Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


டிவி, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்படலாம்: எச்சரிக்கை ரிப்போர்ட்

Posted: 08 Mar 2017 12:13 PM PST

வீடுகளில் உள்ள டிவிக்கள் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் ஒருவரது செயல்பாடுகளை உளவு பார்க்க முடியும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சிஐஏ எனப்படும் அமெரிக்க உளவு அமைப்பு, ஹேக் செய்யப் பயன்படுத்தும் உத்திகள் தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதளம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்மார்ட் டிவிக்கள், ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மூலம் உளவு பார்ப்பது குறித்த தொழில்நுட்பங்கள் குறித்து சிஐஏ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ...

இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!

Posted: 08 Mar 2017 12:00 PM PST

தமிழர்களின் தனிப்பெரும் உணவுச் சின்னமாக இருக்கும் இட்லி, தமிழக உணவுகளின் ராணியாகவே இருக்கிறது. நீராவியில் வேகவைக்கப்படும் இட்லி, எல்லா வயதினருக்கும் ஏற்றது; எளிதாக செரிமானமாகி தெம்பளிக்கும் சீரான உணவு. வயிற்றுக்கு பாதகம் செய்யாத பாதுகாப்பான இந்த உணவு, புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகளை தன்னகத்தேகொண்டது. இவை நாம் அறிந்த வரலாறு என்றாலும், இந்த நீண்ட பீடிகைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. உடலுக்குப் பாதுகாப்பான உணவாகக் கருதப்படும் இட்லியிலும் நோய்க்கிருமிகள் ஊடுருவிவிட்டன ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III

Posted: 08 Mar 2017 11:58 AM PST

வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் !

பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள்.....!!!!!

Posted: 08 Mar 2017 11:56 AM PST

பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள்.....!!!!! ♥நான் பிறந்த போது என்னைத் தூக்கி அரவணைத்தது ஒரு பெண் என் "அம்மா"..... ♥என் குழந்தைப் பருவத்தில் எனக்காகப் பரிந்து என்னுடன் விளையாடினாள் ஒரு பெண் என் "சகோதரி".....! ♥நான் பள்ளிக்கு சென்ற போது அன்புடன் கல்வி கற்பித்தவள் ஒரு பெண் என் "ஆசிரியை".....! ♥நான் கவலையுடன் இருந்த போது தோள் கொடுத்து ஆறுதல் சொன்னாள் ஒரு பெண் என் "தோழி".....! ♥எனக்கு உறவாகவும் உயிராகவும் துணையாகவும் இருந்தாள் ஒரு பெண் என் "மனைவி".....! ♥நான் கோபமாக ...

பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!

Posted: 08 Mar 2017 11:52 AM PST

பண்டிதமணி வாசஸ்பதி மிச்ரர் வியாசரின் வேதாந்த தரிசனத்துக்கு விளக்கவுரை எழுதியவர். எப்போது பார்த்தாலும் படிப்பதும் எழுதுவதுமாகவே இருக்கிறாரே என்று வருத்தப்பட்ட பெற்றோர், அவருக்கு பாமதி என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். திருமண மேடையில் கூட அவருடைய கையில் ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் இருந்தது. பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !! திருமணத்துக்குப் பிறகு வாசஸ்பதியும் பாமதியும் ஒரு பர்ணசாலையில் தங்கி இருந்தனர். அழகான இயற்கைச் சூழலில், அழகும் இளமையும் பொருந்திய பாமதி அருகில் இருந்தும்கூட, ...

கோகுலத்து கண்ணா கண்ணா

Posted: 08 Mar 2017 10:17 AM PST

படம்: கோகுலத்தில் சீதை இசை: தேவா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா – —————————— – என் நாவினில் இருப்பது சரஸ்வதியே என்னை பாட வைப்பது கணபதியே – கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா மானுமில்லை ராமனுமில்லை கோகுலத்தில் நானா சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை ராவணின் நெஞ்சில் காமமில்லை கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே – ஆசைக்கொரு ஆளானவன் ஆனந்தத்தில் கூத்தானவன் கோபியர்கள் நீராடிட கோலங்களை கண்டானவன் ஆசை அள்ளி கொண்டானவன் அழகை அள்ளி தின்றானவன் போதையிலே ...

இயற்கையும்! பெண்களும்!

Posted: 08 Mar 2017 09:51 AM PST

பெண்களும் இயற்கையும் ஒன்று! இரண்டும் புதிரானது! புரியாதது! நிலம், நீர், தீ, காற்று, வான் என இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் பெண்களைப் பிரதிபலிக்கின்றன! நிலம் பொறுமைக்குப் பெயர்பெற்றது நிலத்தை பூமாதேவி என்றுகூட அழைப்பதுண்டு! என்ன சிலநேரம் இந்த பூமாதேவிகூட பூகம்பமாய் வெளிப்படுவதுண்டு! நீர் எங்கும் நிறைந்தது. பெரும்பாலும் ஆறுகளுக்குப் பெண்களின் பெயர்கள்தான் இட்டுள்ளோம். கடலாகவும் அதில்தோன்றும் சிறு அலையாகவும் தோன்றும் நீர் சில நேரங்களில் பேரலையாக சுனாமியாக மிரட்டிச் செல்வதுண்டு! வழிபாட்டில் ...

வேலன்:-ஆங்கிலம் -இந்தி-மொழிபெயர்க்க

Posted: 08 Mar 2017 08:22 AM PST

வட இந்தியாவில் பெரும்பாலான மாகாணங்களில் இந்தி மொழிகளையே பேசுகின்றனர். இந்தியை தவிர பிற மொழிகளில் அவர்கள் பேசுவதில்லை. நாம் அவ்வாறு வட மாநிலங்களுக்கு செல்லும் சமயம் நமக்கு உதவவே இநத சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனைஇன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் இரண்டுவிதமான ஆப்ஷன்கள்கொடுத்துள்ளார்கள். ஆங்கிலத்திலிருந்து இந்தி..மற்றும் இந்தியிலிருந்து ஆங்கிலம் என டேப்புகள் கொடுத்துள்ளார்கள். முதலில் ...

ஜெ. சிகிச்சைக்கான ஆவணங்களில் கையெழுத்திட்ட குடும்பத்தார் யார்?: அரசுக்கு கேள்வி எழுப்பும் தீபா

Posted: 08 Mar 2017 08:05 AM PST

சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்த அரசு அறிக்கைகளில், 'குடும்பத்தார்' என கூறியிருப்பது யார் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எழுப்பியுள்ளார். எம்ஜிஆர்-அம்மா தீபா பேரவை நடத்தும் தீபா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளால் சந்தேகங்களும் கேள்விகளும் அதிகரிக்கின்றன. அவற்றிற்கு பதில் காண உடனடியாக நீதி விசாரணை தேவை. ஜெயலலிதாவுக்கு ...

இர்வின் பிரபுவுக்கு எத்தனை எருமைகள் சொந்தம்…

Posted: 08 Mar 2017 07:18 AM PST

– இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் பிரபு ஒரு முறை ஊட்டிக்கு வந்தார். அப்போது ஊட்டியில் வாழ்ந்த ஆதிவாசிகளின் தலைவனிடம், இவர் இர்வின் பிரபு செல்வச் சீமான்-என்று அறிமுகப்படுத்தப்பட்டார் – செல்வச் சீமானா? இவரிடம் எத்தனை எருமை மந்தைகள் உள்ளது? என்று கேட்டானாம் அந்தத் தலைவன். உடனே, இவரிடம் எருமை மந்தைகள் இல்லை,ஆனால் நிறையப்பொன் பொருள் உண்டு, என்று இர்வின் பிரபுவுடன் இருந்தவர்கள் சொன்னார்கள் – ஆனாலும் ஆதிவாசிகளின் தலைவனுக்குத் திருப்தி ஏற்படவில்லை. எனவே, நிறைய பொன், பொருள் உள்ளது என்று ...

திருமண தடை நீக்கும் திருமுருகனின் 108 போற்றி

Posted: 08 Mar 2017 06:48 AM PST

செவ்வாய் தோஷம், திருமணம் தடைப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் ஆறுமுகத்துடன் உள்ள முருகனை மனதில் உருவகித்து இந்த போற்றியை பாராயணம் செய்ய வேண்டும். - - தனலாபம், பூமிலாபம், எதிரிகளிடம் வெற்றி, செவ்வாய் தோஷ நிவர்த்தி, திருமணம் போன்றவைகளுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் ஆறுமுகத்துடன் உள்ள முருகனை வள்ளி தெய்வானையுடன் மனதில் உருவகித்து இந்த போற்றியை பாராயணம் செய்ய வாழ்வில் வளம் பெறலாம். ஓம் அழகா போற்றி ஓம் அறிவே போற்றி ஓம் அரன் மகனே போற்றி ஓம் அயன்மால் மருகா போற்றி ஓம் சக்திவேலவா சரவணா ...

சிறந்த நாடுகளின் பட்டியல் : இந்தியாவிற்கு 25வது இடம்

Posted: 08 Mar 2017 06:45 AM PST

- சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 25வது இடம் கிடைத்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் தொடர்பான உள்நாட்டு உற்பத்தி, மக்கள்தொகை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், சர்வதேச அளவில் சிறந்துவிளங்கும் நாடுகளின் பட்டியலை, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழகம், முன்னணி நிறுவனமான பிஏவி கன்சல்டிங் நிறுவனத்துடன் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் 36 நாடுகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ...

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2510 பணியிடங்கள்

Posted: 08 Mar 2017 06:41 AM PST

- பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு சேவை வழங்கும் இந்த நிறுவனத்தில் தற்போது ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'கேட்–2017 தேர்வின்' அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 510 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதில் தமிழ்நாட்டிற்கு 103 இடங்களும். சென்னை தொலைத் தொடர்பு மாவட்டத்தில் 37 இடங்களும், அண்டை மாநிலங்களான கேரளாவுக்கு 330 இடங்களும், கர்நாடகாவிற்கு 300 இடங்களும், மகாராஷ்டிராவில் 440 ...

மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல?

Posted: 08 Mar 2017 06:39 AM PST

- மார்ச் மாதத்துக்கு பல ஆண்டுகளாக மகளிர் வண்ணம் பூசப்படுகிறது. மார்ச் 8 உலக மகளிர் தினம் பல தளங்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மார்ச் 8ம் தேதியை பல வித வேதனைகளோடும், அவமானங்களோடும் பெண்ணினம் வரவேற்க காத்திருக்கிறது. ஹாசினி, நந்தினி, ரித்திகா ஆகியோரின் வன்புணர்வுக் கதறல் செவிகளில் அடங்கவில்லை. இன்னும் காதுக்கு வராத கயமைகள் எத்தனையோ…. பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஆதாரவாக செயல்பட வேண்டிய அமைப்புகள் தமிழகத்தில் இயங்காமல் ஸ்தம்பித்துப் போயுள்ளது. பெண்கள் பிரச்னைகள் ...

மனைவியை காதலிப்பது எப்படி?

Posted: 08 Mar 2017 06:33 AM PST

- தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை இயந்திரத்தனமாய் சுழலும் மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள். துணி துவைப்பதில் ஆரம்பித்து தரையை சுத்தம் செய்வது வரை நீங்களே மொத்த வேலையையும் செய்யுங்கள். மனைவி உச்சி குளிர்ந்து போவார். சமைக்கும்போது, துவைத்த துணிகளை மடித்த வைக்கும் பொழுது எதிர்பாராத நேரத்தில் சட்டென்று பின்பக்கமாக நின்றபடி அன்பாக கட்டிக் கொள்ளுங்கள். முடிந்தால் காதில் ஒரு செல்லக்கடி கடியுங்கள். 'ஆஹா என் புருஷனுக்கு என் மேல எவ்வளவு பாசம்!' ...

சோஷியல் மீடியால’னு சொல்றாங்களே, என்னய்யா அது?

Posted: 08 Mar 2017 04:20 AM PST

- தலைவர் வீட்டுக்கு ரெய்டு வந்த அதிகாரிங்க கடுப்பாயிட்டாங்களாமே, ஏன்? - தகவல் கசிந்ததுல,"ரெய்டாளர்களே, வருக'னு ப்ளெக்ஸ் வெச்சிருக்கார்! - எஸ்.ராசாமணி - ---------------------------------------- - எனக்கே பணம் இல்லைன்னு யாருய்யா சொன்னது...? - ஏடி.எம்.மெஷின்தான் தலைவ்வரே...!! - விகடபாரதி - ------------------------------------------ - மன்னா...போர் ஓலையை பார்த்து ஏன் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறீங்க..? - போர் ஓலையெல்லாம் இல்லை. சும்மா தமாஷாக , ஓலையில் கடி ஜோக்தான் எழுதி அனுப்பியுள்ளார் ...

சென்னையிலிருந்து விமானத்தை இயக்கும் பெண்கள் குழு

Posted: 08 Mar 2017 04:00 AM PST

-- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து 2 ஏர் இந்தியா விமானங்களை பெண்கள் மட்டுமே உள்ள குழு இயக்குகிறது. ஒரு விமானம் சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படுகிறது. அந்த விமானத்தை தீபா என்ற விமானி இயக்கவுள்ளார். இவருடன் 6 பெண்களும் சேர்ந்து பணியாற்றுகின்றனர். இதே போன்று சென்னையிலிருந்து சிங்கபூருக்கு செல்லும் விமானத்தையும் மற்றொரு பெண்கள் குழு இயக்குகிறது.

யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து?:மாணிக் வீரமணி

Posted: 08 Mar 2017 03:22 AM PST

- மொதல்லா மகளிர் எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.. யாருக்கு இந்த மகளிர் தின வாழ்த்து???? என் குடும்பத்து மகளிர் சிலர்கிட்ட வாழ்த்து சொன்னேன்..அதுக்கு கிடைச்ச பதிலை நீங்களே பாருங்க மக்கா.. அம்மா- (யோவ்..என்ன பெத்த அம்மாய்யா) சரி சரி.. "நாங்க ராசு மாமாவுக்கு மிளகாப்பழம் பறிக்க கிளம்பிட்டோம்..நீ சாயங்காலம் பேசு"…. என் தங்கை- "பெறகு கூப்புடுப்பா…உன் மருமகன ஸ்கூலுக்கு கிளப்பி விடனும்..துணி அலசனும்..பாத்திரம் கழுவனும்..மதியத்துக்கு மேல கூப்புடு"… சித்தி மகள்- "அண்ணே.. உன் மச்சான் ...

மகளிர் தின நல்வாழ்த்துகள்

Posted: 08 Mar 2017 01:55 AM PST


-

-

‘சமோசாவா... வேண்டவே வேண்டாம்!’ ....

Posted: 07 Mar 2017 09:23 PM PST

'சமோசாவா... வேண்டவே வேண்டாம்!' ...மருத்துவம் சொல்லும் காரணங்கள்.... எல்லா டீக்கடைகளிலும் தவறாமல் காணப்படும் ஒரு நொறுக்குத்தீனி, சமோசா. `மூணு பத்து ரூபா' என குட்டியூண்டு சைஸில் பேப்பர் கவரில் விற்கப்படுவது தொடங்கி, உள்ளங்கைகொள்ளாத சைஸ் வரை விதவிதமான வகைகள் உண்டு. சினிமா தியேட்டர்களில் இடைவேளையில் சமோசா கடித்து, டீ குடிக்காத தமிழ் ரசிகர்கள் வெகு குறைவு. மதுரைப் பக்கம் வெதுவெதுப்பான சூட்டில் வெங்காய மசாலா வைத்துப் பரிமாறப்படும் `சமோசா', அலாதிச் சுவைகொண்டது. சென்னை சௌகார்பேட்டை பகுதியில் ...

லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா !

Posted: 07 Mar 2017 09:12 PM PST

லஞ்சப் பட்டியலில்  முதலிடத்தில் இந்தியா ! புதுடில்லி:ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அதிகமாக லஞ்சம் புழங்கும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர். ஜெர்மனியைச் சேர்ந்த லஞ்சத்துக்கு எதிரான உரிமைகள் அமைப்பான, 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசு சாரா அமைப்பு, ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில், லஞ்சம் குறித்த ஆய்வை மேற்கொள்கிறது. கடந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை ...

எடப்பாடி பழனிச்சாமி அரசின் அடுத்த வசூல் திட்டம் - குப்பைகள் கொட்ட இனி மாத கட்டணம்!

Posted: 07 Mar 2017 08:51 PM PST

நகராட்சிகளில் ஏப்ரல் முதல் மேலும் ஒரு புதிய வரி: குப்பைகள் கொட்ட இனி மாத கட்டணம்! * வீடுகளுக்கு ரூ.30-ரூ.80; நிறுவனங்களுக்கு ரூ.300-ரூ.௫௦௦ * எடப்பாடி பழனிச்சாமி அரசின் அடுத்த வசூல் திட்டம் சேலம்: வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளுக்கு இனி மாதம் தோறும் நகராட்சிகளில் கட்டணம் வசூலிக்கப்படும். வீடுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.30 முதல் ரூ.80 வரையிலும், தனியார் நிறுவனங்களில் அதிகபட்சமாக ரூ.500 வரையிலும் மாதம் தோறும் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான ...

12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை

Posted: 07 Mar 2017 08:39 PM PST

லக்னோ: உ.பி.,யின் லக்னோவில் வீட்டில் பதுங்கிய பயங்கரவாதியை, 12 மணி நேர போராட்டத்துக்கு பின், பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் சுட்டுக் கொன்றனர். ரயில் குண்டுவெடிப்பு: ம.பி.,யில், போபால் - உஜ்ஜயின் ரயிலில், நேற்று(மார்ச்,7) காலை, வெடிகுண்டு வெடித்ததில், எட்டு பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் பயங்கரவாதி ஒருவன், உ.பி.,யின் லக்னோவில் பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு, மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. வீட்டில் பதுங்கல்: லக்னோவின் ...

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

Posted: 07 Mar 2017 08:38 PM PST

- நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும், தனுஷின் மனைவியும், இயக்குநருமான ஐஸ்வர்யா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா., சபையின் தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. சபையில் மகளிர் தின சிறப்பு விழாக்கள் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் ஒருபகுதியாக, ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதற்காக தீவிர நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஐஸ்வர்யா. ...

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்

Posted: 07 Mar 2017 08:35 PM PST

-- ''நல்லூர் பெருமணமேவி யென் நெஞ்சு நின்றாடி யல்லலறுத்தே புவியோம்பும் பிரானை தொழுதார் பிறவாரே பிறந்தடித்த பண்டை வினை யறுப்ப மிருகண்டு சாட்சியே"                                 - என்றார் அகப்பைச் சித்தர். நல்லூர் பெருமணம் என்பது கோயில் இருக்கும் இடம். இது ஆச்சாள்புரத்தின் முன்னைப் பெயர். பிறவாமை வேண்டும் என்று ஒவ்வொரு அடியவரும்   முயல்கின்றனர். சிலர் வெற்றி பெறுவதும் பலர் தோல்வி அடைவதும் உண்டு. ஆனால், இத்திருக்கோயிலின் சிவபெருமானாம் அருள்மிகு சிவலோகத்தியாகர்   பெருமானை அடி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™