Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் - 10 முக்கிய அம்சங்கள்

Posted: 20 Mar 2017 05:22 AM PDT

சென்னை:

தமிழ் சினிமாவில் இன்றைய ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருப்பது இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையேயான காப்பி ரைட்ஸ் பிரச்னையை பற்றியது தான்.
இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளையராஜா - எஸ்.பி.பி. இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பல்வேறு தரப்பில் பலவிதமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ...

பன்னீர் அணியுடன் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்.. நெருக்கம்! சட்டசபை கூட்டத்தில் சகஜமாக பேசி நட்பு

Posted: 20 Mar 2017 09:52 AM PDT

அ.தி.மு.க.,வில், எதிரும் புதிருமாக உள்ள சசிகலா - பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இடையே, திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தில், இரு தரப்பினரும் சகஜமாக பேசி, பழைய நட்பை வெளிப்படுத்தினர். சசிகலா நியமனம், இரட்டை இலை சின்னம் போன்ற விவகாரங்களில், தேர்தல் கமிஷன் தீர்ப்பு நெருங்குவதால், சசி தரப்பினர், பன்னீர் அணியினர் மீது பாசம் காட்ட துவங்கி உள்ளனர். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பால், தினகரன் வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது.

சட்டசபையில், நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. கேள்வி நேரத்தின் போது, தி.மு.க., - ...

ஜி.எஸ்.டி., மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...! உடனடியாக பார்லி.,யில் தாக்கல் செய்ய வாய்ப்பு

Posted: 20 Mar 2017 09:59 AM PDT

புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைகளுக்கான, துணை சட்ட மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், இந்த மசோதாக்களை உடனடியாக பார்லிமென்டில் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள, பல்வேறு வரி விதிப்பு முறைகளுக்கு மாற்றாக, ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. வரும், ஜூலை, 1ம் தேதியில் இருந்து இதை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி., தொடர்பான கொள்கைகள், சட்டங்களை இறுதி ...

பாக்.,கில் மாயமான மதகுருக்கள் பத்திரமாக நாடு திரும்பினர்

Posted: 20 Mar 2017 10:06 AM PDT

புதுடில்லி: பாகிஸ்தானுக்குச் சென்று, கடந்த வாரம் காணாமல் போன, இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மத குருக்கள் இருவர், நேற்று, டில்லி திரும்பினர். தலைநகர் டில்லியில், ஹஸ்ரத் நிஜாமுதீன் ஆலியா தர்கா உள்ளது. இதன் தலைமைக் மதகுரு, சையத் ஆஸிப் நிஸாமியும், அவரது உறவினரும், மதகுருவுமான, நாஸிம் அலி நிஸாமியும், 8ம் தேதி, பாகிஸ்தானுக்கு சென்றனர். சில நாட்களில், தங்கள் உறவினர்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ளாததால், காணாமல் போனதாகச் சந்தேகிக்கப்பட்டது.

சுஷ்மா வேண்டுகோள்
பாகிஸ்தான் அதிகாரிகளுடன், இந்தியத் துாதரக அதிகாரிகள், மதகுருக்கள்காணாமல் ...

ஓ.பி.எஸ்.சும் நாங்களும் அப்படி என்ன செய்தோம்: ஸ்டாலின் கேள்வியால் திணறிய மந்திரி

Posted: 20 Mar 2017 10:14 AM PDT

சென்னை, ''சட்டசபை கூட்டத்தில், நாங்களும், ஓ.பி.எஸ்.,சும் அப்படி என்ன செய்தோம் என்பதை, அமைச்சர் காமராஜ் விளக்க வேண்டும்,'' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலின் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில், நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, குறுக்கிட்டு பேசிய உணவுத் துறை அமைச்சர் காமராஜ், ஸ்டாலினை பார்த்து, ''நீங்களும், அவரும், கடந்த சட்டசபை கூட்டத்தில் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பதை அறிவோம்,'' என்றார்.
அதற்கு ஸ்டாலின், ''நீங்கள் அவ்வாறு எப்படி கூறலாம்; நாங்களும், ஓ.பி.எஸ்.,சும், அப்படி என்ன செய்தோம் என்பதை விளக்க வேண்டும். இல்லையேல், ...

ஜெ., மரணத்திற்கு விசாரணை கமிஷன்; ஐகோர்ட்டில் மத்திய அரசு கைவிரிப்பு

Posted: 20 Mar 2017 10:21 AM PDT

சென்னை,:'மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை கமிஷன் அமைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு பதிலளித்து உள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 செப்., 22 இரவில், உடல்நலக் குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், டிச., 5ல் மறைந்தார்.
ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை, நீதி விசாரணை வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், சி.பி.ஐ., விசாரணை கேட்டு, உண்ணாவிரதப் போராட்டம் ...

தேர்தல் கமிஷனில் பன்னீர் அணி புதிய ஆதாரம்

Posted: 20 Mar 2017 10:29 AM PDT

தேர்தல் கமிஷனில், அ.தி.மு.க., பன்னீர் அணியினர் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பித்தது, சசிகலா அணியினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது சரியா என்பது குறித்தும், இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்பது தொடர்பாகவும் முடிவெடுக்க, சசி மற்றும் பன்னீர் அணியினரை, நாளை நேரில் ஆஜராகும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் தரப்பு நியாயங்களை, மேலும் வலுப்படுத்தும் வகையில், பன்னீர் அணியினர், நேற்று கூடுதல் ஆதாரங்களை,தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்தனர். இது குறித்து, பன்னீர் ஆதரவு ...

ரேஷனில் தரமற்ற பருப்பு வினியோகம்; ரூ.199 கோடி வீணாகும் அவலம்

Posted: 20 Mar 2017 10:57 AM PDT

ரேஷன் கடைகளில், தரமற்ற துவரம் பருப்பு வழங்கப்படுவதால், மக்கள் வரிப்பணம், 199 கோடி ரூபாய் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், 1 கிலோ துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, தலா, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது, துவரம் பருப்புக்கு பதில், அதே சுவையுடைய கனடா மஞ்சள் பருப்பு வழங்கப்படுகிறது.

நிதி நெருக்கடியால், உளுந்தம் பருப்பை நிறுத்தி விட்டு, துவரம் பருப்பு, பாமாயில் மட்டும் வழங்க, அதிகாரிகள் முடிவு செய்தனர்.
மக்கள் விருப்பம்
அதன்படி, 20 ஆயிரம் டன் அளவுக்கு, துவரம் பருப்பு மற்றும் கனடா மஞ்சள் பருப்பு வாங்க, நுகர்பொருள் ...

279 தொழில்நுட்ப கல்லூரிகள், 23 பல்கலைகள் 'டுபாக்கூர்'

Posted: 20 Mar 2017 12:30 PM PDT

புதுடில்லி, :நாடு முழுவதும், 23 பல்கலைகள் மற்றும் 279 தொழில்நுட்பக் கல்லுாரிகள், அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்துக்கும் முன், நாட்டில் உள்ள போலி பல்கலைகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகள் குறித்த விபரங்களை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழுவும், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் வெளியிடுகின்றன.
சான்றிதழ் கிடைக்காது
அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான பட்டியலை இவை வெளியிட்டுள்ளன. நாடு முழுவதும், 23பல்கலைகளும், 279 தொழில்நுட்பக் ...

உ.பி. முதல்வர் தேர்வில் 'ஆர்.எஸ்.எஸ்., தலையீடு கிடையாது'

Posted: 20 Mar 2017 01:39 PM PDT

புதுடில்லி, ''உ.பி., மாநில முதல்வர் தேர்வில், ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிடவில்லை,'' என, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். உ.பி., முதல்வராக, இந்துத்துவா கொள்கையில் தீவிர பற்றுடைய, யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன. இது குறித்து, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:உ.பி., மாநில, பா.ஜ., சட்டசபை கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் தான், யோகி ஆதித்யநாத்தை தேர்ந்தெடுத்தனர். கட்சியின் ...

இந்திய மதபோதகர் மீது ஆஸி.யில் தாக்குதல்

Posted: 20 Mar 2017 01:54 PM PDT

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மதபோதகர் மீது இன வெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடுமாவட்டத்தைச் சேர்ந்த மத போதகர் மேத்யூ,48, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள தேவாலயத்தில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனையின் போது அங்கு கூடியிருந்த பலர் முன்னிலையில் தாக்கப்பட்டார். கத்தியுடன் அவர் மீது தாக்கியதில் கழுத்தில் லேசான காயமடைந்த நிலையில் மேத்யூ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆனார். தாக்கியவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அந்த நபர் இத்தாலி வம்சாவளியைச்சேர்ந்த பவுக்னர், என்பது தெரியவந்தது. இது இனவெறி ...

கணவருடன் சமரசம்; தீபா கடும் எதிர்ப்பு

Posted: 20 Mar 2017 03:02 PM PDT

ஜெ., அண்ணன் மகள் தீபாவிற்கும், அவரது கணவர் மாதவன் பேட்ரிக்கிற்கும் இடையே சமரசம் ஏற்படுத்த, சிலர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

இது குறித்து, தீபா பேரவை வட்டாரம் கூறியதாவது: 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' நிர்வாகிகள் நியமனத்தில், தீபாவுக்கும், அவரது கணவர் மாதவன் பேட்ரிக், கார் டிரைவர் ராஜா ஆகியோர் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது, கைகலப்பு வரை சென்றுள்ளது.
கண்டிப்பு:
மாதவன் பேட்ரிக், சில நாட்களாக, சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டில் தங்குவதில்லை. அவரது உறவினர் வீட்டிலும், ஓட்டலிலும் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™