Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 09 Mar 2017 08:59 AM PST

வேலன்:-வேண்டிய பைல்களை உடனடியாக திறக்க

Posted: 09 Mar 2017 08:20 AM PST

தேவையான பைல்களை.போல்டர்களை.அப்ளிகேஷன்களை.விருப்பமான வற்றை உடனடியாக திறக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.2 எம்.பிக்கும் குறைவான  இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் ;செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் இதன் ஐகான் உங்களுக்கு டாக்ஸ்'பாரில் வந்து அமர்ந்துகொள்ளும்.  அதனை ரைட் கிளிக் செய்து வரும் விண்டோவில் செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் போல்டர். டாக்குமெண்ட்.அப்ளிகேஷன்.ஸ்பேஷல் போல்டர்.லிங்க்.சப்மேனு.குருப் என எதுவேண்டுமோ ...

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

Posted: 09 Mar 2017 06:33 AM PST

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, இந்தத் தொகுதி காலியென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மார்ச் 23-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்செய்யலாம். ஏப்ரல் 15-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. - விகடன்

எழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ?

Posted: 09 Mar 2017 06:20 AM PST

-

வரப்போகின்ற
கவலையை எண்ணி கலங்குவதெதற்கு?
முன்யோசனைக்காரருக்கும்
கோதுமைக் கதிரில் கிடைப்பன 'முட்களே!
அமைதியாக இரு!
உன் இதயம் சிறியது,
அதில் உலகம் கொள்ளாது!
அழுதுபுலம்பினால்
எழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ?
-

---------------------------

உமர்கய்யாம் கவிதைகள்

Posted: 09 Mar 2017 04:24 AM PST



பொழுது புலர்ந்தது பார்!
காலைக் கதிரொளியையும்
கவின் மிகு காதலையும் ஒன்றாக்கி சுவாசி!
-
உலகில் நம் பெயரும், புகழும், உடலும், வாழ்வும்
எல்லையற்ற பேருகிலே மோதி உடைந்து
சிதறி மறையும்
-
இந்த மாய உலகிலே பொய் கூறி புறம் கூறி
அலைந்து திரிந்து கொண்டிராதே!
தேவகன்னி தெய்வீக யாழ் வாசிக்க கேள்!
விடாதே அவளுடைய ஆடை விளிம்பையும்
பின்னலையும் பற்றிக்கொள்
-
----------------------------------

டாஸ்மாக் கடைகளில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது கிங்ஃபிஷர் பீர்

Posted: 09 Mar 2017 03:19 AM PST

-- சென்னை: சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, அதுவும் கோடைக் காலம் தொடங்கும் நேரத்தில், டாஸ்மாக் கடைகளின் அலமாரிகளை கிங்ஃபிஷர் பீர் பாட்டில்கள் விரைவில் நிரப்ப உள்ளன. குடிமகன்களுக்கு மிகவும் பிடித்த கிங்ஃபிஷர் உள்ளிட்ட சில மதுபான வகைகள் டாஸ்மாக் கடைகளுக்கு மீண்டும் வரவிருப்பதாக டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். மேலும், இந்த வார இறுதியில், டாஸ்மாக் கடைகளில் கிங்ஃபிஷர் மற்றும் இதர மதுபானங்கள் தமிழகத்தில் விற்பனைக்கு வரும் ...

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் சொத்து மதிப்பு

Posted: 09 Mar 2017 03:09 AM PST

- ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் சொத்து மதிப்பு ரூ.14.50 கோடியில் இருந்து கடந்த 5 மாதத்தில் ரூ.330 கோடியாக உயர்ந்துள்ளது. ஆந்திர சட்டப்பேரவையின் நியமன உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நாரா லோகேஷ், அம்மாநிலத்தின் மிகப் பணக்கார அரசியல்வாதிகளின் பட்டியலில்  முன்னிலை வகிக்கிறார். நியமன உறுப்பினருக்கான தேர்தலுக்காக லோகேஷ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.329.52 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ...

4,000க்கும் அதிகமானோர் சீரழிப்பு பெண்கள், சிறுமிகளை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி கைது:

Posted: 09 Mar 2017 02:58 AM PST

மார்ச் - 7 ----------------------- புதுடெல்லி : பெண்களை கடத்தி பாலியல் தொழிலுக்கு விற்று ரூ.250 கோடி பணம் பார்த்த பலே ஜோடி போலீசில் வசமாக சிக்கியது. உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்தவர் அபக் ஹுசைன். வேலைக்காக  கடந்த 1999ல் டெல்லிக்கு சென்ற போது பாலியல் தொழில் நடத்தி வந்த ஐதராபாத்தை சேர்ந்த சைராவை அபக் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 4 ஆண்டுகளில் அதாவது 2003ம் ஆண்டு முதல் 'கொத்தா'வை (அங்கீகாரம் பெற்ற விபசார விடுதி) சொந்தமாக்கினர். அதன் ...

மின்தடை காரணமாக 3 நோயாளிகள் உயிரிழப்பு: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

Posted: 09 Mar 2017 02:31 AM PST

- - புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக சிகிச்சையில் இருந்த 3 நோயாளிகள் மரணடைந்திருப்பது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயந்திரம் மூலம் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மின் தடையால் 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுசீலா (77), அம்சா (55), மற்றும் கணேஷ் (54) ஆகியோர் சிகிச்சையின் போது மின் தடையால் உயிரிழக்க, மற்றொருவர் உயிருக்குப் போராடி வருவதாக அங்கிருந்து ...

வங்கிகளின் சேவை வரிகளால் வாடிக்கையாளர்கள் பாதிப்பு: வரப்பிரசாதமாக திகழும் அஞ்சலக சேமிப்புக் கணக்கு

Posted: 09 Mar 2017 01:04 AM PST

குறைந்தபட்ச தொகை ரூ.50; கட்டணமில்லா பரிவர்த்தனை வங்கிகளில் 4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் சேவை வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச வைப்புத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அஞ்சலக சேமிப்புக் கணக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதை தனியார் வங்கிகள் தங்களுக்கு சாதகமாக ...

இம்மையில் நன்மை தருவார் கோயில் மாசி திருவிழா

Posted: 08 Mar 2017 10:06 PM PST


-

மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயில்
மாசி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம்
நடந்தது.

படம் : ஆர்.அருண் முருகன்.

ஐ.எஸ்., தாக்குதல்: 5 மாநிலங்களுக்கு உளவுத் துறை எச்சரிக்கை

Posted: 08 Mar 2017 09:54 PM PST


இந்தியாவில் ஐ.எஸ்., பயங்கரவாத ஆதரவாளர்கள்
தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை
எச்சரித்துள்ளது.

குறிப்பாக, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா,
ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள
வழிபாட்டு தலங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில்
ஐ.எஸ்., பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு
இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------
தினமலர்

கார்ப்பொரேட் கிரிக்கெட் போட்டி !

Posted: 08 Mar 2017 09:51 PM PST

உறவுகளே !

தங்கள் சேவை எங்கள் தேவை !

எங்கள் அலுவலகத்தின் முதல் விளையாட்டுப் போட்டி, இப்போட்டி சிறப்பாக நடைபெற தங்கள் பொன்னான உதவி தேவை !

இதில் பதிவிடப்பட்டிருக்கும் கோர்ப்புகளை தங்கள் அலுவலகத்திற்கு பகிர்ந்து அணிகள் இதில் பங்கேற்க செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் !

மிக்க நன்றி !
பூர்ணகுரு

(முத்துலட்சுமி ராகவன் ) மு ரா அவர்கள் நாவல்கள் தேவை .

Posted: 08 Mar 2017 09:30 PM PST

வணக்கம் கார்த்திக் ,

                            தங்களுடைய நாவல்களின் பதிவினை பார்த்தேன் .மகிழ்ச்சி ... எனக்கும் தங்களுடைய பதிவிலிருந்து ஒரு புத்தக பதிவு வேண்டும் .முத்துலட்சுமி ராகவன் அவர்களுடைய மலை சாரலை மனம் நனைத்தாய் நாவல் வேண்டும்.கிடைக்குமா ?


09.03.1959: பார்பி பொம்மைகள் விற்பனைக்கு வந்த தினம் இன்று

Posted: 08 Mar 2017 07:33 PM PST

- உலக அளவில் பொம்மைகளுக்கான சந்தையில் ஐம்பது வருடங்களாக பார்பி பொம்மை இன்றும் ஒரு முக்கியமான பாகமாக இருந்து வருகிறது. பார்பி என்னும் பொம்மையானது 'மேட்டல் இங்க்' என்னும் பொம்மைகள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. முதன்முறையாக 1959வது வருடம் மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி இது சந்தையில் வெளியிடப்பட்டது. பில்ட் லில்லி என்னும் ஒரு ஜெர்மன் பொம்மையை இதற்கான அடிப்படை ஊக்கமாகக் கொண்டு இதை உருவாக்கியதாக இத வடிவமைப்பாளரும், அமெரிக்க தொழிலதிபரான ரூத் ஹாண்ட்லர் என்னும் ...

கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிக்கும் மகாநதி பட போஸ்டர்!

Posted: 08 Mar 2017 07:30 PM PST

- 60 – 70-ஆம் ஆண்டு காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் சாவித்திரி. இப்போதைய காலகட்டத்திலும் சாவித்திரி போல் நடிக்க விரும்புவதாகவும், அவர்தான் ரோல் மாடல் என்று கூறும் நடிகைகளைப் பார்க்க முடியும். அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து மறைந்தவர் சாவித்திரி. அதே போல் சாவித்திரியின் தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தது. துரோகம், ஏமாற்றம், வறுமை என பல மாற்றங்கள் அவரது வாழ்க்கையில் உண்டு. இவரது வாழ்க்கை சினிமா கதைக்கான சுவாரஸ்யங்கள் ...

மார்ச் 16-இல் தமிழக பட்ஜெட்

Posted: 08 Mar 2017 07:17 PM PST

தமிழக சட்டப் பேரவை வரும் 16-ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் வரும் நிதியாண்டுக்கான (2017-2018) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் டி.ஜெயகுமார் தாக்கல் செய்கிறார். மேலும், வரும் 23-ஆம் தேதியன்று முன்பண மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும் என்றும் சட்டப் பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் புதன்கிழமை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தை, வரும் 16-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை ...

பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

Posted: 08 Mar 2017 06:55 PM PST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு வியாழக்கிழமை (மார்ச் 9) தொடங்குகிறது. இந்த அமர்வில் சரக்கு - சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்த வழி வகுக்கும் 3 சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசு உள்ளது. ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் இரண்டாவது அமர்வில் பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களின் முடிவுகள் வரும் 11-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ...

மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்'

Posted: 08 Mar 2017 06:49 PM PST

மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' - மக்களவை, சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார். பெங்களூரில் மாநகராட்சி சார்பில் மகளிர் தின விழா, புதன்கிழமை நடைபெற்றது. அந்த விழாவில் முதல்வர் சித்தராமையா பேசுகையில், ""உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதைப் போலவே, மக்களவை, சட்டப் பேரவைகளிலும் 33 சதவீத ...

சிவசேனை வேட்பாளர் மும்பை மேயராக தேர்வு

Posted: 08 Mar 2017 06:47 PM PST

- சிவசேனை வேட்பாளர் விஸ்வநாத் மகாதேஷ்வர் பிருஹன் மும்பை மாநகராட்சியின் புதிய மேயராக வார்டு உறுப்பினர்களால் புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார். - பிருஹன் மும்பை, புணே, தாணே உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளில் பாஜக வெற்றி பெற்றது. எனினும், மும்பையில் சிவசேனை அதிக இடங்களை கைப்பற்றியது. இருப்பினும், அக்கட்சியின் வேட்பாளர் மேயராக வேண்டுமானால் மற்றொரு கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது. - ஏற்கெனவே மத்திய அரசிலும், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™