Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சப்பைக்கட்டு? ஜெ., மரண விவகாரம் விஸ்வரூபத்தால் தமிழக அரசு... எய்ம்ஸ் டாக்டர்களிடம் அறிக்கை வாங்கி டில்லியில் வெளியீடு

Posted: 06 Mar 2017 09:18 AM PST

'ஜெ., மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்து வருவதால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதற்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக, டில்லி எய்ம்ஸ் டாக்டர்களிடம் இருந்து, அவசரமாக அறிக்கை வாங்கி, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், போயஸ் கார்டன் வீட்டில், ஜெ., தாக்கப்பட்டார் என்ற புகாருக்கு, தெளிவான பதில் எதுவும் இல்லை. ஆனால், சென்னை, அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, காவிரி நீர் பிரச்னை குறித்து விவாதித்தார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா, உடல் ...

உ.பி., வளர்ச்சியை முடக்கிய காங்., - சமாஜ்வாதி - பகுஜன் கட்சிகளை... துரத்துங்க...! சொந்த தொகுதியில் பிரதமர் மோடி உணர்ச்சிபூர்வமான பிரசாரம்

Posted: 06 Mar 2017 09:22 AM PST

வாரணாசி, :உத்தர பிரதேச சட்டசபைக்கு நடக்கும், கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. தன் சொந்த தொகுதியான வாரணாசியில் நடந்த பிரசாரத்தின் போது, ''உ.பி.,யின் வளர்ச்சியை முடக்கிய காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளை துரத்தியடியுங்கள்; மாநிலத்தை வளர்ச்சியடைய செய்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்,'' என, பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. ஏழாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல், நாளை ...

'மீனவர்களை மீட்க முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்'

Posted: 06 Mar 2017 09:26 AM PST

சென்னை: 'மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள், 85 பேரை விடுவிக்க, முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: மார்ச், 4ம் தேதி அதிகாலை, நாகபட்டினம், அக்கரைப்பேட்டை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற எட்டு மீனவர்களையும்; மார்ச் 5ல், ராமேஸ்வரம், புதுக்கோட்டைஜெகதாம்பட்டினம் மீனவர்கள், 24 பேரையும், இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
அமைச்சரை டில்லி அனுப்புங்க
இலங்கை அரசின் பிடிவாதத்தால், அந்நாட்டு சிறைகளில் வாடும், 85 மீனவர்களும், 128 ...

பன்னீர் அணியை பலமிழக்க செய்ய கோடநாடு அதிகார மையம் தீவிரம்!

Posted: 06 Mar 2017 09:30 AM PST

ஊட்டி, : பதவி, பண ஆசை காண்பித்து, பன்னீர்செல்வம் அணியை பலமிழக்கச் செய்யும் முயற்சியில், கோடநாடு அதிகார மையம் தீவிரம் காட்டி வருகிறது.

நீலகிரி, அ.தி.மு.க.,வில், சசிகலாவின் ஆலோசனையில், கோடநாடு எஸ்டேட் மேலாளர், அதிகார மையமாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் கூட, இவரின் ஆலோசனை படியே, தேர்தல் பணிகள் நடந்தன.சசிகலா சிறைக்கு சென்ற நிலையில், கோடநாடு அதிகார மையம் பலமிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலாவின் உறவினர் தினகரன், கோடநாடு எஸ்டேட் அதிகார மையத்தை, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.
வகுத்த ...

செல்லாத ரூபாய் நோட்டில் வாக்குறுதியை மீறினாரா மோடி?

Posted: 06 Mar 2017 09:31 AM PST

புதுடில்லி,; செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதில், பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக, சரத் மிஸ்ரா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் மோடி, 2016, நவ., 8ல் வெளியிட்டார். அப்போது, 'செல்லாத ரூபாய் நோட்டுகளை, 2016 டிச., 30 வரை, வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். அதன்பின், 2017 மார்ச் 31 வரை, தகுந்த ஆதாரங்களுடன், ...

'சசி அண்ட் கோ'வின் ஆட்டம் ஆரம்பம் பழனிசாமி பெயரில் சொத்து அபகரிப்பு

Posted: 06 Mar 2017 09:55 AM PST

திருப்பூர்: 'முதல்வர் பழனிசாமியின் உறவினர் என கூறி மிரட்டி, பிரச்னைக்குரிய சொத்தை அபகரித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காங்கேயத்தைச் சேர்ந்த இளம்பெண், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வட்டமலையைச் சேர்ந்தவர் விதுலா; சட்டக் கல்லுாரி மாணவி. தன் தந்தையின் பெயரில் உள்ள, 'பேராசிரியர் சுந்தரம் அறக்கட்டளை'யின் செயலராக உள்ளார்.
வழக்கு நிலுவையில் உள்ளது.
அறக்கட்டளைக்கு சொந்தமான, 6 ஏக்கர் நிலமும், அதில், 1 ஏக்கரில் உள்ள கட்டடமும், வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ளது; இதன் மதிப்பு, 5 ...

மீனவர் விவகாரம்: பிரதமருக்கு 115 கடிதம்!

Posted: 06 Mar 2017 09:56 AM PST

சென்னை: 'இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட, மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, பிரதமருக்கு, 115 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை, துறைமுகம் அருகே, ஜன., 28ம் தேதி, இரண்டு தனியார் கப்பல்கள் மோதிக் கொண்டன. அவற்றில் இருந்து, கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு, கடலில் பரவியது.இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட, 30 ஆயிரம் மீனவர்களின் குடும்பத்திற்கு, தலா, 5,000 ரூபாய், நிவாரணம் வழங்கும் விழா, ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று நடந்தது.
115 ...

உளவுத்துறை ஐ.ஜி., பதவி காலி பதுங்கும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள்

Posted: 06 Mar 2017 10:12 AM PST

அரசுக்கு பக்கபலமாக இருக்கக்கூடிய, உளவுத்துறை ஐ.ஜி., பதவிக்கு வர, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தயங்குவதால், அந்த பணியிடம் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்னை முதல், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட, அரசு அதிகாரிகளின் உள்ளடி வேலைகளை எல்லாம், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அரசுக்கு பக்க பலமாக இருப்பது உளவுத்துறை, ஐ.ஜி.,யின் பணி.
பெண்களிடமும், 'கட்டிங்'
ஜெ., முதல்வராக இருந்த போது, உளவுத்துறை, ஐ.ஜி., தரக்கூடிய அறிக்கைப்படியே, முக்கிய முடிவுகள் எடுத்தார். சென்னையில், கவுன்சிலர்கள், விபசார விடுதி நடத்தும் ...

ஜெ.,வுக்கு இதய துடிப்பு நின்றது எப்போது?

Posted: 06 Mar 2017 10:26 AM PST

சென்னை,: அப்பல்லோ மருத்துவமனையில், டிச., 5ல் நடந்தது என்ன என்று, எய்ம்ஸ் டாக்டர்கள், கில்னானி, நரங்க், அஞ்சன் டிரிக்கா, தேவகாரு ஆகியோர் அளித்த அறிக்கை:

டிச., 5 மாலை, 5:00 மணிக்கு, அப்பல்லோ மருத்துவமனை வந்து, தீவிர சிகிச்சை பிரிவான ஐ.சி.யூ.,வில் இருந்த, ஜெயலலிதாவின் சிகிச்சை முறையை பார்வைஇட்டோம். முதலில் மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் டாக்டர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினோம். ஜெயலலிதாவுக்கு, டிச., 4 மாலை, 4:30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். அவருக்கு, வெளிப்புறத்தில் இருந்து மசாஜ் செய்தும், இதய நுரையீரல் சிகிச்சை, எக்மோ என்ற செயற்கை ...

ரேஷன் கடைகளில் இருப்பு வைக்க கோரிய மனு தள்ளுபடி

Posted: 06 Mar 2017 10:57 AM PST

சென்னை : ரேஷன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்க, போர்க்கால நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த சைமன் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில், ௧.௯௫ கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு, ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை என, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தற்போது, ரேஷன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை.கடை ஊழியர்களிடம் கேட்டால், 'அரசிடம் இருந்து பொருட்கள் வரவில்லை; ...

கோடி கணக்கில் ஏமாற்றியவரை விட்டுவிட்டு, சேலை திருடியவருக்கு ஓராண்டு சிறையா?

Posted: 06 Mar 2017 12:00 PM PST

புதுடில்லி: ‛‛கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றியவர்கள் வெளிநாட்டில் சுகமாக வாழும் போது, சேலை திருடியவருக்கு ஓராண்டு சிறையா?'' என சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வியெழுப்பினார்.

ஐதராபாத்தை சேர்ந்த எலியா என்பவர் 5 சேலைகளை திருடியாதாக அம்மாநில போலீசார் ஒரு வருடத்திற்கு முன்பு கைது செய்தனர். ஆனால் இது வரை அவர் எந்த வித விசாரணையும் இன்றி சிறையிலேயே இருந்து வருகிறார். வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.
சேலை திருடியவருக்கு 1 வருடம் சிறையா?
இதை எதிர்த்து அவரது மனைவி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ...

சசிகலாவை சந்தித்த அமைச்சர்களின் பதவியை பறிக்க ஐகோர்ட்டில் வழக்கு

Posted: 06 Mar 2017 01:10 PM PST

பெங்களூரு : 'பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, துமகூரு மகளிர் மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும்; அவரை பார்த்த நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, கர்நாடக ஐகோர்ட்டில், 'டிராபிக்' ராமசாமி வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரை, தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத் துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவுத் துறை ...

எஸ்.பி.ஐ., வங்கிக்கு மத்திய அரசு வேண்டுகோள்

Posted: 06 Mar 2017 03:13 PM PST

புதுடில்லி: சேமிப்புக் கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பேணாவிட்டால், அபராதம் வசூலிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி, பாரத ஸ்டேட் வங்கியிடம், மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

பாதிப்பு:
'சேமிப்புக் கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகை பேணாத வாடிக்கையாளர்களிடம், ஏப்., 1 முதல், 100 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்' என, பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் அறிவித்தது. இதனால், அந்த வங்கியின், 31 கோடி சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் பாதிக்கும் சூழல் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™