Tamil News | Online Tamil News |
- கோக், பெப்சிக்கு தாமிரபரணி நீர்: தடை கோரிய வழக்கு தள்ளுபடி
- வங்கிக்கு அதிகம் போகிறவரா? : இனி கட்டணம் வசூலிக்கப்படும்
- அப்பல்லோ மருத்துவமனை வருவதற்கு முன் ஜெ... 'தாக்கப்பட்டாா்!:முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மீண்டும் 'குண்டு'
- மத்திய அரசுக்கு 'ஜாட்' போராட்டக்குழு... மிரட்டல்!:டில்லியை முடக்கப் போவதாக அறிவிப்பு
- கட்சி பிரச்னையில் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது: நவநீதகிருஷ்ணன்
- சசிகலா விரக்தி; 'கைத்தடி'கள் மிரட்சி
- 10 ஆயிரம் புத்தகம் ஸ்டாலினுக்கு பரிசு
- காவிரியை உறிஞ்சும் டி.என்.பி.எல்., குடிநீர் வினியோக பணிகள் முடக்கம்
- ஆதரவாளர்களுடன் தீபா அவசர ஆலோசனை
- நவீன ஏவுகணை சோதனை வெற்றி
- பசுமை தீர்ப்பாய உத்தரவு எதிர்த்து தமிழகம் மனு
- ரூ. 4 கோடி செல்லாத நோட்டுகள்: மாற்ற முடியாமல் திணறும் திருப்பதி கோயில்
- ரயில்வேயில் புதிய மொபைல் செயலி அறிமுகம்
| கோக், பெப்சிக்கு தாமிரபரணி நீர்: தடை கோரிய வழக்கு தள்ளுபடி Posted: 02 Mar 2017 08:47 AM PST மதுரை: கோக் மற்றும் பெப்சி நிறுவனங்களின் குளிர்பானம், குடிநீர் தயாரிப்புக்கு, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகிக்க தடை கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. திருநெல்வேலி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலர், பிரபாகர் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி கங்கை கொண்டான், சிப்காட்டில்,'கோக கோலா' கம்பெனிக்காக, 'சவுத் இந்தியா பாட்லிங் கம்பெனி'க்கு, 31.54 ஏக்கர் நிலம், 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங் கப்பட்டது. அந்நிறுவனத்திற்கு, தினமும், 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க சிப்காட் மேலாண்மை இயக்குனர் ... |
| வங்கிக்கு அதிகம் போகிறவரா? : இனி கட்டணம் வசூலிக்கப்படும் Posted: 02 Mar 2017 09:08 AM PST புதுடில்லி: 'வங்கிக் கணக்கில் ரொக்கமாக, ஒரு மாதத்தில் நான்கு பரிவர்த்தனைக்கு மேல் செய்தால், குறைந்தபட்சம், 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்' என, பல்வேறு தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில், ரொக்கமாக, 'டிபாசிட்' செய்ய மற்றும் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகளை, பல்வேறு தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. அதன்படி, மாதத்தில், நான்கு முறைக்கு மேல் டிபாசிட் செய்தாலோ, பணம் எடுத்தாலோ, குறைந்தபட்சம், 150 ரூபாய் கட்டணமாக வசூலிக் ... |
| Posted: 02 Mar 2017 09:22 AM PST ''அப்பல்லோ மருத்துவமனை வருவதற்கு முன், ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளார்; அவரது மரணத்திற்கு காரணமான, குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்,'' என, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ளது, அ.தி.மு.க., வட்டாரத்தில், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று அளித்த பேட்டி: கடந்த, 2016 செப்., 22ல், சென்னை, போயஸ் கார்டன் வீட்டில், ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டுள்ளார் என, அப்பல்லோ மருத்துவமனையின், 'டிஸ்சார்ஜ் சம்மரி'யில் ... |
| மத்திய அரசுக்கு 'ஜாட்' போராட்டக்குழு... மிரட்டல்!:டில்லியை முடக்கப் போவதாக அறிவிப்பு Posted: 02 Mar 2017 09:26 AM PST புதுடில்லி:'மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், வரும், 20ம் தேதியில் இருந்து, டில்லியில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். டில்லிக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் சப்ளை நிறுத்தப்படும்' என, 'ஜாட்' போராட்டக் குழு, மத்திய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. ஹரியானா உட்பட வட மாநிலங்களில் அதிகம் உள்ள ஜாட் சமுதாய மக்கள், தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி, 2016 பிப்ரவரியில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின்போது ... |
| கட்சி பிரச்னையில் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது: நவநீதகிருஷ்ணன் Posted: 02 Mar 2017 09:32 AM PST சென்னை:''அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையில், நீதிமன்றமோ, தேர்தல் கமிஷனோ தலையிட முடியாது,'' என, அ.தி.மு.க., - எம்.பி., நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: ஜெ., மரணம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவை யில் இருக்கும் போது, அதுகுறித்து பேசக் கூடாது. இது தொடர்பாக, பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருப்பது, சட்டப்படி தவறு; நீதிமன்ற அவமதிப்புக்கு ஆட்பட வாய்ப்புண்டு.ஜெ., மருத்துவமனையில் இருந்த, 75 நாட்கள் உடன் இருந்தவர். முதல்வராக இருந்த இரண்டு மாதங்கள், ஏன் மவுனமாக இருந்தார்; அதற்கான காரணத்தை, அவர் ... |
| சசிகலா விரக்தி; 'கைத்தடி'கள் மிரட்சி Posted: 02 Mar 2017 09:36 AM PST பெங்களூரு சிறையில், எதிர்பார்த்த கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தராததால், கடும் விரக்தியில் இருக்கும் சசிகலா, தமிழக மூத்த அமைச்சர்கள் மீது அதிருப்தியில் உள்ளார். இதனால், மிரட்சியில் இருக்கும் அமைச்சர்கள், தமிழக சிறைக்கு அவரை மாற்ற, தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலர் சசிகலா, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறை யில், மற்ற கிரிமினல் கைதிகளை போன்றே, தானும் நடத்தப்படுவதால், சிறப்பு சலுகைகள் கேட்டு, கர்நாடக சிறைத் துறையிடம் மனு ... |
| 10 ஆயிரம் புத்தகம் ஸ்டாலினுக்கு பரிசு Posted: 02 Mar 2017 09:38 AM PST சென்னை:'என் பிறந்த நாள் பரிசாக கிடைத்த, ௧௦ ஆயிரம் புத்தகங்களில், என் அறிவு தேடலுக் குப் பயன்படுத்தியது போக, மீதமுள்ள வற்றை நுாலகங்களுக்கு வழங்கும் பணி துவங்கி யுள்ளது' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: என் பிறந்த நாளில் பரிசாக கிடைத்த, புத்தகங் களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை தாண்டும். இவற்றில் சிலவற்றை, என் அறிவு தேடலுக்குப் பயன்படுத்திக் கொண்டு, மீதியிருப்பதை நுாலகங்களுக்கு வழங்குவது என, ஏற்கனவே தெரிவித்திருந்தேன். சென்னை, அறிவாலய நுாலகம் உட்பட, பல இடங்களில் இருந்து புத்தகங் கள் வேண்டும் என, ... |
| காவிரியை உறிஞ்சும் டி.என்.பி.எல்., குடிநீர் வினியோக பணிகள் முடக்கம் Posted: 02 Mar 2017 09:42 AM PST வறண்ட காவிரியாற்றில், விதியை மீறி சிறிய அளவிலான கிணறுகள் அமைத்து, டி.என்.பி.எல்., நிறுவனம் தண்ணீர் எடுப்பதால், கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்ட குடிநீர் திட்டங்கள் முடங்கி போயின. மேற்படி மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாட்டால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வறண்டது கரூர் மாவட்ட காவிரி ஆற்றில், பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. கரூர் மட்டுமல்லாமல், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களின் குடிநீர் திட்டங் களுக்கும் சேர்த்து, நாள்தோறும், 8.50 கோடி லிட்டர் தண்ணீர்எடுக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் ... |
| ஆதரவாளர்களுடன் தீபா அவசர ஆலோசனை Posted: 02 Mar 2017 09:44 AM PST ஆதரவாளர்களுடன், தீபா ரகசிய ஆலோசனை நடத்தினார். ஜெ., அண்ணன் மகள் தீபா, 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற புதிய அமைப்பை துவக்கி உள்ளார். இதன் செயலராக, தன் நண்பர் ராஜாவை நியமித்தார். அவரது மனைவி சரண்யாவை, தலைவராக நியமித்தார்.இது, அவரது ஆதரவாளர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரது வீட்டின்முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய தீபா, புதிய நிர்வாகிகள் பட்டி யலை, விரைவில் வெளியிடுவாக தெரிவித்தார்; ஆனால், இதுவரை வெளியிடப்படவில்லை.இந்நிலையில், ராஜா மற்றும் அவரது மனைவியை நிர்வாகிகளாக நியமித்தது, தீபாவின் கணவர் ... |
| Posted: 02 Mar 2017 11:29 AM PST
புதுடில்லி: நீர்மூழ்கி கப்பலில் இருந்து, எதிரியின் இலக்கை குறிவைத்து தாக்கி அழிக்கும் ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. வெற்றி: நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ராணுவம், விமானப் படை, கடற்படையில் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வப்போது, புதிதாக தயாரிக்கப்படும் ஏவுகணைகளை, சோதனை செய்து பார்ப்பது வழக்கம். இந்நிலையில், கடற்படையில் பயன்படுத்தப்படும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து, எதிரியின் இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. ... |
| பசுமை தீர்ப்பாய உத்தரவு எதிர்த்து தமிழகம் மனு Posted: 02 Mar 2017 12:29 PM PST
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில், வாகன நிறுத்துமிடம் அமைக்க, கேரள அரசு திட்டமிட்டது. அதற்கு, அனுமதி வழங்கக் கூடாது என, பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இவ்வழக்கு, பிப்., 17ல் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்கை ஒத்திவைக்கும்படி கேட்டனர். அதை ஏற்காமல், தமிழக அரசுக்கு குத்தகைக்கு விடப்பட்ட பகுதியில், வாகனங்களை நிறுத்திக் ... |
| ரூ. 4 கோடி செல்லாத நோட்டுகள்: மாற்ற முடியாமல் திணறும் திருப்பதி கோயில் Posted: 02 Mar 2017 01:22 PM PST திருப்பதி: திருப்பதி உண்டியலில் காணிக்கையாக வந்த ரூ. 4 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற முடியாமல் திருப்பதி தேவஸ்தானம் திணறிவருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் ரூ. 1000 ,ரூ.500 நோட்டுகள் செல்லாது எனவும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்களில் பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என பிரதமர் மோடி அறிவித்தார். தற்போது புதிய ரூ. 2000 மற்றும் ரூ. 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் திருப்பதி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. 1000 , ரூ. 500 செல்லாத நோட்டுகள் ரூ. 4 கோடி வரை வசூலாகியுள்ளது ... |
| ரயில்வேயில் புதிய மொபைல் செயலி அறிமுகம் Posted: 02 Mar 2017 03:31 PM PST டில்லி: ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய ஒருங்கிணைக்கப்பட்ட மொபைல் செயலி மூலம் பயணம் தொடர்பான அனைத்து விஷயங்களையும தெரிந்து கொள்ளவும் மற்றும் சேவைகளையும் பெற முடியும். இதன் மூலம் டிக்கெட் முன் பதிவு ம்ட்டுமின்றி உணவு ஆர்டர் கொடுத்தல், டாக்சி வாடகைக்கு பிடித்தல், போர்ட்டர் அமர்த்துதல், போன்ற விஷயங்களை பயணிகள் பயணத்தின் போதே முடிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய மொபைல் செயலி வரும் மே மாதம் நடைமுறைக்கு வர உள்ளது. பயணத்தின் போது வாடகை டாக்சி, இ கேட்டரிங் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 03,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |