Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அதிரடி! 'அவுட் சோர்சிங்' முறைக்கு அமெரிக்காவில் 'செக்':உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டம்

Posted: 03 Mar 2017 08:22 AM PST

வாஷிங்டன்:'அவுட் சோர்சிங்' முறையில், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை உருவாக் கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு, அரசின் சிறப்பு ஊக்கத்தொகை, கடன் சலுகைகளை நிறுத்தும் சட்ட மசோதா, அந்நாட்டு பார்லிமென் டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், பதவியேற்பு விழாவின் போது, 'அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்' என, உறுதியளித்தார். அந்த வகையில், சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், சேவைத்துறையை சேர்ந்த, 'கால் சென்டர்'களில், அமெரிக்க ...

சசிகலா சார்பில் தினகரன் அளித்த பதில்... செல்லாது!:'நோட்டீஸ்' அனுப்பியது தேர்தல் ஆணையம்

Posted: 03 Mar 2017 08:56 AM PST

'பொதுச்செயலர் நியமனம் தொடர்பாக, சசிகலா வுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, தினகரன் கையெழுத்திட்டு தரப்பட்ட விளக்கம் செல்லாது. அவர், கட்சியில் எந்த அதிகாரப் பூர்வ பதவியிலும் இல்லை. அதனால், உரிய முறை யில் மீண்டும் விளக்கம் அளிக்க வேண்டும்' என சசிகலாவுக்கு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

அ.தி.மு.க.,வில், சசிகலா மற்றும் பன்னீர் செல்வம் அணியினர், தினமும் பல விஷயங் களில் போட்டி போட்டு செயல்பட்டாலும், அவை அனைத்தும், வெளியுலகத்திற்காக மட்டுமே. உண்மையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது என்பதே, இரு ...

பேரவை நிர்வாகிகள் நியமன விவகாரம்: கணவருடன் தீபா குடுமிப்பிடி சண்டை

Posted: 03 Mar 2017 09:03 AM PST

ஜெ., அண்ணன் மகள் தீபா, புதிதாக துவக்கி யுள்ள பேரவைக்கு, நிர்வாகிகள் நியமிக்கும் விவகாரத்தில், அவருக்கும், அவரது கணவருக் கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள் ளது. பதவி தொடர்பாக, குடுமிப்பிடி சண்டை நடக்கிறது.

'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை, தீபா துவக்கி உள்ளார். இதன் தலை வர் மற்றும் செயலராக, தன்னுடன் இருக்கும் தம்பதியரான ராஜா - சரண்யா ஆகியோரை நியமித்துள்ளார். இதற்கு, பேரவை ஆதரவாளர் கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில், சென்னையில், நேற்று முன் தினம் இரவு, வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை, கனகதாரா தெருவில் உள்ள, ...

போராட்டம் வேறு விதமாக திரும்பும்! பன்னீர்செல்வம் திடீர் எச்சரிக்கை

Posted: 03 Mar 2017 09:15 AM PST

''ஜெ., மரணத்தில் நீதி கிடைக்கும் வரை, தர்ம யுத்தம் தொடரும். 8ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெறுவதற்குள், நல்ல பதில் வராவிட்டால், போராட்டம் வேறு விதமாக திரும்பும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
போராட்டம்
அதில், பன்னீர்செல்வம் பேசியதாவது:
ஜெ., மரணத்தில், மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை நீக்கும் பொறுப்பு, நமக்கு உள்ளது. அதற்காக, நாம் துவக்கிய தர்ம யுத்தம், 8ல், உண்ணாவிரதப் ...

ரூ.70,000 கோடி கறுப்பு பணம் 3 ஆண்டுகளில் மீட்பு

Posted: 03 Mar 2017 09:17 AM PST

கட்டாக்:''மூன்று ஆண்டுகளில், 70 ஆயிரம் கோடி ரூபாய், கறுப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது,'' என, எஸ்.ஐ.டி., துணைத் தலைவர், அரிஜித் பசாயத் தெரிவித்தார்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க, எஸ்.ஐ.டி., என்கிற சிறப்பு புலனாய்வு குழுவை, சுப்ரீம் கோர்ட், 2014ம் ஆண்டு அமைத்தது.
அரசுக்கு பரிந்துரை:
ஒடிசாவில், நவீன் பட்நாயக் தலைமையி லான, பிஜுஜனதாதளம் கட்சியின், ஆட்சி நடக்கிறது. கட்டாக் நகரில், பல மாநிலங் களில், பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான விவகாரங்களை விசாரித்து வரும் புலனாய்வு ...

'காங்., சமாஜ்வாதி, பகுஜனுக்கு 11ம் தேதி 'ஷாக்' காத்திருக்கு'

Posted: 03 Mar 2017 09:19 AM PST

மிர்ஸாபூர்:''காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு, 11ம் தேதி மின்சார, 'ஷாக்' காத்திருக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

உத்தர பிரதேசத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், சட்டசபை தேர்தல் ஏழு கட்டமாக நடக்கிறது. இன்று, ஆறாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், மிர்ஸாபூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:உத்தர பிரதேசத்தில் கடும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இது பற்றி நான் விமர்சித்தால், 'மின் ஒயரை தொட்டு பாருங்கள்; மின்சாரம் இருக்கிறதா, இல்லையா என ...

மக்களை காப்பதில் முன்னணியில் நிற்கும் படைகள்!

Posted: 03 Mar 2017 09:23 AM PST

சென்னை:''உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பகை, இயற்கை சீற்றம் ஆகியவற்றில் இருந்து, மக்களை பாதுகாப்பதில் ஆயுதம் ஏந்திய, நம் பாதுகாப்புப் படைகள் முன்னணியில் நிற்கின் றன,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

சென்னை, தாம்பரம் விமானப்படை தளத்தில், இரண்டு விமானப்படை பிரிவுகளுக்கு, விருது மற்றும் கொடி வழங்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:தேச பக்தி, தொழில் ஈடுபாடு,பண்பாடு,தைரியம் ஆகியவற் றுக்காக, இந்த இரண்டு பிரிவுகளும், தேசிய அளவிலான கவுரவத்தை யும், பாராட்டையும் பெறுகின்றன. நம் நாடு இன்று அனைத்து துறைகளிலும், முன் ...

பினாமியாக செயல்பட்டால் சட்டம் பாயும்!

Posted: 03 Mar 2017 09:26 AM PST

புதுடில்லி:பினாமி பெயரில் சொத்துக்கள் சேர்த்தால், பினாமி தடை சட்டத்தின் கீழ் மட்டுமல் லாமல், வருமான வரி சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், பினாமி சட்டம் கொண்டு வரப்பட்டு, 2016, நவம்பர் முதல் அமலுக்கு வந்துள்ளது.
அபராதம்:
பினாமி பெயரில் சொத்து சேர்த்தால், இந்த சட்டத்தின் கீழ், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும். மேலும், சொத்துக்களை பறிமுதல் செய்ய வும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த ...

ஜி.எஸ்.டி.,க்கு மாறும் நடவடிக்கைகளை வேகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

Posted: 03 Mar 2017 09:29 AM PST

புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைக்கு மாறும் நடவடிக் கைகளை வேகப்படுத்தும்படி, மத்திய சுங்கம் மற்றும் சேவை வரி அதிகாரிகளுக்கு வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.

வரி விதிப்பு முறை
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை, ஜூலை, 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., வருவதால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு மத்திய - மாநில வரிகள் கைவிடப்படுகின்றன. இதற்காக, ஏற்கனவே உள்ள வரி வதிப்பு முறையின் கீழ் பதிவு செய்துள்ளவர்களை, ...

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முயற்சி :சுரேஷ்பிரபு

Posted: 03 Mar 2017 11:20 AM PST

சென்னை:தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முயற்சி செய்வதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசுடன் சேர்ந்து திட்டங்களை செயல்படுத்த முதல்வரிடம் அறிக்கை தரப்பட்டுள்ளது. தமிழக ரயில்நிலையங்களை புதுப்பிக்கவும் ஓருங்கிணைக்கவும் திட்டம் உள்ளதாக அமைச்சர் சுரேஷ்பிரபு ...

மீண்டும் துவங்குகிறது சிந்து நதி ஆணைய கூட்டம்: இந்தியா நிலை என்ன?

Posted: 03 Mar 2017 12:41 PM PST

புதுடில்லி: இந்தியா -பாக்.இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தம்தொடர்பாக இம்மாதம் இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோடி ஆவேசம்
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாமில், பாக்., பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலில், 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் கடும் கோபடைந்த மத்திய அரசு 'பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க திட்டமிட்டது. ரத்தமும், தண்ணீரும், ஒரே நேரத்தில் பாய முடியாது என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ...

சமூக வலைதளத்தில் கசிந்த கேரள அரசு பட்ஜெட்

Posted: 03 Mar 2017 01:46 PM PST

திருவனந்தபுரம்; கேரள சட்டசபையில், பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்யும் முன்பே, அது பற்றிய விபரங்கள் கசிந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்ஜெட் தாக்கல்:
கேரளாவில், பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. 2017 - 18ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை, சட்டசபையில், நிதியமைச்சர் தாமஸ் ஐசக், நேற்று(மார்ச் 3) தாக்கல் செய்ய இருந்தார். கேரள சட்டசபை, நேற்று காலை கூடிய போது, பட்ஜெட் உரையை, நிதியமைச்சர் ஐசக் படிக்க துவங்கினார்.
கசிந்த பட்ஜெட்:
அப்போது, காங்கிரசைச் ...

சசிகலாவுக்கு எதிராக போலீஸ் கான்ஸ்டபிள்; முதல்வரிடம் தினகரன் கொந்தளிப்பும்; நடவடிக்கையும்

Posted: 03 Mar 2017 02:29 PM PST

ஒரு சாதாரண கான்ஸ்டபிள், அவர், தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக கருத்துச் சொல்லி, போராடிக் கொண்டிருக்கிறார். லேட்டஸ்ட்டாக, பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருவது போல, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது; அதை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். இதனால், சசிகலாவுக்கு பொதுமக்கள் மத்தியில் எவ்வளவு கெட்டப் பெயர் தெரியுமா? இவரைக் கூட ஒன்றும் செய்ய முடியாமல், நாம் என்ன ஆட்சி-அதிகாரத்தில் இருக்கிறோம் என, அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலர், தினகரன், தேனி மாவட்டம், ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த கான்ஸ்டபிள் வேல்முருகனுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™