Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தெற்கத்தி சீரணி மிட்டாய்!

Posted: 27 Mar 2017 03:56 PM PDT

தெற்கத்தி சீரணி மிட்டாய்! விதவிதமான இனிப்பு வகைகள், சாக்லேட்டுகள் என, நவீன குழந்தைகள், கார்ப்பரேட் இனிப்புகளுக்கு மாறிவரும் வேளையில், ஆறுதல் தருகிறது, நம் பாரம்பரிய இனிப்பான, கருப்பட்டி மற்றும் வெல்லத்தில் தயாரிக்கப்படும், சீரணி மிட்டாய்! விருதுநகர், மதுரை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட, தென் மாவட்டங்களில் இது பிரபலமானது என்பதால், 'தெக்கத்தி சீரணி மிட்டாய்' என இதைச் சொல்வதுண்டு. அத்துடன், ஏணி மிட்டாய், சீனி மிட்டாய் மற்றும் ரயில் மிட்டாய் என, ஊருக்கு ஒரு பெயர் உண்டு. தோற்றத்தில், ...

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்

Posted: 27 Mar 2017 03:43 PM PDT

இந்த தளத்திற்கு  சென்று உங்களுக்கு தேவையானதை படிக்கவும்.


http://tamilpdfworld.blogspot.in

அன்புடன்


அருள்

173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Posted: 27 Mar 2017 12:00 PM PDT

- ராயல சீமா :   ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா மாவட்டங்களில் வறட்சியைப் போக்க கோதாவரி நதியின் மீது 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கோதாவரி நதியையும், கிருஷ்ணா நதியையும் இணைக்கும் முயற்சியில் வெற்றி கண்டவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. கோதாவரி நதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. இதைத் தடுக்கவும் ராயலசீமா பகுதியின் வறட்சியைப் போக்கவும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 'பட்டிசீமா' அணைக்கட்டை ...

ஏப்.1ம் தேதி முதல் இன்சூரன்ஸ் கட்டணங்கள் 5 சதவீதம் வரை உயர்கிறது

Posted: 27 Mar 2017 11:53 AM PDT

புதுடெல்லி: வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், கார், இருசக்கர வாகனங்கள், மருத்துவம் ஆகியவற்றுக்கான இன்சூரன்ஸ் கட்டணங்கள் 5 சதவீதம் வரை உயர்கிறது. இன்சூரன்ஸ் ஏஜன்ட்களுக்கான கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில், இன்சூரன்ஸ் கமிஷன் அல்லது வெகுமதி ஒழுங்கு முறை விதிகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, ஏஜன்ட்களுக்கான கமிஷன் தொகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை பிரீமியத்தில் ...

நண்பேன்டா!

Posted: 27 Mar 2017 11:47 AM PDT

சாமிநாதன், இறந்து விட்டதாக, அவனது கடைசி மகள் வந்து சொல்லி விட்டு போனாள்; எனக்கு ஒரே பதற்றமாக இருந்தது.நானும், சாமண்ணா என்று அழைக்கப்படும் சாமிநாதனும் ஒரே வகுப்பில், ஒரே டெஸ்க்கில் அமர்ந்து படித்து, வளர்ந்தவர்கள்.நான், பள்ளி செல்லாத நாட்களில், வகுப்பில் நடந்த பாடங்களை, அவன் தான் எனக்கு விளக்குவான். இருவருமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். என் அப்பா, வளையல் வியாபாரி; அவன் அப்பா, சிறிய சீட்டுக் கம்பெனியில், குமாஸ்தா. சொற்ப வருமானம்; இவன் தான் முதல் பிள்ளை; மற்ற மூவரும், பெண்கள். இளமையிலேயே ...

”பேஷா நடக்கட்டுமே” மஹா பெரியவா அற்புதங்கள்

Posted: 27 Mar 2017 11:46 AM PDT

"பேஷா நடக்கட்டுமே" --- மஹா பெரியவா அற்புதங்கள்  பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மகா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது, ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மகா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர். ஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி ...

'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'

Posted: 27 Mar 2017 10:10 AM PDT

முசாபர்நகர் : உ.பி.,யில், பசுக்களை கொன்றாலோ, அவமரியாதை செய்தாலோ, அவர்களின் கை, கால்களை உடைத்து விடுவதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத், சமீபத்தில் முதல்வராக பதவியேற்றார். இந்த மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம், மாநில அமைச்சர் சுரேஷ் ராணாவை பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது; அதில் பங்கேற்று பேசிய, பா.ஜ., - எம்.எல்.ஏ., விக்ரம் சைனி கூறியதாவது: பசுக்களை அனைவரும், தாயாக மதிக்க வேண்டும். ...

10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?

Posted: 27 Mar 2017 09:50 AM PDT

ஆர்.கே.நகரில், உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, சசிகலா அணியில் உள்ள, 10 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட, பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மதுசூதனின் வெற்றிக்காக, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தேர்தல் பிரசாரத்தில், பலவித உத்திகளை கையாண்டு வருகின்றனர். பிரசாரத்தின் உச்ச கட்டத்தில், கடைசி அஸ்திரமாக, முதல்வர் பழனிசாமி அமைச்சரவையின் ஊழல் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்காக நெடுஞ்சாலைத்துறை உட்பட பல துறைகளில், மாவட்ட ...

அதிரடியான 50 அறிவிப்புகள்!

Posted: 27 Mar 2017 09:26 AM PDT

முதல்வர் யோகி ஆதித்யநாத், 50 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்புகள் குறித்த விவாதங்கள் மாநிலம் முழுவதும் பலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கூடும் இடங்களில் கூட இந்த அறிவிப்புகள் பற்றி பட்டிமன்றம் நடத்தாத குறையாக விவாதங்கள் நடக்கின்றன. அந்த அறிவிப்புகள் இதோ... ஆதித்யநாத்1. இந்துக்கள் புனிதப் பயணமாகச் செல்லும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இதுவரை 50,000 ரூபாய் மானியம் வழங்கப்பட்டுவந்தது. அந்தத் தொகை இனிமேல் ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.   2. உத்தரப்பிரதேச ...

முதலிரவு அறையில் என்ன தேடுறாங்க...?

Posted: 27 Mar 2017 09:09 AM PDT

அ.தி.மு.க. அம்மா அணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது.

Posted: 27 Mar 2017 08:21 AM PDT

சென்னை: அ.தி.மு.க. அம்மா அணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது. ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப். 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. அம்மா அணியின் தினகரன் போட்டியிடுகிறார். இதையடுத்து அந்த அணியின் தேர்தல் அறிக்கையை பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட முதல்வர் பழனிசாமி பெற்றுக்கொண்டார். அறிக்கை விவரம்: * ஆர்.கே. நகரில் 10 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும். * 57 ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்கப்படும். * வேலைவாய்ப்புக்கான ஆலோசனை மையம் அமைக்கப்படும். * அரசு மற்றும் ...

சுழல் இருக்கை ரயில் பெட்டிகள், நவீனத்தில் அசத்தும் ஐ.சி.எப்.,

Posted: 27 Mar 2017 08:19 AM PDT

ஆந்திரா, காஷ்மீர் மாநிலங்களில் உள்ள சுற்றுலா பகுதிகளில் இயக்க, சுழலும் இருக்கைகளுடன், நவீன ரயில் பெட்டிகளை, ஐ.சி.எப்., தயாரித்து வருகிறது. தமிழகத்தில், ஊட்டியில் இயக்கப்படும் மலை ரயிலை போல, ஆந்திர மாநிலம், அரக்வேலியில், சுற்றுலா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதை, ஐ.ஆர்.சி.டி.சி., என்ற, இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகம் இயக்கி வருகிறது. ரயிலுக்காகவும், காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலங்களில் இயக்கவும், சுழலும் இருக்கைகள், கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய, நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்க, ...

மெரினா ஆகுமா ஜந்தர்மந்தர் :

Posted: 27 Mar 2017 08:15 AM PDT

புதுடில்லி : டில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகி வருகிறது. தொடரும் போராட்டம்: தமிழக வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள், 14வது நாளாக இன்றும் அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தும் இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழக எம்.பி.,க்கள், தென்னிந்திய சினிமா நடிகர் சங்கத்தினர், தமிழக அரசியல் ...

பத்ம விருதுகள்: பிரபலமான நபர்கள் நிராகரிப்பு

Posted: 27 Mar 2017 08:15 AM PDT

புதுடில்லி : கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தபேலா வித்வான் ஜாகிர் உசேன், சர்ச்சை சாமியார் ராம் ரஹிம் சிங் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு பத்ம விருதுகள் வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. பத்ம விருது பட்டியல் மாற்றம் : இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு ப த்ம விருதுகள் பெறுவோரின் பட்டியல் ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள ...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாபஸ் பெற நேரம் முடிந்தது; 8 சுயேட்சைகள் வாபஸ்

Posted: 27 Mar 2017 08:10 AM PDT

சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவோர் தங்களின் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்தது. இதுவரை 8 சுயேட்சைகள் மட்டும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். 8 சுயேட்சைகள் வாபஸ் : ஏப்ரல் 12 ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்தவர்களில் 70 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இந்நிலையில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் இன்று (மார்ச் 27) பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. ...

சொந்த பந்தம் !

Posted: 26 Mar 2017 11:32 PM PDT

''ஏங்க... எத்தனை நாளா சொல்றேன்... பெருசுக ரெண்டையும், வீட்டை காலி செய்ய சொல்லுங்கன்னு...'' என்று மனைவி சாரதா சொன்னதும், ''அவுக பாட்டுக்கு இருக்காங்க; நமக்கு என்ன தொந்தரவா கொடுக்கிறாங்க... சும்மா இதையே சொல்றே...'' என்றான் பரமசிவம். ''உங்களுக்கென்ன... வேலை, வெட்டின்னு போயிடுவீங்க... வீட்டுல இருக்கிற எனக்குல தெரியும்... தினம் ஏதாவது, சீனி, சீரகம்ன்னு கேட்டுட்டே இருக்குது அந்த பாட்டி.'' ''பெரியவர் குப்புசாமி பென்ஷன் வாங்கியதும் மளிகை சாமான் எல்லாம் வாங்கிப் போடுறாரே... அப்புறம் என்னவாம்...'' ''அவங்க ...

படித்ததில் பிடித்தது - II :) -- இதெல்லாம் ஒரு பெருமையா?

Posted: 26 Mar 2017 11:17 PM PDT

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! @krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா? சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது. அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான ...

வண்ணங்களிலும் வடிவங்களிலும் மின்னும் கலாசாரம்

Posted: 26 Mar 2017 09:10 PM PDT

- சிங்கப்பூர் பல இனமக்கள் ஒன்றுகூடி வாழும் நாடாகும். ஆகையால், அனைத்து இனத் தவரையும் மதிக்கக் கற்றுக் கொண்டால்தான் நம்மால் ஒற்றுமையைக் கட்டிக்காக்க முடியும். இதற்கு நாம் மற்றவர்களுடைய கலாசாரத்தை நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். எங்கள் பள்ளியின் தாய் மொழிகள் துறையும் அழகியல் துறையும் இணைந்து, கலாசாரம் நிறைந்த இடங்களான லிட்டில் இந்தியா ஆர்க்கேட், தேக்கா ஈரச்சந்தை, சைனா டவுன் காம்ப்ளெக்ஸ், கேலாங் செராய் ஆகிய இடங்களுக்கு ஒரு கற்றல் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தன. இந்தப் ...

முதல் பார்வை: எங்கிட்ட மோதாதே - ரசிகர் விருப்பம்!

Posted: 26 Mar 2017 09:07 PM PDT

- ரஜினி ரசிகனுக்கும், கமல் ரசிகனுக்கும் ஏற்படும் தோழமை, மோதல், பிரச்சினைகளே 'எங்கிட்ட மோதாதே'. ரஜினி ரசிகர் நட்டி நட்ராஜுக்கும், கமல் ரசிகர் ராஜாஜுக்கும் கட்-அவுட் வரைவதுதான் தொழில். ஒரு கட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று பாலாசிங்கிடம் இருந்து பிரிந்து வருகிறார்கள். நட்ராஜ் தன் சொந்த ஊரில் நண்பன் ராஜாஜ் உடன் கட்-அவுட் வரையும் தொழில் தொடங்குகிறார். ஊரில் பிரபலமாகும்போது ஒரு பிரச்சினை எட்டிப் பார்க்கிறது. அதனால் இருவரும் பிரிகிறார்கள். என்ன பிரச்சினை, ஏன் பிரிகிறார்கள், ...

கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா

Posted: 26 Mar 2017 09:04 PM PDT

திருப்பதி: கொசுக்கள் வளர்த்தால், அபராதம், சிறை தண்டனை விதிக்கும் வகையிலான மசோதாவுக்கு, ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திரவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை, அதிநவீன கட்டமைப்புடன் அம்மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது. புதிய நடவடிக்கை : இந்நிலையில், கொசுக்கள் குறித்து ஆய்வு நடத்திய, அம்மாநில அதிகாரிகள் குழு, அவற்றை ஒழிக்க புதிய நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. ...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்: இசையமைப்பாளராக சிம்பு?

Posted: 26 Mar 2017 05:57 PM PDT

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்துக்கு சிம்பு இசையமைக்க இருப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை முடித்தவுடன், ராஜஸ்தான் செல்லவுள்ளது படக்குழு. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். 'துப்பாக்கி' ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™