Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜி.எஸ்.டி., வரி: 10 முக்கிய அம்சங்கள்

Posted: 29 Mar 2017 02:05 AM PDT

புதுடில்லி: ஜூலை, 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள பொருட்கள் மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி., குறித்த விவாதத்தை, லோக்சபாவில், இன்று காலை (மார்ச் 29) மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி துவக்கி வைத்தார். ஜி.எஸ்.டி.,யின் நான்கு மசோதாக்கள் குறித்து, ஏழு மணி நேரத்திற்கு மேல் எம்.பி.,க்கள் விவாதம் செய்ய உள்ளனர்.அமைச்சரவை ஒப்புதல்இந்த சூழ்நிலையில், ஜி.எஸ்.டி., குறித்த, 10 அம்சங்கள் வருமாறு:1. மார்ச், 20ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. அதில், மத்திய ஜி.எஸ்.டி., மசோதா, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மசோதா, யூனியன் பிரதேசங்களுக்கான ...

ஜி.எஸ்.டி., மசோதாக்கள் மீதான விவாதத்தில்... காரசாரம்!:வரி சீரமைப்புக்கு அ.தி.மு.க., திரிணமுல் ஆதரவு

Posted: 29 Mar 2017 10:40 AM PDT

புதுடில்லி: நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை, ஜூலை, 1 முதல் அறிமுகம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, மத்திய, ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., யூனியன் பிரதேச, ஜி.எஸ்.டி., மற்றும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்யும் சட்டம் ஆகியவற்றுக்கான, நான்கு மசோதாக் கள், லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களை விவாதத்துக்கு அறி முகம் செய்து வைத்தார், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அதைத் தொடர்ந்து, இது குறித்து, பல்வேறு கட்சியின், எம்.பி.,க்கள் காரசார வாதத்தில் ஈடுபட்டனர். ...

ஜனாதிபதி தேர்தல்: சிவசேனா மிரட்டல்

Posted: 29 Mar 2017 10:45 AM PDT

மும்பை: ஜனாதிபதி தேர்தல், வரும், ஜூலையில் நடக்க உள்ள நிலையில், மஹாராஷ்டிராவில், பா.ஜ., உடன் கூட்டணியில் உள்ள, சிவசேனா கட்சியின் ஓட்டுகள் மிகவும் முக்கியமாக உள்ளன.

தற்போதைய நிலையில், பா.ஜ.,வுக்கு, 20 முதல், 25 ஆயிரம் ஓட்டுகள் தேவை. தமிழகம், ஒடிசாவில் ஆதரவு எப்படி இருக்கும் என்பது, குழப்பமாகவே உள்ளது. அதே போல், பீஹார், டில்லியிலும், பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை.இந்நிலையில், சிவசேனா, எம்.பி., சஞ்சய் ராவத் கூறியுள்ளதாவது:இதற்கு முன், 2007 மற்றும் 2012ல், ஜனாதிபதி தேர்தலின் போது, மும்பையில் உள்ள, எங்கள் கட்சி தலைவர் வீட்டுக்கு வந்து, ஆலோசனை நடத்தி ஆதரவு கேட்டனர். ...

விவசாயிகள் பிரச்னையில் அக்கறை செலுத்துகிறோம்!

Posted: 29 Mar 2017 10:49 AM PDT

'தமிழகத்துக்கு நிவாரண நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறப்படுவது தவறு. விவசாயிகள் பிரச்னையாகட்டும், நெடுவாசல் பிரச்னையாகட்டும், தமிழகத்தின் மீது மத்திய அரசு உரிய அக்கறையை செலுத்தியே வருகிறது' என, பார்லிமென்டில், மத்திய அரசு தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

ராஜ்யசபாவில் நேற்று, விவசாயிகள், ஹைட்ரோ கார்பன், வறட்சி நிவாரண நிதி ஆகிய தமிழக பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது. தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது:விவசாயிகள் தற்கொலை விவசாயிகளின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை, 200 விவசாயிகள் தற்கொலை செய்து ...

'சூரிய நமஸ்காரத்திற்கும் நமாசுக்கும் வித்தியாசம் இல்லை'

Posted: 29 Mar 2017 10:51 AM PDT

லக்னோ: ''யோகா பயிற்சியின் ஒரு அம்சமான, சூரிய நமஸ்காரம், முஸ்லிம்கள் நமாஸ் செய்வதை போன்றது. ஆனால், மக்கள் மத்தி யில், மத ரீதியிலான பிளவை ஏற்படுத்த துடிக் கும் தீய சக்திகள், இந்த உண்மையை மறைத்து, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்,'' என, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். லக்னோ வில் மூன்று நாட்கள் நடக்கும், 'உ.பி., யோகா திருவிழா'வை துவக்கி வைத்து, ஆதித்தயாத் பேசியதாவது:யோகா பயிற்சியின் போது, சூரிய நமஸ்காரம் பயிற்றுவிக்கப்படு கிறது. பல்வேறு கோணங்களில் உடலை வளைத்து செய் யும் ...

நாட்டு மக்களின் 'ஆதார்' விபரங்களின் பாதுகாப்பு கேள்விக்குறி! கிரிக்கெட் வீரர் தோனி குறிப்புகள் கசிவால் பீதி

Posted: 29 Mar 2017 11:00 AM PDT

புதுடில்லி:பிரபல கிரிக்கெட் வீரர், மகேந்திர சிங் தோனியின் தனிப்பட்ட தகவல்கள், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கசிந்துள்ள தால், சர்ச்சை எழுந்துள்ளது. பிரபலமான ஒருவரின் ரகசிய தகவல்கள் அம்பலமானதால், சாமான்ய மக்களின், 'ஆதார்' விபரங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர், மகேந்திர சிங் தோனி, 35. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தன்னைப் பற்றி யும், தன் குடும்பத்தினர் பற்றிய தகவல்க ளையும், ராஞ்சியில் உள்ள ஆதார் அடையாள அட்டை சேவை வழங்கும் நிறுவனத்தில், சமீபத்தில் ...

ஆரத்தி எடுக்க 100 ரூபாய்; கோலம் போட 600 ரூபாய்

Posted: 29 Mar 2017 11:03 AM PDT

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அப்பகுதி பெண்கள் மிகவும், 'பிசி'யாக உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., பன்னீர் அணி சார்பில் மதுசூதனன்; சசி அணி சார்பில் தினகரன்; தி.மு.க., சார்பில் மருது கணேஷ்; பா.ஜ., சார்பில் கங்கை அமரன் என, மொத்தம், 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர் கள், தினமும் காலை, 7:00 மணியிலிருந்து, 10:00 மணி வரை, மாலை, 4:00 மணியில் இருந்து, இரவு, 10:00 மணி வரை, பிரசாரம் செய்கின்றனர்.அரசியல் கட்சி வேட்பாளர்கள், ஓட்டு சேகரிப்பின் போது, உடன் ஆட்களை அழைத்து செல்கின்றனர். இதன் காரணமாக, ...

மக்கள் விரும்பாத சசி குடும்பத்தை சுமக்காதீங்க! அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓ.பி.எஸ்., அழைப்பு

Posted: 29 Mar 2017 11:07 AM PDT

''ஜெ., எண்ணத்திற்கு மாறுபட்டு நடக்கும், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள், உண்மை உணர்ந்து, எங்கள் பக்கம் வர வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

அவரது பேட்டி:
கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத்திற்குள் சென்று விடக்கூடாது என, நாங்கள் வலியுறுத்துவதால், மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். இதனால், தினகரன், ஸ்டாலின் ஆகியோருக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது, கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத்தின் கையில் சென்று விடக்கூடாது என்பது தான் பிரச்னை.
ஜெ., எண்ணம்
அந்த குடும்பத்தின் ...

தில்லுமுல்லு செய்து வெற்றி பெற ஆளுங்கட்சி முயற்சி: ஸ்டாலின்

Posted: 29 Mar 2017 11:11 AM PDT

சென்னை:''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தில்லுமுல்லு செய்து வெற்றி பெற, ஆளுங் கட்சி முயற்சித்து வருகிறது,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

திருச்சி செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலரையும் மாற்ற வேண்டும் என, தேர்தல் கமிஷனில், தி.மு.க., புகார் அளித்தது. அதன்படி, இருவரும் மாற்றப்பட்டனர்.தற்போது, அங்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், போலீசார் துணையு டன், முறைகேடில் ஈடுபடுவ தாக தகவல்கள்
வந்துள்ளன. அது ...

'சஹாயக்' நடைமுறை ரத்து: கிரண் ரிஜிஜு

Posted: 29 Mar 2017 11:54 AM PDT

புதுடில்லி : ''துணை ராணுவப் படையில் இனி, 'சஹாயக்' நடைமுறை பின்பற்றப்படாது,'' என, மத்திய உள்துறை இணையமைச்சர், கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு:
இதுகுறித்து, ராஜ்யசாபாவில் அமைச்சர் ரிஜிஜு பேசியதாவது: துணை ராணுவப் படை அதிகாரிகளுடன் பல்வேறு பணிகளில் இணைந்து பணியாற்றுவதற்காக நியமிக்கப்படும், 'சஹாயக்' எனப்படும் உதவியாளர்கள், அதிகாரிகளின் வேலைக்காரர்கள் போல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
ரத்து:
எனவே, துணை ராணுவப் படையான, சி.ஆர்.பி.எப்., மற்றும் ...

10 ரூபாய் நாணய விவகாரம் ரிசர்வ் வங்கி அதிகாரி எச்சரிக்கை

Posted: 29 Mar 2017 12:58 PM PDT

கோவை : ''தமிழகத்தில், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, சென்னை ரிசர்வ் வங்கி, உதவி பொது மேலாளர் சரவணன் எச்சரித்தார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில், தேசிய மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில், 'டிஜிட்டல், ஆன்லைன் மூலம் பணமில்லா பரிவர்த்தனை' தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில், சென்னை ரிசர்வ் வங்கி, உதவி பொது மேலாளர் சரவணன் பேசியதாவது:
ஏப்., 1ல் இருந்து பணமில்லா பரிவர்த்தனையை மக்களிடம் அதிகப்படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய அரசு ...

தினகரனுக்கு ஆதரவாக நடிகை எமி ஜாக்சன் பிரசாரமா?

Posted: 29 Mar 2017 02:10 PM PDT

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு ஆதரவாக, நடிகை எமி ஜாக்சன் பிரசாரம் செய்ய உள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிடுகிறார். அவருக்கு, தொகுதியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதையடுத்து, தினகரன் ஆதரவாளர்கள், ஓட்டுக்கு பணம் கொடுப்பது, பரிசு பொருட்கள் தருவது என, பல வழிகளில், வாக்காளர்களை கவர நினைக்கின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தினகரனுக்கு ஆதரவாக, சினிமா நட்சத்திரத்தை களமிறக்க முடிவு செய்துள்ளனர். இங்கிலாந்தில் பிறந்து, லண்டனில் ...

‛தலாக்' கலச்சாரத்தை ஒழிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம்

Posted: 29 Mar 2017 03:11 PM PDT

புதுடில்லி: ‛தலாக்' கூறி கணவரால் வீட்டை விட்டு விரட்டி விடப்பட்ட முஸ்லிம் பெண் ‛தலாக்' கலாச்சாரத்தை ஒழிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர் சகுப்தா ஷா, இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மீண்டும் கர்பமாகியுள்ளார். இந்த குழந்தையும் பெண் குழந்தையாக இருக்கூடும் என கூறி இவரது கணவர் சகுப்தாஷாவின் கருவை கலைக்க கூறியிருக்கிறார். அதற்கு சகுப்தாஷா மறுத்ததால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சகுப்தாஷாவின் கணவர் அவரிடம் 3 முறை ‛தலாக்' கூறி வீட்டை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™