Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உ.பி.,யில் அரசியல் கட்சி தலைவர்கள்... முற்றுகை!: கடைசி கட்ட பிரசாரம் இன்று முடிகிறது

Posted: 05 Mar 2017 08:53 AM PST

லக்னோ:உத்தர பிரதேச சட்டசபைக்கு, கடைசி கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில், இன்றுடன் பிரசாரம் முடிவுக்கு வருவதால், ஓட்டுச் சேகரிக்க, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அந்த மாநிலத்தை முற்றுகை யிட்டு உள்ளனர்.

முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆறு கட்ட தேர்தல் முடிந் துள்ள நிலையில், வரும், 8ல் நடக்கும் ஏழாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிகிறது.பிரதமர் நரேந்திர மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசிக்கு உட்பட்ட தொகுதி கள் உட்பட, 40 ...

பெட்டிகளுடன் வலம் வரும் சசி ஆதரவு கும்பல் : ஓட்டம் பிடிக்கும் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள்

Posted: 05 Mar 2017 08:55 AM PST

பன்னீர்செல்வம் அணியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க, பிள்ளை பிடிக்கும் கும்பலை போல, சசிகலா ஆதரவு மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகி கள் சுற்றி வருகின்றனர். பணப்பெட்டிகளை காட்டி, அவர்களை கவரவும் முற்பட்டுள்ளனர். இதை பார்த்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்.

அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பன்னீர் செல்வம் தரப்பினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்தனர். அந்த மனு தொடர்பாக அனுப்பிய நோட்டீசுக்கு, சசிகலா சார்பில் தினகரன் அளித்த விளக்கத்தை, தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை. ...

உண்ணாவிரதம் முடிவதற்குள் நல்ல தகவல் வரும் : பன்னீர்செல்வம் நம்பிக்கை

Posted: 05 Mar 2017 08:57 AM PST

சென்னை: ''வரும், 8ம் தேதி, நம் உண்ணாவிரத போராட்டம் முடிவதற்குள், ஜெ., மரணம் குறித்த, நீதி விசாரணைக்கான அறிவிப்பு வெளியாகும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பன்னீர்செல்வம் பேசியதாவது:
நீக்கினார் :
பல சோதனைகள், சவால்களை வென்று, கட்சி யையும், ஆட்சியையும், ஜெ., சிறப்பாக நடத்தி னார். ஒரு குடும்ப ஆதிக்கம் கட்சியில் கூடாது என்பதற்காக, 2011ல், சசிகலா உட்பட, ...

ஆதார் தகவல்களை திருட முடியாது

Posted: 05 Mar 2017 09:01 AM PST

புதுடில்லி: 'ஆதார் தகவல்களை யாரும் திருட முடியாது; அவற்றை பாதுகாக்கவும், பயன் படுத்தவும் பல்வேறு கடுமையான நடைமுறை கள் உள்ளன. ஆதார் தகவல்கள் அனைத்தும், மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ளன' என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொருவருக்கும், அவரது முகம் மற்றும் கருவிழிகள், கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அதனடிப்படையில், ஆதார் எண் வழங்கப்படுகிறது. சமையல் காஸ், ரேஷன் உட்பட, பல்வேறு அரசு மானியங்கள், சலுகை களை பெறுவதற்கு ஆதார் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
இந்நிலையில், 'ஆதார் விபரங்கள் திருடப்படு ...

அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்?

Posted: 05 Mar 2017 09:13 AM PST

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்திய, நடிகர் கமலஹாசன், அரசியலில் குதிப்பது குறித்து விவாதித்துள்ளார். 'நான் செய்யும் அரசியல், ஓட்டு வாங்குவதற் காக அல்ல; மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் அரசியல்' என, கமல் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெ., மறைவை தொடர்ந்து, டுவிட்டரில், அதிரடி கருத்துகளை வெளியிட்டு வரும் கமல், மக்கள் பிரச்னைகள் குறித்தும் பேசி வருகிறார். இந்தச் சூழலில், கமல் ரசிகர் மன்ற புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகி, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதற்கு, கண்டனம் தெரிவித்த கமல், அவரை விடுவிக்கக்கோரி எச்சரிக்கையும் விடுத்தார். ...

எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ., வளராது: ஸ்டாலின் பதிலடி

Posted: 05 Mar 2017 09:16 AM PST

சென்னை:'தமிழகத்தில், தி.மு.க., அழியும் நிலையில் உள்ளது' என, இரு நாட்களுக்கு முன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் தெரிவித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சென்னையில் ஸ்டாலின் அளித்த பேட்டி:

பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தை சேர்ந்தவர்; மரியாதை, மாண்புக்குரியவர். அவர் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், பா.ஜ., வை, தமிழகத்தில் வளர்க்க முடியாத நிலை உள்ளது. அந்த விரக்தியில், தி.மு.க., அழிகிறது என பேசி வருகிறார். தி.மு.க.,வை அழிக்க நினைத்தோர், அரசியலில் முகவரி இல்லாத அனாதைகளான, பல சான்றுகள் தமிழகத்தில் உண்டு. ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தி.மு.க., ...

அடுத்தடுத்து நடக்கும் போராட்டங்களால் பழனிசாமி அரசு... திணறல்!:சசி தரப்பு நெருக்கடியால் தெளிவான முடிவு எடுக்காமல் தவிப்பு:விஸ்வரூபமெடுக்கும் ரேஷன் பிரச்னையால் பொதுமக்கள் அதிருப்தி

Posted: 05 Mar 2017 09:25 AM PST

தமிழகத்தில், மக்கள் அடுத்தடுத்து நடத்தி வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர முடியாமல், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு திணறி வருகிறது.

சசிகலா தரப்பினர் தரும் நெருக்கடிகளால், டெண்டர்கள் உட்பட, பல விஷயங்களில், தெளிவான முடிவு எடுக்க முடியாமல் அரசு தவிக்கிறது. இதற்கிடையே, ரேஷன் கடைக ளில் பொருட்கள் கிடைக்காத பிரச்னை, மாநிலம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ள தால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் சரி வர கிடைக்கா மல் இருப்பதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்; ...

தீபா பேரவை பொறுப்பாளர்கள் அறிவிப்பில் குளறுபடி நீடிப்பு

Posted: 05 Mar 2017 09:34 AM PST

சென்னை:'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' பொறுப்பாளர்கள் பட்டியலை, தீபாவும், அவரது கணவர் மாதவனும் தனித்தனியாக அறிவித்துள் ளதால், யார் பட்டியல் ஒரிஜினல் என்ற குழப்பம், ஆதரவாளர்கள் மத்தியில் நீடிக்கிறது.

சமீபத்தில், எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை, தீபா துவக்கினார். பேரவை தலைவர் மற்றும் செயலராக, தன்னுடன் இருக்கும் தம்பதியான ராஜா - சரண்யாவை நியமித்தார். இந்த நியமனத்திற்கு, தீபா ஆதரவாளர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மார்ச் 2ல், வளசரவாக்கத்தில் நடந்த கூட்டத்தில், மண்டல பொறுப்பாளர்கள்அறிவிக்கப்பட்டனர்.இந்நிலையில், நேற்றிரவு தீபாவின் ...

தோடர்களுக்கு திறக்காத வழி; கோடநாடு எஸ்டேட் வாங்குது பழி!

Posted: 05 Mar 2017 09:40 AM PST

கோவை: பழங்குடியின மக்களான தோடர் களின் குடியிருப்புக்கு செல்லும் வழியை, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னும் கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் திறந்து விட மறுப்பதற்கு, சசிகலாவே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மறைந்த முதல்வர், ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களின் பட்டியலில் முக்கிய இடம்பிடித்திருப்பது, நீலகிரி மாவட்டத்திலுள்ள கோடநாடு எஸ்டேட். இந்த எஸ்டேட், தற்போது பல ஆயிரம் ஏக்கர் பரப்புடையதாக பரந்து விரிந்திருந்தா லும், 900 ஏக்கர் பரப்புடைய எஸ்டேட் பகுதி மட்டும் இவ்வழக்கில் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு?

Posted: 05 Mar 2017 11:05 AM PST

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2 முதல், 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி:
விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில், அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும்.
அதன்படி, ''இந்த ஆண்டு ஜனவரி, 1 முதல், 2 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படியை உயர்த்தப்படும் என ...

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு; ஜெட்லி பங்கு என்ன?

Posted: 05 Mar 2017 11:54 AM PST

புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு பற்றி, நிதியமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டதா' என, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்க, மத்திய நிதியமைச்சகம் மறுத்து விட்டது.
ஆர்.டி.ஐ., சட்டம்:
பிரதமர் மோடி, பழைய, 1,000 - 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு, நவம்பர், 8ல், அறிவித்தார். 'இந்த அறிவிப்புக்கு முன், இது பற்றி, மத்திய நிதியமைச்சர் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசிக்கப்பட்டதா' என, ரிசர்வ் வங்கி மற்றும் பிரதமர் அலுவலகத்திடம், தகவல் அறியும் உரிமை ...

2 லட்சம் துப்பாக்கிகளுக்கு ஓய்வு அளிக்கிறது ராணுவம்

Posted: 05 Mar 2017 12:55 PM PST

புதுடில்லி: ராணுவத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ள, 'இன்சாஸ்' எனப்படும், இந்திய சிறிய ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக, புதிய நவீன துப்பாக்கிகளை அறிமுகம் செய்ய, திட்டமிடப்பட்டுள்ளது.
இன்சாஸ் துப்பாக்கி:
ராணுவத்தில், குறிப்பாக, எல்லை பாதுகாப்பு பணியில் உள்ளவர்களுக்கு, இன்சாஸ் எனப்படும், இந்தியாவில் தயாரிக்கப்படும், இந்திய சிறிய துப்பாக்கிகள் வழங்கப்படுகின்றன. கடந்த, 1998ல் அறிமுகம் செய்யப்பட்டு, இரண்டு லட்சம் இன்சாஸ் துப்பாக்கிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ...

பழனிசாமிக்கு எதிராக போராட்டம்: வக்கீல்களுக்கு கட்ஜு அழைப்பு

Posted: 05 Mar 2017 02:17 PM PST

'முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் போராட வேண்டும்' என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
அவரது முகநுால் பதிவு:
தென் மாநிலங்களை சேர்ந்த அனைத்து வழக்கறிஞர்களும், இன்று முதல் தினமும், கீழ்கண்ட கோரிக்கைகளுக்காக, அமைதியாக போராட வேண்டும்.
* வட மாநில உயர் நீதிமன்றங்களில், ஆங்கிலத்துடன் ஹிந்தியும் வழக்காடு மொழியாக உள்ளது. அதேபோல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளை, அந்தந்த உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க வேண்டும்
* ...

'மோடியின் 'பாஸ்போர்ட்' தகவல்களை தர முடியாது'

Posted: 05 Mar 2017 03:17 PM PST

புதுடில்லி: ''பிரதமர் நரேந்திர மோடியின், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்க முடியாது,'' என, தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்துார் உத்தரவில் கூறியுள்ளார்.
என்ன பொது நோக்கம்?
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், குஜராத் காங்கிரஸ் நிர்வாகி, ஜி.எம்.சவுகான் தொடர்ந்த வழக்கை விசாரித்த, தலைமை தகவல் ஆணையர், ஆர்.கே.மாத்துார் அளித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
தனிப்பட்ட தகவல்கள் என்பதால், பிரதமர் நரேந்திர மோடியின் பாஸ்போர்ட் தகவல்களை அளிக்க ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™