Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுங்கள் !

Posted: 22 Mar 2017 10:22 AM PDT

வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுங்கள் ! இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள் e-list இல் இருக்கும் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!! Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த சூரிய சக்தியை பயன்படுத்தினார். உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை ...

சென்னைக்கு வழங்கி வந்த கிருஷ்ணா நதி நீரை நிறுத்தியது ஆந்திரா : வறட்சியால் நீர்தேக்கங்கள் வறண்டுள்ளதாக விளக்கம்

Posted: 22 Mar 2017 10:21 AM PDT

ஐதராபாத்; ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த கிருஷ்ணா நீரை அம்மாநில அரசு நிறுத்திவிட்டது. ஆந்திராவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் நீர்தேக்கங்கள் வறண்டுள்ளதாக அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆந்திராவில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கவே, தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த கிருஷ்ணா நதி நீர் நிறுத்தப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆந்திர மாநில நீர்தேக்கங்களான சோமசீலா, கண்டலேறு ...

நாடு முழுவதும் 1,400 I.A.S மற்றும் 900 I.P.S பணியிடங்கள் காலி : மத்திய அரசு தகவல்

Posted: 22 Mar 2017 09:59 AM PDT

டெல்லி: நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ் மற்றும் 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியா முழுமைக்கும் 6,396 I.A.S பணியிடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதில் தற்போது 4,926 பணியிடங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ள 1,470 IAS பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறியுள்ளார். இதில் அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் ...

வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய

Posted: 22 Mar 2017 09:38 AM PDT

தவறுதலாக டெலிட்செய்த ஆபிஸ் பைல்களை மீண்டும் ரெக்கவரி செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 8 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும். இதில் நீங்கள் தேடவிரும்பும் டிரைவினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் நீங்கள் டெலிட் செய்த பைல்கள் அனைத்தும் தம்ப்நெய்ல் வியூவில் கிடைக்கும். இதில் தேவையானதை ...

செலவு குறைவான நகரம்; சென்னைக்கு 6வது இடம்

Posted: 22 Mar 2017 08:27 AM PDT

புதுடில்லி: உலகளவில், செலவு குறைவாக ஆகும் நகரங்கள் பட்டியலில், ஆறாவது இடத்தை சென்னை பிடித்துள்ளது. ஆய்வு: வாழ்க்கை நடத்துவதற்கு செலவு குறைவாக ஆகும் நகரங்கள் மற்றும் அதிகமாக செலவு ஆகும் நகரங்கள் பற்றிய, சர்வதேச அளவிலான ஒரு ஆய்வை, பொருளாதார புலனாய்வு பிரிவு மேற்கொண்டது. ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச அளவில், மிகவும் குறைவாக செலவாகும் நகரங்களில், முதலிடத்தை கஜகஸ்தானின் அல்மாட்டி நகரம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை நைஜீரியாவின் ...

இன்று உலக தண்ணீர் தினம் ! 22nd March !

Posted: 22 Mar 2017 08:01 AM PDT

இன்று உலக தண்ணீர் தினம்: ஒவ்வொரு துளி நீரையும் காப்போம்! உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 1993-ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் மா‌ர்‌ச் மாத‌ம் 22-ஆ‌ம் தே‌தியை உலக த‌ண்‌‌ணீ‌ர் ‌தினமாக கொ‌ண்டாடி‌த்தா‌ன் வ‌ரு‌கிறோமே தவிர, தண்ணீர் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இன்றுவரை காணப்படவில்லை. இதனால் ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் உல‌கி‌ன் பல கோடி ம‌க்க‌ள் த‌ண்‌ணீ‌ரி‌ன்‌றி ‌தி‌ண்டாடி வரு‌ம் ‌நிலையு‌ம் எ‌ந்த வகை‌யிலு‌ம் அகல‌வி‌ல்லை. நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் ...

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்

Posted: 22 Mar 2017 06:55 AM PDT

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நிர்வாகத்தில் உள்ள மடத்தில், பொறியாளர், காசாளர் மற்றும் பசு பராமரிப்பாளர்கள் முஸ்லிமாக உள்ளனர். உ.பி., முதல்வராக பா.ஜ.,வின் யோகி ஆதித்யநாத் பதவியேற்றுள்ளார். தீவிர இந்து ஆதரவாளராக அடையாளம் காணப்பட்ட இவர், கணித பட்டதாரி ஆவார். கோரக்ப்பூரில் மடத்தை துவக்கி நிர்வகித்து வருகிறார். இந்த மடத்தில் பணிபுரியும் பொறியாளர், காசாளர் என ஏராளமான முஸ்லிம்கள் பணிபுரிந்து வருகின்றனர். மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோரக்நாத் கோவிலில் கட்டுமான பணிகளை கண்காணிக்கும் யாசின் ...

ஓர் உதவி

Posted: 22 Mar 2017 06:47 AM PDT

ஐயா,யாரிடமாவது பனை என்ற நூல் pdf வடிவில் இருந்தால் பகிரவும். இது பனை மரத்தினைப் பற்றிய நூல்.

12 ராசிகாரர்கள் எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடுவது நலம் உண்டாகும்...!

Posted: 22 Mar 2017 06:45 AM PDT

ஒவ்வொரு கிழமைகளுக்கும் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கும் சம்பந்தம் உண்டாம். மேலும் எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 1. ஞாயிறு - சூரியன்: கோதுமையினால் ஆன உணவை உண்ணலாம். சிம்ம ராசியினருக்கு நலம் உண்டாகும். கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ், கேரட் சூப், பரங்கிக்காய் சாம்பார். 2. திங்கள் - சந்திரன்: பால் சம்மந்தமான உணவு - கடக ராசியினருக்கு நலம் உண்டாகும். பால், பால் கோவா, பால் ...

கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம்

Posted: 22 Mar 2017 04:17 AM PDT

கடவுள் மறுப்பு, மத - சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளைத் தீவிரமாகப் பேசிவந்த காரணத்தால், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மத அடிப்படைவாதிகள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கோவையில் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர், ஃபாரூக். இவர், திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். கடவுள் மறுப்பாளராக இயங்கி வந்த ஃபாரூக், முற்போக்குச் சிந்தனையுடன், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசிவந்தார். மார்ச் 16-ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. ...

'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா

Posted: 22 Mar 2017 02:18 AM PDT

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, தமிழகத்துக்கு எப்போது எல்லாம் வருகைப் புரிந்தார் என்பது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் நெல்லை வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ போராளியுமான பிரம்மா கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்படி சென்னை இமிகிரேசன் அலுவலகத்துக்கு மத்திய உள்துறை அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. - - doctor richard beale - நெல்லை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ. போராளியுமான பிரம்மா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ...

ஜோதிடம் என்பது அறிவியலா?

Posted: 22 Mar 2017 01:42 AM PDT

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

கமலுக்கு எதிரான வழக்கு: அறிக்கை தர கோர்ட் உத்தரவு

Posted: 21 Mar 2017 07:28 PM PDT

திருநெல்வேலி: கமலுக்கு எதிரான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வள்ளியூர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்துள்ள பழவூரை சேர்ந்தவர் ஆதிநாதசுந்தரம் 31. இவர் அஞ்சுகிராமம் வியாபாரிகள் சங்க தலைவராகவும் அங்குள்ள நாறும்பூநாதர் கோயில் பக்தர்கள் பேரவை செயலாளராகவும் உள்ளார். அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நடிகர் கமலஹாசன் பேட்டியளித்தார். அதில் பெண்கள் குறித்து எழுந்த கேள்விக்கு, ‛மகாபாரதத்தில் பெண்ணை வைத்து சூதாடுவதை புத்தகமாக படித்துக் கொண்டிருக்கும் ...

ஜார்கண்ட்: மாஜி துணை மேயர் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை

Posted: 21 Mar 2017 07:27 PM PDT

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் துணை மேயர் நீரஜ் சிங் உள்ளிட்ட 4 பேரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர். ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தின் முன்னாள் மேயர் நீரஜ் சிங், இன்று(மார்ச்-21) மாலை ஸ்டீல் கேட் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் காரில் உடன் இருந்த 3 பேரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த 3 பேரும் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தனர். கார் மீது பாய்ந்த 50 புல்லட்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™