Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இரட்டை இலை முடக்கம் ஏன்? 10 காரணங்கள்

Posted: 23 Mar 2017 06:50 AM PDT

பன்னீர் மற்றும் தினகரன் அணிகள், அ.தி.மு.க., பெயரும், இரட்டை இலை சின்னமும் கிடையாது என தேர்தல் கமிஷன் நேற்று இரவு அறிவித்ததுடன், அதற்கான காரணத்தையும் விளக்கமாக கூறியுள்ளது.

இது தொடர்பான தேர்தல் கமிஷன் அறிவிப்பு:
1) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக இருக்கும், அ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது; அ.தி.மு.க.,வின் விதி படி, அதன் பொதுச்செயலர், சின்னத்தை ஒதுக்கும் உத்தரவை வழங்கும் உரிமை பெற்றவர்.2) அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடைசியாக, ...

தொண்டு நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி: அமெரிக்கா அலறல்

Posted: 23 Mar 2017 09:38 AM PDT

புதுடில்லி: 'இந்தியாவில் செயல்படும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு, உள்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியின்றி நன்கொடை அளிப்பதில், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள வேண்டும்' என, அமெரிக்க, எம்.பி.,க்கள், 107 பேர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த, 'கம்பாசன் இன்டர்நேஷனல்' என்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தின் சார்பில், உலகின் பல நாடு களைச் சேர்ந்த, அரசு சாரா தொண்டு நிறுவனங் களுக்கு நிதி அளிக்கப்படுகிறது.
இந்த நிதி, ஏழை குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவ ...

விமான நிறுவன ஊழியரை செருப்பால் அடித்த எம்.பி.,

Posted: 23 Mar 2017 09:41 AM PDT

புதுடில்லி: இருக்கை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையில், வாக்குவாதம் முற்றியதால், 'ஏர் - இந்தியா விமான நிறுவன ஊழியரை, சிவ சேனா, எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் செருப்பால் அடித்த சம்பவம்,பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் ஒஸ்மானாபாத் லோக்சபா எம்.பி., ரவீந்திர கெய்க்வாட்,புனே நகரிலிருந்து டில்லிக்கு ஏர்- இந்தியா விமானத்தில் சென்றார். சிவசேனா கட்சியை சேர்ந்தகெய்க்வாட், 'பிசினஸ்கிளாஸ்' பிரிவில் பயணிக்க டிக்கெட் கேட்டிருந்தார்.
ஆனால், ஏர் - இந்தியா நிறுவன ஊழியர், அவருக்கு சாதாரண வகுப்பில் பயணிப்பதற்கான டிக்கெட் வழங்கியதாக ...

போலீஸ் ஸ்டேஷனில் முதல்வர்: உ.பி.,யில் பெரும் பரபரப்பு

Posted: 23 Mar 2017 09:48 AM PDT

லக்னோ: உ.பி., முதல்வராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், லக்னோவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று, திடீரென சென்று ஆய்வு நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது.
உள்துறையை, முதல்வர் ஆதித்யநாத் தன் வசமே வைத்துள்ளார்.
இந்நிலையில், தலைநகர் லக்னோவில் உள்ள, ஹசரத்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனுக்கு, முதல்வர் ஆதித்யநாத்நேற்று காலை சென்றார். முதல்வரை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்து, பின், சுதாரித்து, அவரை வரவேற்றனர்.
போலீஸ் ஸ்டேஷன் முழுவதும் சுற்றி ஆய்வு செய்த பின், முதல்வர் ...

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது எப்படி?: 7வது மாடியில் நடந்த அனல் பறக்கும் விவாதம்

Posted: 23 Mar 2017 10:15 AM PDT

அ.தி.மு.க.,வுக்கு வெற்றி மேல் வெற்றி தேடித் தந்த, இரட்டை இலை சின்னத்தை முடக்கு வதற்கான இறுதிக் கட்ட முடிவு, தேர்தல் கமிஷனின், ஏழாவது மாடியில் நடந்த அனல் பறக்கும் விவாதத்துக்கு பின் எடுக்கப்பட்டு உள்ளது. அப்போது, இருதரப்புக்கும் நடந்த விவாதம் பற்றிய முழு விபரங்கள், தற்போது வெளியாகி உள்ளன.

ஒட்டுமொத்த தமிழகமும், அ.தி.மு.க.,வின் எந்த அணிக்கு, இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த, தேர்தல் கமிஷனர்கள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்து கொண்டு, அவசர அவசரமாக, மணிலா விலிருந்து, நேற்று முன்தினம் ...

சசி, பன்னீர் அணியினருக்கு... புதிய சின்னம்!

Posted: 23 Mar 2017 10:26 AM PDT

சசி மற்றும் பன்னீர் அணியினருக்கு, இரட்டை இலை சின்னத்தை வழங்க மறுத்ததோடு, அ.தி.மு.க., பெயரை பயன்படுத்தவும் தடை விதித்த தேர்தல் கமிஷன், இரண்டு அணியின ருக்கும், புதிய சின்னம் ஒதுக்கியுள்ளது. புதிய கட்சி பெயர்களையும், அவர்களுக்கு வழங்கி உள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல், நேற்று நிறைவு பெற்றது. சசிகலா அணி சார்பில், துணை பொதுச் செயலர் தினகரன்; பன்னீர் அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன், மனு தாக்கல் செய்துள்ளனர்.
இரு அணியினரும், இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க ...

தொப்பியுடன் மனு தாக்கல்: தினகரன் காமெடி

Posted: 23 Mar 2017 10:28 AM PDT

சென்னை:ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி யிடும் தினகரன், திடீரென தன், 'கெட்டப்'பை மாற்றி, தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான தொப்பியை அணிந்து வந்து, காமெடி செய்தது, எம்.ஜி.ஆர்., ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்து உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில், சசி அணி சார்பில், சசிகலா அக்காள் மகன் தினகரன் போட்டியிடு கிறார். அவருக்கு தேர்தல் கமிஷன், ஆட்டோ ரிக் ஷா சின்னம் ஒதுக்கியது. அதை வேண்டாம் என, தொப்பி சின்னத்தை பெற்றனர்.நேற்று காலை, தினகரன் தன் ஆதரவாளர்களுடன் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, தன் சின்னமான தொப்பியை தலையில் அணிந்தபடி, மனு தாக்கல் ...

தேர்தல் பணியாற்ற முதல்வர் தேவையா? பழனிசாமியை 'மட்டம்' தட்டும் தினகரன்

Posted: 23 Mar 2017 10:35 AM PDT

சென்னை, ஆர்.கே. நகரில் போட்டியிடும் தினகரனுக்கு, தேர்தல் வேலை செய்ய, முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட, 152 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் முதல்வர் பதவியை, தினகரன் கேலிக்குரியதாக மாற்றி விட்டார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து, சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத் தேர்தல் நடக்கிறது. சசிகலா அணி சார்பில் தினகரனும், ஓ.பி.எஸ்., அணி சார்பில், மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று, முதல்வராக வேண்டும் என, திட்டமிட்டு, தினகரன் காய் நகர்த்தி வருகிறார். கூவத்துார் விடுதியில், 122 எம்.எல்.ஏ.,க்களை, 'பாதுகாத்த வர்' ...

யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி

Posted: 23 Mar 2017 10:37 AM PDT

'இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை' என, ரஜினி அறிவித்துள்ளார்.

ஜெ., மறைவுக்கு பின், தமிழகத்தில் குழப்ப மான அரசியல் சூழல் நிலவுவதாக, ரஜினி வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். மோடி யின் செல்லாத நோட்டு விவகாரத்தில், முதல் ஆளாக வரவேற்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து , மத்திய அரசுக்கு ஆதரவான தோற்றத்திற்கு, ரஜினி ஆளானார். இந்நிலை யில், ஆர்.கே.நகர் இடை தேர்தல், ஏப்., 12ம் தேதிநடக்க உள்ளது.பா.ஜ., சார்பில் இசையமைப் பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். அவர், சமீபத்தில், ரஜினியைச் சந்தித்து பேசினார். தோற்றத்திற்கு, ரஜினி ஆளானார். இந்நிலை யில், ...

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை; நிறுவனங்கள் தாராளமாக வழங்க அனுமதி

Posted: 23 Mar 2017 11:58 AM PDT

புதுடில்லி : கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைக்கான வரம்பை ரத்து செய்யும், சட்டத்திருத்த நிதி மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
சட்ட திருத்தம்:
தற்போது, கார்ப்பரேட் நிறுவனங்கள், கடந்த மூன்று நிதியாண்டுகளில் ஈட்டிய, சராசரி நிகர லாபத்தில், 7.5 சதவீதம் வரை, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இந்த வரம்பு, புதிய சட்டத்திருத்த மசோதாவில் நீக்கப்பட்டு உள்ளது. இனி, கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்கலாம். எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு பணம் ...

ஜெயலலிதா சமாதிக்கு சென்றால் பதவி இழப்பு?

Posted: 23 Mar 2017 01:11 PM PDT

'ஜெ., சமாதிக்கு சென்று வணங்கினால், ஏதாவது ஒன்றை பறிகொடுக்க நேரிடும்' என, சமூக வலைதளங்களில் பரவும் தகவலால், அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சென்னை, மெரினாவில் உள்ள, ஜெ., சமாதிக்கு சென்று வணங்கிய பின், பழனிசாமியிடம் முதல்வர் பதவியை பறிகொடுத்தார். அடுத்து, ஜெ., சமாதிக்கு சென்ற சசிகலா, சட்டசபை குழு தலைவராக, அதாவது, முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஆவணத்தை, சமாதியில் வைத்து வணங்கினார். அதோடு நேராக, ஜெயிலுக்கு தான் சென்றார். ஜெ., சமாதிக்கு சென்று வணங்கிய தினகரன், இரட்டை இலை சின்னத்தை இழந்தார். சமாதியில் வலம் வந்து ...

காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு; பாக்., அதிபர் அழைப்பு

Posted: 23 Mar 2017 02:29 PM PDT

இஸ்லாமாபாத்: ''காஷ்மீர் பிரச்னையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்'', என பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹூசைன் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தையே தீர்வு:
பாகிஸ்தானின் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்று பேசிய மமூன் ஹூசைன், ''ஐ.நா. தீர்மான படி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண தயாராக உள்ளோம். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்க பாகிஸ்தான் தொடர்ந்து துணை நிற்கும். காஷ்மீர் பிரச்னையில் அமைதி ஏற்படுத்த உலக நாடுகள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். ...

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பார்லி., நிலைக்குழு சம்மன்

Posted: 23 Mar 2017 03:24 PM PDT

புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு விவகாரம் தொடர்பாக, மீண்டும் விளக்கம் கேட்க, ரிசர்வ் வங்கி கவர்னருக்கு சம்மன் அனுப்ப, நிதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, முடிவு செய்துள்ளது.
சம்மன்:
இது குறித்து நிலைக்குழுவின் தலைவரும், காங்கிரசை சேர்ந்தவருமான, முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு? செல்லாத ரூபாய் நோட்டுக்கு மாற்றாக, புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™