Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கறுப்பு பணக்காரர்கள் வீடு தேடி வருவோம் : மத்திய அரசு எச்சரிக்கை

Posted: 09 Mar 2017 08:38 AM PST

டில்லி: 'கறுப்புப் பணம் குறித்த தகவல்களை தாமாக முன்வந்து தெரிவிக்க அளிக்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பை பயன்படுத்தாவிட்டால், வீடு தேடி வருவோம்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது; அதைத் தொடர்ந்து, பதுக்கப் பட்டுள்ள, பழைய, செல்லாத ரூபாய் நோட்டு களை மாற்ற, அவகாசம் அளிக்கப்பட்டது.
புதிய அறிவிப்பு :
அதன் ஒரு பகுதியாக, இது வரை கணக்கில் காட்டாத, கறுப்புப் பணத்தை, தாமாக முன்வந்து ,தெரிவித்தால், 'அபராதத்துடன் தப்பிக்கலாம்' ...

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்காக பா.ஜ.,எதிர்பார்ப்பு!: கூடுதல் தொகுதிகள் ஜனாதிபதி தேர்தலில் உதவும்

Posted: 09 Mar 2017 08:41 AM PST

உத்தர பிரதேசம் உட்பட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை, மற்றக் கட்சிகளை விட, பா.ஜ., பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தவிர, கூடுதலாக கிடைக்கும் ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வும், ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு சாதகமாக அமையும் என்பதால், பா.ஜ., தலைமை பல்வேறு கணக்குகளை போட்டு வருகிறது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் மாநில சட்டசபைகளுக்கு ஓட்டெடுப்பு முடிந்து, நாளை முடிவுகள் வெளியாக உள்ளன. ஏற்கனவே ஆட்சியில் உள்ள கட்சிகள் மீண்டும் ஆட்சி அமைக்குமா, ஆட்சி மாற்றம் ஏற்படுமா என, அந்தந்த மாநில மக்களும், ...

'டயாலிசிஸ்' செய்த போது திடீர் மின்தடை: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 பேர் பலி

Posted: 09 Mar 2017 08:52 AM PST

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 'டயாலிசிஸ்' செய்யும் போது, திடீரென மின்சாரம் தடைபட்டதால், இரண்டு பெண்கள் உள்ளிட்ட, மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுச்சேரி, கதிர்காமத்தில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்தம் சுத்திகரிப்பு செய்யும் டயாலிசிஸ் பிரிவு, கடந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சிறுநீரகம் பாதித்த அம்சா, 55; சுசிலா, 73; கணேசன், 53, ஆகிய மூவரும், வாரத்தில் இரண்டு நாட்கள், இங்கு டயாலிசிஸ் செய்வது வழக்கம். வழக்கம் போல் நேற்று, டயாலிசிஸ் ...

அ.தி.மு.க.,வில் சசி - பன்னீர் அணிகள் இடையே ஆரம்பமானது...பதைபதைப்பு!:ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பால் சர்ச்சையாகிறது இரட்டை இலை:சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் விதித்த கெடு இன்றுடன் நிறைவு

Posted: 09 Mar 2017 09:19 AM PST

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் சசி மற்றும் பன்னீர் அணிகள் இடையே, பதைபதைப்பு ஆரம்பமாகி உள்ளது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதும் சர்ச்சையாகி உள்ளது. இதற்கிடை யில், பொதுச் செயலர் நியமனம் தொடர்பாக, சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் விதித்த கெடு, இன்று முடிகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ஜெயலலிதா வெற்றி பெற்றார். உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பாம லேயே, டிச., 5ல் இறந்தார்.அவரது மறைவு ...

கூடமாட்டார்கள் என்பதால் ரத்தானது முதல்வர் கூட்டம்!

Posted: 09 Mar 2017 09:24 AM PST

சேலம்:முதல்வர் பங்கேற்கும் விழாவுக்கு, எதிர்பார்த்த அளவு கூட்டம் வராது என,உளவுத் துறை எச்சரித்ததால், சேலத்தில் நாளை நடை பெறுவதாக இருந்த, ஜெ., பிறந்த நாள் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் அணி சார்பில், மார்ச், 8ல் உண்ணாவிரதம், மார்ச், 12ல் பொதுக்கூட்டம் நடத்த, போலீசில் அனுமதி கோரி கடிதம் வழங்கினர். பழனிசாமி அணி சார்பில், மார்ச், 11ல் ஜெ., பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி போலீசில் கடிதம் கொடுக்கப்பட்டது.பன்னீர்செல்வம் அணியினர், ...

ஐந்து மாநில தேர்தலில் ஜெயிக்கப்போவது யாரு?

Posted: 09 Mar 2017 09:25 AM PST

புதுடில்லி:உ.பி., உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் சமீபத்தில் நடந்தன.

இது தொடர்பாக, 'டிவி' சேனல்கள், ஏஜன்சிகள் சார்பில், ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள், நேற்று மாலை வெளியிடப்பட்டன. இதில், பெரும்பாலானகருத்து கணிப்புகள், உ.பி.,யில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என, தெரிவித்துள் ளன. உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங் களி லும்,பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாபில், காங்., - ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேகடுமையான போட்டி ...

தினகரனுக்கு எதிராக பழனிசாமி சதி? தி.மு.க., பரபரப்பு புகார்

Posted: 09 Mar 2017 09:28 AM PST

சென்னை:'முதல்வர் பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் போன்றோர், தினகரனிடம் தற்காலிகமாக அடகு வைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., தலைமையை நிரந்தரமாக மீட்பது என்ற ரகசிய உடன்பாட்டுக்கு, ஏற்கனவே வந்து விட்டனர்' என, தி.மு.க., கூறியுள்ளது.

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் விதமாக, ஸ்டாலின் சார்பில், மன்னார்குடி எம்.எல்.ஏ., - டி.ஆர்.பி.ராஜா ராஜா வெளியிட்ட அறிக்கை:
28 கோடி ரூபாய்:
குடியுரிமையில் பொய் சொல்லி, 'பெரா' என்ற, அன்னிய செலாவணி மோசடி ...

ஜி.எஸ்.டி., மசோதா பிரதமர் நம்பிக்கை

Posted: 09 Mar 2017 09:31 AM PST

புதுடில்லி:''நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்பு டைய, வரலாற்று சிறப்புமிக்க, ஜி.எஸ்.டி., மசோதா, சட்ட வடிவம் பெற, அனைத்து, எம்.பி.,க்களும் ஒத்துழைப்பு அளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று மீண்டும் துவங்கியது.பார்லி., கூட்டத்தில் பங்கேற் பதற்கு முன், பிரதமர் மோடி, செய்தியாளர்களிடம் பேசியதாவது:சிறிய இடைவேளைக்கு பின், பார்லி., கூட்டத் தொடர் மீண்டும் கூடியுள்ளது. இந்த கூட்டத் தொடரில், பல முக்கிய விவாதங்கள் நடக்கவுள்ளன. குறிப்பாக, மத்திய பட்ஜெட் மீதான விவாதங்கள், ஜி.எஸ்.டி., மசோதா மீதான ...

ஆர்.கே.நகரில் தீபா தனித்து போட்டி! காலியாகிறது தீபா பேரவை!

Posted: 09 Mar 2017 09:40 AM PST

''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், போட்டியிட உள்ளேன். எனக்கு ஆதரவு அளிக்க முன்வருவோரை புறக்கணிக்க மாட்டேன்,'' என, ஜெ., அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:
சசி தலைமையிலான அ.தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படும் திட்டம் இல்லை. அவர்கள் அழைப்பு விடுத்தாலும், தொந்தரவு கொடுத்தாலும், அவர்கள் ஆதரவை ஏற்க மாட்டேன்.மக்களாலும், அ.தி.மு.க.,வின் உண்மை தொண் டர்களாலும் புறக்கணிக்கப்பட்டு, ஜெ.,வால் விரட்டி அடிக்கப்பட்ட, சதிகார கும்பலை, மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அந்த குடும்பம் சார்பில், யார் போட்டியிட்டாலும், 'டிபாசிட்' இழப்பது ...

நெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி: பொன்.ராதா

Posted: 09 Mar 2017 10:53 AM PST

சென்னை: நெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தலைமையின் முடிவு:
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பற்றி கட்சித் தலைமை முடிவு செய்யும். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் அளித்தும் மீனவ அமைப்பினர் சந்திக்கவில்லை. மீனவர்களை யார் இயக்குகின்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை. நெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ...

'அமெரிக்க சம்பவங்களால் வேதனை' : ராஜ்நாத் சிங்

Posted: 09 Mar 2017 12:04 PM PST

புதுடில்லி: 'அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது என பார்லி.,யில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டத்தின், முதல் நாளான நேற்று, லோக்சபா துவங்கியதும், பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச வேண்டுமென, உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். 'அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என, எம்.பி.,க்கள் வலியறுத்தினர்.
வேதனையளிக்கிறது
இதற்கு பதிலளித்த, மத்திய உள்துறை ...

டிஜிட்டல் பணபரிமாற்ற பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை

Posted: 09 Mar 2017 01:08 PM PST

புதுடில்லி: டிஜிட்டல் முறையிலான பணபரிமாற்றத்திற்கான பாதுகாப்பை அதிகரிக்க புதிய வரைவு வழிகாட்டியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு மக்கள் மத்தியில் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் நிலையில் மக்களிடம் இம்முறையில் உள்ள பாதுகாப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.
இந்த குழப்பங்களை நீக்கும் வகையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் மொபைல் வாலெட்ஸ், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பற்று கணக்குகள் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு புதிய வரைவு வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. ...

பயங்கரவாதியை உதறிய தந்தைக்கு பார்லிமென்டில் பாராட்டு

Posted: 09 Mar 2017 02:06 PM PST

புதுடில்லி : உ.பி.,யில் சுட்டுக் கொல்லப்பட்ட, ஐ.எஸ்., ஆதரவு பயங்கரவாதி சயிபுல்லாவை உதறி தள்ளிய, அவனது தந்தைக்கு, பார்லிமென்டில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ம.பி.,யில், போபால் - உஜ்ஜயின் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, உ.பி.,யின் லக்னோவில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சயிபுல்லாவை, போலீசார் நேற்று முன்தினம் சுட்டுக் கொன்றனர்.
உ.பி.,யின் கான்பூரில் வசிக்கும், அவனது தந்தை முகமது சர்தாஸ், 'நான் ஒரு இந்தியன்; நாட்டுக்கு எதிராக செயல்பட்ட சயிபுல்லா ஒரு துரோகி; அவன் உடலை வாங்க மாட்டேன்' என்றார்.
பல்வேறு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™