Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காஷ்மீர் குகைபாதை: 10 அம்சங்கள்

Posted: 31 Mar 2017 05:58 AM PDT

ஸ்ரீநகர்: ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிக நீளமான குகைப்பாதையை வரும் ஞாயிறு (ஏப்ரல்2) பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த பாதையின் 10 முக்கிய அம்சங்கள்:நேரம் குறையும்:1.காஷ்மீரில் உத்தம்பூர் மாவட்டம் செனானி முதல் ரம்பன் மாவட்டம் நாஷ்ரி என்ற இடம் வரை ரூ.2,500 கோடி செலவில் இந்த குகைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.2. கடந்த 2011ல் துவங்கிய இந்த குகை பாதை அமைக்கும் பணி தற்போது முடிந்துள்ளது. சுமார், 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.3.இப்பாதையின் நீளம் 10.89 கிலோ மீட்டர்.அதாவது, ஆசியாவிலேயே நீளமான குகைப் பாதை என்ற பெயரைப் ...

நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடுவதில் சுப்ரீம் கோர்ட்... கண்டிப்பு!:இன்று முதல் செயல்படக் கூடாது என உத்தரவு

Posted: 31 Mar 2017 10:16 AM PDT

புதுடில்லி:தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலையை ஒட்டியுள்ள மதுக்கடை களை, ஏப்., 1 முதல் மூட வேண்டும் என்ற தனது உத்தரவை திரும்பப் பெறமுடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அதன்படி, இன்று முதல் இந்தக் கடைகள் செயல்படாது. அதே நேரத்தில், சிறிய சலுகையையும் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது.

'சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மதுக்கடைகள், 2017, ஏப்., 1 முதல் செயல்படக் கூடாது; இதற்காக அளிக்கப்பட்ட லைசென்ஸ்களை, புதுப்பிக்கக் கூடாது' என, 2016, டிச., 15ல் அளித்த தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.சுப்ரீம் கோர்ட் ...

வருவாய் இல்லாத வழித்தடங்களில் ஓடும் 2,200௦ பஸ்கள்...நிறுத்தம்!:தினமும் ரூ.5 கோடி நஷ்டத்தால் தமிழக அரசு அதிரடி முடிவு

Posted: 31 Mar 2017 10:24 AM PDT

தினமும், ஐந்து கோடி ரூபாய் நஷ்டத்தில், அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படு கின்றன. இதை ஈடுகட்டும் வகையில், சிக்கன நடவடிக்கையாக, வருவாய் இல்லாத வழித் தடங்களில் இயக்கப்படும், 2,200 பஸ்களை, இன்று முதல் படிப்படியாக நிறுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு போக்குவரத்து கழகம், எட்டு கோட்டங்களாகவும், 22 மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் சார்பில், தினமும், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடைசியாக, 2011ல், டிக்கெட் கட்டணம், 40 சதவீதம் உயர்த்தப் பட்டது.
சிக்கன நடவடிக்கை
ஆனாலும், போக்குவரத்து கழகங்கள் ...

மெகா தள்ளுபடியால் அலைமோதியது கூட்டம் வாகன விற்பனை மூன்று மடங்கு எகிறியது

Posted: 31 Mar 2017 10:30 AM PDT

'பாரத் ஸ்டேஜ்' எனப்படும், 'பி.எஸ்., - 3' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங் களை விற்பதற்கு கடைசி நாளான நேற்று, தமிழகத்தில் வாகன விற்பனை மூன்று மடங்கு அதிகரித்தது. பல, 'ஷோ ரூம்'களில், 'நோ ஸ்டாக்' அறிவிப்பு ஒட்டப்பட்டது.

வாகனப் புகையால் ஏற்படும் மாசு அளவை தடுப்பதற்காக, அதிக புகையை கக்கும், பி.எஸ்., - 3 தொழில்நுட்பத்தை கைவிட்டு, ஏப்ரல் முதல், பி.எஸ்., - 4 தொழில்நுட்பத்தில் மட்டுமே வாகனங்களை தயாரிக்க வேண்டும் என, மத்திய அரசு, 2015ல் உத்தரவிட்டது.அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை அணுகினர். ஆனால், மார்ச், 31க்குப் பின், பி.எஸ்., 3 வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என, உச்ச ...

அரசியல் பிரவேசம் இல்லை நடிகர் ரஜினி திட்டவட்டம்

Posted: 31 Mar 2017 10:36 AM PDT

''ரசிகர்களை சந்தித்து ரொம்ப நாட்களாகி விட்டது. அவர்களுடன் புகைப்படம் எடுக்கவே, நேரில் சந்திக்கிறேன். மற்றபடி, அரசியல் பிரவேசத்திற்கான எந்த காரணமும் இல்லை,'' என, நடிகர் ரஜினி தெரிவித்தார்.

மலேஷிய பிரதமர் நஜிப் ரஜாக், சென்னையில் நேற்று, ரஜினியை, அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின், ரஜினி கூறியதாவது:கபாலிபடத்திற்கு, மலேஷிய அரசு தந்த ஒத்துழைப்பை வார்த்தைகளால் கூற முடி யாது. அப்போதே, மலேஷிய பிரதமரை நேரில் சந்தித்து,நன்றி தெரிவிக்க திட்டமிட்டோம். ஆனால், அவரது, 'பிசி'யான வேலையால் நேரம் கிடைக்கவில்லை.இப்போது,அவரே என்னை வந்து ...

தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடி பினாமி சொத்துகள் சிக்கின!

Posted: 31 Mar 2017 10:46 AM PDT

தமிழகத்தில் சில மாதங்களில், பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும், பினாமி சொத்து தடுப்பு சட்டத் திருத்தம், 2016 நவம்பரில், அமலுக்கு வந்தது. அதன்படி, பினாமி பெயரில் ஒருவரின் சொத்துகள் இருந்தாலோ, ஒருவரின் வங்கி கணக்கில், மற்றொருவரின் பணத்தை பதுக்கி னாலோ, அது குற்றமாகும். அச்சட்டம் அமலான பின், தமிழக பத்திரப்பதிவு அலுவலகங் களிடம், தகவல்திரட்டப்பட்டது.தமிழகத்தில் வருமான வரி செலுத்தும், 27 ...

உ.பி., முதல்வர் நடவடிக்கையால் 'மிஸ்டர் கிளீன்' ஆன அலுவலர்கள்

Posted: 31 Mar 2017 10:53 AM PDT

லக்னோ:உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் அதிரடி உத்தரவுகளால், அரசு அலுவல கங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிகாரிகள்,ஊழியர்கள்,அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதோடு, எந்த கோப்பு களும் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தேக்கம் அடையாத வகையில் பணியாற்ற துவங்கியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப் பேற்று, 15 நாட்கள் கூட ஆகாத நிலையில், அரசு அலுவலகங்களில் முன் எப்போதும் இல் லாத வகையிலான மாற்றங்கள் தென்படுவ தாக, பொதுமக்கள் கருத்து ...

ராமமோகன ராவுக்கு பணியிடம் ஒதுக்கீடு

Posted: 31 Mar 2017 10:56 AM PDT

வருமான வரி சோதனை காரணமாக, தலைமை செயலர் பதவியில் இருந்து நீக்கப் பட்ட ராமமோகன ராவ், மூன்று மாதங்களுக்கு பின், தமிழக தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தும், புதிய தலைமைச் செயலராக, ராமமோகன ராவ் நியமிக்கப்பட்டார்.அவரது வீட்டில், 2016 டிசம்பரில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, அவர் தலைமை செயலர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.புதிய தலைமைச் செயலராக, கிரிஜா ...

கொளுத்துது வெயில் பிரசாரம் செய்ய தீபா மறுப்பு

Posted: 31 Mar 2017 11:07 AM PDT

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை சார்பில், ஜெ., அண்ணன் மகள், தீபா போட்டியிடுகிறார்.

நேற்று முன்தினம் காலை, 7:00 மணியளவில், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பால சந்திப்பில் இருந்து, தீபா பிரசாரம் துவங்குவார் என, கூறப்பட்டது. ஆனால், இரண்டு மணி நேரம் தொண்டர்களை காக்க வைத்து, 9:00 மணியளவில் வந்தார்.அங்கிருந்து, திறந்தவெளி வாகனத்தில் பிரசாரத்தை துவங்கிய தீபா, வெயில் தாங்க முடியாமல், சில மணி நேரத்தில், பின்னால் வந்த, 'ஏசி' காரில் அமர்ந்தபடி பிரசாரத்தை தொடர்ந்தார்.இந் நிலை யில், நேற்று காலை காசிமேடு பகுதியில், தீபா ...

துவங்கியது புதிய நிதியாண்டு: சாமானியன் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

Posted: 31 Mar 2017 12:26 PM PDT

சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு காலக்கெடு நிறைவு , பட்ஜெட்டில் வருமான வரி விகிதம், வங்கி வைப்புத்தொகையில் மாற்றம் மற்றும் பல்வேறு கட்டணங்கள், வரி விகிதங்களில் மாற்றத்துடன் புதிய நிதியாண்டு துவங்கியது.

அதன் விவரம் வருமாறு:
*கணக்கில் காட்டாத வருமானத்திற்கு இன்று முதல் வருமான வரி 77.2 சதவீதம் வரை வசூலிக்கப்படும்.* ஆண்டு வருமானம் ரூ. 2..5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் இருந்தால் வருமான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.*இன்று முதல் வாகன காப்பீட்டு பிரீமியம் தொகை 41 சதவீதம் உயர்கிறது.* பி.பி.எப். ...

ஹாஸ்டலில் முடங்கிய எம்.எல்.ஏ.,க்கள்; ஆர்.கே.நகரில் மக்கள் எதிர்ப்பே காரணம்

Posted: 31 Mar 2017 02:26 PM PDT

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றுவதற்காக, தமிழகத்தின் அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.,க்களையும், சென்னைக்கு வரவழைத்துள்ளது, அ.தி.மு.க., அம்மா கட்சி. அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் சென்னைக்கு வந்து, எம்.எல்.ஏ., ஹாஸ்டலில் தங்கி இருக்கின்றனர். அவர்கள் காலை 12:00 மணிக்குப் பின்னும், தேர்தல் பணியாற்றுவதற்காக, களத்துக்குச் செல்ல மறுத்து, ஹாஸ்டலிலேயே தங்கி உள்ளனர்.
இது குறித்து, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது, இங்கு வந்து பணியாற்றினோம். அதே போல, இம்முறையும், தினகரனுக்காக ...

விமான டிக்கெட் கிடைக்காமல் அல்லாடும் சிவசேனா எம்.பி.,

Posted: 31 Mar 2017 03:15 PM PDT

மும்பை: 'ஏர் இந்தியா' நிறுவனத்தால், விமான பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட சிவசேனா எம்.பி., ரவீந்திர கெய்க்வாட், வெவ்வேறு வழிகளில், விமான டிக்கெட் பெற முயன்று வரும் தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர் மீது தாக்குதல்:
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, சிவசேனா எம்.பி.,யான ரவீந்திர கெய்க்வாட், சமீபத்தில், ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார்; இருக்கையை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக, விமான நிறுவன ஊழியரை, ரவீந்திர கெய்க்வாட் செருப்பால் அடித்தார். இதையடுத்து, ரவீந்திர கெய்க்வாட் உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய தடை ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™