Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Posted: 29 Mar 2017 11:40 AM PDT

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !



தேநீர்

Posted: 29 Mar 2017 10:04 AM PDT

என் கேலரியில் ரகசியமாய்...

Posted: 29 Mar 2017 10:01 AM PDT

'மதுவை விட மனித உயிர் பெரியது': சுப்ரீம் கோர்ட் கருத்து

Posted: 29 Mar 2017 09:36 AM PDT

புதுடில்லி: மதுவை விட மனிதன் உயிர் பெரியது எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், மாநில அரசின் வருமானம் பாதிக்கப்படும் என்பதற்காக பொது மக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது. உத்தரவு: சாலை விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி செயல்படும் மதுக்கடைகளை, வரும், 31க்குள் மூட, 2016 டிசம்பரில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதே போல், நெடுஞ்சாலைகளிலிருந்து, 500 மீட்டருக்குள் மதுக்கடைகள் இயங்கக் கூடாது என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. ...

உகாதி நாள் வாழ்த்துகள் !

Posted: 29 Mar 2017 06:19 AM PDT

இங்குள்ள அனைத்து உறவுகளுக்கும் ' உகாதி நாள் வாழ்த்துகள்' ! அன்புடன், கிருஷ்ணாம்மா

நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை

Posted: 29 Mar 2017 05:58 AM PDT

பரபரப்பான மும்பை வாழ்க்கையைப் பற்றிய
கட்டுரை ஒன்றில் நகைச்சுவை:
-

-
மராத்தான் ஓட்டத்தில் இருப்பவரைப் பார்த்து
தன்னைப்போலவே, அவரும் ரயிலைப் பிடிக்க
ஓடுவதாக நினைப்பவரின் கேள்வி...!!
-

ஒரு குட்டிக் கதை...!!

Posted: 29 Mar 2017 05:55 AM PDT

ஒரு குட்டிக் கதை...!! கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். "உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!" என்றான். கடவுள் உடனே, " அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்" என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த ...

பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை

Posted: 29 Mar 2017 05:22 AM PDT

வரலாற்றுப்பார்வை - 3 பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை அண்ணாமலை சுகுமாரன் -- சோழ வரலாற்றின் மிகப்பெரிய மூன்று மன்னர்களின் அரசவையில் தலமைப் புலவராக ,ராஜ குருவாக விளங்கிய ஒட்டக்கூத்தரின் குருபூஜை வருடாவருடம் அவரின் .பள்ளிப்படைக் கோயிலில் நடைபெறுவதாக நண்பர் ஒருவர் கூறினார் . எனக்கு ஒட்டக்கூத்தரைப்பற்றி இன்னமும் ஆழமாக அறிய ஆவல் பிறந்தது .இத்தனை செல்வாக்கோடும் அரசர்களின் ஆதரவும் இருந்தும் ஒட்டக்கூத்தருக்கு கம்பருக்கு கிடைத்த பிரசித்தம் ஏனோ கிடைக்கவில்லை . விக்கிரம ...

வெங்காயத்தை பயன்படுத்தி நோய்களுக்கு இயற்கையான முறையில் தீர்வு!

Posted: 29 Mar 2017 02:37 AM PDT

வெங்காயத்தை பயன்படுத்தி நோய்களுக்கு இயற்கையான முறையில் தீர்வு! தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிட செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும். காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் ...

கிரெடிட் கார்ட் பயனர்களே: நீங்கள் கவனிக்க வேண்டிய பத்து!!

Posted: 29 Mar 2017 01:35 AM PDT

கிரெடிட் கார்ட் பயனர்களே: நீங்கள் கவனிக்க வேண்டிய பத்து!! கிரெடிட் கார்டு இன்று அனைவருக்கும் மிகச் சுலபமாக கிடைக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. கிரெடிட் கார்டு வைத்திருப்பது கௌரவமாக மாறிவிட்டது. ஆனால், இதனை வாங்கிவிட்டு சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர். எனவே, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய சிலவற்றை இங்கு பார்ப்போம்.... # கிரெடிட் கார்டில் அளவுக்கு மீறி செலவு செய்ய கூடாது. அதாவது, சேமிப்பில் இல்லாத அளவு தொகையைத் தாண்டி ...

குடி மராமத்து என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மண் கொள்ளை

Posted: 29 Mar 2017 01:08 AM PDT

தமிழகத்தில் குடிமராமத்து என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் ஏரிகளிலும், குளங்களிலும் தூர்வாருகிறோம் என்று அரசின் பணத்திலேயே அள்ளப்படுகின்ற வளமிக்க மண் செங்கல் சூளைகாரர்களுக்கு ஆளும் கட்சியினரால் விற்க்கப்பட்டு வருகின்றது,ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இதை கண்டு மனம் வெதும்பியுள்ளனர்.குடிமராமத்து என்று சொல்லி கொண்டு நமது இயற்கை வளங்களை கொள்ளை போவதற்கு தமிழகஅரசு துனை போககூடாது என்பது மக்களின் வேண்டுகோள்..............

நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Posted: 29 Mar 2017 12:11 AM PDT

புதுடெல்லி, இந்தியாவில் விபத்துகளில் ஏராளமானோர் உயிர் இழப்பதற்கு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் தான் காரணம் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அத்தகைய மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றுக்கு 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் மார்ச் 31-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) மூடவேண்டும். ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து அத்தகைய மதுக்கடைகளின் அனுமதி தாமாகவே காலாவதியாகிவிடும் என்றும் ...

நமக்கெலாம் காப்பு!

Posted: 28 Mar 2017 11:34 PM PDT

- (ஆச்சார்யர் ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு- 2016-17) -------------------- திருப்பெரும்புதூரில் அவதரித்த திருமாலின் இளையவன். திருக்கச்சியுறை வரதராசனின் ஆணைவழி நடந்த அடியவன். திருவரங்கம் கோயில் புதுமை செய்த கைங்கர்ய வல்லுநன். திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய திண்மை மிக்க மன்னவன். 1 . சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன். தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து சாதனை செய்த புரட்சியாளன். திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த தெய்வம் ...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இனி நண்பர்கள் அல்ல: விராட் கோலி திட்டவட்டம்

Posted: 28 Mar 2017 10:45 PM PDT

- - 4-வது டெஸ்ட் போட்டியை வென்ற பிறகு ஸ்மித், விராட் கோலி. | படம்.| ஏ.பி. - -ஆஸ்திரேலிய வீர்ர்களுடனான நட்பு மீட்க முடியாத அளவுக்கு இந்தத் தொடரில் சேதம் அடைந்து விட்டது, இனி அவர்கள் நண்பர்கள் அல்ல என்று விராட் கோலி க டுமையாக தெரிவித்துள்ளார். முரளி விஜய் தரையில் பட்டு எடுத்த கேட்ச் குறித்து ஸ்மித் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது, ஜடேஜா பேட் செய்த போது அவரை அசிங்கமாக வசை பாடியது தொடர்பாக மட்டுமல்லாமல் இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியினர் நடந்து கொண்டது குறித்து விராட் ...

அமெரிக்காவில் லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை

Posted: 28 Mar 2017 10:43 PM PDT

லெக்கின்ஸ் அணிந்த இளம்பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனம் தடை விதித்தது. இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. கடந்த 26-ம் தேதி அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் இருந்து மினியாபொலிஸ் நகருக்கு செல்ல 2 இளம்பெண்கள் வந்தனர். இருவரும் லெக்கின்ஸ் அணிந்திருந்தனர். இதேபோல ஒரு சிறுமியும் லெக்கின்ஸ் அணிந்திருந்தார். 3 பேரும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்துக்காக காத்திருந்தனர். மூவரும் லெக்கின்ஸ் அணிந்திருந்ததால் அவர்கள் விமானத்தில் பயணம் ...

ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூரில்...

Posted: 28 Mar 2017 10:28 PM PDT

சிங்கப்பூரில் உள்ள சிங்டெல், ஸ்டார் ஹப், எம்1 ஆகிய
மொபைல் அலைவரிசை சேவை நிறுவனங்கள்
தங்களின் 2ஜி சேவையை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து
நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளன.

இதனை தொடர்ந்து அந்த ரக மொபைல் வைத்திருக்கும்
வாடிக்கையாளர்கள், 3ஜி, 4ஜி மொபைலுக்கு இனி மாற
வேண்டியிருக்கும்.
-
----------------------------------
தினபூமி

சுக வினை

Posted: 28 Mar 2017 10:22 PM PDT


-

-
சேவியர் அந்தோனி, சே.ச
கூடை நிறைய குட்டிக்கதைகள்- தொகுப்பிலிருந்து

"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் !

Posted: 28 Mar 2017 09:57 PM PDT

"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! இந்த ஆண்டு இந்த உற்சவம், பங்குனி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான 03/04/17 அன்று நடைபெற உள்ளது.நம்பெருமாள் 2/4/17 இரவு 9 மணிக்கு கோவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபம் சேர்கிறார்.அங்கிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் சென்று சேர்கிறார்.நம்பெருமாளுடன் சென்று வருவது என்பது ஒரு அற்புதமான அனுபவம். இந்த உற்சவத்தில் கலந்து கொண்டு இன்புற அனைவரையும் அழைக்கிறேன். இந்த வைபவத்தைப் பற்றி ...

இராமானுஜர் சொன்ன ஐந்து கடமைகள் !

Posted: 28 Mar 2017 09:46 PM PDT

உய்வதற்கு வழி உடையவர் திருவடி ! இராமானுஜர் சொன்ன ஐந்து கடமைகள் ! 1. ஸ்ரீபாஷ்யத்தைக் கற்று உணர்ந்து, அதை மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். 2.அவ்வாறு முடியாவிட்டால், நாலாயிரத் திவ்வியபிரபந்தத்தைக் கற்றுத் தெளிந்து, மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். 3.அவ்வாறு முடியாவிட்டால், திருமால் கோயில் கொண்டுள்ள திவ்வியதேசம் சென்று, கோயிலைச் சுத்தம் செய்தல், விளக்கேற்றுதல் போன்ற கைங்கர்யங்களைச் செய்ய வேண்டும். 4.அவ்வாறு முடியாவிட்டால், த்வய மந்திரத்தை அநுசந்திக்க வேண்டும். 5.அவ்வாறு ...

தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா? பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Posted: 28 Mar 2017 08:38 PM PDT

சென்னை, ஓட்டுப்போட 18 வயது தேர்தலில் போட்டியிட 25 வயது என்பது முரணாக உள்ளது என வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் மகாகவி பாரதியார் மக்கள் கட்சி சார்பில் சுயேச்சை வேட்பாளராக சவும்யா (23) மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் தேர்தல் விதி முறைப்படி 25 வயது பூர்த்தி ஆனவர்கள் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறி அவரது மனுவை நிராகரித்து விட்டனர். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஹேகர் தலைமையிலான ...

ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் - தொடர் நாயகன் விருது

Posted: 28 Mar 2017 08:33 PM PDT

- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 25 விக்கெட்டுகள் ... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீரர் ரவிந்திர ஜடேஜா ஒட்டு மொத்தமாக 25 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்துள்ளார். 118 இன்னிங்சில் 213.1 ஓவர்களை வீசியுள்ள அவர் 464 ரன்கள் கொடுத்து 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ...

மழை பெய்ய வேண்டி கிராம எல்லையில் அம்மிக்கல்–ஆட்டு உரலை வீசி பொதுமக்கள் வழிபாடு

Posted: 28 Mar 2017 08:28 PM PDT

- பெருந்துறை ஈரோடு மாவட்டத்தில் பருவமழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. வீட்டில் உள்ள பழைய அம்மிக்கல், ஆட்டு உரல் மற்றும் தானிய குத்துக்கல் போன்றவற்றை கிராமப்பகுதி எல்லையில் வீசிச்சென்று வழிபாடு செய்தால் மழைபெய்யும் என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் பெருந்துறை அருகே சீனாபுரம் கராண்டிபாளையம் எல்லைப்பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்தப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் ...

பத்திரிகை புகைப்பட கலைஞர் படுகொலை 5 பேருக்கு மரண தண்டனை வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பு

Posted: 28 Mar 2017 08:27 PM PDT

டாக்கா, வங்காளதேசத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றில் தலைமை புகைப்பட கலைஞராக நீண்ட காலம் பணியாற்றியவர், அப்தாப் அகமது (வயது 79). இவர் டாக்கா ராம்புரா வாப்தா சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த 2013–ம் ஆண்டு, டிசம்பர் 25–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். பணத்துக்காக இந்த படுகொலை நடந்தது. இந்த கொலையில், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, டாக்கா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவில், ஹூமாயுன் ...

வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட

Posted: 28 Mar 2017 07:55 PM PDT

 நீங்கள்   அரசின் எந்த ஒரு கல்வித்தகுதி பெற்றிருந்தாலும் அதனை பதிவு செய்வது அவசியமாகும். இது உங்கள் அரசின் வேலைவாய்ப்புக்கு உதவிகரமானதாக இருக்கும்.மாணவர்களின் அடிப்படை கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கல்விதகுதியை வைத்துள்ளார்கள். நீங்கள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் உங்கள் கல்விதகுதியை இதில் பதிவேற்றம் செய்யலாம். அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு கூடுதல் தகுதியையும் நீங்கள் பதிவேற்றிக்கோண்டே செல்லலாம். முதலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என பார்க்கலாம். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™