Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட மாட்டேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவிப்பு

Posted: 19 Mar 2017 10:01 AM PDT

'இளையராஜா இசையில் உருவான பாடல்களை, இனி பாடப் போவதில்லை' என, பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூட்டணியில் உருவான, சினிமா பாடல்களுக்கு, இன்றும் வரவேற்பு உள்ளது.

மகன் ஏற்பாடு
திரையுலகிற்கு வந்து, 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், உலகம் முழுக்க இசை நிகழ்ச்சிகளை, எஸ்.பி.பி., நடத்தி வருகிறார். அவரது மகன் சரண் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில், 'என் இசையில் உருவான பாடலை, என் அனுமதியின்றி எப்படி பாடலாம்' என, இளையராஜா தரப்பிலிருந்து, எஸ்.பி.பி.,க்கு, ...

தீபாவின் கணவர் பணத்துடன் ஓட்டம்?

Posted: 19 Mar 2017 10:03 AM PDT

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டிலிருந்து, அவரது கணவர் மாதவன் பேட்ரிக், பணப்பெட்டியுடன் ஓட்டம் பிடித்ததாக, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

ஜெ., அண்ணன் மகள் தீபா, 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை'யை துவக்கினார். தீபாவும், அவரது கணவர் மாதவன் பேட்ரிக்கும், பேரவைக்கு தனித்தனியே நிர்வாகிகளை அறிவித்தனர். இது, தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால், நம்பிக்கை இழந்த பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு தாவினர்.இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக, தீபா அறிவித்தார். சமீபத்தில், ...

அரசு அலுவலகங்களில் ஜெ., படத்தை அகற்றாதது ஏன்? பதில் அளிக்க தலைமை செயலர் மறுப்பு

Posted: 19 Mar 2017 10:07 AM PDT

'அரசு அலுவலகங்களில், முன்னாள் முதல்வர் ஜெ., படம் ஏன் அகற்றப்படவில்லை' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்விக்கு, தலைமை செயலர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, ரவி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்கள் அளிக்கக் கோரி, தலைமைச் செயலருக்கு விண்ணப்பித்தார். அவர் கேட்ட கேள்வி எதற்கும், பதில் தரப்படவில்லை.
கேள்விகள் என்ன?
* முதல்வர் பழனிசாமி, பிப்., 20ல், ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இவை, எந்த நிதியில் இருந்து செயல்படுத்தப்படும்?
* ஜெ., மருத்துவ செலவை, ...

தடையை மீறி வேட்பாளரான தினகரன்: சசிகலாவை ஏமாற்றினாரா?

Posted: 19 Mar 2017 10:10 AM PDT

அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலராக, தினகரன் அறிவிக்கப்பட்ட நாள் துவங்கி, அவருக்கும், சசிகலாவின் மற்ற உறவினர் களுக்குமான மோதல், துாள் பறந்து வருகிறது. சசிகலா தடையை மீறி, ஆர்.கே.நகர் வேட்பாளராக, தினகரன் களமிறங்கியதும் அம்பலமாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, 'ரிமோட்' மூலம், கட்சியை வழி நடத்துகிறார். அவருடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அண்ணி இளவரசியின் மகன் விவேக் மூலமாக, தினகரனுக்கான சசிகலாவின் உத்தரவுகள் தெரிவிக்கப்படுகின்றன.இதற்காக, பெங்களூரிலேயே தனி வீடு பிடித்து, தங்கி இருக்கிறார் விவேக். ...

'பன்னீர் சொத்து குறித்து விசாரிக்க விரைவில் விசாரணை கமிஷன்'

Posted: 19 Mar 2017 10:12 AM PDT

திருவண்ணாமலை:''பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு குறித்து விசாரிக்க, விரைவில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டுள்ள தினகரன் பேசினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 69வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, திருவண்ணா மலையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தினகரன் பேசியதாவது: பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த நாட்களில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, எதுவும் கூறாமல் இருந்தார். ஆனால், அவரிடம் இருந்து முதல்வர் பதவியை பறித்த, சில நாட்களில், ஜெயலலிதா மரணம் குறித்து, சி.பி.ஐ., ...

உ.பி., வளர்ச்சிக்கு 10 முக்கிய அம்சங்கள்

Posted: 19 Mar 2017 10:23 AM PDT

லக்னோ: உ.பி., முதல்வராக பொறுப்பேற்றுகொண்ட யோகி ஆதித்யநாத், முதல் முறையாக பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, பா.ஜ.,வுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மாநில வளர்ச்சிக்கு 10 முக்கிய அம்சங்களை வெளியிட்டார்.
1.பெண்களின் முன்னேற்றத்துக்கு தமது அரசு பாடுபடும்.
2.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழி வகை செய்யப்படும்
3. பெண்களின் பாதுகாப்புக்கு தமது அரசு வழிவகுக்கும்
3.சட்டம் ஒழுங்குக்குமுன்னுரிமை அளிக்கப்படும்
4.அரசு ...

சசியின் பொ.செ., பதவியை தேர்தல் கமிஷன் பறிக்குமா?: நாளை மறுநாள் முக்கிய தீர்ப்பு

Posted: 19 Mar 2017 10:40 AM PDT

அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவி தொடர்பாக, தேர்தல் கமிஷன் நாளை மறுநாள், முக்கிய தீர்ப்பு வழங்க உள்ளது. 'தேர்தல் கமிஷனின் முடிவு, சசிகலாவின் பதவியை பறிக்கும்; எங்களுக்கு சாதகமாக இருக்கும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி உற்சாகம் அடைந்துள்ளது. இந்த முடிவை எதிர்பார்த்துள்ள, சசிகலா அணியில் தற்போது உள்ள, எம்.எல்.ஏ.,க்களில் பலர், அணி மாற தயாராகி வருகின்றனர்.

'அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது' என, அறிவிக்கக் கோரி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர். இதற்கு விளக்கம் கோரி, பெங்களூரு ...

100 மடங்கு அதிவேக இண்டர்நெட்: புதுவகை வைபை கண்டுபிடிப்பு

Posted: 19 Mar 2017 10:45 AM PDT

லண்டன்: நுாறு மடங்கு அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் புதுவகை வைபையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்ப்ராரெட் சிக்னல்களின் உதவியோடு தற்போது இருப்பதை விட அது 100 மடங்கு வேகத்தில் இண்டர்நெட் சேவை பெறமுடியும். புதிய வழிமுறையால் அதிகளவு சாதனங்களுக்கு ஒரே சமயத்தில் இண்டர்நெட் வழங்க முடியும்.
பாதிப்பு இல்லை
இன்ப்ராரெட் பயன்படுத்துவதால் இது உடல் ரீதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வைபைக்களில் 2.5 அல்லது 5.0 ஜிகாஹெர்ட்ஸ் ரேடியோ சிக்னல்களை பயன்படுத்துகின்றன. புதிய ...

எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உ.பி., முதல்வர் பதிலடி!:வளர்ச்சிக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி

Posted: 19 Mar 2017 10:51 AM PDT

லக்னோ: உத்தர பிரதேசத்தின், 21வது மற்றும் பா.ஜ.,வின் நான்காவது முதல்வராக, சர்ச்சைக்குரிய யோகி ஆதித்யநாத், 44, பதவியேற்றார்.

'மதவாதத்தை துாண்டுபவர்' என, எதிர்க்கட்சி யினர் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், '' மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்காக எந்தவித பாகுபாடும் காட்டாமல் பணியாற்றுவேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு தான் முன்னுரிமை அளிப்பேன்,'' என, அவர், உறுதி அளித்துள்ளார்.ஐந்து மாநிலங்களுக்கு சமீபத்தில் நடந்த சட்ட சபை தேர்தலில், உ.பி.,யில், மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், 325 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி வென்றது.நீண்ட இழுபறிக்கு ...

ஓ.பி.எஸ்., அணிக்கு ஓடிவிடுவேன்!:சசிகலா தரப்பு எம்.எல்.ஏ., மிரட்டல்

Posted: 19 Mar 2017 10:57 AM PDT

கோவை:தமிழக அரசு மீது அதிருப்தியில் உள்ள கோவை, சூலுார் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கனகராஜ், 'அணி மாறி விடுவேன்' என, முதல்வருக்கு எதிராக அதிரடி பேட்டி அளித்துள்ளார்.

கோவை, செட்டிபாளையம் அடுத்துள்ள பெரியகுயிலி கிராமத்தில், ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. ஜல்லி கிரஷர்கள் அதிகளவில் இயங்கும் இப்பகுதியில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 40 - 50 வயதுடைய கூலி தொழிலாளி கள் இருவர் தங்கி, கூலி வேலை செய்து வந்தனர்.கடந்த, இரு நாட்களுக்கு முன், பாறைகளை உடைக்க வெடி வைப்பதற்காக, இயந்திரம் மூலம் துளையிட்டனர். அப்போது, பாறை உருண்டு, இரண்டு ...

ராணுவத்தினருக்கு குண்டு துளைக்காத சட்டை தயாரிக்க முடிவு

Posted: 19 Mar 2017 12:18 PM PDT

புதுடில்லி : ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்காக, குண்டு துளைக்காத, குறைந்த எடையுள்ள சட்டைகளை, நம் நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குண்டு துளைக்காத சட்டை:
நம் நாட்டில், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் பயன்படுத்தும் குண்டு துளைக்காத சட்டையின் எடை, மிக அதிகமாக உள்ளது. இதை அணிந்து கொண்டு, பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையில் ஈடுபடும் போது, ராணுவ வீரர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதனால், எடை குறைந்த, இலகு ரக குண்டு துளைக்காத சட்டைகளை, நம் நாட்டிலேயே தயாரிக்க, மத்திய அரசின், 'நிடி ஆயோக்' ...

'பெற்றோரை கொடுமைப்படுத்தும் மகனை வீட்டை விட்டு வெளியேற்றலாம்'

Posted: 19 Mar 2017 01:36 PM PDT

புதுடில்லி :வயதான பெற்றோரை கவனிக்காமல், அவர்களை கொடுமைப்படுத்தும் மகனை, வீட்டில் இருந்து வெளியேற்றலாம் என, டில்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
முதியோர் நலனுக்கான சட்டத்தில், அந்தந்த மாநில அரசு கள் தங்கள் மாநிலத்துக்கு ஏற்ற பிரிவுகளை சேர்த்து கொள்ளலாம்.
அதன்படி, டில்லி அரசு சட்டத்தில், தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டில் தங்கியிருந்து, தன்னை கொடுமைப்படுத்தும் மகனை வெளியேற்ற, பெற்றோருக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, டில்லியில் போலீஸ் வேலையை ...

'ஜாட்' போராட்டம் ஒத்திவைப்பு: டில்லி மக்கள் நிம்மதி

Posted: 19 Mar 2017 02:39 PM PDT

சண்டிகர் : இட ஒதுக்கீடு கோரி, போராட்டம் நடத்தி வரும் ஜாட் சமூகத்தினருடன், ஹரியானா முதல்வர், மனோகர்லால் கட்டார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து, பார்லிமென்ட் முற்றுகை போராட்டத்தை, அவர்கள் ஒத்தி வைத்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில், பா.ஜ.,வை சேர்ந்த மனோகர்லால் கட்டார் முதல்வராக உள்ளார். இங்கு, பெருமளவு உள்ள, 'ஜாட்' இன மக்கள், தங்களை, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி, 2016ல் பெரும் போராட்டம் நடத்தினர்; போராட்டம் வன்முறையாக மாறி, பெரும் கலவரம் நடந்தது.
இந்நிலையில், இட ஒதுக்கீடு கோரி, அவர்கள் மீண்டும் ...

விபத்து ஏற்படுத்தியவருக்கு தண்டனை ஆயுளுக்கும் வாகனம் ஓட்ட முடியாது

Posted: 19 Mar 2017 03:28 PM PDT

புதுடில்லி : டில்லியில் அதிவேகமாக லாரியை ஓட்டி, 9 வயது சிறுவன் உயிரிழக்க காரணமாக இருந்த வழக்கில், குற்ற வாளிக்கு வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்ட தடை விதித்து, கோர்ட், அதிரடி உத்தர விட்டது.

சிறுவன் உயிரிழப்பு:
கடந்த, 2000ம் ஆண்டில், டில்லியில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றின் அருகே, அதிவேகமாக வந்த லாரி மோதி, 9 வயது சிறுவன் உயிரிழந்தான். அந்த விபத்தில், குழந்தையை அழைத்துக் கொண்டு வந்த தந்தையும் படுகாயமடைந்தார். இதையடுத்து லாரியை ஓட்டி வந்த, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த சுனில் குமார் மிஸ்ராவை போலீசார் கைது செய்தனர். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™