Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள்

Posted: 03 Mar 2017 09:48 AM PST

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள். இரவு நேர இனிமைக்கு.........
அம்புக்கு குறி மூலம் அடுத்த பாடலுக்கு செல்லவும்.

வேலன்:-பைல்களை மற்றவர்கள் பார்வையிலிருந்து பாதுகாக்க

Posted: 03 Mar 2017 07:58 AM PST

கணிணியில் சில முக்கியமான கோப்புகளை வைத்திருப்போம் அதனை மற்றவர்கள் பார்வையிடாமலும் திருத்தங்கள் செய்யாமலும இருக்க விரும்பினால் இந்த சாப்ட்வேரினை நாம்பயன்படுத்தலாம். 3 எம்பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமது கணிணியில் உள்ள போல்டரையோ பைலினையோ தேர்வு செய்யவும். பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவைப்படும்வசதிகளை இதில் உள்ள ரேடியோ பட்டன் மூலம்தேர்வு செய்யவும். ...

பெருமையுடைத்து இவ்வுலகம்

Posted: 03 Mar 2017 06:51 AM PST

எப்போதும்போல்தான் இன்றும் எப்படி இந்த திடீர் வெளிச்சம் பௌர்ணமியால் வந்ததா? மின்விளக்கு தந்ததா? அது பகலாயிற்றே! – பகல் எனில் வெளிச்சம்தான் – பகலில் எப்படி இந்த – நிழலில் இருந்தவரை தெரியவில்லை அதன் பெருமை – கத்திரி வெயியில் நிற்க முடியாமல் தவிக்கும்போதுதான் தெரிகிறது நேற்றிருந்த மரம் இன்றிலை எனும் அருமை. – ————————— -பிச்சினிக்காடு இளங்கோ அந்த நான் இல்லை நான் – கவிதை தொகுப்பிலிருந்து.

அழுக்குகளின் திரட்சி

Posted: 03 Mar 2017 06:21 AM PST

அழுக்குகளின் திரட்சி அவள் அவளுக்கு என்று ஓர் உலகம் உறவுகள் எல்லாம் கற்னையே! முள்ளாய் குத்திய வலி கிழிந்த ஆடைகளாய் கிழித்துதொங்குகிறது ! காயம்பட்ட அவள் மனம் போலவே அழுக்காகி கொள்கிறது அவள் உடை! பசி மறந்து புசிக்கும் அவள் வயிறு தன்னை இழந்து தகிக்கும் நெருப்பின் கனல்! எங்கோ எதற்கோ அல்ல அன்பின் நீண்ட பயணம் நூலறுந்த பட்டமாய் பாதியில் அறுந்து போக பறந்து போனாள் கனவுலகில் காற்றில் பறந்தாள் வானத்தையும் பூமியையும் வசப்படுத்தினாள் உருக்குலைந்து போன வாழ்க்கையின் பரிசு மனப்பிறழ்ச்சிதானா தனக்கான ...

அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு!

Posted: 03 Mar 2017 06:11 AM PST

இராவணனைப் பார்த்து மாரீசனானவன், "இராவணா நீயோ மாயவித்தைகளில் வல்லவன். நீயே ஏன் இராமனைப்போல் உருமாறி சீதையை நம்ப வைத்து, அவளை அழைத்துக்கொண்டு வரக்கூடாது?" எனக் கேட்க, அதற்கு இராவணன் சொன்ன பதில் என்ன என்று நான் கேட்க, ஹெட்போன் பாட்டி எழுந்து சொன்ன பதிலால் நான் மலைத்துப் போனேன். அந்தப் பாட்டி என்ன சொன்னது தெரியுமா? மாரீசனைப் பார்த்து இராவணன், "அட மக்கு மாமா… நான் இராமனாக உருமாறிவிட்டால் என்னால் எப்படி அடுத்தவன் மனைவி மீது ஆசை கொள்ள முடியும்? உருவத்திற்கேற்ற உள்ளமும், உணர்வும் வந்துவிடாதா ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 03 Mar 2017 05:57 AM PST


-

-
-

மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்!

Posted: 03 Mar 2017 05:28 AM PST

- ஆன்மிக வழிகாட்டியான மிர்ரா அல்ஃபாஸா. ஆன்மிக, அறப்பணிகளின் காரணமாக அவரது பக்தர்களால் 'அன்னை' என்று போற்றப்பட்டவர். எளிய மக்களிடம் இவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் அறநெறி, ஒழுக்கம், மன அமைதி, சுயமுன்னேற்றம் என எண்ணற்ற தத்துவங்களை வலியுறுத்துபவை. சிறப்புமிக்க அவரது தத்துவ சிந்தனைகள், நம்மை செம்மையாக்கி, நல்வழிப்படுத்தக் கூடியது. அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொன்மொழிகள் இதோ உங்கள் பார்வைக்காக… – ——————

மேரி க்யூரி தன் நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன செய்வார் தெரியுமா?

Posted: 03 Mar 2017 05:19 AM PST

- ஒரு துறையில் பெண்கள் சாதிப்பது என்பது நாகரிகம் வளார்ந்த இன்றைக்கும் எளிதாக முடிவதில்லை. பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றை தகர்த்துவிட்டு சாதித்தப் பெண்கள் அபூர்வம்தான். அதிலும் அறிவியல் துறையில் வென்று காட்டியவர்கள் மிகச் சொற்பம். அதில் தன் தனித்துவத்தால் இரண்டு நோபல் பரிசுகளை வென்றவர்தான் மேரி க்யூரி. போலந்து நாட்டில் பிறந்த மேரி க்யூரி சிறுவயதாக இருக்கும் போதே பெண்களை அடக்கி வைக்கும் பொதுப் புத்திக்கு எதிராக யோசிப்பவராக இருந்தார். மேரி க்யூரிக்கும் அவரது அக்காவுக்கும் ...

கேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு !

Posted: 03 Mar 2017 05:05 AM PST

-- பிறந்த குழந்தை அன்னையின் அன்புக்காக யாசிப்பது இல்லை அது கேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு ! வளரும் குழந்தை தன் தந்தையிடமும் எதுவும் யாசிப்பது இல்லை ! எதுவும் யோசிக்காமல் ஒரு தந்தை தன் குழந்தைக்கு தருவது பாசமும் நேசமும் …! ஒரு நல்ல ஆசானும் தந்தையே அந்த குழந்தைக்கு ! யாசிக்கத் தேவை இன்றி வளர்ந்து விட்ட அந்த " குழந்தை "யிடம் இன்று யாசிப்பது யார் ? – வேறு யாருமில்லை… அந்த வளர்ந்த "குழந்தையின்" பாசமிகு தந்தை… இப்போ அந்த முதியவர் தன் " குழந்தையின்" பாசத்தையும் , நேசத்தையும் ...

ஆன்மீக புத்தகங்கள் தரவிறக்கு கொள்ளுங்கள் !

Posted: 03 Mar 2017 04:45 AM PST

https://drive.google.com/file/d/0B20KmkM-I85gQlZjV0tjeWNZc0k/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gRkZOV1BkbUV2OE0/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gM0VwVmpFMEUtS1k/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gUVFPUkdnZ3lLTzQ/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gQWVwd1MxeElDYUk/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gNHBzNFNoY3Faams/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gdkljbG1rU1F2TXc/view?usp=ஷரிங் https://drive.google.com/open?id=0B20KmkM-I85gemlGV0Q3eWN0UHM

பாட்டி எல்லாத்தையும் ஊதிப் பெரிசாக்கிடுவாங்க

Posted: 03 Mar 2017 04:43 AM PST

தலைவருக்கு மூளைக்காய்ச்சல் என்றால் நம்பவே முடியவில்லை! - எதை? - மூளை இருக்கிறதைத்தான்...!! - ஹரிஹரன் ------------------------------------------------- - பாட்டி, இந்த பலூனை ஊதிக்கொடு...! - ஏண்டா என்கிட்டே கொடுக்கிறே? - அம்மாதான் சொன்னாங்க...பாட்டி எல்லாத்தையும் ஊதிப் பெரிசாக்கிடுவாங்கன்னு..!! - எஸ். வேலம்மாள் - -------------------------------------- - அந்த தம்பதி நடுராத்திரியிலே கூட ஃபேஸ்புக்ல ஆக்டிவா இருக்காங்களே...? - அதுவா...கணவனுக்கு தூக்கத்திலே, ஸ்டேட்டஸ் போடுற ...

தண்டையார்பேட்டையில் புதிய ரயில் முனையம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பேட்டி!

Posted: 03 Mar 2017 04:13 AM PST

சென்னை: தண்டையார்பேட்டையில் விரைவில் புதிய ரயில் முனையம் உருவாக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி சென்னையில் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் தெரிவித்ததாவது: சென்னை தண்டையார்பேட்டையில் விரைவில் புதிய ரயில் முனையம் ஒன்று உருவாக்கப்படும். போதிய இடவசதி இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முன்பே திட்டமிட்டபடி ராயபுரத்தில் ரயில் முனையம் அமைப்பது சாத்தியம் இல்லை. தண்டையார்பேட்டையில் ...

11 வயதிலேயே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வியப்பில் ஆழ்த்திய அகஸ்தியா ஜெய்ஸ்வால்

Posted: 03 Mar 2017 04:03 AM PST

- ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற சிறுவன் தனது 11-வது வயதிலேயே 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் 12-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற 11 வயது சிறுவன் இத்தேர்வில் பங்கேற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதுகுறித்து சிறுவன் அகஸ்தியா ஜெய்ஸ்வால் கூறுகையில், தனது 15 வயதில், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலை ...

தண்ணீர் பற்றாக்குறையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

Posted: 03 Mar 2017 03:48 AM PST

தூத்துக்குடி:
தண்ணீர் பற்றாக்குறையால் தூத்துக்குடி
அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி
நிறுத்தப்பட்டுள்ளது.

4 அலகுகளும் நிறுத்தப்பட்டத்தால் 840 மெகா வாட்
மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
-
-------------

தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

Posted: 03 Mar 2017 03:45 AM PST

மதுரை: தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், கரூர், குளித்தலை, தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வறட்சி மற்றும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்நிலையில் தென் தமிழகத்தின் ...

தங்கம் விலை நிலவரம்

Posted: 03 Mar 2017 03:42 AM PST

- சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,823-ஆகவும், சவரன் ரூ.22,488-ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.45.70-க்கும், ஒரு கிலோ ரூ.44,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. - ------------------------------------------ -தினகரன்

புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர்.

Posted: 03 Mar 2017 02:44 AM PST

மூன்று வருடங்களுக்கு மேல் நீங்கள் உயிர்வாழமுடியாது! மூளையும் சிந்தனையும் தவிர உடலின் எந்தப் புலன்களும் செயல்படாது! என அடுத்தடுத்த இடிகள் அவரது தலையில் விழுந்தன. அரிய வகை நரம்புநோய் அவரைத் தாக்கியது. துன்பத்தின் எல்லையில் மருத்துவனையில் இருந்தவருக்கு அவர் சேர்க்கப்பட்ட எதிர் அறையில் ஒரு சிறுவன் உடல்நலக்குறைவால் சேர்க்கப்படுகிறான். சில நாட்களிலேயே அவன் இறந்துவிடுகிறான். இந்த நிகழ்வு அந்த மனிதருக்கு மனதில் பெரிய பெரிய கேள்விகளை எழுப்பியது. அவர் நினைத்தார்.. அவனை விட நான் நல்வாய்ப்புப் பெற்றவன்! ...

நூல்கள் தேவை

Posted: 03 Mar 2017 02:30 AM PST

ஐயா கீழ்கண்ட புத்தகங்கள் இருந்தால் பகிரவும்
ரச சிந்தாமணி
நவரச சிந்தாமணி
ரச ரத்தினாகரம்
ரச ஜீவராட்சாமிர்தம்
இந்த புத்தகங்கள் சித்தர்கள் வகையை சார்ந்தது

தாய்லாந்தில் காய்கறி திருவிழா

Posted: 03 Mar 2017 02:27 AM PST

தாய்லாந்தில் காய்கறி திருவிழாவை மக்கள் விநோதமான முறையில் கொண்டாடியுள்ளனர்.காய்கறி திருவிழாவில் சீன சமூகத்தினர் தங்கள் கன்னங்களிலும், தோல்களிலும் அலகுகள் குத்திக்கொண்டு நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். கன்னத்தில் கத்திகள், வாள்கள், குடைகள் போன்று பல விதமான தோற்றங்களில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். இவர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவதால் அவர்கள் நரகத்தில் இருந்து விடுபட்டு சொர்க்கத்திற்கு  செல்வார்கள் என்று அவர்களது நம்பிக்கை மற்றும் தீய எண்ணங்களில் இருந்து விடுபடவும் ...

சாமக்கோள் ஆருடம்.pdf

Posted: 03 Mar 2017 12:10 AM PST

புதுக்கவிதை

Posted: 02 Mar 2017 08:45 PM PST

நிலைமை ரொம்ப மோசமாக இல்லை..!! * நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது சமாளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அத்தனையும் ஆராயப்பட்டுள்ளது. எப்படியும் சமாளிக்கலாம் என்றுதான் மையக் குழு முடிவு செய்துள்ளது நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். விமர்சகர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள். நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது எப்படியும் சமாளித்தே தீர வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருக்கிறோம் என்பதை மட்டும் தைரியமாகச் சொல்லிக் கொள்கிறோம். சமாளித்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™