Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தீபா வேட்பு மனுவில் கணவர் பெயர் 'மிஸ்சிங்'

Posted: 24 Mar 2017 08:58 AM PDT

ஜெ., அண்ணன் மகள் தீபா, தன் வேட்பு மனுவில், கணவர் பெயரை எங்கும் குறிப்பிடாதது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், அவரது அண்ணன் மகள் தீபா, 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை துவக்கினார். பேரவைக்கு நிர்வாகி களை நியமிப்பதில், அவருக்கும் அவரது கணவர் மாதவன் பேட்ரிக்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.அதை தொடர்ந்து, தனி கட்சி துவக்கபோவதாக அறிவித்த மாதவன் பேட்ரிக், தீபா வீட்டிற்கு செல்லாமல், நண்பர்கள் வீட்டில் தங்கி வந்தார். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த, குடும்ப நண்பர்கள் முயற்சித்தனர். ஆனால், தீபா ...

தினகரன் போட்டியிடலாமா மனு பரிசீலனையில் பரபரப்பு

Posted: 24 Mar 2017 09:01 AM PDT

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி யில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட, 80பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன.

ஆர்.கே.நகர் தொகுதியில், 16ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்கியது; நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. மொத்தம், 114 வேட்பாளர்கள் சார்பில், 127 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. பன்னீர் அணி வேட்பாளர் மதுசூதனன்; சசி அணி வேட்பாளர் தினகரன்; தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷ்; பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன்; தே.மு.தி.க., வேட்பாளர் மதிவாணன்; ஜெ., அண்ணன் மகள் தீபா உட்பட,80 வேட்பாளர்களின் மனுக்கள் ...

அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் கனவில்... பேரிடி!

Posted: 24 Mar 2017 09:16 AM PDT

வாஷிங்டன்:வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு வேலை அளிக்க வழங்கப்படும், 'எச்1 பி' விசா தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் புதிய மசோதா, அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது; இது, அமெரிக்காவில் வேலை பார்க்கும் கனவில் உள்ள இந்தியர் களுக்கு விழுந்த பேரிடியாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில், பல்வேறு முக்கிய தொழில் நுட்ப நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களில், பெரும்பாலானவர்கள் இந்தியர்களே. குறிப்பாக, கம்ப்யூட்டர் மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத் துறையில், இந்தியர்களே அதிகம் ...

'நீட்' தேர்வுக்கு விதிவிலக்கு இல்லை: மத்திய அரசு கைவிரிப்பு?

Posted: 24 Mar 2017 09:22 AM PDT

'நீட் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி, தமிழகம் வைத்த கோரிக்கையை ஏற்க இயலாது' என, மத்திய அரசு கூறிவிட்டதாக தெரிய வந்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான சேர்க்கைக்கு, நாடு முழுவதும், ஒரே மாதிரியான, 'நீட்' எனப்படும், நுழைவுத் தேர்வை நடைமுறைப்படுத்துவதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது.இந்த நீட் தேர்வின் காரணமாக, கிராமப்புற மாணவர்கள், பெரிதும் பாதிக்கப்படுவர் என, தமிழக அரசு கூறிவந்த நிலையில், இதிலிருந்து விலக்கு பெறுவதற்கானநடவடிக்கைகளில் இறங்கியது.இது குறித்து, இரு மசோதாக்களை, சட்டசபையில் நிறைவேற்றி, தமிழகத்துக்கு மட்டும் விதி ...

ரூ.11,000 கோடி மோசடி ஆடிட்டர்கள் சிக்கினர்

Posted: 24 Mar 2017 09:26 AM PDT

புதுடில்லி:கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையின்போது, டில்லியில் பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்ட, 54 சார்டர்ட் அக்கவுன்டன்ட்கள், கம்பெனி செகரட்டரிகள் சிக்கியுள்ளனர்; இவர்கள், 11 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கறுப்புப் பணம்
இது குறித்து, மத்திய நிதி அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது:கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், செல் லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிட பட்டது. செல்லாத, பழைய ரூபாய் நோட்டு களை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி, பலர், கறுப்புப் ...

வளமும் இல்லை; வளர்ச்சியும் இல்லை!:சட்டசபையில் ஸ்டாலின் ஆவேசம்

Posted: 24 Mar 2017 09:59 AM PDT

சென்னை:''தமிழகத்தில் அமைதி, வளம், வளர்ச்சி எது வும் இல்லை. மக்கள் வாழ்வில் மலர்ச்சி யும் இல்லை,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் தலையிலும், 35 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக, கடன் சுமத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி என்று சொல்ல, ஆட்சியில் எதுவும் இல்லை. தமிழகத் தில், 2.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க, 98 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட தாக விளம்பரம் செய்யப்பட்டது.ஆனால், இதுவரை அந்த ஒப்பந்தங்கள் மூலம், தொழில் வளர்ச்சி ...

நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரம்: தி.மு.க., வழக்கு தள்ளிவைப்பு

Posted: 24 Mar 2017 10:02 AM PDT

சென்னை:சட்டசபையில், முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப் பின் முடிவை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை, ஏப்., 10க்கு, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு, கடந்த பிப்., 18ல் நடந்தது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ரகளையில் ஈடுபட்ட தாக,சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின், நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது; ஆதரவாக, 122, எதிர்ப்பாக,11 ஓட்டுகள் விழுந்தன.ஓட்டெடுப்பில், முதல்வர் பழனிசாமி தலைமை யிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் ...

தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட... தடை?அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 24 Mar 2017 10:21 AM PDT

புதுடில்லி:'குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து, மத்திய அரசின் நிலைப்பாடு என்ன' என, இரு வாரங் களுக்குள் பதிலளிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அதே போல், நீதித் துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும், இது போன்ற தடை விதிப்பது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

'குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிடவும், நீதித் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பதவியை தொடர வும், வாழ்நாள் முழுவதும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் ...

'ஜீன்ஸ், டி - ஷர்ட்' அணிய ஆசிரியர்களுக்கு தடை

Posted: 24 Mar 2017 10:24 AM PDT

புதுடில்லி:உ.பி.,யில் பதவியேற்றுள்ள புதிய அரசு, 100க்கும் மேற்பட்ட போலீசாரை, 'சஸ்பெண்ட்' செய்தும், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் உத்தரவிட்டு உள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி சமீபத்தில் பதவியேற்றது. தம் ஆட்சியில், மாநிலத்தை பல்வேறு துறைகளில் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, முதல்வர் உறுதியளித்திருந்தார்.அதன்படி, தன் வசமுள்ள காவல் துறையை மேம்படுத்த திட்டமிட்ட முதல்வர் ஆதித்யநாத், காவல் நிலையங்களுக்கு சென்று, அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்டார். சில தினங்களுக்கு முன், ...

போர் அச்சுறுத்தல் :வீரர்களுக்கு ராணுவ தலைமைத் தளபதி எச்சரிக்கை

Posted: 24 Mar 2017 12:47 PM PDT

டில்லி: எல்லையில் பணியாற்றும் வீரர்கள் எப்போது போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராணுவ தொலைத்தொடர்பு பற்றிய 2 நாள் கருத்தரங்கு டில்லியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ராணுவத் தளபதி பிபின் ராவத் பேசுகையில், நம் நாட்டுக்கு போர் அச்சுறுத்தல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எனவே, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும்வகையில் எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
எளிமையாக்க வேண்டும்
மேலும் அவர் ...

முன்னாள் எகிப்து அதிபர் விடுதலை

Posted: 24 Mar 2017 02:10 PM PDT

கெய்ரோ: ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்ற எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் ,88 வயது மூப்பு மற்றும் உடல் நலம் காரணமாக விடுவிக்கப்பட்டார்.கடந்த 1981-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை எகிப்து அதிபராக இருந்தார் முபாரக். , எகிப்தில் திடீரென அரேபிய புரட்சி ஏற்பட்டதையடுத்து பதவி இழந்தார். இவர் மீது ஊழல், மற்றும் அரசு கெதிராக போராடியவர்களை கொலை செய்தது உள்ளிட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோர்ட் உத்தரவுப்படிஆயுள் தண்டனை பெற்றார். சிறையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறையில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™