Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வேலன்:-உலோகங்களின் குறியீடுகளும் விவரங்களும்.

Posted: 06 Mar 2017 08:14 AM PST

ஒவ்வொரு உலோகங்களுக்கும் ஒவ்வொரு குறியீடு உள்ளது. உலோகங்களின் முழுபெயரையும் குறிப்பிடாமல் அந்த குறியீடை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.13 எம்.பி.கொள்ளளவு கொண்ட இவ்வாறான குறியீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் அனைத்து உலோகங்களையும்கொடுத்துள்ளார்கள். இதில் நமககு எந்த உலோகம் விவரம்தேவையோ அதனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உலோகத்தின்பெயர்.அதன் குறீயீடு எண்.அதன்எடை.அதன் ...

நைட்டு டைட்டு தத்துவம்…!!

Posted: 06 Mar 2017 06:14 AM PST


-

யாசகம் – ஏ.வேளாங்கண்ணி

Posted: 06 Mar 2017 06:09 AM PST

வீடு போப்போ என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது – காடும் வாவா என்று கூப்பிட்படிதான் இருக்கிறது – வீட்டை விட்டு போவதற்கும் ஒரு நேரம் காலம் இருக்கிறது இல்லையா – மீந்த கஞ்சியை ஊற்றுவதற்குத்திரோத்தியோ என்று காடு கூப்பிடும் நேரத்திற்கு வாலை ஆட்டிக்கொண்டு ஓடுவதற்கு நாம் என்ன நாயா..! – ஒன்றை பெற்றவனுக்கு உரியிலே சோறு, நாலை பெற்றவனுக்கு நடுத் தெருவிலே சோறு என்னும் கூற்று நிஜமாகிறது சிலருக்கு – அவனவன் சம்பாதிக்கிற சம்பாதனைக்கு, தான் குடிக்கவும், பொண்டாட்டி புள்ள குட்டிய காப்பாத்துவதற்கே வாயிக்கும் ...

‘வற்ற விடலாமா ஜீவநதியை’ குறும்படம் – வீடியோ

Posted: 06 Mar 2017 06:00 AM PST

வற்றவிடலாமா ஜீவநதியை' என்ற தலைப்பில்,
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி
மாணவர் அபிஷ் விக்னேஷ் உருவாக்கியுள்ள
3 நிமிட விழிப்புணர்வு குறும்படம்,
தாமிரபரணியை நேசிப்போரை யோசிக்க
வைத்திருக்கிறது.
-

சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி

Posted: 06 Mar 2017 05:56 AM PST

சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில் பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால், நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட செல்போன் மூலம் பேசமுடியும். தனியார் தொலைபேசி நிறுவனங்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகள், சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தி வருகிறது. அந்த வரிசையில், 'எல்எஃப்எம்டி' (Limited Fixed Mobile Telephony) என்ற புதிய சேவையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ...

முடி திருத்தும் தொழிலாளிக்கு 150 கார்கள்

Posted: 06 Mar 2017 05:54 AM PST

- பெங்களூருவில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (45). கடந்த 1994-ம் ஆண்டு முதல் இவர் பெங்களூருவில் உள்ள போரிங் மையத்தில் ஆடம்பர சலூன் வைத்து, முடி திருத்தும் பணி செய்து வருகிறார். பெங்களூருவில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு பிறகு, இவர் ரூ.3.2 கோடி மதிப்பில் மெர்சடிஸ் மேபேக் எஸ்600 என்ற வெளிநாட்டு சொகுசு காரை அண்மையில் வாங்கியுள்ளார் எனத் தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் பாபு கூறும்போது, "எனக்கு 9 வயது இருக்கும்போது என் அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு என்னுடைய அம்மா ...

மகத்தான மகளிர்

Posted: 06 Mar 2017 05:45 AM PST

- பூமிக்கு துணையாய் பிறந்தவள் நீ எந்த சாமிக்கும் இணையாய் இருப்பவள் நீ! – உயிர்களை சுமக்கும் உன்னதம் நீ உன்னை நினைத்திட மறந்தவள் நீ! – உன்னால் மனித குலம் தழைக்கும் உன் அமுதால் பல உயிர்கள் பிழைக்கும்! – பெண்ணால் உலகம் பெருமை கொள்ளும் பெரும் சோதனைகளை உந்தன் பொறுமை வெல்லும்! – எல்லா உயிர்களும் உன்னை வணங்கும் உன் தாலாட்டு இசையில் அமைதி கொள்ளும்! – உலகின் அதிசயம் நீ தானம்மா உறவை வளர்ப்பது பெண் தானம்மா! – உன் காலடி படும் இடம் பூ வனமே – உன் கரம் படும் பொருள் எல்லாம் பூ ...

’சீர்’ திருத்தம்

Posted: 06 Mar 2017 05:41 AM PST

சீர்' திருத்தம்

நாற்பது பவுன் போடச் சொன்னோம்
சின்ன மாற்றம்
அறுபதாய் கொடுத்து விடுங்கள்
'சீர்'திருத்த திருமணம்!


————————-

பிடிவாதம் – ஒரு பக்க கதை

Posted: 06 Mar 2017 05:37 AM PST

ஜோதிடம் என்பது அறிவியலா?

Posted: 06 Mar 2017 05:26 AM PST

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

விக்கிபீடியா

Posted: 06 Mar 2017 04:53 AM PST

அறிவை இலவசமாக்கியவர்! அலெக்சா வரிசையில் Google,You Tube,Facebook,Baidu,Yahoo,Wikipedia (ஆறாவது இடம்) 295 மொழிகளில்,இன்றுவரை 312,947 முழு நேர(active) பங்களிப்பாளர்களையும், 66,985,312 பதிவு செய்யப்பட்ட பங்களிப்பாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது. விளம்பரங்களே இல்லாத சேவை! நமது தேடல்களுக்கு முதல் பரிந்துரையாகக் கிடைப்பது! என பல பெருமைகளுக்கும் உரிமையுடையது விக்கிப்பீடியா! இதை உருவாக்கிய ஜிம்மி வேல்ஸ் அவா்கள் பொருளாதாரம் படிக்க கல்லூரிக்குச் சென்றார். பின் ஸ்டாக் எக்ஸேங்கில் வேலைப் பார்த்தார். ...

பார்வையற்ற பாடகி விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை

Posted: 06 Mar 2017 04:43 AM PST

- திருவனந்தபுரம்: பிரபல பார்வையற்ற மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமி தொடர்ந்து 5 மணி நேரம் காயத்திரி வீணையில் பாடல் இசைத்து உலக சாதனை படைத்துள்ளார். மலையாளத்தில் 'செல்லுலாய்டு' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்ற இவர் முதல் பாடலிலேயே (காற்றே… காற்றே… என்ற பாடல்) கேரள அரசின் விருதை பெற்றார். அடுத்த ஆண்டே ஜெயராம் நடித்த 'நாயகன்' என்ற படத்தில் பாடியதும் கேரள அரசின் விருதை பெற்றுக் கொடுத்தது. இவர் தமிழிலும் ஒரு பாடல் பாடியுள்ளார். மோகன்லால் நடிப்பில் ஹிட்டான ...

பூ மீது யானை, பூ வலியை தாங்குமோ

Posted: 06 Mar 2017 03:02 AM PST

படம் – டிஷ்யூம் இசை : விஜய் ஆண்டனி பாடல் : குகை.மா.புகழேந்தி் குரல்கள் : மால்குடி சுபா வருடம் : 2005 – ———————————– பூ மீது யானை பூ வலியை தாங்குமோ தீ மீது வீணபோய் விழுந்தால் பாடுமோ போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ – கண்ணீர் கவிதைகள் இந்த கண்கள் எழுதுதே கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே… இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே – ( பூ மீது யானை பூ வலியை தாங்குமோ – ஏ… உடைத்துப் பார்க்கும் ...

ஈராக்கில், ஒரே வாரத்தில் 60 ஆயிரம் பேர் அகதிகள் ஆன பரிதாபம்!

Posted: 06 Mar 2017 02:52 AM PST

- ஈராக்கின் மேற்கு மொசூல் நகரிலிருந்து, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் அகதிகளாய் வெளியேறி இருப்பதாக, ஈராக் அரசாங்க நிர்வாகி தெரிவித்துள்ளார். 2014 ஜூன் மாதத்தில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஈராக்கின் மொசூல் நகரத்தைக் கைப்பற்றியது. அது முதல், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு மொசூல் முக்கியத் தளமாக இருந்துவருகிறது. மொசூல் நகரை மீட்கும் நோக்கில், ஈராக் அரசாங்க ராணுவத்துக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. கடந்த இரண்டே நாட்களில் மட்டும் ...

மூலிகை படங்கள்.

Posted: 06 Mar 2017 02:29 AM PST

மூலிகை மற்றும் தாவரங்கள் இல் ஆர்வம் உள்ளவர்கள், இத்துடன் புதிதாக  இணைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே ஏராளமான மூலிகை பற்றிய தகவல்கள் ஈகரையில் உள்ளன.
அதனால் சில இங்கு தரப்பட்டுள்ளன.

செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !

Posted: 05 Mar 2017 10:57 PM PST

1. நாட்டின் பொருளாதாரம் சீராக ஒன்றரை ஆண்டுகள் ஆகும் பொருளாதார நிபுணர் ஆனந்த் எஸ்.சீனிவாசன் கருத்து. 1. கறுப்பு பணம், கள்ளப் பணம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று கூறி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தது மிகவும் தவறான முடிவு. 2. உலகின் எந்த நாட்டிலும் பணமில்லாத பரிவர்த்தனை 100% சதவீத அளவுக்கு நடப்பதில்லை. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 46 சதவீதம், பிரான்ஸ் 45%, ஜெர்மனி 86%, ஆஸ்திரேலியா 66% பணமில்லா பரிவர்த்தனை நடக்கிறது. இந்தியாவில் 100% பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது ...

இளவரசி சந்திரகாந்தா... 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறாள்!

Posted: 05 Mar 2017 07:14 PM PST

-- 90களின் நடுவில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பிரபல ஃபேன்டஸி தொடர் சந்திரகாந்தா. தேவகி நந்தன் காத்ரி எழுதிய 'சந்திரகாந்தா' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட சீரியல் அப்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் சபாஷ் கான் நாவலின் நாயகன் 'குன்வர் விரேந்திர விக்ரம் சிங்' பாத்திரத்திலும், மிஸ். இந்தியா பட்டம் பெற்ற ஷிகா ஸ்வரூப் நாயகி சந்திரகாந்தா கதாபத்திரத்திலும் ந டித்தனர். கிட்டதட்ட 20 வருடங்களுக்குப் பிறகு அதே நாவலைத் தழுவி மீண்டும் ஒரு தொடர் இந்தியில் ஒளிபரப்பாகவுள்ளது. 'பிரேம் ...

விலை பட்டியல் வெளியிட்டது ஐஆர்சிடிசி: ரூ.30-க்கு 4 இட்லி, ஒரு வடை

Posted: 05 Mar 2017 05:01 PM PST

சித்திரம் பேசுதடி

Posted: 05 Mar 2017 04:59 PM PST

திரைப்படம்: சபாஷ் மீனா பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம் இசை: டி.ஜி. லிங்கப்பா ஆண்டு: 1958 – ——————————— சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி – என்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி – என்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி – என்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி முத்துச் சரங்களைப் போல் முத்துச் சரங்களைப் போல் மோஹனப் புன்னகை மின்னுதடி முத்துச் சரங்களைப் போல் மோஹனப் புன்னகை மின்னுதடி சித்திரம் பேசுதடி – என்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் ...

இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகள்!

Posted: 05 Mar 2017 04:57 PM PST

பி.எஸ்.எல்.வி – சி 37 ராக்கெட்டில் ஒரே சமயத்தில் 104 செயற்கைக் கோள்களைப் பொருத்தி தீர்மானிக்கப்பட்ட விண்வெளிப் பாதையில் நிலை நிறுத்திய இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவின் இந்த விண்வெளிப் பாய்ச்சலை பாராட்டாதவர்கள் யாருமில்லை. – முனைவர் கே.சிவன், எஸ்.சோம்நாத், பி.உன்னிகிருஷ்ணன், தபன் மிஸ்ரா, முனைவர் எம். அண்ணாதுரை முதலானோரின் மேற்பார்வையில் பி.எஸ்.எல்.வி – சி 37 ஏவப்பட்டாலும், இந்த புதிய உலக சாதனையில் ஐந்து முக்கியப் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பும் உள்ளது. – ராக்கெட் மகளிராக ...

முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு உலகை வலம் வந்த விமானம்: ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனை

Posted: 05 Mar 2017 04:54 PM PST

- புதுடெல்லி: முழுக்க முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு உலகம் முழுவதும் விமானம் ஒன்றை சுற்றி வர செய்து ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் வருகிற 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்து வருகின்றனர். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள ஏர் இந்தியா நிறுவனம் புதுமையான சாதனை ஒன்றை படைத்துள்ளது. முழுக்க முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு இயக்கப்படும் விமானம் ...

சொந்த நாட்டுக்கு திரும்பிப் போ’ என கூறியபடி அமெரிக்காவில் இந்தியர் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு: அடுத்தடுத்த சம்பவங்களால் பீதி

Posted: 05 Mar 2017 04:45 PM PST

நியூயார்க்: 'சொந்த நாட்டுக்கு திரும்பிப் போ' என கத்தியபடி சீக்கியர் ஒருவர் மீது மர்ம ஆசாமி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் பீதியை கிளப்பி உள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபராக டெனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியர்கள் மீதான இனவெறி, நிறவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 23ம் தேதி கன்சாஸ் நகரில் இந்திய இன்ஜினியர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32) மதுபான பாரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்றவர் 'நாட்டை விட்டு வெளியேறு' என கத்தியபடி துப்பாக்கியால் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™