Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இரட்டை இலை விசாரணை: 10 அம்சங்கள்

Posted: 22 Mar 2017 05:29 AM PDT

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்., தரப்பு விவாதம் தேர்தல் ஆணையத்தில் இன்று(மார்ச் 22) நடந்தது. தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் நடந்த இந்த விவாதத்தின் போது நடந்த 10 முக்கிய அம்சங்கள்:01. தேர்தல் கமிஷனில் இன்று(22-ம் தேதி) காலை இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து வாதம் நடந்தது. இதில் சசிகலா தரப்பில் சல்மான் குர்ஷித், அரிமா சுந்தரம் , மோகன் பராசரன் ஆகியோர் வாதாடினர். ஓ.பி.எஸ்., தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வாதாடினர். ஏற்கனவே ஆஜரான ஹாரீஸ் சால்வே ...

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் - சித்து இடையே துவங்கியது மோதல்!:ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே பஞ்சாயத்து

Posted: 22 Mar 2017 09:13 AM PDT

சண்டிகர்:''அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, 'டிவி' நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், அவரது இலாகா மாற்றப்பட வேண்டும்,'' என, பஞ்சாப் முதல்வர்அமரீந்தர் சிங் கூறியுள்ளார். ஆட்சி அமைத்து, சில நாட்களிலேயே, முதல்வருக்கும், மூத்த அமைச்சருக்கும் இடையேமோதல் வெடித்துள்ளதால், பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாபில் சமீபத்தில் முடிந்த சட்டசபைத் தேர்தலில், காங்., மொத்தமுள்ள, 117 தொகுதி களில், 77ஐ கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது; பஞ்சாப் மாநில, காங்., தலைவர், கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வராக பதவியேற்றார். அவரது அமைச்சரவையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் ...

பசு கடத்தல், இறைச்சி கூடங்களுக்கு தடை: உ.பி., முதல்வர் அதிரடி உத்தரவு

Posted: 22 Mar 2017 09:55 AM PDT

லக்னோ : பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, உ.பி.,யில் பசு கடத்தலுக்கு உடனடி தடை விதித்துள்ள, முதல்வர் யோகி ஆதித்யநாத், இறைச்சிக் கூடங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, உ.பி.,யில் பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். இந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, மாநிலத் தில், பசு கடத்தலுக்கு முழு தடை விதித்து, முதல்வர் ஆதித்யநாத்
உத்தரவிட்டுள்ளார். 'இதில் எந்த சமரசமும்செய்யக் கூடாது. ...

6 மாத சம்பளம் கிடைக்காது!: டாக்டர்களுக்கு எச்சரிக்கை

Posted: 22 Mar 2017 09:58 AM PDT

மும்பை: 'மஹாராஷ்டிராவில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், பணிக்கு திரும்பா விட்டால், ஆறு மாதச் சம்பளத்தை இழக்க நேரிடும்' என, அந்த மாநில அரசு எச்சரித்துள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும்3,500 டாக்டர்கள், கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல், மொத்தமாக விடுப்பு எடுத்து,வேலைநிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர். பணியிடங் களில் பாதுகாப்பு கோரி, இந்த போராட்டத்தை, டாக்டர்கள் நடத்தி வருகின்றனர். இதனால், ...

எம்.பி.,க்கள் பென்ஷனை நிறுத்துங்க!: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Posted: 22 Mar 2017 10:00 AM PDT

புதுடில்லி: 'பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், இதர படிகளை நிறுத்த வேண்டும்' என, தாக்கல் செய்யப் பட்டுள்ள மனு குறித்து பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு, சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

சுப்ரீம் கோர்ட் டில், 'லோக் பிரஹாரி' என்ற, அரசு சாரா அமைப்பு தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில், கூறியிருப்பதாவது:' 'எம்.பி.,க் கள் பதவிக் காலம் முடிந்த பின், அவர்களுக்கு ஓய்வூதியம், இதர படிகள் வழங்கப்படுவது, அரசியல் சட்டத்திற்கு முரணானது; அவற்றை நிறுத்த வேண்டும்' என,கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை ...

முன்னாள் படை வீரரின் ரூ.4 கோடி சொத்து பறித்த சசிகலா கும்பல் குறித்து விசாரணை

Posted: 22 Mar 2017 10:11 AM PDT

காஞ்சிபுரம்:சிறுதாவூரில், ஓய்வுபெற்ற விமானப்படை வீரரின், நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் பறித்ததாக, மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது; போலீசார் விசாரிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கண்ணன், 72. ஓய்வுபெற்ற விமானப்படை வீரர். இவர் மனைவி மற்றும் உறவினர்களுக்கு, திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூரில், நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான, 16.44 கிரவுண்ட் நிலம் இருந்தது. 1997 முதல், 2003ம் ஆண்டு வரை, இந்தநிலங்களை, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா ...

தமிழகம் கடனாளி மாநிலம்: தி.மு.க., பேச்சால் மோதல்

Posted: 22 Mar 2017 11:09 AM PDT

சென்னை:''அ.தி.மு.க., பட்ஜெட்களால், தமிழகம், கடனாளி மாநிலமாகி விட்டது. தன் பட்ஜெட் மீது, நிதி அமைச்சருக்கே நம்பிக்கை இல்லை,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., கூறியதால், சட்டசபையில், நேற்று கடும் மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக நடந்த விவாதம்தி.மு.க., - தாயகம் கவி: இது, வளர்ச்சி திட்டம் இல்லாத பட்ஜெட். தமிழகத்திற்கு, கடனாளி மாநிலம் என, தற்போது பெயர் கிடைத்துள்ளது. தமிழக பட்ஜெட் மீது, நிதி நிர்வாக அலுவலர் களுக்கும், ஏன் நிதியமைச்சருக்கும் கூட நம்பிக்கை இல்லை. இதற்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அமைச்சர் செங்கோட்டையன்: ...

இரட்டை இலை முடக்கம்: தலைவர்கள் கூறுவது என்ன?

Posted: 22 Mar 2017 11:31 AM PDT

இரட்டை இலை முடக்கப்பட்டது சரியான தீர்ப்பு. இரு தரப்பும் மோதிக்கொண்டதால் சின்னம் கிடைக்காது என நான் முன்பே சொன்னேன்.

- தமிழிசை, பா.ஜ. மாநில தலைவர்.இரட்டை இலை சின்னம் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. இரட்டை இலை சின்னத்தை உறுதியாக மீட்டெடுப்போம். வலுவான ஆதரங்களை தேர்தல் ஆணையத்தின் முன் வைத்தோம்.
-ஓ.பன்னீர் செல்வம்
சின்னம் முடக்கப்பட்டதால் பின்னடைவு இல்லை. அனுபவம் தான். ஆர்.கே.நகரில் நான் போட்டியிடுவது உறுதி. சுப்ரீம் கோர்ட் சென்று சின்னத்தை மீட்போம்.
-தினகரன். சசி அணி.
தேர்தல் ஆணையத்தின் முடிவு வருத்தம் அளிக்கிறது. ...

அ.தி.மு.க.,வின் இரட்டை இலையை முடக்கி பன்னீர் அணி வெற்றி! இருதரப்பு வாதங்களை கேட்டு தேர்தல் ஆணையம் அதிரடி

Posted: 22 Mar 2017 11:35 AM PDT

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று (23-ம்தேதி) கடைசி நாள் என்ற நிலையில், அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை என, தேர்தல் கமிஷன், நேற்று( 22-ம் தேதி) இரவு அதிரடியாக, அறிவித்தது. அ.தி.மு.க.,வின் பெயரைகூட பயன்படுத்த கூடாது என்றும், தான் அறிவிக்கும், சின்னங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளுமாறும் அறிவுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலராக, அவரது தோழி, சசிகலா பொறுப்பேற்றார். இதற்கிடையே, கட்சியில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களால், ...

அடுத்த திட்டம் என்ன? பன்னீர் ஆலோசனை

Posted: 22 Mar 2017 11:39 AM PDT

அ.தி.மு.க, பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம், நேற்று முடக்கியதை அடுத்து, பன்னீர் அணியினர், தங்களது அடுத்த கட்ட ஆலோசனையை மேற் கொண்டுள்ளனர்; சசிகலா தரப்பும், உச்சநீதி மன்றத்தில், முறையீடு செய்யபோவதாக கூறியுள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவு பட்டது. கட்சியின் பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி, பன்னீர் அணி சார்பில், தேர்தல் கமிஷனில் மனு கொடுக்கப்பட்டது.மனுவை ஏற்றுள்ள தேர்தல் கமிஷன், விளக்கம் கேட்டு, சசிகலாவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது. இரு தரப்பினரும், ...

அத்வானி மீது மீண்டும் வழக்கு..?

Posted: 22 Mar 2017 03:26 PM PDT

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் இருந்து, அத்வானி உள்ளிட்ட பா.ஜ., மூத்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்க்கும் வழக்கின் மீது இன்று(மார்ச்,23) விசாரணை நடக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது, உ.பி., மாநிலம், ரேபரேலி சிறப்பு கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தவிர, மசூதியை இடித்ததாக, அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது, லக்னோ கோர்ட்டில் தனியாக வழக்கு தொடரப்பட்டது.
ரேபரேலி கோர்ட்டில் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™