Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இளையராஜா - எஸ்பிபி நட்பு, மோதல் பற்றியெல்லாம் நாம் பேசத் தேவையில்லை

Posted: 20 Mar 2017 12:10 PM PDT

இளையராஜா - எஸ்பிபி நட்பு, மோதல் பற்றியெல்லாம் நாம் பேசத் தேவையில்லை. இந்த காப்பிரைட் நோட்டீஸ் விவகாரத்தில் முழு தவறு எஸ்பிபி பக்கம் இருக்கிறது. இளையராஜாவின் இசை காப்புரிமையை கவனித்துக் கொள்ள இப்போது தனி குழு இருக்கிறது. அவர்கள் அனுப்பியதுதான் இந்த நோட்டீஸ் (நிச்சயம் ராஜாவுக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டிருக்காது). அதுகூட எஸ்பிபிக்கு அனுப்பப்பட்டதல்ல. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஈவன்ட் கம்பெனிக்கு அனுப்பப்பட்டது. இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும் அதைப் பற்றி ராஜாவிடமே தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம் ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III

Posted: 20 Mar 2017 12:06 PM PDT

வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் !

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.... ரான்ஹாசன்

Posted: 20 Mar 2017 12:05 PM PDT

ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்... நான் வந்துட்டேன்னு சொல்லு....நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு....திரும்ப திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...திரும்ப வந்துட்டேன்னு திரும்ப திரும்ப சொல்லு...(    யார்கிட்ட போய்  சொல்ல சொல்றான் ???) அடப்பாவிகளா யூத்தா இருக்கும் போது ஈகரைய விட்டு போனது... ரெண்டு குழந்த பெத்து பெண்டு கழண்டு போனப்பறம்தான் திரும்ப வந்துருக்கேன்... எல்லாரையும் பார்த்து பல வருஷமாச்சு... இத்தன வருஷம் கழிச்சு ஈகரைல நுழையுறேன்...ஈகரை கனிகள் எல்லாரும் நலமா? [You must be registered ...

விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு

Posted: 20 Mar 2017 09:50 AM PDT

- வானூர் : விளை நிலத்தில் மேய்ந்து வந்ததால் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே 30 மயில்கள் விஷம் வைத்து கொல்லப் பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மற்றும் மயிலம் பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. அவைகள் இரை தேடி விவசாய நிலங்களுக்கு செல்லத் தொடங்கின. வானூர் ரங்கநாதபுரம், தொள்ளமூர், கொண்டலாம்குப்பம், புதுவை மாநிலம் சந்தைபுதுக்குப்பம் ஆகிய பகுதிகளில் விளை நிலங்களில் மயில்கள் கூட்டம், கூட்டமாக மேய்ந்தன. ஒரே இடத்தில் அதிகமாக இருப்பதால் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக ...

ஐ.க்யூ – அதிகரிக்க 7 வழிகள்

Posted: 20 Mar 2017 09:30 AM PDT

மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?

Posted: 20 Mar 2017 09:27 AM PDT

குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?

Posted: 20 Mar 2017 09:24 AM PDT


-

இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்

Posted: 20 Mar 2017 09:23 AM PDT

பல் துலக்காதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்!

Posted: 20 Mar 2017 09:21 AM PDT


-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

நேரம் - பொன்மொழிகள்

Posted: 20 Mar 2017 09:18 AM PDT

காலம் கடவுளுடையது; நம்முடையதன்று.
– ஹாலந்து

• காலத்தால் ஏற்பட்ட புண் காலத்தாலேயே ஆறும்.
– இங்கிலாந்து

• உலகத்துச் செல்வங்களால், இழந்து போன ஒரு கணத்தைக்கூட திரும்பப் பெறமுடியாது.
-பிரான்ஸ்

• காலம்தான் உலகின் ஆன்மா.
– கிரீஸ்

• காலத்தை விலைக்கு வாங்க முடியாது.
– ஜெர்மனி

பகிர்தல் – கவிதை

Posted: 20 Mar 2017 08:07 AM PDT

மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து

Posted: 20 Mar 2017 07:42 AM PDT

--- மென்பேர்ன் : ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர தேவாலயம் ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளார். பாதிரியார் மீது இனவெறி தாக்குதல் : கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், அனக்கம்போயில் பகுதியைச் சேர்ந்தவர் டோமி களத்தூர் மேத்தீவ் (48). இவர் மெல்போர்ன் புறநகர் பகுதியில்உள்ள தேவாலயத்தில் 2014 ம் ஆண்டு முதல் பாதிரியாராக இருந்து வருகிறார். நேற்று ஞாயிற்றுகிழமை நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில், மேத்தீவ் மத போதனையில் ஈடுபட்டார். ...

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1

Posted: 20 Mar 2017 05:16 AM PDT

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1 ---அண்ணாமலை சுகுமாரன் சித்தர்கள் என்றாலே இப்போதெல்லாம் பெரும்பாலோரின் மனச் சித்திரிப்பு, உண்மைக்கு மாறான புரிதலுடன் கூடியதாகத்தான் இருக்கிறது. தாடி வைத்து, சுலபத்தில் புரியாமல் பேசினால் அவரைச் சித்தர் என ஒரு பொதுப் பெயர் சூட்டிப் பாராட்டிவிடுவது, இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது. சித்தர்களில் தலை சிறந்த திருமூலர், "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்கிறார். சித்தர்கள் என்போர் அமுதூறும் தமிழில் ...

மார்ச் 20 — சீதளா அஷ்டமி !

Posted: 20 Mar 2017 03:23 AM PDT

மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை எட்டாம் திதி, அஷ்டமி எனப்படும். இதை, சீதளா அஷ்டமி என்பர். 'சீதளம்' என்றால் குளிர்ச்சி. இத்திதி, பங்குனி மாதத்தில் முக்கியத்துவம் பெறும். காரணம், இது, கோடை துவங்கும் காலம் என்பதால், வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும். இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவர், மக்கள். ராஜஸ்தானில் சீதளா அஷ்டமியை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுவர். காரணம், அது பாலைவனப்பகுதி என்பதால், வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை ...

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Posted: 20 Mar 2017 12:49 AM PDT

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !



நண்பேன்டா!

Posted: 20 Mar 2017 12:31 AM PDT

சாமிநாதன், இறந்து விட்டதாக, அவனது கடைசி மகள் வந்து சொல்லி விட்டு போனாள்; எனக்கு ஒரே பதற்றமாக இருந்தது.நானும், சாமண்ணா என்று அழைக்கப்படும் சாமிநாதனும் ஒரே வகுப்பில், ஒரே டெஸ்க்கில் அமர்ந்து படித்து, வளர்ந்தவர்கள்.நான், பள்ளி செல்லாத நாட்களில், வகுப்பில் நடந்த பாடங்களை, அவன் தான் எனக்கு விளக்குவான். இருவருமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். என் அப்பா, வளையல் வியாபாரி; அவன் அப்பா, சிறிய சீட்டுக் கம்பெனியில், குமாஸ்தா. சொற்ப வருமானம்; இவன் தான் முதல் பிள்ளை; மற்ற மூவரும், பெண்கள். இளமையிலேயே ...

படித்ததில் பிடித்தது - II :) -- மனமிருந்தால் போதும்!

Posted: 20 Mar 2017 12:23 AM PDT

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! @krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா? சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது. அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான ...

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு

Posted: 20 Mar 2017 12:19 AM PDT

இந்தியாகல்விதமிழகம்அரசியல்குற்றம்உலகம்அறிவியல்சென்னைவர்த்தகம்விளையாட்டுதொழில்நுட்பம்தமிழகம் முகப்பு > செய்திகள் > தமிழகம் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு 2017-03-19@ 21:21:44 வேலூர்: தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செய்யப் படுகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் முறைகேடுகளை தடுக்க பாயின்ட் ஆப் சேல் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கருவிகளை ...

வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்

Posted: 20 Mar 2017 12:04 AM PDT

- அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற நிமிடம் முதல் அவ்வப்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு சொந்த நாட்டு மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் மிரட்டல் வந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையில் உள்ள கார் ஒன்றில் ...

இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை

Posted: 19 Mar 2017 11:51 PM PDT

சென்னை: அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி நடத்தும் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தி: கடந்த வாரம் அமெரிக்காவின் சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன. ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர். எங்கள் மீது அன்பு காட்டிய ரசிகர்கள் குறித்து பெருமைப் படுகிறோம். சட்ட ...

வீட்டுக்குறிப்புகள் 10!

Posted: 19 Mar 2017 11:37 PM PDT

- காய்கறிப் பொரியல் மீந்துவிட்டால், அதை கொண்டு ஸ்டப்டு சப்பாத்தி, ஸ்டப்டு தோசை செய்யலாம். பொரியலோடு தேங்காய் துருவல் சேர்த்து பூர்ணமாகப் பிடித்தால், காரக்கொழுக்கட்டை தயார். --- - கோதுமை ரவையை ஒரு மணி நேரம் மோரில் ஊறவைத்து, மிளகாய், பெருங்காயம், போட்டு அரைத்து தோசை வார்த்து, மிளகாய் சட்னியுடன் பரிமாறினால், சுவை பிரமாதம். ----- - கீர், பாயசம் செய்யும்போது கலவை நீர்த்துவிட்டதா? கொஞ்சம் கசகசாவை நீரில் ஊறவைத்து மைபோல் அரைத்துச் சேர்க்கவும். கீர் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும். ...

முதன்முதலில் ரயிலுக்கு ஓனராக மாறிய பஞ்சாப் விவசாயி

Posted: 19 Mar 2017 11:35 PM PDT

--- உலகில் இதுவரை கார், பஸ், விமானம், கப்பல் உள்பட அனைத்து போக்குவரத்துகளும் தனியார்கள் வசம் உள்ளது. ஆனால் தனியாரிடம் இல்லாத ஒரே துறை ரயில் மட்டுமே. இந்நிலையில் நீதிமன்ற ஆணை காரணமாக பஞ்சாப் விவசாயி ஒருவர் ரயில் ஒன்றுக்கு உரிமையாளர் ஆகியுள்ளார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சம்பூரன் சிங் என்ற விவசாயி. ரயில் தண்டவாளம் அமைக்க நிலம் கொடுத்தார். ஆனால் அந்த நிலத்திற்கு உரிய இழப்பீட்டை ரயில்வே நிர்வாகம் தரவில்லை. எனவே இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சிங். இந்த ...

ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு: ம.பி. முதல்வர் அதிரடி அறிவிப்பு

Posted: 19 Mar 2017 11:34 PM PDT

- தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக நல ஆர்வலர்களும், அரசியக் கட்சிகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில் ஆளும் கட்சிகள் வருமானத்தை கணக்கில் கொண்டு செவிசாய்க்க மறுத்து வருகின்றன. - இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மதுவிலக்கை தனது மாநிலத்தில் அமல்படுத்தியதோடு, மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் செய்தார். - இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்த ...

மொட்ட சிவா கெட்ட சிவா

Posted: 19 Mar 2017 11:33 PM PDT

-குங்குமம் விமர்சனக்குழு - - பொறுக்கி போலீஸ் திருந்தி, மக்கள் போலீஸாக மாறுவதே 'மொட்ட சிவா கெட்ட சிவா'! சகலவிதமான ஊழல்களையும், அதிரடிகளையும் செய்து சம்பாதிக்கிறார் லாரன்ஸ். தலைநகருக்கு வந்து இன்னும் சம்பாதிக்க ஓர் அமைச்சரை இக்கட்டிலிருந்து அதிரடி ஆக்‌ஷனில் விடுவிக்கிறார். விதவிதமாகக் கொள்ளை அடிக்க, சக போலீஸாருக்கு கட்டளைகள் பிறப்பிக்கிறார். இவ்வளவு கெட்டவரான லாரன்ஸ், மீண்டும் நல்லவனாகி ரவுடிகளை ஆக்‌ஷனில் போட்டுத் தள்ளி அள்ளிக் கட்டுவதுதான் கிளைமாக்ஸ். கெட்டவன் நல்லவனாகிற இரண்டு வரி ஸ்டேட்டஸ் ...

நிசப்தம்

Posted: 19 Mar 2017 11:32 PM PDT

-குங்குமம் விமர்சனக்குழு -- தமிழ் சினிமா இன்னும் பெருமிதம் கொள்ள ஒரு படம் 'நிசப்தம்'. இளம்பெண்களுக்கான பாதுகாப்புக்குக் கொஞ்சமும் உத்திரவாதம் இல்லை. இன்னும் மோசமாக பெண் குழந்தைகளும் எப்படி இந்த வல்லுறவுக்கு ஆளாகிறார்கள் என்பதே கதைக் கரு. வெறும் ஆக்‌ஷனும், காமமும், கேளிக்கையும் மட்டுமே அதிகம் புழங்கும் சினிமாவில் விழிப்புணர்வுக்கு வரவேற்பு குடை விரித்ததற்கு மைக்கேல் அருணுக்கு பூங்கொத்து! அஜய்யும், அபிநயாவும் மனமொத்த தம்பதிகள். அவர்களது மகள் சாதன்யா பள்ளிக்குப் போய்க் கொண்டிருப்பதிலிருந்து ...

ஜி.மெயிலின் புதிய வசதியை தெரிந்து கொள்ளுங்கள்

Posted: 19 Mar 2017 11:30 PM PDT

இதுவரையில் ஜி.மெயில் மூலம் அனுப்பப்படும் வீடியோக்களை டவுன்லோடு செய்தால் மட்டுமே அதனைப் பார்க்க முடியும். தற்போது, டவுன்லோடு செய்யாமலே பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கணினியின் ஹார்ட் டிஸ்கில் உள்ள மெமரி பாதுகாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், எளிதாகவும் வீடியோவைப் பார்க்க முடியும். டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் 25 MB-க்கு குறைவான மெமரி கொண்டிருக்கும் வீடியோக்களை மட்டுமே இப்படி பார்க்க முடியும். இந்த சேவை 15 நாள்களுக்குள் ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 19 Mar 2017 11:20 PM PDT


-

-
-

சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !!

Posted: 19 Mar 2017 11:12 PM PDT

இந்த வலி கால் பகுதி வரை சென்று இழுத்து வலிக்கும், ஒருசிலருக்கு இடுப்பில் இருந்து பக்கவாட்டிலும் வலி இருக்கும். வலி விட்டு விட்டு வரும். கால் பலமிழந்து காணப்படும். சயாடிக்கா எனப்படும் இந்த நரம்பு, இழுத்து இழுத்து வலி ஏற்படுத்துவதால் Sciatica Pain என மருத்துவர்களால் குறிப்பிடப் படுகிறது. இந்த வலி இருந்துக்கொண்டே இருக்கும், இடுப்பில் இருந்து ஒரு கம்பியை செருகியது போல ஒருவித வலியை உணரலாம். அதாவது இந்த சயாடிக்கா எனப்படும் நரம்பு செல்லும் பாதை முழுவதும் வலி இருந்துக்கொண்டே இருக்கும். சிலருக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™