Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உ.பி.,யில் ஆட்சி அமைக்கப் போவது... யார்?: தொங்கு சட்டசபை ஏற்படலாம் என கணிப்பு

Posted: 08 Mar 2017 08:12 AM PST

லக்னோ:மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, உத்தர பிரதேச மாநில சட்டசபைக்கான தேர்தல் முடிந்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந் துள்ளது. மும்முனை மற்றும் கடும் போட்டி நிலவுவதால், தொங்கு சட்டசபை ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பு தொற்றியுள்ளது.

முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அமைந்துள்ள உத்தர பிரதேசம் உட்பட, ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நேற்றுடன் முடிந்தது. இதில், உத்தர பிரதேச தேர்தல், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.விரைவில் ...

ஐ.எஸ்., ஆதரவு பயங்கரவாதி சுட்டுக் கொலை

Posted: 08 Mar 2017 08:25 AM PST

லக்னோ: ம.பி.,யில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப் படும் பயங்கரவாதி, நீண்ட நேர போராட்டத்திற்கு பின், சுட்டுக் கொல்லப்பட்டான்.

ம.பி.,யில், போபால் - உஜ்ஜயின் ரயிலில், நேற்று முன்தினம் காலை, குண்டு வெடிப்பு ஏற்பட்டு, எட்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பயங்கரவாதி, உ.பி.,யின் லக்னோவில், ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று முன்தினம் மதியம், லக்னோ வின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டை, போலீசார் சுற்றி வளைத்தனர். ஒரே ஒரு பயங்கரவாதி தான், வீட்டினுள் பதுங்கி ...

'கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதி கிடைத்தது' : 'நீட்' குறித்து தமிழக அமைச்சர்கள் பேட்டி

Posted: 08 Mar 2017 08:29 AM PST

'நீட் தேர்விலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வைக்கப்பட்ட கோரிக்கையை, கனிவுடன் பரிசீலிப்பதாக, மத்திய அரசிட மிருந்து உறுதி கிடைத்துள்ளது' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை, பிளஸ் 2 தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படை யிலேயே இருந்து வந்த நிலையில், 'நீட்' எனப்படும், தேசிய தகுதி நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் விதமாக, மசோதாவை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய, மாநில அரசுகள் ...

உள்ளாட்சி தேர்தல் : ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 08 Mar 2017 08:50 AM PST

சென்னை: 'உயர் நீதிமன்றம் அறிவித்த கெடுவுக்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் நடத்து வதற்கான முன்னேற்பாடு நடவடிக்கை களில் கூட, மாநில தேர்தல் கமிஷனோ, குற்ற வாளி யின் பினாமி அரசோ ஈடுபட வில்லை. அ.தி.மு.க.,வுக்குள் நடக்கும் உட்கட்சி
சண்டை யில், யாருக்கு சின்னம் ஒதுக்குவது, இந்த நேரத் தில் தேர்தலை நடத்தலாமா என்ற கவலை, மாநில தேர்தல் கமிஷனருக்கு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில், ஜனநாயக தீபத்தை ஏற்றி வைக்க ...

சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் ஒழியும் வரை தர்ம யுத்தம்... 'ஓயாது!': உண்ணாவிரதப் பந்தலில் பன்னீர்செல்வம் சூளுரை: மாநிலமெங்கும் ஆதரவு தெரிவித்து ஒன்று கூடினர் மக்கள்

Posted: 08 Mar 2017 09:02 AM PST

'சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் ஒழியும் வரை, தர்மயுத்தம் ஓயாது,'' என, ஜெ., மர்ம மரணம் குறித்து, நீதி விசாரணை கோரி நடத்தப் பட்ட உண்ணா விரத பந்தலில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சூளுரைத்தார்.

ஜெ., மரணத்தில் உள்ள, மர்மங்களைக் கண்டறிய, சி.பி.ஐ., விசாரணை கோரி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியி னர், நேற்று மாநிலம் முழுவதும், 33 இடங் களில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டு மின்றி, பொது மக்களும் ஒன்று திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்ட ரங்கம் அருகில் நடந்த உண்ணாவிரதத்தில், ...

அரசு விழாவில் மக்கள் கூட்டம் குறைவு சுருக்கமாக பேச்சை முடித்த முதல்வர்

Posted: 08 Mar 2017 09:26 AM PST

மதுரை:ஆட்களுக்கு பணம் வழங்கியும், மதுரையில் நடந்த அரசு விழாவுக்கு கூட்டம் வரவில்லை. இதனால், நலத்திட்டங்களை வழங்கி 25 நிமிடங்களில் பேசி முடித்தார் முதல்வர் பழனிசாமி.

மதுரை உட்பட ஆறு மாவட்டங்களுக்கான ஆயிரத்து நான்கு கோடி ரூபாயில் திட்டப் பணிகள் துவக்க விழா, 'உலக தமிழ்சங்கத்தில்' நடந்தது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் நடத்திய உண்ணாவிரதத்திற்கு பெரும்பாலான தொண்டர்கள் சென்று விட்டனர். இதனால், பணம் வழங்கி அரசு பஸ்கள் மூலம் ஆட்களை அழைத்து வர அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார் ஏற்பாடு செய்தனர்; இருப்பினும்கூட்டம் வரவில்லை. ...

தமிழக பட்ஜெட் 16ம் தேதி தாக்கல்: பரபரப்புக்கு பஞ்சமிருக்காது

Posted: 08 Mar 2017 09:29 AM PST

தமிழக பட்ஜெட், வரும், 16ம் தேதி, சட்டசபை யில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக அரசு, கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. கடந்த, 2016 - 17ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், 15,854 கோடி ரூபாய், வருவாய் பற்றாக்குறை காண்பிக்கப்பட்டது. திருத்திய வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில், நிதி பற்றாக்குறை, 40,534 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது.நடப்பு நிதியாண்டில், 1,000 மதுக் கடைகள் மூடல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு,பத்திரப்பதிவு நிறுத்தம், 'வர்தா' புயல், கடுமையான வறட்சி உட்பட பல்வேறு காரணங்க ளால், அரசின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து வர ...

ஜெ., மரணத்தில் நீதி விசாரணை கேட்டு உண்ணாவிரதத்தில் குவிந்த தொண்டர்கள்

Posted: 08 Mar 2017 09:34 AM PST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து, மத்திய அரசின் நீதி விசாரணை வேண்டி, பன்னீர்செல்வம் அணி சார்பில் நேற்று, தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், நிர்வாகிகள், தொண்டர்கள் என, ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.

சேலம், கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு, காலை, 9:00 மணி முதல், கட்சி நிர்வாகி கள், தொண்டர்கள், பெண்கள் குவிந்தனர்.மேட்டூர், எம்.எல்.ஏ., செம்மலை பேசியதாவது: இது, காசு கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல; தானாக சேர்ந்த கூட்டம். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து, சி.பி.ஐ., மூலமாகவோ, வேறு அமைப்புகள் மூலமாகவோ, மத்திய ...

நீதி விசாரணை வரும்; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்!

Posted: 08 Mar 2017 09:37 AM PST

''ஜெ., மரணம் தொடர்பாக, நீதி விசாரணை வரும்; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப் படுவர்,'' என, முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியன் தெரிவித்தார்.

சிக்கப்போவது யார்?
சென்னையில் நடந்த, உண்ணாவிரத போராட்டத் தில், அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு, செப்., 22ல் இருந்து, டிச., 5 வரை நடந்த சதி திட்டம் குறித்து, போலீசார் விசாரிக்கவே இல்லை. மத்திய அரசும் விசாரணைக்கு உத்தர விட வில்லை. இந்த சதியில் சிக்கப்போவது யார் என்பது, உங்களுக்கு தெரியும்.ஒவ்வொரு குற்றவாளி யும், ஒரு அடையாளத்தை விட்டு செல்வான். போயஸ் கார்டனில், ஜெ., வசித்த இடத்தை பார்த்தால், நானே ...

வெளிநாட்டு வேலை கிடைத்தும் சேர முடியலை - அண்ணா பல்கலை மாணவர்கள் தவிப்பு

Posted: 08 Mar 2017 10:56 AM PST

அண்ணா பல்கலையில் பட்ட சான்றிதழ் கிடைக்காமல், லட்சக்கணக்கான இன்ஜினியர்கள், வெளிநாடு வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில், அரசு கல்லுாரிகள், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள் என, 600க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இவை அனைத்தும், அண்ணா பல்கலை பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. தன்னாட்சி கல்லுாரிகள் மட்டும், சில பாடங்களுக்கு தாங்களே பாடத்திட்டம் தயார் செய்து, பல்கலை அனுமதி பெற்று, பாடம் நடத்துகின்றன.
இந்த ...

கூடங்குளம் அணு மின் உற்பத்தி; தமிழக எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

Posted: 08 Mar 2017 12:07 PM PST

கூடங்குளம் அணு மின் நிலையத்தின், இரண்டாவது அணு உலையில், வணிக மின் உற்பத்தி எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில், மின் வாரியம் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. அங்கு, 1,000 மெகாவாட் திறனில், இரண்டு அணு உலைகள் உள்ளன. இரு உலைகளிலும், தலா, 563 மெகாவாட் மின்சாரம், தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் அணு உலையில், 2014 இறுதியில், வணிக மின் உற்பத்தி துவங்கியது. இரண்டாவது உலையில், கடந்த ஆண்டு சோதனை உற்பத்தி துவங்கியது. இதுவரை, வணிக உற்பத்தி துவங்கவில்லை.
கோடை காலம் ...

முதல்வர் மகனின் சொந்து மதிப்பு 5 மாதங்களில் 23 மடங்கு அதிகரிப்பு

Posted: 08 Mar 2017 01:43 PM PST

ஐதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன், நரலோகேஷின் சொத்து மதிப்பு, ஐந்து

மாதங்களில், 23 மடங்கு அதிகரித்து, 330 கோடி ரூபாயாகி உள்ளது.
வேட்பு மனு தாக்கல்:
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலராக, அவர் மகன், நரலோகேஷ், 34, உள்ளார். ஆந்திர சட்ட மேல்சபை தேர்தலுக்கு, நேற்று முன்தினம், லோகேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், லோகேஷின் சொத்து மதிப்பு, 330 கோடி ரூபாயாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து ...

பன்னீர் அணி உண்ணாவிரதம்; சசி தரப்பினர் கொண்டாட்டம்

Posted: 08 Mar 2017 02:46 PM PST

பன்னீர்செல்வம் தலைமையிலான, அ.தி.மு.க., சார்பில், மாவட்டத் தலைநகரங்களில், நேற்று(மார்ச் 8) உண்ணாவிரதம் நடந்தது. இதில், அவரது ஆதரவு தொண்டர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரத்தில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், சசிகலா ஆதரவு மகளிர் அணி சார்பில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட பெண்களுக்கு, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர், கம்ப்யூட்டர், லேப்டாப், தையல் இயந்திரம், இட்லி பானை, சலவை இயந்திரம், புடவை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
- நமது நிருபர் - ...

'குற்றவாளிக்கூண்டு காத்திருக்கு'; சசி கும்பலுக்கு 'நத்தம்' எச்சரிக்கை

Posted: 08 Mar 2017 03:34 PM PST

திண்டுக்கல்: ''ஜெயலலிதா மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரும் கூண்டில் ஏற்றப்படுவர்,'' என, அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

பச்சோந்திகள்:
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை கோரி, திண்டுக்கல்லில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது: இந்த உண்ணாவிரதத்தை கண்டு ஆளும் தரப்பினர் புலம்புகின்றனர். இந்த போராட்டத்திற்கு செல்லவிடமால், தொண்டர்களை அமைச்சர்கள் தடுக்கப் பார்த்தனர்; அது முறியடிக்கப்பட்டுவிட்டது.நாங்கள் ஓ.பி.எஸ்., அணியல்ல; ஜெ., அணி. 'வெகுமதி கிடைக்கும்' என எதிர்பார்த்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™