Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தினகரன் போட்டியிடுவதற்கு 10 காரணங்கள்

Posted: 14 Mar 2017 11:25 PM PDT

சென்னை: சசிகலா அணி சார்பில் அ.தி.மு.க.,வின் ஆர்.கே. நகர் வேட்பாளராக சசிகலா குடும்பத்தை சேர்ந்த தினகரன், ‛ஒருமனதாக' தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு 10 காரணங்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 1. அ.தி.மு.க., கட்சி மற்றும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே சசிகலா குடும்பத்தினர் எண்ணம். எனவே தான் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த தினகரன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஒருவேளை வெற்றி பெற்றால், முதல்வர் பதவியை தான் குறி வைப்பார். எனவே, இன்னும் எத்தனை நாட்களுக்கு இடைப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறையில் ...

காங்., - எம்.பி.,க்களின் அமளியால் ராஜ்யசபா... முடங்கியது!: கோவா, மணிப்பூர் விவகாரத்தால் போர்க்கோலம்

Posted: 15 Mar 2017 08:52 AM PDT

புதுடில்லி: கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும், தங்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாததை கண்டித்து, ராஜ்யசபாவில், நேற்று, காங்., கடும் அமளியில் ஈடுபட்டதால், சபை முடங்கியது.

கோவா, மணிப்பூர், மாநிலங்களில் நடந்த சட்ட சபை தேர்தல்களில், எந்த கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்காமல், தொங்கு சட்டசபை அமைந்தது. இந்த தேர்தல்களில், காங்., தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், தேவை யான பெரும்பான்மையை திரட்ட முடியாத தால், அந்த கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதேசமயம், ...

வாகன பதிவுக்கு 'ஆதார்' அவசியம்; ஏப். 1 முதல் தமிழகத்தில் அமல்

Posted: 15 Mar 2017 09:47 AM PDT

சென்னை, 'தமிழகத்தில், வாகன பதிவுக்கு, 'ஆதார்' எண் அவசியம்' என, அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும், ஒரே மாதிரியான வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, 'வாகன் 4' என்னும் புதிய மென்பொருளை, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் வழங்கி உள்ளது. அந்த மென்பொருள், 1ம் தேதி முதல் செயல்பட துவங்கி உள்ளது.அந்த மென்பொருளில், 'அலைபேசி போன், ஆதார், பான்' எண் உள்ளிட்ட விண்ணப்பதாரரின் முழுமையான விபரங்கள் இடம்பெறும் வகையில், விண்ணப்ப படிவம் வடிவமைக்கப் ...

அ.தி.மு.க., தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது...செல்லுமா?:சசி மீது கடும் எதிர்ப்புள்ள நிலையில் வருது சந்தேகம்:இரட்டை இலை கிடைப்பதில் சிக்கலை மறந்து திட்டம்:அன்னிய செலாவணி வழக்கில் அபராதம் பெற்றவர் ஆட்டம்

Posted: 15 Mar 2017 10:05 AM PDT

சசிகலாவுக்கு, மக்களிடம் கடும் எதிர்ப்பு நிலவும் நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், அவரது அக்கா மகன் தினகரன் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அபராதம் ஆகியவற்றையும் மீறி, அரசியலில் அவர் ஆட்டம் போட தீட்டியுள்ள திட்டம் செல்லுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள் ளது. எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதால், சசி அணியினர், ஆட்சியை தக்க வைத்து கொண்டனர். ஆட்சியை இழந்த பன்னீருக்கு, கட்சியின் கீழ்மட்ட ...

பலாத்கார வழக்கு: உ.பி., அமைச்சர் கைது

Posted: 15 Mar 2017 10:09 AM PDT

லக்னோ:பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டு, ஒரு மாதமாக தலைமறைவாகி இருந்த, உ.பி., அமைச்சர் காயத்ரி பிரஜாபதி, நேற்று கைது செய்யப்பட்டார்.

உ.பி.,யில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், முதல்வராக உள்ளார். இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, விரைவில் ஆட்சி அமைக்க உள்ளது. அதுவரை, அகிலேஷ் தலைமை யிலான அமைச்சரவையே,நிர்வாகத்தை கவனிக்கும். அகிலேஷ் அரசில், அமைச்சராக உள்ள, காயத்ரி பிரஜாபதி, 49, ஆறு பேருடன் சேர்ந்து, ஒரு பெண்ணை கூட்டாக, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின், மைனர் பெண்ணையும் பாலியல் ...

உ.பி., தேர்தல் வெற்றி; மோடிக்கு பாக்., சிறுமி வாழ்த்து

Posted: 15 Mar 2017 10:13 AM PDT

இஸ்லாமாபாத்:உத்தர பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி, வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

மக்களின் மனது
பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த, ஐந்தாம் வகுப்பு மாணவியான அகிதத் நவீத், 11, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள இரண்டு பக்க கடிதத்தில் கூறியுள்ளதாவது:மக்களின் மனதை வெல்வது சிறந்த வேலை என, என் தந்தை கூறியுள்ளார். நீங்கள், இந்தியமக்களின் மனதை வென்ற தால்தான், உ.பி., மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்.இந்தியர்கள் மட்டு மல்லாமல், ...

முதல்வரின் ஒரு நிமிட பேட்டி

Posted: 15 Mar 2017 10:17 AM PDT

கோவை:இடைப்பாடியிலிருந்து கோவை விமான நிலையத்துக்கு முதல்வர் பழனிசாமி வந்த வாகனத்துக்காக, ஆறு வழிச்சாலையில் மற்ற வாகனதாரர்களை அனுமதிக்காமல், போலீசார் கெடுபிடி செய்த தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கெடுபிடிகள்
முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊரான இடைப்பாடிக்குச் செல்வதற்கு, கோவைக்கு விமானத்தில் வந்து, இங்கிருந்து வாகனத்தில் செல்வதையே வழக்கமாக வைத்துள்ளார்.அவர் முதல்வராக பொறுப்பேற்ற பின், கோவையில் இருந்து வாகனத்தில் இரு முறை சென்றபோது, எந்த கெடுபிடிகளும் இல்லை. அவரது வாகனத்துடன், மற்ற வாகனங்களும், ஆறு ...

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் 4 பேர் 'ஆப்சென்ட்'

Posted: 15 Mar 2017 10:19 AM PDT

அ.தி.மு.க., சசி அணி, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் உட்பட, நான்கு எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்காதது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என, சசி அணி அறிவித்திருந்தது. நேற்று மாலை, 6:30 மணியில் இருந்து, 7:35 மணி வரை, கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அ.தி.மு.க., துணை பொதுச்செயல ராக தன்னை அறிவித்து கொண்ட தினகரன், கலந்து கொண்டார். சட்ட சபை கூட்டத்தில், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என, ஆலோசிக்கப்பட்டது.
பங்கேற்கவில்லை:
கூட்டத்தில், பன்னீர் அணி, எம்.எல்.ஏ.,க்கள், 12 பேரும் ...

தி.மு.க.,வில் 'வீக்' வேட்பாளர்; பன்னீர் அணியில் கடும் போட்டி

Posted: 15 Mar 2017 10:41 AM PDT

அ.தி.மு.க., பன்னீர் அணியில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட, நிர்வாகிகள் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., சசிகலா அணி, பன்னீர் அணி என, இரண்டாக பிரிந்துள் ளது. சசிகலா அணி சார்பில், அ.தி.மு.க., துணை பொதுச் செயலரும், சசிகலாவின் அக்கா மகனுமான தினகரன் போட்டியிடுகிறார்.சசிகலா குடும்பத்தினர் மீது, கட்சி தொண்டர் களுக்கும், பொதுமக்களுக்கும் வெறுப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில், தி.மு.க., சார்பில், மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத, பகுதிசெயலர் மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 'பண பலம், ஆட்சி பலத்துடன் ...

பணத்தைக் காட்டி வளைக்க முடியாது: தி.மு.க., வேட்பாளர் தடாலடி பேட்டி

Posted: 15 Mar 2017 11:37 AM PDT

ஆர்.கே.நகர் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட களமிறங்கி இருக்கும் டி.டி.வி.தினகரனை, மக்கள் சக்தி மூலம் வீழ்த்திக் காட்டுவேன் என்று, தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷ் கூறினார்.
அவர், தினமலர் இணையதளத்துக்கு அளித்த பேட்டி:
என்னுடைய குடும்பமே பாரம்பரியமான தி.மு.க., குடும்பம்தான். அம்மா பார்வதி நாராயணசாமி, ஏற்கனவே வார்டு 96ல் கவுன்சிலராக இருந்து பணியாற்றியவர். அதனால், மக்கள் பணி என்பது எங்கள் குடும்பப் பணி.
ஆர்.கே.நகரிலேயே பிறந்து வளர்ந்தவன் நான். இந்த தொகுதியின் சந்து, பொந்துகள் அனைத்துமே எனக்குத் தெரியும். ...

புதிய நோட்டுகள் அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது?

Posted: 15 Mar 2017 12:45 PM PDT

புதுடில்லி: 'புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ஒரு, 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க, 2.87 முதல், 3.09 ரூபாயும்; ஒரு, 2,000 ரூபாய் நோட்டை அச்சடிக்க, 3.54 முதல், 3.77 ரூபாயும் செலவாகிறது' என, பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணையமைச்சர், அர்ஜுன் ராம் மேஹ்வால், ராஜ்யசபாவில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ஒரு, 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க, 2.87 முதல், 3.09 ரூபாயும்; ஒரு, 2,000 ரூபாய் நோட்டை அச்சடிக்க, 3.54 முதல், 3.77 ரூபாயும் ...

அனைத்து பாதைகளும் 'பிராட்கேஜ்' ஆக மாற்றம்

Posted: 15 Mar 2017 01:49 PM PDT

புதுடில்லி : ''அடுத்த, ஐந்து ஆண்டுகளில், நாட்டின் அனைத்து ரயில் பாதைகளும், அகல ரயில் பாதைகளாக மாற்றப்படும்,'' என, ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் நேற்று, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது:
ரயில்வே துறையை மேம்படுத்த, மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த துறையில் பல லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை பெற, பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
ரயில்வே போக்குவரத்தை முன்னேற்றும் வகையில், அடுத்த, ஐந்து ஆண்டுகளில், நாட்டின் அனைத்து ரயில்வே பாதைகளும், அகல ரயில் பாதைகளாக ...

தமிழகத்தில் நவோதயா பள்ளி அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Posted: 15 Mar 2017 02:56 PM PDT

மதுரை : தமிழகத்தில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
குமரி மகாசபா செயலர் ஜெயக்குமார் தாமஸ் தாக்கல் செய்த பொதுநல மனு:
கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை, மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன.
75 சதவீதம்
ஜவஹர் நவோதயா வித்யாலயா என்பது, உண்டு, உறைவிடப் பள்ளி. அங்கு, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™