.

நாடாளுமன்றம் தரம் தாழ்ந்துவிட்டது – மஹிந்த அமரவீர

Posted: 12 Mar 2017 12:08 PM PDT

சில சமூக வலைத்தளங்களில் நாடாளுமன்றத்தை விற்பனை செய்து விடுங்கள் என குறிப்பிடப்பட்டிருப்பதை தான் பார்த்ததாகவும், என்றும் இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற தற்போது தரம் தாழ்த்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அங்குகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையம் ஒன்றை நேற்று திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். என்றும் இல்லாத அளவுக்கு நாடாளுமன்றம் தரம் தாழ்த்தப்பட்டுள்ளது. அனுபவம் இல்லாத புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதேபோல் சிரேஷ்ட நாடாளுமன்ற […]

The post நாடாளுமன்றம் தரம் தாழ்ந்துவிட்டது – மஹிந்த அமரவீர appeared first on TamilStar.com.

மகிந்தவின் இறுதித் தேர்தல் பிரசாரத்திற்கு செலவிடப்பட்ட அரச பணம் – சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்தார்

Posted: 12 Mar 2017 12:05 PM PDT

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்த அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் முன்னாள் மீன்பிடி பிரதியமைச்சர் சரத் குணரத்ன உட்பட 6 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்களுககு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். நீர்கொழும்பு களப்பின் அபிவிருத்திக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபா பணத்தை மகிந்தவின் இறுதித் தேர்தல் பிரசாரத்திற்கு செலவிட்டதாக […]

The post மகிந்தவின் இறுதித் தேர்தல் பிரசாரத்திற்கு செலவிடப்பட்ட அரச பணம் – சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்தார் appeared first on TamilStar.com.

படையினரைத் தூண்டி விட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற கோத்தா முயற்சி! – புலனாய்வுப் பிரிவு விசாரணை

Posted: 12 Mar 2017 12:01 PM PDT

கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேசத்திற்காக படையினரை தூண்டி அரச அதிகாரத்தை கைப்பற்றும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அரச புலனாய்வு பிரிவுகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோத்தபாய ராஜபக்ச தலைமையில் இயங்கும் வியத்மக என்ற அமைப்பு நடத்திய மாநாட்டில் உரையாற்றிய சிலர் வெளியிட்ட கருத்துக்கள் இந்த சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அரச பாதுகாப்பு பிரிவுகளின் சில உறுப்பினர்கள் மேற்கொண்டதாக கூறப்படும் அரசியல் மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல்களை […]

The post படையினரைத் தூண்டி விட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற கோத்தா முயற்சி! – புலனாய்வுப் பிரிவு விசாரணை appeared first on TamilStar.com.

​பிச்சை எடுக்க வரவில்லை: விமல் நாடாளுமன்றில் எச்சரிக்கை!

Posted: 12 Mar 2017 11:58 AM PDT

நாடாளுமன்றில் எங்களது உரிமைகள் மறுக்கப்பட்டால் தொடர்ந்து நாடாளுமன்றத்தை நடத்திச் செல்வதற்கு நாம் இடமளிக்கமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விமல் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கே நாம் செயற்பட்டு வருகின்றோம். அரசாங்கம் வழங்கும் 2500 ரூபா கொடுப்பனவை பிச்சை எடுப்பதற்காக வரவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர […]

The post ​பிச்சை எடுக்க வரவில்லை: விமல் நாடாளுமன்றில் எச்சரிக்கை! appeared first on TamilStar.com.

செப்ரெம்பர் 24ஆம் திகதிக்கு முன் மாகாணசபையை கலைக்க முடியாது! – கிழக்கு முதல்வர்

Posted: 12 Mar 2017 11:54 AM PDT

தனது அனுமதியின்றி எதிர்வரும் செப்ரெம்பர் 24ஆம் திகதிக்கு முன்னர் மாகாணசபையை கலைக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். ‘முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்த கிழக்கு மாகாண ஆட்சியில், கடந்த ஆட்சியாளர்கள் செய்யாத பல சேவைகளை மக்களுக்கு நாம் செய்திருக்கின்றோம். மக்களுடைய பிரச்சினைகளை அடையாளங்கண்டு அவற்றை தீர்க்கும் அரசியலையே நாம் செய்து வருகின்றோம். ஊழலற்ற ஆட்சியை முன்னெடுத்து தேசிய அரசாங்கத்துக்கே கிழக்கு மாகாணசபை முன்னுதாரணமாக இருக்கின்றது. நாம் வீண் பிரச்சினைகளை […]

The post செப்ரெம்பர் 24ஆம் திகதிக்கு முன் மாகாணசபையை கலைக்க முடியாது! – கிழக்கு முதல்வர் appeared first on TamilStar.com.

புதிய பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன: ஜனாதிபதி தீர்மானம்

Posted: 12 Mar 2017 11:51 AM PDT

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து கருணாசேன ஹெட்டியாராச்சியை நீக்கி விட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்து வரும் கபில வைத்தியரத்னவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிக்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொடவின் பெயர் முன்மொழியப்பட்டிருந்த போதிலும் வைத்தியரத்ன மிகவும் தகுதியானவர் என்பதால் அவரை தெரிவு செய்துள்ளனர். கபில வைத்தியரத்ன எதிர்வரும் ஜூலை மாதம் ஓய்வுபெறவிருந்தார். கருணாசேன ஹெட்டியாராச்சி சுகவீனமான நிலையில் இருப்பதால், அவர் தொடர்ந்தும் […]

The post புதிய பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன: ஜனாதிபதி தீர்மானம் appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™