Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கட்சியில் அதிருப்தியாளர்களை 'சமாளி'க்குமாறு... உத்தரவு மா.செ.,க்களை முடுக்கி விட்டார் அ.தி.மு.க., சசிகலா

Posted: 04 Mar 2017 05:37 AM PST

அ.தி.மு.க., கீழ்மட்ட நிர்வாகிகள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் செல்வதை தடுப்பதற்கான முயற்சியில், சசிகலா தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜெ., மறைந்ததும், அ.தி.மு.க.,வையும், ஆட்சி யையும் கைப்பற்ற, சசிகலா திட்ட மிட்டார். முதற்கட்டமாக, பொதுச் செயலராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார். அடுத்து, முதல் வராக முயற்சிகள் மேற்கொண்ட போது,சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.சிறைக்கு செல்வதற்கு முன், தன் விசுவாசி பழனிசாமியை முதல்வராக்கினார். அரசையும், கட்சியையும், தன் கட்டுப்பாட்டில் வைக்க, தன் அக்கா மகன் தினகரனை, துணை ...

வாக்காளர் எண்ணத்தை கணிக்க முடியாமல் கட்சிகள்... கலக்கம் உ.பி.,யில் ஆட்சி அமைப்பது யார் என்பதில் குழப்பம்

Posted: 04 Mar 2017 06:08 AM PST

உ.பி., சட்டசபை தேர்தலில், ஆறு கட்ட ஓட்டுப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஏழாவது மற்றும் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு, 8ல் நடக்கவுள்ளது.

ஒவ்வொரு கட்ட ஓட்டுப்பதிவின் முடிவிலும், ஒவ்வொரு கட்சிக்கு சாதகமான அலை வீசுவதாக தகவல் வெளியானதால், ஆட்சி அமைக்க தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி தேவைப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் கலக்கமடைந்து உள்ளன. உ.பி.,யில், சமாஜ்வாதியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். ஐந்து ஆண்டு காலம் நிறைவடைந்ததால், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான, மாநில சட்டசபை தேர்தல், ஏழு கட்டங்களாக நடந்து ...

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் சட்ட வரைவுக்கு... ஒப்புதல் உணவகங்களுக்கு 5 சதவீத வரி விதிக்கவும் முடிவு

Posted: 04 Mar 2017 08:22 AM PST

புதுடில்லி: நாடு முழுவதும், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதித்து வரும், ஜி.எஸ்.டி., கவுன்சில், சிறு ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் மீது, 5 சதவீத வரி விதிப்பதென, நிர்ணயம் செய்துள்ளது. ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவைகளுக்கு, நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி சட்ட மசோதா, பார்லிமென் டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு, ஜனாதிபதியின் ...

மது விற்பனையில் 'சசி' நிறுவனம் சாதனை 14 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி அள்ளியது

Posted: 04 Mar 2017 09:08 AM PST

கோவை, : சசிகலாவின் உறவினர்களால் நடத்தப்படும், 'மிடாஸ்' நிறுவனம், தமிழக அரசுக்கு, 14 ஆண்டுகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்று, சாதனை படைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த, 2001 - 2006, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தின் போது, 'தமிழகத்தில், மதுக்கடை களை அரசே ஏற்று நடத்துவது' என, முடிவு செய்யப்பட்டது. 2003ல் அரசு இந்த முடிவை எடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன், 2002 அக்., 28ல், 'மிடாஸ் கோல்டன் டிஸ்டிலெரிஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில், மதுபான தயாரிப்பு நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் துவங்கப்பட்டது.
எகிறிய கொள்முதல்!
வேறு மூன்று ...

ஓ.பி.எஸ்., அணி உண்ணாவிரதத்துக்கு போலீஸ் தடை? உயரதிகாரிகள் ஆலோசனை: அச்சகங்களுக்கு மிரட்டல்

Posted: 04 Mar 2017 09:18 AM PST

கோவை, ஜெ., மரணம் தொடர்பாக போஸ்டர், பேனர், துண்டு பிரசுரம் அச்சிட தடை விதித் துள்ள போலீசார், வரும், 8ம் தேதி, தமிழகம் முழுவதும் பன்னீர்செல்வம் அணியினர் நடத்த திட்டமிட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத் துக்கு அனுமதி மறுக்க தயாராகி வருகின்றனர். ஜெயலலிதா மரண மர்மங்களை, கண்டறிய நீதி விசாரணை கோரி, வரும், 8ல், மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் நடத்த, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் முடிவு செய்துள்ளனர்.சென்னை, சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அருகே, பன்னீர்செல்வம் தலைமை யில், பல ஆயிரம் தொண்டர்கள், நிர்வாகிகளை திரட்டி பலத்தை காட்ட ...

எம்.எல்.ஏ.,க்களுக்கு சசிகலா ரூ.3 கோடி, 3 கிலோ தங்கம் கொடுத்தது...அம்பலம்!:பதவிக்காக மந்திரிகள் நடத்திய நாடகம் பற்றி பன்னீர் பரபரப்பு தகவல்:செங்கோட்டையன், சீனிவாசன் சொல்வதெல்லாம் பொய் என ஆவேசம்

Posted: 04 Mar 2017 09:30 AM PST

'கூவத்துார் புகழ்' எம்.எல்.ஏ.,க்களுக்கு, தலா, மூன்று கோடி ரூபாய் பணம், மூன்று கிலோ தங்கம் கொடுத்ததை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று அம்பலப்படுத்தினார்.

பதவிக்காக மந்திரிகள் நடத்திய நாடகம் பற்றிய பரபரப்பு தகவல்களையும், அவர் வெளியிட்டார். அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன் போன்றோர் சொல்வதெல்லாம் பொய் என்றும், ஆவேச புகார் கூறினார்.பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று நாமக்கல், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது:ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள, தலா, மூன்று கிலோ தங்கம், மூன்று கோடி ரூபாய் ரொக்கம் ...

'மக்கள் விரோத சக்திகளுக்கு திதி கொடுக்கும் நேரம் இது'

Posted: 04 Mar 2017 09:42 AM PST

வாரணாசி:உ.பி., மாநிலம் வாரணாசியில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, ஆளும் சமாஜ்வாதி கட்சியை கடுமையாக சாடினார்.

''காணாமல் போன எருமை மாட்டை தேடுவ தில் அக்கறை காட்டும் மாநில அரசு, அமைச்ச ரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு, நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க மறுக்கிறது,'' என்றார். உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், சட்டசபை தேர்தல், ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது.இந்நிலையில், வாரணாசி லோக்சபா தொகுதி, எம்.பி.,யும், பிரதமருமான நரேந்திர மோடி, பா.ஜ., ...

ஜெ., மரணம்: சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு உத்தரவிட முடியுமா?

Posted: 04 Mar 2017 09:46 AM PST

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையை ஏற்றுள்ள, அ.தி.மு.க., - எம்.பி.,க் கள், ஜனாதிபதியை சந்தித்து, ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணை அல்லது சி.பி.ஐ., விசாரணை நடத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடைக்கால முதல்வராக பன்னீர்செல்வம் இருந்த போது, 'உச்ச நீதிமன்ற நீதிபதி மூலம், நீதி விசாரணை நடத்தப்படும்' என, அறிவித்தார். அதோடு சரி; எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மனு தாக்கல் செய்யலாம்
தற்போது, சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வரும் நிகழ்வுகள் குறித்து, சி.பி.ஐ., ...

கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு!

Posted: 04 Mar 2017 09:49 AM PST

தமிழக அரசின் வருவாய், பல வகைகளில் குறைந்துள்ளதால், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை சமாளித்து, வரி இல்லாத பட்ஜெட்டை உருவாக்குவதும், அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

தமிழக அரசின் கடன், ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், இலவச திட்டங்களுக்கு பணத்தை வாரி வழங்கியதால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது.இலவச திட்டங்களின் பயனாக, அ.தி.மு.க., மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. ...

திருமலை தேவஸ்தானத்தில் பழைய நோட்டுகள் எவ்வளவு?

Posted: 04 Mar 2017 10:31 AM PST

திருப்பதி: திருமலை - திருப்பதி தேவஸ்தானம் வசம், 8.29 கோடி ரூபாய் மதிப்புள்ள, பழைய செல்லாத நோட்டுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையிலும், கள்ள ரூபாய் நோட்டுகளை தடுக்கும் வகையிலும், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, மத்திய அரசு, கடந்தாண்டு இறுதியில்
அறிவித்தது.
இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள, கடந்த டிச., 30 வரை, அவகாசம் தரப்பட்டது. அதுவரை ஏழுமலையான் கோவில் உண்டியலில் சமர்ப்பித்த பழைய ரூபாய் நோட்டுகளை, தேவஸ்தானம், தினமும், வங்கிகளில் டிபாசிட் செய்து வந்தது. கெடு முடிந்தபின், ...

'இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை

Posted: 04 Mar 2017 11:34 AM PST

பீஜிங்:சீனாவின் தேசிய நாளிதழான, 'குளோபல் டைம்ஸ்' அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி:இந்தியா, தயாரிப்புத் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. அதன் விளைவாக, கடந்த ஜனவரியில், இந்தியா, சீனாவுக்கு மேற்கொண்ட ஏற்றுமதி, 42 சதவீதம் உயர்ந்துள்ளது. இரு நாடுகளின், 7,000 கோடி டாலர் பரஸ்பர வர்த்தகத்தில், திடீரென்று, இந்தியாவின் பங்களிப்பு, 4,600 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதை, சீன பொருளாதார ஆய்வாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு அலட்சியமாக இருப்பது, உள்நாட்டு தயாரிப்புத் துறைக்கு ஆபத்தாக முடியும்.இந்தியாவில், தயாரிப்புத் துறையில் போட்டி ...

ரூ.3.5 கோடி தருவோம்னு சொன்னீங்க என்னாச்சு?: சாக்ஷி ஆவேசம்

Posted: 04 Mar 2017 12:47 PM PST

புதுடில்லி, : ரூ. 3.5 கோடி பரிசு தருவோம் என சொன்னீங்களே என்னாச்சு என ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை அரியானா அரசை கேள்வி கேட்டுள்ளார்.இந்திய மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக், 24. கடந்த ரியோ (2016) ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இவரின் சாதனையை கவுரவிக்கும் முறையில், சொந்த மாநிலமான அரியானா அரசு ரூ. 3.5 கோடி தரப்படும் என அறிவித்தது.

தற்போது வரை இந்த பணம் தரப்படவில்லை.இது குறித்து சாக் ஷி தனது 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள செய்தியில், ...

முஸ்லீம் பெண்களுக்கு ‛வாட்ஸ் அப்' மூலம் ‛தலாக்' அனுப்பிய கணவர்கள்

Posted: 04 Mar 2017 01:42 PM PST

ஐதராபாத்: ஐதராபாத்தை சேர்ந்த 2 முஸ்லீம் பெண்களுக்கு வெளிநாட்டில் வாழும் கணவர்கள் வாட்ஸ் அப் -பில் ‛தலாக்' அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐதாரபாத்தை சேர்ந்த அப்துல் ஹபீஸின் மகன்கள் செய்யது பயாசுதீன், மற்றும் உஸ்மான் குரைசி ஆகியோர் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மனைவிகள் பாத்திமா மற்றும் பக்ரைன் நூர் ஆகியோர் தங்கள் குழந்தைகளோடு இந்தியாவில் அப்துல் ஹபீஸின் குடும்பத்துடன் இருக்கின்றனர்.
வாட்ஸ் அப்-பில் ‛தலாக்':
இந்நிலையில் இவர்கள் இருவரும் ...

டிஜிட்டல் மாநிலமாக மாறுகிறது தெலுங்கானா

Posted: 04 Mar 2017 02:34 PM PST

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தை டிஜிட்டல் மாநிலமாக மாற்ற கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது அம்மாநில அரசு.

தெலுங்கான மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முன்னிலையில் தெலுங்கான அரசுக்கு கூகுள் நிறுவனத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள்:
இந்த ஒப்பந்தத்தில் மாநில அரசின் அனைத்து இணைதளங்களையும் மொபைலில் பார்த்து கொள்ளும் வசதி, சிறு மற்றும் நடுத்தர தொழில்களையும் ஆன்லைன் மூலம் பாதுகாப்பானதாக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™