Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அதிக லஞ்சம் புழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா... 'நம்பர் ஒன்':காரியம் சாதிக்க பெரும்பாலான மக்கள் தாராளம்

Posted: 07 Mar 2017 08:39 AM PST

புதுடில்லி:ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அதிகமாக லஞ்சம் புழங்கும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

ஜெர்மனியைச் சேர்ந்த லஞ்சத்துக்கு எதிரான உரிமைகள் அமைப்பான, 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசு சாரா அமைப்பு, ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில், லஞ்சம் குறித்த ஆய்வை மேற்கொள்கிறது. கடந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஆசியா - பசிபிக்கில் உள்ள, 16 நாடுகளைச் ...

இன்றைய உண்ணாவிரதத்தில் பலத்தை காட்ட பன்னீர் அணி... தீவிரம்!:கூட்டம் அதிகம் குவியாமல் தடுக்க சசிகலா ஆதரவாளர்கள் சதி:ஜெ., மரண சர்ச்சையை லோக்சபாவிலும் எழுப்ப எம்.பி.,க்கள் முடிவு

Posted: 07 Mar 2017 09:00 AM PST

இன்றைய உண்ணாவிரதத்தின் மூலமாக, அ.தி.மு.க.,விலும், பொதுமக்களிடத்திலும், தங்களுக்கு உள்ள பலத்தை காட்டும் முயற்சியில், பன்னீர் அணியினர் தீவிரமாக உள்ளனர்.

அதேநேரத்தில், கூட்டம் அதிகம் குவியாமல் தடுக்க, சசிகலா தரப்பினர், எல்லா வகையிலும் சதி வேலைகள் செய்துள்ளனர். உண்ணா விரதத்தை தொடர்ந்து, லோக்சபாவில், ஜெ., மரண சர்ச்சையை கிளப்ப, பன்னீர் ஆதரவு, எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர்.அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும், சசிகலா குடும்பத்தினர் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கிஉள்ளார். ...

ஆதார் எண் பெறாதவர்களும் அரசின் சலுகைகளை பெறலாம்

Posted: 07 Mar 2017 09:09 AM PST

புதுடில்லி:'ஆதார் எண் பெறாத நபர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து, அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகளை பெறாலாம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில், ரேஷன் பொருட்கள், சமையல் காஸ் உள்ளிட்ட பலவற்றிற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதே போல், பள்ளி கல்லுாரி களில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப் படுகிறது. இது போல், பல்வேறு திட்டங்களின் கீழ், மானியங்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.தகுதியற்ற நபர்களுக்கு அரசின் சலுகைகள் போய் சேர்வதால், அரசு நிதி ...

'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் பொருளாதார பாதிப்பில்லை': மோடி

Posted: 07 Mar 2017 09:27 AM PST

ஆமதாபாத்:''செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையவில்லை. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, தன் சொந்த மாநில மான குஜராத்தில், நேற்று பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்றார்; தாகேஜ் என்ற இடத்தில், வர்த்தக துறை நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர் பேசியதாவது: பழைய, 500 - 1,000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித் தன; பொருளாதாரம் பெரிய பின்னடைவை சந்திக் கும் என்றன. ஆனால், செல்லாத ரூபாய்நோட்டு அறிவிப்பால் பொருளாதாரம் ...

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டணம் உயர்வு

Posted: 07 Mar 2017 09:31 AM PST

அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், மிகவும் பிற்படுத் தப்பட்டோர், பட்டம் பெற்றவராக இருந்தால், மூன்று முறை, கட்டணமின்றி, இலவசமாகத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. இனி, பட்டம் பெற்றவர்கள் மட்டுமின்றி, கல்வித் தகுதி எதுவாக இருந்தாலும், மூன்று முறை, இலவச மாகத் தேர்வு எழுத அனுமதிக்க, அரசு உத்தர விட்டுள்ளது. அத்துடன் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ...

செயற்கை மழை பொழிய வைக்க கேரளா அரசு புதுமை திட்டம்

Posted: 07 Mar 2017 09:33 AM PST

திருவனந்தபுரம்:கேரளாவில் நிலவும் கடுமை யான வறட்சியை சமாளிக்கும் வகையில், செயற்கை மேகங்களை ஏற்படுத்தி, மழை பொழிய வைக்கும் தொழில்நுட்பத்தை பயன் படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், மார்க்.கம்யூ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுவதை அடுத்து, எதிரணியில் உள்ள, காங்., தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி, சட்டசபையில் நேற்று, ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய, முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
நுாறு ஆண்டுகளில் ...

முதல்வர் விழாவில் டிரைவர், கண்டக்டர்கள்:40 சதவீத பஸ்கள் ஓடாமல் பயணிகள் அவதி

Posted: 07 Mar 2017 09:38 AM PST

சேலம்:முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில், கூட்டம் காட்டுவதற்காக, அரசு போக்குவரத்து கழகங்களில், 1,500 டிரைவர், கண்டக்டர்களை கட்டாய விடுப்பில், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அழைத்து சென்றனர்.

நாற்பது சதவீத பஸ்களின் இயக்கத்தை அதிகாரிகள், 'கட்' செய்ததால், பயணிகள் அவதிக்குஉள்ளாகினர்.சொந்த மாவட்டமான, சேலத்துக்கு முதல்வர் பழனிசாமி நேற்று வந்தார். முதல்வரை வர வேற்க, அண்ணா தொழிற்சங்கத்தின் மண்டல செயலர் சென்ன கிருஷ்ணன், இரவோடு இரவாக, தொழிலாளர் களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டார்.டிப்போவுக்கு, 50 தொழிலாளர்கள் கட்டாயம் வரவேண்டும் என ...

ஜெ., மரணம் பற்றிய 14 கேள்விகளுக்கு பதில் இல்லை! : முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

Posted: 07 Mar 2017 09:46 AM PST

''அப்பல்லோ அளித்த முதல் தகவல் அறிக்கைக்கும், தற்போது வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எங்களுக்கு, 14 கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை,'' என, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., நியமன பொதுச் செயலர் விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?ஜெ.,வால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளாகும் நிலையில், தினகரன் மன்னிப்பு கடிதத்தை யார் ஏற்றது? தேர்தல் நடத்தி, புதிய பொதுச் செயலர் நியமிக்கப்படும் வரை, கட்சியை வழிநடத்தும் பொறுப்பு, கட்சியின் அவைத் தலைவர் மற்றும் ...

ஜெ., மரணத்தில் நீதி விசாரணை தேவை: ஸ்டாலின்

Posted: 07 Mar 2017 09:50 AM PST

சென்னை:''ஜெயலலிதா மரணம் தொடர்பான, தமிழக அரசின் அறிக்கையில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், நீதி விசாரணை நடத்தி, மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது பேட்டி:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்வது என்றால், முதலில் பன்னீர்செல்வத்தை தான் விசாரிக்க வேண்டும் . என, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்அரசின் சார்பில், திடீரென அறிக்கை வெளியிடப் பட்டு உள்ளது. அதில், இருக்கக்கூடிய வாசகங்கள், வேதனையாக மட்டுமல்ல, வேடிக்கையாகவும் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்,2016 ...

லஞ்சம் கொடுப்பதில் இந்தியா டாப்

Posted: 07 Mar 2017 10:36 AM PST

புதுடில்லி: லஞ்சம் கொடுப்பது தொடர்பாக ஆசிய பசுபிக் நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளில் அரசு பணிகளுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில், சர்வதேச அமைப்பு இந்த ஆய்வை எடுத்தது. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஆய்வு முடிவு: 16 நாடுகளில் வசிக்கும் மக்களில் நான்கு பேரில் ஒருவர் அல்லது 90 கோடி பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர். இந்த நாடுகளில் வசிக்கும் மக்களில் 22 ஆயிரம் பேர் லஞ்சம் ...

மீனவர் பிரச்னை குறித்து பார்லி.,யில் குரல் எழுப்புவோம்: தம்பிதுரை

Posted: 07 Mar 2017 11:48 AM PST

சென்னை: தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக பார்லிமென்டில் குரல் எழுப்புவோம் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‛‛இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டது குறித்து பார்லிமெண்டில் குரல் எழுப்புவோம். கச்சத்தீவை மீட்பது மட்டுமே மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும். ஜெ., மரணம் குறித்த மருத்துவ அறிக்கையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியலுக்கு அப்பார்பட்டு பார்க்க வேண்டும்'' ...

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சமஸ்கிருதம்: நிர்மலா சீதாராமன்

Posted: 07 Mar 2017 12:42 PM PST

சென்னை : ''நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். சமஸ்கிருதத்தை, அதில் சேர்க்கச் சொல்லி, மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்,'' என, மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னையில் உள்ள சமஸ்கிருத கலலுாரியில், 'ஆன்லைன்' வாயிலான, 'டிஜிட்டல்' வழி படிப்புகளை அறிமுகம் செய்து வைத்த பின், அவர் பேசியதாவது:சமஸ்கிருதம், டிஜிட்டல் முறையில், கற்பிப்பதற்கு உலகிலேயே சிறந்த மொழி. இன்றளவும், உலகின் பல்வேறு நாடுகளில் பேசப்படும் மொழிகளில், சமஸ்கிருத வார்த்தைகளை அதிக அளவில் ...

'எச்1 பி' விசா பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ரவிசங்கர் பிரசாத்

Posted: 07 Mar 2017 02:28 PM PST

புதுடில்லி: அமெரிக்க அரசின் 'எச்1 பி' விசா பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்தார்.

விரைவில் தீர்வு:
இதுகுறித்து மத்திய சட்டத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது: 'எச்1 பி' விசா நடைமுறையில், அமெரிக்க அரசின் புதிய கெடுபிடிகளால், இந்திய பொறியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்களில், திறமைவாய்ந்த இந்திய இளைஞர்கள் பணியாற்றுகின்றனர். அமெரிக்க அரசின் திடீர் நடவடிக்கையால், ஐ.டி., ஊழியர்களுக்கு ...

12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை

Posted: 07 Mar 2017 02:59 PM PST

லக்னோ: உ.பி.,யின் லக்னோவில் வீட்டில் பதுங்கிய பயங்கரவாதியை, 12 மணி நேர போராட்டத்துக்கு பின், பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் சுட்டுக் கொன்றனர்.

ரயில் குண்டுவெடிப்பு:
ம.பி.,யில், போபால் - உஜ்ஜயின் ரயிலில், நேற்று(மார்ச்,7) காலை, வெடிகுண்டு வெடித்ததில், எட்டு பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் பயங்கரவாதி ஒருவன், உ.பி.,யின் லக்னோவில் பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு, மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.
வீட்டில் பதுங்கல்:
லக்னோவின் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™