Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெ., மீது ஈர்ப்பு இருந்தது : சொல்கிறார் நீதிபதி கட்ஜு

Posted: 28 Mar 2017 09:47 AM PDT

புதுடில்லி: ''ஜெயலலிதா மிகவும் அழகானவர். சிறு வயதில் இருந்தே, அவர் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால், இதை அவரிடம் சொல்வ தற்கு தயக்கமாக இருந்தது,'' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

பலரை பற்றியும் சமூகதளங்களில் வெளிப் படையாக கருத்து தெரிவித்து, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு, 70.
அழகானவர் :
இந்த நிலையில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து, 'பேஸ்புக்' சமூகதளத்தில், கட்ஜு பல்வேறு செய்திகளை பதிவு செய்துள்ளார்; ...

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம்!:நனவாகிறது மோடி - அமித் ஷாவின் கனவு

Posted: 28 Mar 2017 09:48 AM PDT

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, கடந்த, மூன்று ஆண்டுகளில் மிகப் பெரிய தோல்விகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடிக்கின்றனர். 'காங்கிரஸ் இல்லாதஇந்தியா' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை, இவர்கள் நனவாக்கி வருகின்றனர்.

கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், 44 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதைத் தொடர்ந்து, பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்தது. தற்போதைய நிலையில், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மேகாலயா, ...

லோக்பால் அமைக்க முடியாது : மத்திய அரசு திடீர் கைவிரிப்பு

Posted: 28 Mar 2017 09:51 AM PDT

புதுடில்லி 'லோக்பால் சட்டம் தொடர்பாக, 20 திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக, பார்லி., பரிசீலித்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில், உடனடியாக, லோக்பாலை அமைக்க முடியாது' என, மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது. ஊழல் தடுப்பு அமைப்பான, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான சட்டங்கள், 2013ல் கொண்டு வரப்பட்டன. ஆனால், லோக்பால் அமைப்புக்கு, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப் படவில்லை. 'இந்த நியமனங்களை, உடனடியாக மேற்கொள்ள வேண்டும்' என, மூத்த வழக்கறிஞர் ...

ஆர்.கே.நகரில் தினகரனுக்கு திரும்பிய பக்கமெல்லாம் எதிர்ப்பு:சத்தியம் வாங்கிக் கொண்டு பரிசுப் பொருட்கள் கொடுக்கவும் முடிவு

Posted: 28 Mar 2017 10:44 AM PDT

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., - சசிகலா அணி வேட்பாளர் தினகரனுக்கு, திரும்பிய பக்கமெல்லாம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதனால், 70 ஆயிரம் ஓட்டுகளை மட்டும் குறிவைத்து, பணப் பட்டுவாடா செய்ய, தினகரன் ஆட்கள் திட்டமிட்டு உள்ளனர். வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு, பரிசுப் பொருட்கள் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், ஆட்சிக்கு தலைமை ஏற்கலாம் என்ற எண்ணத்தில், சசிகலா குடும்பத்தினரால், தினகரன் களமிறக்கப்பட்டு உள்ளார். தொகுதி மக்களிடம், சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளதால், ஜெ.,வை ...

ஆர்.கே.நகரில் ரவுடிகள் குவிப்பு; கலவரம் வெடிக்கும் அபாயம்

Posted: 28 Mar 2017 10:47 AM PDT

ஆர்.கே.நகர் தொகுதியில், இரு சமூகத்தைச் சேர்ந்த ரவுடிகள், சசிகலா மற்றும் பன்னீர் அணி ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குவிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நாளன்று, அவர்களுக்குள் மோதல் உருவாகி, கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது என, தமிழக அரசுக்கும், போலீசுக்கும், மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சகிகலா அணி சார்பில் தினகரன்; பன்னீர் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர்.இத் தொகுதி யில், முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு, 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. அதில், மறவர் சமுதாயத்தைச் ...

முதல் கூட்டத்திலேயே 'கெத்து' காட்டிய தீபா: 15 நிமிடம் மட்டுமே பேசியதால் அதிருப்தி

Posted: 28 Mar 2017 10:50 AM PDT

ஆர்.கே.நகர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத் தில் பங்கேற்ற தீபா, ஜெயலலிதாவை போல, பிரத்யேக நாற்காலி போட்டு அமர்ந்து, 'கெத்து' காட்டியது, தொகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், ஜெ., அண்ணன் மகள் தீபா போட்டி யிடுகிறார். புதுவண்ணாரப்பேட்டையில், நேற்று முன்தினம் இரவு நடந்த, முதல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். தனக்கு ஒதுக்கப்பட்ட, படகு சின்னத்தை அறிமுகம் செய்து, தீபா பேசியதாவது: எம்.ஜி.ஆரின் கட்டளையை ஏற்று, கட்சியினரை யும், மக்களையும் காப்பாற்றியவர் ஜெயலலிதா. அவரை இழந்து, அவரது பிள்ளை களான ...

அங்கீகாரமில்லாத வீட்டுமனைகள் மீதான தடை தளர்வு: ஏற்கனவே பதிவு செய்த மனைகளை விற்க அனுமதி

Posted: 28 Mar 2017 10:54 AM PDT

சென்னை:அங்கீகாரமில்லாத வீட்டுமனை களை, பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட, ஒட்டுமொத்த தடை உத்தரவில், சென்னை உயர் நீதிமன்றம் மாற்றம் செய்துள்ளது.

அதன்படி, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட, அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை மறுபதிவு செய்ய, உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி, பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்யவும், 2016 செப்., 9ல், தடை விதித்தது. தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் அடங்கிய, ...

வசூல் வேட்டையில் டி.எஸ்.பி.,க்கள்: ஒரே நாளில் 115 பேர் இடமாற்றம்

Posted: 28 Mar 2017 10:57 AM PDT

சென்னை: காவல் துறையில், நேற்று ஒரே நாளில், 115 டி.எஸ்.பி.,க்கள் இட மாற்றம் செய்யப்பட்டனர். 73 இன்ஸ்பெக்டர்களுக்கு, டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

அதிகாரிகள் ஆய்வு
தமிழக காவல் துறையில், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு உட்பட, பல பிரிவுகளில் பணி யாற்றி வரும், டி.எஸ்.பி.,க்களின் பணித்திறன், அவர்கள் வழக்குகளை கையாளும் விதம், குற்றங்களை குறைக்க எடுத்த முன்னெச்சரிக் கை நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, சொந்த மாவட்டம், அதை சுற்றிய ...

தேர்தல் அறிக்கையில் சசி படம் 'மிஸ்சிங்'; சசிகலா உறவுகள் கடும் அதிருப்தி

Posted: 28 Mar 2017 10:59 AM PDT

ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில், சசிகலா படமோ, பெயரோ இடம் பெறாதது, அவரது குடும்பத்தினரிடம் புகைச் சலை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., மறைவால், அ.தி.மு.க., பொதுச் செயல ராக நியமிக்கப்பட்ட சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அப்போது, தன் அக்கா மகன் தினகரனை, துணை பொதுச் செயலராக நியமித்தார்.
வேட்பாளர்:
கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தினகரன், சசிகலா தம்பி திவாகரன் உட்பட,
மற்ற குடும்ப உறுப்பினர்களை ஓரங்கட்டினார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், சசி அணி வேட்பாளராக, தினகரன் களமிறங்கி உள்ளார்.
தொகுதியில், ...

மீண்டும் போராட்ட களமாக மாறுகிறதா சென்னை மெரினா?

Posted: 28 Mar 2017 11:59 AM PDT

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த இளைஞர்களுக்கு சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை மெரினா மீண்டும் போராட்டகளாக மாற தயாராகி வருகிறது.

ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவையே திருப்பி பார்க்க வைத்தது. போராட்டத்தின் போது இனி ஒவ்வொரு முக்கிய பிரச்னைக்காகவும் போராட்டம் தொடரும் என மாணவர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் ...

முலாயமுக்கு எதிராக அகிலேஷ் தீர்மானம்..!

Posted: 28 Mar 2017 01:20 PM PDT

லக்னோ : உ.பி.,யில், ஆளுங்கட்சியாக இருந்த சமாஜ்வாதியில் ஏற்பட்ட குடும்ப மோதல் தொடர்கிறது. தந்தையும், கட்சியின் நிறுவனருமான, முலாயம் சிங் யாதவுக்கு எதிராக, புதிய தீர்மானத்தை கொண்டு வந்தார், முன்னாள் முதல்வரும், கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ்.
மோதல்:
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மிகப்பெரிய வெற்றி பெற்று, உ.பி.,யில், பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக, யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். சட்டசபை தேர்தலுக்கு முன், ஆளுங்கட்சியாக இருந்த, சமாஜ்வாதியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனான, அகிலேஷ் யாதவுக்கும் ...

அரசு வீட்டை காலி செய்யுங்க...! பன்னீர்செல்வத்திற்கு 'நோட்டீஸ்'

Posted: 28 Mar 2017 02:17 PM PDT

'இரு வாரங்களுக்குள், அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, பொதுப்பணித் துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ஆறு ஆண்டுகளாக, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, தென்பெண்ணை இல்லத்தில் வசித்து வந்தார். அவர் முதல்வர் பதவியை இழந்ததும், அரசு இல்லத்தை காலி செய்யும்படி, பொதுப்பணித் துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
அவரும், போயஸ் கார்டன் பகுதியில் உள்ள, வீனஸ் காலனியில், வாடகைக்கு வீடு பிடித்து, இரு வாரங்களுக்கு முன், அங்கு ...

செல்லாத நோட்டை மாற்ற வங்கியில் கூட்டம் ஏன்?

Posted: 28 Mar 2017 03:12 PM PDT

புதுடில்லி: 'செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லாத பலர், விபரம் தெரியாமல் வரிசையில் நிற்பதால், ரிசர்வ் வங்கியில் கூட்டம் அலை மோதுகிறது' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அலைமோதும் கூட்டம்:
பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின், 2016 நவம்பர், டிசம்பர் மாதங்களில், அந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்ற, மத்திய அரசு அனுமதி அளித்தது; அந்த சமயத்தில் வெளிநாடு சென்றிருந்த பலர், ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியவில்லை. அவர்கள் ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகங்களில் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™