Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அடுக்கடுக்கான கேள்விகளால் ஆடிப்போன தினகரன் : ஆர்.கே.நகர் பிரசாரத்தின் போது பரபரப்பு

Posted: 27 Mar 2017 09:42 AM PDT

ஆர்.கே.நகரில் களமிறங்கியுள்ள, சசிகலா அக்கா மகனும், அ.தி.மு.க., அம்மா அணி வேட்பாளருமான தினகரனை, பொதுமக்கள் முற்றுகையிட்டு, சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க முடியாமல், அவர் திணறினார்.

ஆட்சியையும் கொண்டு வர முடிவுஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வருக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பின்னால், பலரும் அணிவகுத்தனர்.எனினும், சசிகலா சிறை செல்லும் முன், தினகரனை துணை பொதுச் செயலராக்கினார். ...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவோர்... 62 பேர்!

Posted: 27 Mar 2017 09:49 AM PDT

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, இடைத்தேர்தலில் போட்டியிடுவோர், 62 பேர். இவர்களில், ஜெ., மருமகள் தீபாவுக்கு, படகு சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

கடைசி நேரத்தில், எட்டு பேர் வாபஸ் பெற்றதால், இயந்திர ஓட்டுப்பதிவு உறுதியாகி உள்ளது. யாருக்கு வெற்றி என்பதில், பலத்த போட்டி இருப்பதால், பண மழை கொட்டும் என, வாக்காளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஜெயலலிதா மறைவு காரணமாக, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
மார்ச், 16ல், வேட்பு மனு தாக்கல் துவங்கி, 23ல் நிறைவு பெற்றது. அரசியல் ...

நல திட்டங்களின் பலன்களை பெற 'ஆதார்' எண்... அவசியமில்லை; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

Posted: 27 Mar 2017 09:55 AM PDT

புதுடில்லி, 'சமூகநல திட்டப் பலன்களை பெறுவதற்கு, 'ஆதார்' எண்ணை கட்டாயமாக்கக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட், மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

'பல்வேறு அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு, ஆதார் எண்ணை அளிக்க வேண்டும்' என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.'அரசின் நலத்திட்டப் பலன்களை பெறுவதற்காக ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என, கட்டாயப்படுத்த முடியாது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது' என, 2015 ஆக., 11ல் அளித்த உத்தரவில், சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
ஜன்தன் கணக்கு
இருப்பினும், 2015, அக்., 15ல் ...

இலவச 'செட் - டாப் பாக்ஸ்' கிடைக்குமா? நெருங்குகிறது மத்திய அரசு கெடு

Posted: 27 Mar 2017 10:15 AM PDT

'நாடு முழுவதும், ஏப்., 1 முதல், 'செட் - டாப் பாக்ஸ்' பயன்படுத்தப்பட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஜெயலலிதா வெளியிட்ட இலவச, செட் - டாப் பாக்ஸ் அறிவிப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக, கேபிள், 'டிவி' ஆபரேட்டர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

'நாடு முழுவதும், ஒயர் மூலம் வழங்கப்படும், 'அனலாக் கேபிள்' சேவையை, ஏப்., ௧ முதல் நிறுத்த வேண்டும்' என, 'டிராய்' எனப்படும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க, வரும், 1ம் தேதி முதல் செட் - டாப் பாக்ஸ் மூலம் வழங்கப்படும், 'டிஜிட்டல்' ஒளிபரப்பு சேவை ...

'விவசாயிகள் தற்கொலையை தடுக்க மாநில அரசுகளின் நடவடிக்கை என்ன?'

Posted: 27 Mar 2017 10:23 AM PDT

புதுடில்லி, :விவசாயிகள் தற்கொலைகளை தடுப்பது தொடர்பாக, மாநில அரசுகள் மேற்கொள்ள உள்ள திட்டம் பற்றி தெரிவிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அரசு சாரா அமைப்புகுஜராத் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம் தொடர்பாக, அரசு சாரா அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் பிரச்னையாக எடுத்துக் கொண்டு, வழக்கை, சுப்ரீம் கோர்ட் விரிவுபடுத்தியது. இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ...

ஹைட்ரோ கார்பன் திட்டம்: முத்தரப்பு பேச்சு நடத்த முடிவு

Posted: 27 Mar 2017 10:44 AM PDT

தமிழகத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள் நிறைவேற்றப்படுவதால், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயத்தை போக்கும் நோக்கில், வரும் வாரங்களில், முத்தரப்பு பேச்சு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற, 'ஜெம் லேபாரட்டரி' நிறுவனத்திற்கு, கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
காரைக்காலில், எரிவாயு எடுக்க, 'பாரத் பெட்ரோ ரிசோர்சஸ்' நிறுவனத்திற்கு, கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயுக்காக, இறக்குமதியை ...

'பணம் பட்டுவாடாவை தடுக்க வேண்டும்': ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 27 Mar 2017 10:48 AM PDT

சென்னை :''ஆர்.கே.நகர் தொகுதியில், பணம் பட்டுவாடா செய்வதை, தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:சென்னை மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும், குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. விவசாயிகள், தமிழகத்தில் போராடிப் பயனில்லை என, டில்லிக்கு சென்று போராடி வருகின்றனர். ஆனால், அவர்களை சந்தித்து பேசுவதற்கு, முதல்வர், அமைச்சர்கள் செல்லவில்லை.
கவலைப்படவில்லை.
அவர்கள் அனைவரும், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். பணம், தங்கம் ...

விரட்டப்பட்டவர் தினகரன்; பன்னீர் செல்வம் விளாசல்

Posted: 27 Mar 2017 10:56 AM PDT

சென்னை: ''ஜெயலலிதாவால், 2007ல் விரட்டப்பட்டவர் தினகரன். அவரை, நீங்களும் புறக்கணிக்க வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நாகூரான் தோட்டம் பகுதியில், நேற்று பிரசாரம் செய்தார்.
ஜெ.,ஆன்மா வழிநடத்தும்
அவருக்கு மலர் துாவியும், ஆரத்தி எடுத்தும், வீடுகள் முன் வண்ண கோலங்கள் போட்டும், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு ...

செல்லாத ரூபாய் நோட்டு 'டிபாசிட்': தமிழகத்தில் 1 லட்சம் பேரிடம் விசாரணை

Posted: 27 Mar 2017 11:09 AM PDT

வங்கிகளில் அதிகளவில், செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்தது பற்றி தகவல் தெரிவிக்காததால், தமிழகத்தைச் சேர்ந்த, ஒரு லட்சம் பேரிடம், வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த, 2016 நவ., ௮ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த அறிவிப்புக்குப் பின், பதுக்கி வைத்திருந்த பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து, மாற்ற வேண்டிய நிலைக்கு பலர் தள்ளப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர், வருமான வரித்துறைக்கு பயந்து, வேறு நபர்களின் கணக்குகளில் செலுத்தியது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டனர்.
18 ...

தினகரன் மீது புகார் அளிக்க முடிவு: மைத்ரேயன்

Posted: 27 Mar 2017 11:49 AM PDT

சென்னை: பணப்பட்டுவாடா தொடர்பாக தினகரன் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க பன்னீர் அணியினர் முடிவு செய்துள்ளனர்.
பணப்பட்டுவாடா:
இதுதொடர்பாக பன்னீர் அணியை சேர்ந்த மைத்ரேயன் தெரிவிக்கையில், ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் மூலம் டி.டி.வி.தினகரன் பணப்பட்டுவாடா செய்கிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம். டில்லியில் இன்று (மார்ச்,28) மதியம் 12 மணி அளவில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இடைத்தேர்தல்:
ஏப்ரல் 12 ம் தேதி ...

தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு டிரம்ப் வாழ்த்து

Posted: 27 Mar 2017 12:44 PM PDT

வாஷிங்டன்: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
உ.பி., கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்திரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பஞ்சாப் தவிர்த்து 4 மாநிலங்களில் வெற்றி பெற்ற பா.ஜ., ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இத்தகவலை வெள்ளை மாளிகை ...

'பெல்லட் குண்டு வேண்டாம்': சுப்ரீம் கோர்ட்

Posted: 27 Mar 2017 01:53 PM PDT

புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீரில், கிளர்ச்சியில் ஈடுபடும் இளைஞர்களை கலைக்க, 'பெல்லட்' குண்டுகளை, துப்பாக்கிகளில் சுடுவதற்கு பதில், வேறு வழிமுறைகளை கையாள்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
பெல்லட் குண்டு:
ஜம்மு - காஷ்மீரில், அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் இளைஞர்கள், ராணுவத்தினர் மீது கற்களை வீசுகின்றனர். அவர்களை கலைக்க, 'பெல்லட்' எனப்படும், உயிருக்கு ஆபத்து ஏற்படாத சிறு வகை குண்டுகள் பொருத்திய துப்பாக்கிகளை, ராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கண்களில் ...

அமெரிக்கா வேண்டாம்!: இந்திய மாணவர்கள் பீதி

Posted: 27 Mar 2017 03:11 PM PDT

வாஷிங்டன்: அமெரிக்காவில், துப்பாக்கிச்சூடு, 'விசா' கட்டுப்பாடு, போன்ற காரணங்களால், அங்கு சென்று உயர் கல்வி கற்கும், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகங்களில், இந்தியா, சீனா நாடுகளைச் சேர்ந்த, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், உயர் கல்வி படித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் தங்கி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும், 'எச் 1- பி' விசாவிற்கு, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்;
இதேபோல், அந்நாட்டில், ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™