Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !

Posted: 07 Mar 2017 09:12 AM PST

அந்த இளம் தம்பதியினர் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர் . நீண்ட நேரம் காத்திருந்தனர் . எந்த பஸ்ஸும் வரவில்லை . சிறிதுநேரம் கழித்து ஒரு பஸ் வந்தது . கையைக் காட்டி பஸ்ஸை நிறுத்தினர் தம்பதியினர் . பஸ் நின்றதும் தம்பதிகள்  ஏற  முயன்றனர் . உடனே கண்டக்டர் அவர்களை பார்த்து , " பஸ்ஸுல இடம் இல்லை ; Seating மொத்தம் 60 பேர்தான் . எல்லாம் Full ஆகிவிட்டது . நீங்கள் வருவதனால் நின்றுகொண்டுதான் வரவேண்டும் . சம்மதம் என்றால் ஏறிக்கொள்ளுங்கள் ; இல்லையென்றால் அடுத்த பஸ் வரும்வரையில் காத்திருங்கள் " என்று சொன்னார் ...

வேலன்:-எம்பி3 ரிக்கார்டர்.

Posted: 07 Mar 2017 08:02 AM PST

கணிணியில் நாம் காணும் வீடியோ மற்றும்ஆடியோ பைல்களிலிருந்து எம்.பி.3 பார்மெட்டில் ஆடியோவினை ரிக்கார்ட் செய்ய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.72 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான ஆடியோவின் பைட் அளவுகளை தேர்வு செய்யவும். பின்னர் சேமிக்கும் இடத்தனை தட்டச்சு செய்யவும். நீங்கள் சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்யவில்லையென்றால் டீபால்டாக அதுவே சேமிக்கும் ...

சசிகலாவை சந்தித்த அமைச்சர்களின் பதவியை பறிக்க ஐகோர்ட்டில் வழக்கு

Posted: 07 Mar 2017 07:23 AM PST

பெங்களூரு : 'பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, துமகூரு மகளிர் மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும்; அவரை பார்த்த நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, கர்நாடக ஐகோர்ட்டில், 'டிராபிக்' ராமசாமி வழக்கு தொடர்ந்து உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார். அவரை, தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத் துறை அமைச்சர் காமராஜ், ...

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு; ராமேஸ்வரம் மீனவர் பலி

Posted: 07 Mar 2017 06:01 AM PST

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் பலியானார். துப்பாக்கிச்சூடு: இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ(22) என்பவர் கழுத்தில் குண்டு பாய்ந்து பலியானதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன. அச்சமடைந்த மீனவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை திரும்பிக் கொண்டிருப்பதாக தகவல்கள் ...

ஐ.நா.வின் தடையை மீறி, ஒரே நாளில் 4 நவீன ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா மிரட்டல்

Posted: 07 Mar 2017 05:47 AM PST

ஐ.நா.வின் தடையை மீறி வடகொரியா ஒரே நாளில் 4 அதிநவீன ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் செலுத்தி அச்சுறுத்தியது. மார்ச் 07, 04:45 AM சியோல், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கடும் கண்டனம் தெரிவித்தார். - தனது அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா ஆயுதங்களை குவித்தும், போர் ஒத்திகையில் ஈடுபட்டும் வருகிறது. இதனால் தென்கொரியாவின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவிக் கரம் நீட்டி உள்ளது. - கடந்த வாரம் இரு நாடுகளும் தென்கொரிய கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியை தொடங்கின. இதற்கு வடகொரியா ...

உன் முகவரி – கவிதை

Posted: 07 Mar 2017 04:11 AM PST


-
-ப்ரணா
தானியம் கொத்தும் குருவிகள் –
கவிதை தொகுப்பிலிருந்து

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்

Posted: 07 Mar 2017 03:19 AM PST

இந்த தளத்திற்கு  சென்று உங்களுக்கு தேவையானதை படிக்கவும்.


http://tamilpdfworld.blogspot.in

அன்புடன்


அருள்

தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும்

Posted: 06 Mar 2017 11:54 PM PST

தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் விளக்கம் தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை சார்பில் 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடலாமா வேண் டாமா என்ற குழப்பம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. இந்த தடுப்பூசி பற்றி மத்திய சுகா ...

ஐதராபாத் விமானநிலையம் உலகளவில் முதலிடம்!

Posted: 06 Mar 2017 10:48 PM PST

- சிறந்த சேவைகளை பயணிகளுக்கு வழங்குவதில் உலகளவில் முதல் இடத்தை தட்டிச் சென்றுள்ளது ஐதராபாத் சர்வதேச விமான நிலையம். 9 வருடமாக செயல்பட்டு வரும் ஐதராபாத் விமானநிலையம் வருடத்திற்கு 12 மில்லியன் பயணிகள் வந்து செல்வதற்கான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது. பிறகு 2016-ம் ஆண்டில் 15 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் அளவிற்கு வளர்ந்தது. இந்நிலையில் சர்வதேச விமான நிலைய கவுன்சில் நடத்திய சிறந்த சேவையை மக்களுக்கு அளிக்கும் விமான நிலையங்களின் தரப்பட்டியலில் அந்த ஐதராபாத் விமான நிலையமானது 5-க்கு ...

”எனக்குப் பேசக் கத்துக்கொடுத்த அம்மாவால…

Posted: 06 Mar 2017 10:47 PM PST

"எனக்குப் பேசக் கத்துக்கொடுத்த அம்மாவால நான் பேசுறதைக் கேக்க முடியாது!" – நெகிழும் ஈரோடு மகேஷ் - - உலகின் ஆகச்சிறந்த அன்பின் அடையாளம் 'அம்மா'!. இன்பம், துன்பம், வெறுப்பு, கோபம், அழுகை, ஆரவாரம் என எதுவாக இருந்தாலும் அதைத் தயக்கமின்றி ஓர் உறவிடம் காட்ட முடியுமென்றால் அது தாய்தான். அம்மாவுக்கு இணை அம்மா மட்டும்தான். பிள்ளைக்கு எப்போது பசிக்கும், எப்போது தூக்கம் வரும், எதற்காக அழுகிறான் என்றெல்லாம் மிக நுட்பமாய் உணரும் ஜீவன் தாய் மட்டுமே!. தாயின் சிறப்பை வெறும் வார்த்தைகளில் வண்ணம் ...

விமர்சனம் – கவிதை

Posted: 06 Mar 2017 10:43 PM PST


-
-ப்ரணா
தானியம் கொத்தும் குருவிகள் –
கவிதை தொகுப்பிலிருந்து

தேசிய மூத்தோர் தடகள போட்டி

Posted: 06 Mar 2017 10:42 PM PST

- சென்னை : தேசிய மூத்தோர் தடகள போட்டி ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 83 வயது முதியவர்… 80 முதல் 85 வயது பிரிவில் பங்கேற்ற சென்னை அண்ணா நகரை சேர்ந்த நம்பிசே‌ஷன் 3 தங்கம் வென்றார். 83 வயதான அவர் 800 மீட்டர், 1,500 மீட்டர் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வென்று முத்திரை பதித்தார். சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய மூத்தோர் தடகள போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். – ———————————————- தினபூமி

டெரராவா இருக்கேன்…!!

Posted: 06 Mar 2017 10:40 PM PST

ரிப்போர்ட்ல உடம்பை பற்றி என்ன எழுதியிருக்கிறாரு...?

Posted: 06 Mar 2017 10:39 PM PST

அமெரிக்காவுக்குள் நுழைய 6 நாட்டினருக்கு 90 நாட்கள் தடை

Posted: 06 Mar 2017 07:54 PM PST

- அகதிகளை அனுமதிக்கும் பணி, 120 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும் புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மார்ச் 07, 04:15 AM வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி 27–ந் தேதி, சிரியா நாட்டு அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய காலவரையற்ற தடை விதித்தும், ஈராக் உள்பட 6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 90 நாட்கள் தடை விதித்தும் ஒரு உத்தரவில் கையெழுத்திட்டார். ஆனால் அந்த உத்தரவுக்கு சியாட்டில் நகரில் உள்ள கோர்ட்டு தடை விதித்து விட்டது. இதையடுத்து, புதிய உத்தரவு ...

ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்தால் குதிகால் வலி வருமா?

Posted: 06 Mar 2017 04:49 PM PST

-- நான் சமீபகாலமாக ஹைஹீல்ஸ் செருப்பு அணிகிறேன். இதைத் தொடர்ந்து அணிந்தால் குதிகால் வலி வரும் என்று எச்சரிக்கிறாள் என் தோழி. இது உண்மையா? உங்கள் தோழி சொல்வது உண்மைதான். - ஹைஹீல்ஸ் செருப்புகளை அணிபவர்களுக்குக் குதிகால் வலி வருவதற்கான சாத்தியம், மற்றவர்களைவிடப் பல மடங்கு அதிகம். இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், குதிகால் வலி எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எது குதிகால் வலி? - நம் பாதத்தில் 'பிளான்டார் அப்போநீரோசிஸ்' (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து ...

மாலியில் ராணுவ வீரர்கள் 11 பேர் சுட்டுக்கொலை

Posted: 06 Mar 2017 04:43 PM PST

- மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் அல்–கொய்தாவுடன் நெருங்கிய தொடர்புடைய பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் வெளிநாட்டினரை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மார்ச் 07, 02:42 AM பமாகோ, இந்த நிலையில், புர்கினா பாசோ நாட்டின் எல்லையையொட்டி அமைந்து உள்ள ராணுவச்சாவடிகள் மீது நேற்று அதிகாலையில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை தொடுத்தனர். பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். --------------------------------------- தினத்தந்தி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™