Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பா.ஜ.,வில் 84 வயது எஸ்.எம்.கிருஷ்ணா

Posted: 28 Mar 2017 11:57 AM PDT

புதுடில்லி: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான 84 வயது எஸ்.எம்.கிருஷ்ணா, இன்று (மார்ச் 22) பா.ஜ.,வில் இணைந்தார். கர்நாடகாவில் பெரும் செல்வாக்குடன் இருந்த எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கடந்த முறை முதல்வர் பதவி கிடைக்கவில்லை. எனவே, பல ஆண்டுகளாகவே கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். கர்நாடகாவில் மாநில தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் அதிரடி செயல்களால் பா.ஜ., சற்று முன்னணியில் ...

நேரமில்லை

Posted: 28 Mar 2017 11:56 AM PDT

நேரமில்லை நேரமில்லை கோபம் கொள்வோரிடம் கோபம் கொள்ள நேரமில்லை தொல்லை செய்வோர்க்கு தொல்லை தர நேரமில்லை இன்னா செய்தார்க்கு இன்னா செய்ய நேரமில்லை கேலி செய்தாரை கேலி செய்ய நேரமில்லை ஏளனம் செய்தோரை ஏளனம் செய்ய நேரமில்லை கேடு இழைத்தோர்க்கு கேடு இழைக்க ச.சந்திரசேகரன்  

ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர்

Posted: 28 Mar 2017 11:44 AM PDT

நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள். கண்டஇ டங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை. * பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில்செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத்தருகிறார். * மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும். ...

உலகம் பார்க்க பிறந்தவன் நீ!

Posted: 28 Mar 2017 11:42 AM PDT

- குப்பையில் முளைத்தெழும் குன்றிமணியாய் இரு… தகரத்தை அல்ல தங்கத்தை எடை போட பிறந்தவன் நீ! குடத்தினுள் முடங்கிக் கிடக்காமல் குன்றின் விளக்காய் இரு… உன்னடி இருட்டெனும் போதும் உலகுக்கே ஒளி தர பிறந்தவன் நீ! ஓய்வின்றி ஓடி முடிவில் கடலில் கலக்கும் ஆறாய் இரு… செல்லும் வழியெல்லாம் வளமாக்கப் பிறந்தவன் நீ! காற்றினிலே கரைந்து போகும் கற்பூரமாய் இரு… ஆலய வழிபாட்டின் அம்சம் நீ! எச்சமாய் விழுந்தாலும் பூமியை துளைத்தெழும் விதையாய் விழு… எதிர்கால விருட்சம் நீ! ஒருநாள் பொழுதில் வாழ்ந்து, ...

தெய்வம் மறந்தது இல்லை

Posted: 28 Mar 2017 11:41 AM PDT

- அடியார்கள் என்பதற்கு, 'சுவாமியின் திருவடிகளில், ஆழமான பக்தி கொண்டவர்கள்' என்று பொருள். உடல், சொல் மற்றும் மனதால் அடுத்தவர்களை நோகடிக்காதவர்களே அடியார்கள். அப்படிப்பட்ட ஒரு அடியாரின் வாழ்வில் நடந்த வரலாறு இது: 'சாகித்திய கர்த்தாக்களில் தமிழ் மூவர்' என போற்றப்படும், மூவரில் ஒருவரான, முத்துத் தாண்டவர், ஒருநாள் இரவு, தன்னை அறியாமல், அம்பாள் ஆலயத்தில் உறங்கி விட்டார். நள்ளிரவில், பசியால் தூக்கம் கலைந்து எழுந்தவருக்கு, அம்பிகையே நேரில் தோன்றி உணவளித்தாள். கூடவே, 'நீ, தில்லை செல்; ...

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள்

Posted: 28 Mar 2017 11:40 AM PDT

தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்.... பகிருங்கள் நண்பர்களே நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................ பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......! நன்றி-முகநூல்

கடலுக்கடியில் பூம்புகார்..தமிழர் பெருமையை உலகம் அறிய செய்வோம்

Posted: 28 Mar 2017 11:40 AM PDT

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் ...

கங்கைகொண்டசோழபுரம் முதல் கடாரம் கொண்டான் வரை

Posted: 28 Mar 2017 11:31 AM PDT

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் கங்கைகொண்டசோழபுரம் என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊர் உள்ளது.சற்றொப்ப 350 ஆண்டுகள் தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கே தலைநகராக விளங்கிய இந்த ஊரில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற கோயிலை இராசேந்திரசோழன் கட்டினான்.அந்தக் கோயில் மட்டும் இன்று மிகப்பெரிய வரலாற்றைச் சுமந்துகொண்டு நிற்கின்றது.அக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் பல வரலாற்றுத் தகவல்கள் சிதறிக் கிடக்கின்றன.முறையே தொகுத்துப் பாதுகாத்தால் வரும் தலைமுறைக்கு வரலாற்றைப் பாதுகாத்துத் தந்தோம் என்ற பெருமை ...

ஜோக்குகள் !

Posted: 28 Mar 2017 11:06 AM PDT

கடைசி மூணு ரேங்க் வாங்குற மாணவர்களுக்கு….!

Posted: 28 Mar 2017 11:04 AM PDT

முருங்கையில் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது...

Posted: 28 Mar 2017 11:03 AM PDT

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கைகீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. முருங்கைப் காய் இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய ...

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Posted: 28 Mar 2017 11:02 AM PDT

வெந்தயம், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு உலர்த்தினா… தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல கொஞ்சத்தை வாயில போட்டுட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சா… சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல் குறையும். சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும். இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சுட்டு வந்தா… மஞ்சள், ...

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

Posted: 28 Mar 2017 11:01 AM PDT

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... நெய் சாப்பிடாதீர்கள் என யாராவது சொன்னால் அவர்களை ஏளனமாக பாருங்கள். நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம். பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த ...

மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!

Posted: 28 Mar 2017 11:01 AM PDT

மலேசியாவில் தமிழ்க் கல்வி போதிக்கப்படத் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்னும் நீடித்துக் கொண்டிருப்பதைக் கொண்டாடும் விதமாக, மலேசியக் கல்வி அமைச்சு பல்வேறு விதமான நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் நடத்தி வருகின்றது. தமிழர்கள் புலம்பெயர்ந்த பல நாடுகளில் தமிழ் மொழி சிதைந்திருக்கும் நிலையில் மலேசியாவில் இன்னும் தமிழ் மொழி, தமிழ்ப் பள்ளிகளின் வழியாகவும், தமிழர்களின் முயற்சிகளோடும் இன்னுத் தழைத்தோங்கி வருகின்றது. தமிழ்க் கல்வியின் 200-ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் "தமிழின் எழுச்சி தலைமுறை வளர்ச்சி" ...

அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை

Posted: 28 Mar 2017 11:00 AM PDT

சீமைக்கருவேல மரங்களின் தீமைகள் குறித்து மாநிலம் முழுவதுமே ஏற்பட்டுள்ள விழிப்புஉணர்வைத் தொடர்ந்து பல்வேறு தன்னார்வலர்களும், இளைஞர்களும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியில் ஆச்சர்யப்படுத்தும் வகையில் தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள். எல்லாக்குழந்தைகளும், பள்ளிக்கு புத்தகப்பைகளை தூக்கிச் செல்வது வழக்கம்; ஆனால் திருச்சி வையம்பட்டியை அடுத்த ஓந்தம்பட்டி அரசுப்பள்ளி மாணவர்களோ, கடந்த ...

படித்ததில் பிடித்தது-தமிழ் வாழ்க.

Posted: 28 Mar 2017 10:57 AM PDT

"தமிழ் வாழ்க வென்பதிலும் தமிழ்வா ழாது தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! குமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டுங் கொக்கரிப்புப் பேச்சாலுந் தமிழ் வாழாதே! அமிழ் கின்ற நெஞ் செல்லாம் குருதியெல்லாம் ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிரு மாறே இமிழ் கடல்சூழ் உலகமெல்லாம் விழாக்கொண்ட டாடி ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே! பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி ...

கில்லாடித்தனம்...!!

Posted: 28 Mar 2017 10:55 AM PDT


--

ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை

Posted: 28 Mar 2017 10:54 AM PDT

திருப்பூர்: 'தபால் அலுவலகங்களில், 50 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கினால், பாஸ் புக் மற்றும் ஏ.டி.எம்., கார்டு பெறலாம்; பணம் எடுக்க கட்டுப்பாடுகளோ, கட்டணமோ கிடையாது' என்று, தபால் துறை அறிவித்துள்ளது. பண பரிவர்த்தனை செய்யவும், ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்கவும், வங்கிகள் விதிக்கும் அடுத்தடுத்த கட்டுப்பாடுகளால், வாடிக்கையாளர்கள் கவலைஅடைந்துள்ளனர். கணக்கு துவக்கலாம் : இதற்கு மாறாக, நலிவடைந்துள்ள தபால் துறையோ, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், எவ்வித சேவை கட்டணமுமின்றி, ...

செய்திகள் சொல்கின்றன...!!

Posted: 28 Mar 2017 10:47 AM PDT

* 1. சமூகநல திட்டங்களைப் பெறும் பயனாளிகளிடம் ஆதார் எண் கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம். மத்திய அரசு ஆதார் வேணும்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்கக் கூடாது என்கிறது. இவர்களுக்குள் அதிகார விளையாட்டுப் போட்டி கம்பீரமா நடக்கிறது. 2. ஆர்.கே. நகர் தேர்தலுக்காக தள்ளிப் போட முடியாது. டிடிவி. தினகரன் மீதான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படும். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. தொகுதியிலும் இருப்பார். நீதிமன்றத்திலும் இருப்பார். குற்றவாளியை விசாரணை செய்துகிட்டே ...

புது விசாரிப்பு - 10 செகண்ட் கதைகள்

Posted: 28 Mar 2017 10:46 AM PDT

பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!

Posted: 28 Mar 2017 10:36 AM PDT

உ.பி., கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்திரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து 4 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. - ------------------------- விகடன்

கோடையை சமாளிக்க பானங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்...!

Posted: 28 Mar 2017 10:33 AM PDT

கோடையை சமாளிக்க பானங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்...! கோடை காலம் தவிர்க்க முடியாதது; ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும். கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. இதுபோன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது. எந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும், சாறாக எடுத்துக் கொள்வதை விட, சுவைத்து சாப்பிட்டால், அதன் பலன் இரட்டிப்பாகும். கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். ...

சீரணி மிட்டாய் செய்வது எப்படி?

Posted: 28 Mar 2017 10:30 AM PDT

- சீரணி மிட்டாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்!! தேவையான பொருட்கள்: வெல்லம்- 3/4 கிலோ ( கருப்பு சீரணி மிட்டாய் ) சுக்கு- 1 டீஸ்பூன் பச்சரிசி மாவு / அரிசி மாவு – 1/2 கிலோ உளுந்து – 50 கிராம் சர்க்கரை – 3/4 கிலோ கருப்பட்டி சீரணி மிட்டாய்: ஒரு அடி கனமான பத்திரத்தை எடுத்து கொண்டு, பச்சரிசி மாவு அல்லது அரிசி மாவையும், உளுந்தையும் நன்றாக ஊற வைக்க வேண்டும். பிறகு அதை நன்றாக அரைக்க வேண்டும். ஒரு இட்லி மாவு பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும் இப்பொழுது வெல்லத்தை எடுத்து கொண்டு, ஒரு ...

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..!

Posted: 28 Mar 2017 07:53 AM PDT

ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். இது எப்படி சாத்தியமானது ? ? ? கோயில் எப்படி கட்டப்பட்டது ???? தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும். 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ...

பாம்பே ரவை வடாம்!

Posted: 28 Mar 2017 06:33 AM PDT

- தேவையான பொருட்கள்: பாம்பே ரவை – 1 கிலோ பச்சைமிளகாய் – 200 கிராம் உப்பு – 2 மேஜைக்கரண்டி பெருங்காயத்தூள் – 2 மேஜைக்கரண்டி தண்ணீர் – 8 லிட்டர் செய்முறை: ரவையை சலித்து, சுத்தப்படுத்தவும். பச்சை மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக மிக்சியில் போட்டு, விழுதாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, பச்சைமிளகாய் விழுது சேர்த்து, அவை கொதிக்கும் போது, ரவையை சிறிது சிறிதாக தூவி, கட்டி தட்டாமல் கிளறவும். கலவை நன்றாக வெந்ததும் இறக்கவும். சூடு இருக்கும் ...

காய்கறி வடாம்!

Posted: 28 Mar 2017 06:31 AM PDT

தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு மற்றும் வெங்காயம் – தலா, 200 கிராம் கடலைப்பருப்பு – 100 கிராம் உளுந்தம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி வெந்தயம் – கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி தனியா – ஒரு தேக்கரண்டி உப்பு – இரண்டு தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 12 பெரிய உருளைக்கிழங்கு – 2 காலிப்ளவர் சிறியது மற்றும் பெரிய காரட் – தலா 1 கொத்துமல்லி தழை – 2 கட்டு செய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிக்கவும். இதனுடன், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் ...

வற்றல் – டிப்ஸ்

Posted: 28 Mar 2017 06:30 AM PDT

வடுமாங்காய் ஊறிய சாற்றில், பச்சை மிளகாய், கொத்தவரைங்காய், பாகற்காய் போன்றவற்றை ஊற வைத்து, காய வைத்து, வற்றலான பின், எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால், வடுமாங்காய் புளிப்பு, மிளகாய் காரம் எல்லாம் சேர்ந்து, சுவையாக இருக்கும். நான்கு பங்கு அரிசி, ஒரு பங்கு ஜவ்வரிசி கலந்து, ஒருமணி நேரம் ஊறிய பின், கழுவி, சாதத்தில் கொட்டி, கால் பங்கு தண்ணீர், உப்பு மற்றும் காரம் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைக்கவும். ஆறிய பின், புளித்த தயிர், சீரகம் அல்லது ஓமம் சேர்த்து கிள்ளி வைத்து, உலர வைக்கவும்; ...

ஏகாதசி விரதம் இருக்கும் முறை

Posted: 28 Mar 2017 06:28 AM PDT

1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும். 2. ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும். 3. ஏகாதசி திதி_முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் . ஏழு_முறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர்_மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம்கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். பட்டினி கிடப்பதனால் , ஜீரண ...

குழந்தைகளிடம் கற்றுக் கொள்வோம்…!

Posted: 28 Mar 2017 05:58 AM PDT

தியா – ஒரு பக்க கதை

Posted: 28 Mar 2017 05:51 AM PDT

இந்த வார சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Posted: 27 Mar 2017 05:58 PM PDT

எனக்கு நல்லா செல்ஃபி எடுக்க வராது! - சிவகார்த்திகேயன் - - விஜய் டிவியின் புதிய ஷோ விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளது. டிடி தொகுத்து வழங்கும் அந்த நிகழ்ச்சிக்கு அன்புடன் டிடி எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் அடுத்த வெர்ஷனாக இது இருக்கலாம் . - அதன் முதல் விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் போது எடுத்த செல்ஃபியை 'நான் செல்ஃபி எடுப்பதில் தேர்ந்தவன் இ இல்லை, ஆனாலும் இதை எடுக்க தோன்றியது' என ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். - --------------- விகடன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™