Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தீவின் தேவதைக்கான அட்சரம்

Posted: 23 Mar 2017 03:24 PM PDT

படிக்கும்பொழுது புரிவது வேறு புரியும்பொழுது எழுதியவனை நினைப்பது வேறு நினைக்கும்பொழுது எழுத்துக்களின் வழியே அவர் மனதை உணர்வது வேறு எழுத்துக்களிலே அவள் ஆன்மாவை பார்த்தேன் வழக்கத்தைவிடவும் இது அத்தனை அழகு ஆயிரம் தேவதைகளின் மொத்தம் அது உடல்விட்டு மனம் நீக்கி தனியொன்றாய் இரண்டைவைத்து உடலிடம் சொல்லிச்சென்றேன்., "அவளோடு அரைநாளிகை பேசிவருகிறேன், அதுவரை தனித்திரு" உடன் வருவேனென்றது உடல். "அவசரம் வேண்டாம், உனை சந்திக்க துளிசம்மதமாவது தேவை அதுவரை காத்திரு" என சொல்லி, பறந்து சென்றேன்.. எங்கும் ...

வரதட்சணை - பாவம் பெற்றோர்கள்.

Posted: 23 Mar 2017 11:17 AM PDT

உன்னை வளர்த்து படிக்க வைத்த உன் பெற்றோர்களை இப்படி கசக்கிப் பிழிகிறாயே!
எந்தப் பெண்ணாவது என் பெற்றோர்கள் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும்,அவர்களை நான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல மறந்து விட்டார்களே!

எல்லாமே பணம் தானா?

தொப்பிக்காரன் கதை

Posted: 23 Mar 2017 11:01 AM PDT

இந்தக் கதைக்கும் தொப்பி சின்னத்துக்கும் ஆர்.கே நகர் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு தொப்பிக்காரன் ஊர் ஊராய் தொப்பி விற்று வந்தான். ஒருநாள் மதிய உணவு உண்பதற்காக ஒரு மரத்தின் நிழலில் தங்கினான். உண்ட மயக்கத்தில் தூங்கிவிட்டான். எழுந்து பார்த்தால், அவனுடைய தொப்பிகளை அந்த மரத்திலிருந்த குரங்குகள் வைத்து விளையாடிக்கொண்டிருந்தன. சிந்தித்த அந்தத் தொப்பிக்காரன் தன் அப்பா தந்துசென்ற நாட்குறிப்பேட்டை எடுத்துப் படித்துப்பார்த்தான். அதில் அவனுடைய அப்பா சொல்லியிருந்தார், குரங்குகள் நாம் ...

இண்டர்நெட் உலகில் புதிது

Posted: 23 Mar 2017 10:52 AM PDT

வைபை இணைப்புக்களுக்கு பதிலாக ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணைய இணைப்பினை உருவாக்கப்படுவதே லைபை. இத்தொழில் நுட்பமானது வைபையைப் போல பன்மடங்கு வேகத்தினைக் கொண்டதாக இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள இணைப்புகளை விட 100 மடங்கு வேகமாக இருக்குமாம். லைபை தொழில்நுட்பத்தில் எல்.இ.டி மின்விளக்குகளே பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த லைபை வசதியின் மூலம் 40 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். அகச்சிவப்பு கதிர்களை பயன்படுத்தி இந்தப் புதிய லைபை உருவாக்கப்பட்டுள்ளது. ...

ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் :

Posted: 23 Mar 2017 10:44 AM PDT

சென்னை  - ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வட கிழக்கு பருவ மழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது. மாநிலம் முழுவதும் வறட்சி காணப்படுகிறது.நிலத்தடி நீர் குறைவால் மார்ச் மாதத்திலேயே வெயில் கடுமையாக கொளுத்துகிறது. சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெயில் கொடுமையில் மக்கள் அவதிப் படுகிறார்கள். சில மாவட்டங்களில் இப்போதே வெயில் ...

மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை

Posted: 23 Mar 2017 10:39 AM PDT

புதுடில்லி : மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். கட்டண சலுகை : ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு பயண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. 60 வயது நிரம்பிய ஆண்களும், 58 வயது நிரம்பிய பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுகிறார்கள். மூத்த குடிமக்களில் ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையைப் பெற மூத்த குடிமக்கள் ...

அறிமுகம் - மொஹமட்

Posted: 23 Mar 2017 10:32 AM PDT

பெயர்: மொஹமட் முஃமின்
சொந்த ஊர்:  இலங்கை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தளம் மூலம்
பொழுதுபோக்கு: வாசிப்பு ,, தேடல் ,, ஆராய்ச்சி
தொழில்: தெரிந்தவை அனைத்தும்
மேலும் என்னைப் பற்றி:நல்லதும் நன்மையையும் எப்போதும்  செய்வோம்.

ஒரு பனைமரத்தின் ஏக்கம்.

Posted: 23 Mar 2017 04:09 AM PDT



நன்றி-கட்டுரையாளர் திருமிகு.அமராவதி.

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்

Posted: 23 Mar 2017 01:50 AM PDT

- புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை: சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க.வில் சசி அணியில் தினகரனும், பன்னீர் அணியில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். கட்சியின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இரு தரப்பினரும், டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். ஆலோசனை: சசி அணி மற்றும் பன்னீர் அணி ஆகியோரின் தரப்பு வாதங்கள் நடந்து ...

உறவு முறைகள் பற்றி மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு !

Posted: 23 Mar 2017 12:39 AM PDT

உறவு முறைகள் பற்றி மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு ! ~~~~~~~ அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து ...

விமான நிலையம் கட்டுவதற்காக ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் அரசு நிலம்: அரசாணை பிறப்பித்தது ஆந்திர அரசு

Posted: 23 Mar 2017 12:38 AM PDT

விமான நிலையம் கட்டுவதற்காக ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் அரசு நிலம்: அரசாணை பிறப்பித்தது ஆந்திர அரசு COMMENT · PRINT · T+ ஆந்திர தலைமைச் செயலகம் | கோப்புப் படம் ஆந்திர தலைமைச் செயலகம் | கோப்புப் படம் ஆந்திர மாநிலம் கர்னூலில் விமான நிலையம் அமைப்பதற்காக, ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் அரசு நிலத்தை வழங்க ஆந்திர அரசு அரசாணை பிறப்பித்தது. மத்திய விமான போக்கு வரத்துத் துறை அமைச்சரான அஷோக் கஜபதி ராஜு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்ப தால், ...

உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு

Posted: 23 Mar 2017 12:30 AM PDT

லக்னோ - உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி அரசு மாநகராட்சிகள், அரசு துறைகள் மற்றும் முக்கிய குழுக்களில் கட்சி தொண்டர்கள், பிரபல மானவர்கள் என 80 பேருக்கு மேற்பட்டோரை ஆலோசகர்களாகவும், தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களாகவும் நியமித் திருந்தது. இவர்கள் அனைவரும் மாநில அமைச்சருக்கு உண்டான அனைத்து சலுகைகளையும் பெற்றிருந்தனர். இந்நிலையில் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற பாஜக தலைவர் யோகி ஆதித்யநாத் அரசு துறைகளில் சேர்க்கப்பட்டிருந்த ...

ஊட்டச்சத்தை ஊற்றெடுக்கச் செய்யும் 12 கீரைகள்..!

Posted: 22 Mar 2017 11:44 PM PDT

அறிமுகம் - பசுபதி !

Posted: 22 Mar 2017 11:22 PM PDT

பெயர்:பசுபதி
சொந்த ஊர்:சேலம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:இணையம்
பொழுதுபோக்கு:இணையத்தில் உலவுதல், புத்தகங்கள் படித்தல்
தொழில்: சுயதொழில்
மேலும் என்னைப் பற்றி:சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்லைங்கோ....

காரடையான் நோன்பு அடை !

Posted: 22 Mar 2017 11:20 PM PDT

* வெல்ல  அடை செய்யும் முறை* நாங்கள்  காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள். நோன்பின்போது மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் சமைத்து சாப்பிட சத்தான சிற்றுண்டி இது. தேவையான பொருட்கள்: வறுத்த பச்சரிசி மாவு 1 கப் காராமணி 1/4 கப் தேங்காய் சிறிய பற்களாக நறுக்கியது  - அரை கப் ( துருவியும் போடலாம் ) வெல்லம் (பொடித்தது) 1 கப் ஏலக்காய் பொடி  1 டீ ஸ்பூன் தண்ணீர் 2 கப் நோன்பு அடை செய்முறை: காராமணியை நன்கு வறுத்து, பின் வேகவிட்டு வடித்து வைத்துக் ...

பா.ஜ.,வில் 84 வயது எஸ்.எம்.கிருஷ்ணா

Posted: 22 Mar 2017 10:55 PM PDT

புதுடில்லி: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான 84 வயது எஸ்.எம்.கிருஷ்ணா, இன்று (மார்ச் 22) பா.ஜ.,வில் இணைந்தார். கர்நாடகாவில் பெரும் செல்வாக்குடன் இருந்த எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கடந்த முறை முதல்வர் பதவி கிடைக்கவில்லை. எனவே, பல ஆண்டுகளாகவே கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். கர்நாடகாவில் மாநில தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் அதிரடி செயல்களால் பா.ஜ., சற்று முன்னணியில் ...

பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு !

Posted: 22 Mar 2017 10:51 PM PDT

முட்டாளாகச் சாக விருப்பமில்லாத புரட்சியாளன்! பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு !! "நான் இறந்தால், என் பிணத்தை வாங்காதே... அப்படி வாங்கினால், நீ அழுவாய்; அதனால், புரட்சிக் கனலும் தாக்கமும் குறைந்துவிடும். எனவே, என் உடலை வாங்காதே" என்று தன் தாயிடம் சொன்னவர், இந்திய விடுதலைக்காகப் போராடிய பகத்சிங். அவருடைய நினைவு தினம் இன்று. இந்தியாவில் சுதந்திர வேட்கை 1857-ல் இருந்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கும் அவர்கள் நம்மிடம் நடந்துகொண்ட விதத்தையும் எதிர்த்து ஆங்காங்கே ...

பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

Posted: 22 Mar 2017 10:35 PM PDT

லண்டன்: பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துபாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் 4 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர். பிரிட்டன் பார்லி., கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்லி. வாளகம் , வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே இன்று (மார்ச்.,22) மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியானதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு ஸ்காட்லாந்து யார்டு போலீசார் ...

ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை

Posted: 22 Mar 2017 10:35 PM PDT

திருப்பூர்: 'தபால் அலுவலகங்களில், 50 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கினால், பாஸ் புக் மற்றும் ஏ.டி.எம்., கார்டு பெறலாம்; பணம் எடுக்க கட்டுப்பாடுகளோ, கட்டணமோ கிடையாது' என்று, தபால் துறை அறிவித்துள்ளது. பண பரிவர்த்தனை செய்யவும், ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்கவும், வங்கிகள் விதிக்கும் அடுத்தடுத்த கட்டுப்பாடுகளால், வாடிக்கையாளர்கள் கவலைஅடைந்துள்ளனர். கணக்கு துவக்கலாம் : இதற்கு மாறாக, நலிவடைந்துள்ள தபால் துறையோ, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், எவ்வித சேவை கட்டணமுமின்றி, ...

மோடி கி நோட்

Posted: 22 Mar 2017 10:28 PM PDT

மோடி கி நோட் நம்முடைய ஆண்ட்ராய்டு போன்களில் .modi ki note என்ற app ஐ டவுன்லோட் பண்ணுங்கள் . புதிய 2000 நோட்டின் மங்கள்யான் படத்தின் மீது கேமெரா மூலம் பாருங்கள் மங்கள்யான் மறைந்து மோடி பேசுவது போன்ற வீடியோ தெரியும் .ரூபாயை தள்ளி வைத்தால் , மோடி விடியோவும் மறைகிறது . எனது நண்பர் போன் கொண்டுவந்தார் . என்னிடம் இருந்த 2000 இல் மோடி பேசுவதை பார்த்தேன் ,கேட்டேன் . இங்குதான் மங்கள்யான் இடத்தில chip வைக்கப்பட்டு உள்ளதாம் . எனது போனில் space இல்லாததால் , சில apps ஐ நீக்கிவருகிறேன் . ரமணியன் ...

வணக்கம்

Posted: 22 Mar 2017 10:24 PM PDT

Message bodyநான் கமல் ஏகா.

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Posted: 22 Mar 2017 10:12 PM PDT

ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய  சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம்.

இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும்.புன்னகை

தந்திரங்கள்...!! ஹைபுன்.

Posted: 22 Mar 2017 09:34 PM PDT

அசம்பாவிதமாக நடக்கின்ற செயல்கள் யாவும் அதிர்ச்சியைத் தருகி்ன்றது. அச்சம்பவங்கள் யாவும் எவருக்கும் அதிர்ச்சியாகத் தெரிவதில்லை. வேடிக்கையான சம்பவமாகவே பாவிக்கிறார்கள். அசட்டையான நடவடிக்கைகள் கண்டு கேலியாகப் பேசுகிறார்கள். இச்சமூக நிகழ்வுகள் யாவும் சர்க்கஸ் விளையாட்டு போன்று கண்டு களிக்கிறார்கள். அச்சம்பவங்கள் பற்றி கொஞ்ச நாள்கள் பேசுகிறார்கள். பிறகு, அதனை மறந்தே போகிறார்கள். மக்களின் இம்மனநிலையினை அறிந்துள்ள அரசியல்வாதிகள் சில இக்கட்டான சூழ்நிலையில், மக்களின் மனதை திசைதிருப்புவற்காக, இத்தந்திரங்களைப் ...

பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது

Posted: 22 Mar 2017 09:33 PM PDT

நீதிபதி : பேங்க்ல பணத்தைக் கொள்ளையடிச்ச சரி... போகும் போது பேங்க் மேனேஜர் வழுக்கை மண்டையில ரெண்டு கொட்டு கொட்டிட்டு போயிருக்கியே ஏன்? திருடன் : பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது  எசமான்.!! - - தொடரும்...

ஜடேஜா, புஜாராவுக்கு ரூ. 2 கோடி

Posted: 22 Mar 2017 06:49 PM PDT

மும்பை: பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்தப் பட்டியலில் ரவிந்திர ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகியோர் 'ஏ' கிரேடில் இடம் பிடித்தார். இவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 2 கோடி வழங்கப்படும். இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) சம்பள ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள 32 பேர் அடங்கிய வீரர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ரவிந்திர ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகியோர் 'ஏ' கிரேடுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே இப்பிரிவில் கேப்டன் கோஹ்லி, தோனி, அஷ்வின், அஜின்கியா ரகானே ஆகியோர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™